2022ல் எந்த கிரிப்டோகரன்சி அதிக ஆற்றலுடன் முன்னேறும்?
பிட்காயினும் எதேரியமும் கடந்த ஆண்டு புதிய உச்சயங்களை எட்டின. நாம் 2022க்குள் நுழையும்போது அடுத்ததாக என்ன எதிர்பார்க்கலாம்?

உள்ளடக்கம்
- ஷிபா இனு: DOGE-ஐ வெளியேற்றியது யார்?
- பிட்காயின்: இப்போதும் பெரியதுதான்
- ஈதர்: சுற்றுச்சூழல் தேர்வு?
- XRP: நீதிமன்றத்தில் ரிப்பில் வெல்ல முடியுமா?
- சொலானா: ETH-ஐ SOL-ஆல் அழிக்கமுடியுமா?
- மெட்டாவர்ஸ்: சம்பாதிக்க-விளையாடு மற்றும் NFTகள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
2021 கிரிப்டோவுக்கு மிகவும் பொருத்தமான ஆண்டாக இருந்தது. அதன் விலை தலைசுற்ற வைக்கும் உயரங்களையும் மற்றும் திகிலூட்டும் சரிவுகளையும் அடுத்தடுத்து சந்தித்தது.
கிரிப்டோகரன்சி சந்தையில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்த ஆண்டில் எந்த கிரிப்டோகரன்சி அதிக ஆற்றலுடன் முன்னேறும்? இந்தக் குறிப்பிட்ட கேள்விக்கு எங்களால் உறுதியாகப் பதிலளிக்க முடியாது என்றாலும், அடுத்த 12 மாதங்களில் பார்க்க வேண்டிய சில கிரிப்டோக்கள் இங்கே உள்ளன.
இருப்பினும், இது முதலீட்டு ஆலோசனை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் - உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது எப்போதும் முக்கியமானது. மேலும் தற்போது போன்ற நிலையற்ற காலங்களில் இது மிகவும் முக்கியம். பகுப்பாய்வாளர்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. மேலும் 100% துல்லியத்துடன் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது.
ஷிபா இனு: DOGE-ஐ வெளியேற்றியது யார்?
பார்க்க வேண்டிய ஒரு நாணயம் ஷிபா இனு. இந்த மீம் நாணயம் 2021 ஆம் ஆண்டு முழுவதும் பெருத்த இலாபத்தைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2021 ஆம் ஆண்டின் இறுதிவரை 28,000,000% வரை உயர்ந்துள்ளது.
இந்த டோக்கன் 2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற வளர்ச்சியை வழங்குவது சாத்தியமில்லை. ஆனால், DOGE நாணயங்கள் கிரிப்டோ வெளியில் பெரும்பகுதியாக அதிகரித்து வரும்போது, SHIB விலை அதிகரிப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
2022ல் எந்த கிரிப்டோ விலையில் வெடிப்பு ஏற்படும் என்று நாம் தெரிந்துகொள்ள விரும்பினால், அது SHIB ஆக இல்லாமல் இருந்தாலும், இன்னும் சற்று வாய்ப்பு உள்ளது. கடந்த 12 மாதங்களில் இது பல உயர்நிலை கிரிப்டோ சந்தைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதம் ShibaSwap சந்தை தொடங்கப்பட்டதன் மூலம், பலர் எதிர்பார்த்திருக்கக்கூடியதைக் காட்டிலும் நாணயம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது.
எப்படியிருந்தாலும், எந்த கிரிப்டோகரன்சி அதிக ஆற்றலுடன் முன்னேறும் என்பதைப் பார்க்கும்போது, SHIB இன்னும் பல முதலீட்டாளர்கள் ஒரு கண் வைத்திருக்கும் ஒரு நாணயமாக உள்ளது.
ஷிபா இனு - US டாலர் வர்த்தகம் - SHIB/USD விளக்கப்படம்
பிட்காயின்: இப்போதும் பெரியதுதான்
சுற்றிலும் உள்ள மிகப்பெரிய கிரிப்டோகரன்சியை நாம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கும். கிரிப்டோவுக்கு இலக்கணம் தந்ததே பிட்காயின் என்ற நாணயம்தான். இது 2021 ஆம் ஆண்டில் நவம்பர் 10 அன்று எப்போதும் இல்லாத அளவுக்கு $68,789 ஐ எட்டியது.
இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த $28,994.01 மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இருப்பினும் சில சரிவுகள் காணப்பட்டன. மேலும் கிரிப்டோ மைனிங் நடவடிக்கைகளின் தாயகம் எனப்படும் கஜகஸ்தானில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் அரசியல் அமைதியின்மை போன்ற காரணங்களால் ஜனவரி 7 ஆம் தேதி அன்று திடீர் சரிவில் $42,300 ஆகக் குறைந்தது.
2022ல் அதிக ஆற்றலுடன் முன்னேறும் அடுத்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் உருவாகுமா? ஒருவேளை இல்லாமலும் போகலாம். விஷயம் என்னவென்றால், BTC மிகவும் பெரியதாக இருப்பதால், அது $100,000 இலக்கை எட்ட விரும்பினால், அது மீண்டும் இரட்டிப்பாக வேண்டும்.
இது நடக்காது என்று சொல்ல முடியாது - கடந்த 12 மாதங்களில் நாம் பார்த்தது போல, கிரிப்டோவின் விலையில் ஆண்டு இரட்டிப்பு என்பது எந்த வகையிலும் அரிதான நிகழ்வு அல்ல - ஆனால் பிட்காயினின் அளவைப் பார்க்கும்போது, குறைவாக அறியப்பட்ட நாணயத்தை விட மெதுவாக நகரும் சாத்தியம் உள்ளது.
2021 ஆம் ஆண்டின் கடைசி ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களில் பிட்காயினின் செயல்திறனை முதலீட்டு வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டில் உள்ள கிரிப்டோ ஆய்வுக் குழு செப்டம்பரில் கணித்தவற்றுடன் ஒப்பிடுவது மதிப்புக்குரியது.
2021ன் பிற்பகுதியில் அல்லது 2022ன் தொடக்கத்தில் BTC $100,000 ஆக உயரும் என்று நினைத்ததாகக் குழு தெரிவித்தது. இது நடந்ததற்கு நேர்மாறானது. நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஒரு நாள் $175,000 ஆக இருக்கும் என்று நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எதுவாயிருந்தாலும், BTC சுழற்சியைக் கொண்டது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் - ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், பிட்காயினின் மதிப்பு குறைகிறது. எடுத்துக்காட்டாக, பிட்காயின் டிசம்பர் 2017ல் $20,000லிருந்து 2018 இறுதிக்குள் $4,000 ஆகக் குறைந்தது.
இந்த வடிவமைப்பு பின்பற்றப்பட்டால், 2022 அல்லது 2023ல் சந்தை இறக்கங்களைச் சந்தித்தால் விலைகள் பின்வாங்கலாம். பிட்காயினின் வேகம் 2024ல் மட்டுமே திரும்பும். அதாவது பிளாக்செயினின் அடுத்த பாதியாக குறைக்கும் நிகழ்வு நடைபெறும் போது.
இதற்கிடையில், கிரிப்டோ கடன் தரும் நிறுவனம் Nexoவின் நிர்வாகப் பங்குதாரரான அண்டோனி டிரென்செவ், ப்ளூம்பெர்க்கிடம், BTC மீண்டும் எழுமென்றும், ஆண்டின் நடுப்பகுதியில் $100,000 எட்டுவதையும் முன்னரே கணித்ததாகக் கூறினார்.
Fairlead Strategies-ன் நிறுவனரும் நிர்வாகப் பங்குதாரருமான கேட்டி ஸ்டாக்டனும் கூட நாணயத்தைப் பற்றி "ஏற்றம் உடையது", என்று கூறினார். மேலும்: "நீண்டகால விலையேற்றம் தொடருமென்றும் மேலும் உறுதியாகத் தடைகளை உடைத்து புதிய உச்சங்களைத் தொட்டு கிட்டத்தட்ட $90,000 என்ற இலக்கை நோக்கி நகர்ந்து தடம் பதிக்குமென்றும் நாங்கள் கருதுகிறோம். இப்போதைக்கு, ஒரு நேர்செய்தல் கட்டம் தொடர்கிறது. எனினும் குறுகியகாலத்தில் சரிவு முடிவுறுவதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.” என்று கூறினார்
பிட்காயின் - US டாலர் வர்த்தகம் - BTC/USD விளக்கப்படம்

ஈதர்: சுற்றுச்சூழல் தேர்வு?
நாம் பிட்காயினைப் பற்றிப் பேசியிருப்பதால், அதன் பெரிய போட்டியாளரான ஈதரைப் பற்றிப் பேசுவதும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது எதேரியம் பிளாக்செயின் மிகவும் பெருமிதமாகக் கூறிவந்த பணிச்சான்று கருத்தொற்றுமையைப் பயன்படுத்துவதிலிருந்து பங்குச் சான்று கருத்தொற்றுமைக்கு நகர்வதைச் செய்கிறதா, அது எப்போது நடக்கும் என்பதுதான்.
What is your sentiment on SOL/USD?
கிரிப்டோகரன்சியின் நீண்டகால விமர்சனங்களில் ஒன்று சுரங்கத்தின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். PoS க்கு மாறுவது இந்த ஆண்டு நடந்தால், அது நிறைய விஷயங்களை மாற்றக்கூடும்.
உதாரணமாக, பிட்காயினின் மிகப்பெரிய போட்டியாளர் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறினால், மேலும் முக்கியமாக, அது எப்படி, ஏன் அவ்வாறு செய்தது என்பதை விளக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்தால், அதிகமான மக்கள் ETH மற்றும் கிரிப்டோ வெளியில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் தருணமான பிட்காயின் விலையை ஈதர் முந்துவது - அப்படியொரு தலைகீழ் மாற்றம் நடக்க சில காலம் ஆகலாம் - நடக்கையில், அப்படி எப்போதாவது நடந்தால், பணிச்சான்றுக்கு உடனடியாக, வெற்றிகரமான, திறன்மிக்க நகர்வு ஏற்பட்டு ஈதரின் விலைக்கு ஊட்டமளிக்கும்.
செப்டம்பரில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், ETH ஒரு கட்டத்தில் $26,000 முதல் $35,000 வரை அடையும் சாத்தியம் இருப்பதாகக் கூறியது. ஆனால் அது பிட்காயினின் விலையில் கடுமையான உயர்வுடன் தொடர்புபடுத்திய கருத்தாக இருக்கலாம்.
இருப்பினும், வரவிருக்கும் கருத்தொற்றுமைச் சூத்திர மாற்றமானது, BTC மற்றும் ஈதரின் விலைக்கு இடையிலான உறவை உடைக்கும் விஷயமாக இருக்கலாம். 2022 ஆம் ஆண்டில் எந்த கிரிப்டோ அதிக ஆற்றலுடன் முன்னேறும் என்பதைக் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் ஈதர் பங்குச்சான்றை விட்டு வெளியேறினால் பொதுவாக ஆல்ட்காயின்களுக்கு வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 2021ல் அது நிர்ணயித்த $4,891.70 என்ற இதுவரை காணாத உயர்வை எட்டுமா அல்லது முறியடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஜனவரி 7 வரை, திடீர் சரிவுக்குப் பிறகு, அது $3,232ல் வர்த்தகம் ஆகிறது.
எதேரியம் - US டாலர் வர்த்தகம் - ETH/USD விளக்கப்படம்
XRP: நீதிமன்றத்தில் ரிப்பில் வெல்ல முடியுமா?
அதிக ஆற்றலுடன் முன்னேறும் அடுத்த கிரிப்டோகரன்சியை பார்க்கும்போது, XRP ஒரு சுவாரஸ்யமான போட்டியாளராக உள்ளது. அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுடன் (SEC) நடந்து வரும் நீதிமன்ற வழக்கு ரிப்பிலின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்த நாணயம் கடந்த ஆண்டு ஓரளவுக்கு இழுபறி நிலையில் இருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் என்ன நடக்கும் என்பது தெரியும்.
XRP என்பது பதிவுசெய்யப்படாத சொத்து என கண்டறியப்பட்டால், விலை வெடிக்கும். ஆனால் அது கீழ்நோக்கியதாக இருக்கும். மறுபுறம், இது சரிசெய்யப்பட்டால், விலங்குகளை உடைத்து விடுதலையடையவும் முன்பு இந்த நீதிமன்ற வழக்கு காரணமாக ரிப்பிலை வாங்குவதை ஒத்திப்போட்ட முதலீடாளர்களையும் ஈர்க்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
இது ஒரு தனித்துவமான விற்பனைப் புள்ளி என்பதை நினைவில் கொள்வோம் - குறிப்பாக சர்வதேச பணப் பரிமாற்றத்தை விரைவுபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது - அதிகரித்து வரும் உலகமயமாக்கல் இந்த வேளையில் அதிகமான மக்களை ஈர்க்க உதவும். மற்ற குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், XRP ஒரு பிளாக்செயினில் இயங்காது. அதாவது தரகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பணம் செலுத்துவதற்கு மாறாக, பணம் செலுத்துவதற்கான வாக்குறுதிகளை மாற்றுகிறார்கள். கிரிப்டோவின் சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றிய எந்தக் கவலையும் இந்த டோக்கனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது முக்கிய அம்சமாகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுள்ள உலகில் இதுவொரு கூடுதல் சிறப்பாக இருக்கும்.
எப்படியிருந்தாலும், XRPயின் மிக முக்கியமான நகர்வுகளைப் பார்ப்பதற்கு முன்பு நீதிமன்ற வழக்கு முடியும்வரை நாம் காத்திருக்க வேண்டும். ஜனவரி 7 வரை, XRP $0.76ல் வர்த்தகம் ஆனது.
ரிப்பில் - US டாலர் வர்த்தகம் – XRP/USD விளக்கப்படம்
சொலானா: ETH-ஐ SOL-ஆல் அழிக்கமுடியுமா?
2021ல் எந்த கிரிப்டோகரன்சி அதிக ஆற்றலுடன் முன்னேறும் என்று வரும்போது மற்றொரு போட்டியாளர் சொலானா (SOL).
இந்த பிளாக்செயின் செயல்திட்டம் தனது பார்வையை எதேரியமிடம் மல்யுத்தம் செய்து சந்தையில் அதன் பங்கினைப் பிடுங்குவதில் வைத்துள்ளது. உலகின் வேகமான பிளாக்செயினாக தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் சொலானா, எதேரியமை விடக் குறைவான கட்டணத்தைக் கொண்டு, DeFi மற்றும் NFTகளை ஆதரிக்க முடியும் என்று கூறுகிறது.
SOL-ன் மதிப்பு, நவம்பர் 6 அன்று எப்போதும் இல்லாத $260.06 ஐ எட்டியதன் மூலம் கவனத்தை ஈர்த்தது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதல் ஐந்து கிரிப்டோக்களுக்குள் சென்றது. எல் சால்வடார் பிட்காயினை சட்டப்பூர்வ செலாவணியாக ஏற்றுக்கொண்ட நாளான செப்டம்பர் 7 ஆம் தேதி கிரிப்டோ சந்தைகள் சரிவைச் சந்தித்தபோதும், முதல் 10 இடங்களில் உள்ள மற்ற கிரிப்டோகரன்சிகளை விட SOL மிகவும் உறுதியாகவும் விரைவாகவும் மீண்டு வந்தது.
ஜனவரி 7 நிலவரப்படி, SOL விலை $140 குறியீட்டைச் சுற்றி உள்ளது. எனவே ஓமிக்ரான் சகாப்தத்தில் கிரிப்டோவைப் பாதித்திருக்கும் சரிவிலிருந்து SOL மீண்டு வருமா என்பதும், ஏற்கெனவே பங்குச் சான்றுடன் செயல்படும் ஒரு பிளாக்செயினைக் கொண்டிருப்பது சுற்றுச்சூழல் உணர்வுள்ள கிரிப்டோ ஆர்வலர்களின் கவனத்தையும் முதலீட்டையும் பெற உதவுமா என்பதும்தான் இப்போதுள்ள கேள்வி.
SOL - US டாலர் வர்த்தகம் - SOL/USD விளக்கப்படம்

மெட்டாவர்ஸ்: சம்பாதிக்க-விளையாடு மற்றும் NFTகள்
இறுதியாக, நாம் மெட்டாவர்ஸைப் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு கிரிப்டோவின் உண்மையான ஏற்றத்தை இது சந்தித்துள்ளது. மெட்டாவர்ஸ் டோக்கன் அல்லது நாணயம் ஒரு வெடிப்பை ஏற்படுத்தக்கூடிய அடுத்த கிரிப்டோகரன்சியாக இருக்கும் நிச்சயமான வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில், MANA $0.07825லிருந்து $3.27 ஆக, 4,000%க்கும் அதிகமாக உயர்ந்தது. அதே சமயம் Axie Infinity $0.5384லிருந்து $93.30 ஆக 17,000%க்கும் அதிகமாக உயர்ந்தது.
மீண்டும், இந்த நாணயங்கள் 2021ல் தந்த அதே வகையான இலாபத்தை 2022ல் திருப்பித் தராது என்பதை நாம் ஏற்க வேண்டும். ஆனால் அதில் இன்னும் வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது. மெட்டாவெர்ஸில் சம்பாதிக்க-விளையாடு, NFTகள் அல்லது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவை மூலம் செயல்படும் புதிய, சிறிய, கிரிப்டோக்களில் இலாபத்திற்கான சாத்தியம் உள்ளது.
எந்த மெட்டாவெர்ஸ் நாணயங்கள், டோக்கன்கள் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், இந்தக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் புதிதாக என்ன தோன்றுகிறது என்பதைக் கண்காணிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். எப்படியிருந்தாலும், நீங்கள் முதலீடு செய்வதற்குமுன் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த கிரிப்டோகரன்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது?
இதை உறுதியாகச் சொல்ல இயலாது. கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்றதாக இருக்கக்கூடியவை. விலைகள் நிச்சயமாக கூடவும் குறையவும் செய்யும். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். எப்போதும் நீங்கள் இழப்பை தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம்.
கிரிப்டோகரன்சி ஒரு நல்ல முதலீடுதானா?
அதற்கான சாத்தியங்களைக் கொண்டது. கொஞ்சம் எச்சரிக்கை தேவை. நினைவில் கொள்ளுங்கள், கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்றவை. விலைகள் குறையலாம்; கூடலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். சமீபத்திய மேம்பாடுகள் பற்றிய செய்திகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?
Currency.com உட்பட பல்வேறு கிரிப்டோ சந்தைகளில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். எப்போதும் நீங்கள் இழப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.