2030க்கான பிட்காயின் விலைக் கணிப்பு: விலை என்னவாக இருக்கும்?
2030க்கான சமீபத்திய பிட்காயின் விலைக் கணிப்புகள் எப்படி இருக்கிறது? அது ஏழு இலக்க மதிப்பைப் பெறுமா?

உள்ளடக்கம்
- 2030ல் கரடிகளின் ஆதிக்கம் இருக்குமா?
- பிட்காயின் விலைக் கணிப்புகள்: stock-to-flow மாதிரி
- பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்
- 2030க்கான பிட்காயின் கணிப்பு: குறைவான மாறியல்பு?
- கூடுதல் ஒழுங்குமுறை
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
2030ல் பிட்காயின் விலை என்னவாக இருக்குமென்று கணிக்க முயற்சிப்பது விவேகமானதாக இருக்காது. அடுத்தவாரம் இந்த கிரிப்டோகரன்சியின் விலையை உத்தேசிப்பதுகூடக் கடினமானது. அதனால் எட்டு வருடத்துக்குச் செல்லாதீர்கள்.
இத்துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்களில் மைக் நோவோகிராட்ஸும் ஒருவர். இவர் தொடர்ந்து வருடாந்திரக் கணிப்புகளைத் தந்து வந்தாலும் முடிவில் அவர் குறிப்பிட்டதற்கும் உண்மையான விலைக்கும் பெருத்த வேறுபாடு காணப்படுகிறது.
சிலர் எட்டு ஆண்டுகளில் பிட்காயின் விலை என்னவாக இருக்குமென்று கணிப்பது சாத்தியம் என்று வாதிடுகின்றனர். அவர்கள் எப்படி பிட்காயின் (BTC) நான்காண்டு சுழற்சியைப் பின்பற்றி பாதியாக்கம் முடிந்த 12 முதல் 18 மாதங்களில் சிறப்பான ஆதாயங்களை அளிப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
எனினும், அவர்கள் அதைத் தொடர்ந்து வரும் இறங்குமுகச் சுழற்சி குறித்து பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. அப்படியொரு சுழற்சியில் பிட்காயினின் மதிப்பு 2018 இல் கணிசமான அளவு சீவியெடுக்கப்பட்டது.
2030ல் கரடிகளின் ஆதிக்கம் இருக்குமா?
2030ல் பிட்காயின் விலை என்று வரும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, இந்த வருடத்தில்கூட கரடி ஆதிக்கம் இருக்கலாம்.
2014ல், முதன்முறையாக பாதியாக்கம் நடந்த இரண்டு ஆண்டில், BTC தனது மதிப்பில் 37.4%-ஐ முதல் காலாண்டிலும் 39.7%-ஐ மூன்றாம் காலாண்டிலும் 16.7%-ஐ நான்காம் காலாண்டிலும் இழந்திருந்தது. மொத்தத்தில் இரண்டாம் அரையாண்டில் கிட்டத்தட்ட 50% இழப்பு.
இதே விஷயம்தான் நான்கு வருடம் கழித்து 2018ல் நிகழ்ந்தது –49.7% முதல் காலாண்டிலும், 7.7% இரண்டாம் காலாண்டிலும் 42.2% நான்காவது காலாண்டிலுமாக விலை சரிந்தது.
கடந்த காலத்தில் நடந்ததை வைத்து பிட்காயின் விலையைக் கணிப்பதென்றால் (எதிர்காலத்தைக் கணிப்பதில் நிச்சயம் அது நம்பத்தக்க குறிகாட்டி இல்லைதான்) 2022, 2026, 2030 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு நேர்செய்தல்களை நாம் BTCயில் பார்க்க முடியும்..
இங்கே 2030க்கான பிட்காயின் விலைக் கணிப்புக்கான சில ஆதாரங்களைப் பார்க்கலாம். நீண்ட காலக் கணிப்பில் அடுத்த பத்தாண்டுக்குள் நாம் பார்க்கக்கூடிய மைல்கற்களையும் இவை ஆராய்கின்றன.
BTC/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
Feb 3, 2023 | 23538.45 | 44.90 | 0.19% | 23493.55 | 23595.70 | 23413.45 |
Feb 2, 2023 | 23493.45 | -241.85 | -1.02% | 23735.30 | 24263.70 | 23405.70 |
Feb 1, 2023 | 23735.45 | 605.25 | 2.62% | 23130.20 | 23834.70 | 22770.45 |
Jan 31, 2023 | 23130.05 | 297.85 | 1.30% | 22832.20 | 23310.15 | 22719.55 |
Jan 30, 2023 | 22831.95 | -909.25 | -3.83% | 23741.20 | 23801.70 | 22483.75 |
Jan 29, 2023 | 23741.20 | 711.25 | 3.09% | 23029.95 | 23967.20 | 22975.30 |
Jan 28, 2023 | 23029.70 | -50.85 | -0.22% | 23080.55 | 23197.70 | 22888.45 |
Jan 27, 2023 | 23080.70 | 70.65 | 0.31% | 23010.05 | 23514.55 | 22535.30 |
Jan 26, 2023 | 23010.45 | -54.00 | -0.23% | 23064.45 | 23287.20 | 22855.25 |
Jan 25, 2023 | 23064.20 | 426.40 | 1.88% | 22637.80 | 23827.45 | 22334.55 |
Jan 24, 2023 | 22637.70 | -283.60 | -1.24% | 22921.30 | 23169.30 | 22466.45 |
Jan 23, 2023 | 22921.20 | 205.75 | 0.91% | 22715.45 | 23179.30 | 22516.95 |
Jan 22, 2023 | 22715.30 | -76.75 | -0.34% | 22792.05 | 23083.95 | 22314.95 |
Jan 21, 2023 | 22792.20 | 124.55 | 0.55% | 22667.65 | 23370.95 | 22432.50 |
Jan 20, 2023 | 22667.80 | 1583.50 | 7.51% | 21084.30 | 22763.20 | 20864.55 |
Jan 19, 2023 | 21084.15 | 408.60 | 1.98% | 20675.55 | 21191.95 | 20653.95 |
Jan 18, 2023 | 20674.70 | -459.10 | -2.17% | 21133.80 | 21658.95 | 20401.70 |
Jan 17, 2023 | 21132.95 | -57.75 | -0.27% | 21190.70 | 21632.45 | 20848.80 |
Jan 16, 2023 | 21190.45 | 309.65 | 1.48% | 20880.80 | 21463.70 | 20617.40 |
Jan 15, 2023 | 20880.90 | -78.15 | -0.37% | 20959.05 | 21059.20 | 20563.70 |
பிட்காயின் விலைக் கணிப்புகள்: stock-to-flow மாதிரி
பிட்காயின் விலைக் கணிப்புகளைத் தொடங்க நல்ல இடம் stock-to-flow மாதிரிதான். இதை உருவாக்கியவர் PlanB என்ற புனைப்பெயரைக் கொண்ட ஒரு வர்த்தகர். கிரிப்டோ வட்டங்களில் இது முரண்பாட்டினை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த மாதிரியானது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஃபோர்ப்ஸ் வணிக இதழ் இதைக் குறிப்பிடத்தக்கபடி துல்லியமானது என்று அழைக்கிறது.
இதன் அனுமானம் எளிமையானது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும், சுழற்சிக்கு வரும் புதிய பிட்காயின்களின் எண்ணிக்கை 50% வெட்டப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் 6.25 BTC மட்டுமே மைனிங் செய்யப்படுகின்றன. அதாவது ஒருநாளில் 900 BTC. இந்த எண்ணிக்கை 2024ல் 3.125 BTC ஆக ஒவ்வொரு 10 நிமிடங்களிலும் குறையும். 2028ல் 1.5625 BTC ஆகக் குறையும். இந்தக் கோட்பாட்டின்படி தேவை தொடர்ந்து அதிகமாக இருந்தால், குறைக்கப்படும் வழங்கல் விலையேற்றத்துக்குக் காரணமாகிவிடும்.
21 மில்லியன் பிட்காயின்களே இருக்கமுடியும் என்ற நிலையில் நீண்டகால கிரிப்டோ முதலீட்டாளர்களும் நிறுவன முதலீட்டாளர்களும் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை பல ஆண்டுகளாக வைத்திருக்கையில், மொத்த வழங்கலில் ஒரு குறைந்த விகிதம் மட்டுமே கைமாறும். இதனால் புதிதாக வருபவர்கள் அல்லது ஆர்வமுடையவர்கள் BTC வாங்குவதற்கு கூடுதலாக விலை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மாதிரியின்படி, 2025ல் ஏதாவதொரு புள்ளியில் பிட்காயின் $900,000 குறியீட்டைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வாளர் ஸ்காட் மெல்கர் 2021 இறுதியில், பிட்காயினின் சராசரி விலையாக $280,000 இருக்கும் என்கிறார். Nasdaq கூட நம்பிக்கையூட்டும் கணிப்பைச் செய்துள்ளது. அது 2021ல் விலை $100,000ஐ அணுகும் என்கிறது.
எனினும் யதார்த்த வாழ்வில், இந்த எண்கள் மிகத் தொலைவிலும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாகவும் உள்ளன. டிசம்பர் 2021ல் நானயம் அதன் மதிப்பில் 19% இழந்தது. 2022 ஜனவரி 1ல் $47,686 ஆக வர்த்தகமானது. தற்போது $33,400 வாக்கில் வர்த்தகமாகிறது; Gov.capital 2022 இறுதியில் $56,356.90 மதிப்பை அடையும் என்று கணிக்கிறது.
எனினும் 2021லும் 2022லும் பிட்காயின் மற்றும் பெருமளவிலான கிரிப்டோ சந்தையில் சில பெரிய பின்னடைவுகள் இருந்துள்ளன. சீன, ரஷிய அரசுகள் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடைவிதித்துள்ளன. உலகின் இரண்டாவது பெரிய மைனிங் மையமான கஜகஸ்தானில் பணி நிறுத்தம் ஏற்பட்டது; விரிவான உலகளாவிய ஒழுங்குமுறை; சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலை; பெருந்தொற்றின் நீண்டகால விளைவு போன்ற காரணங்கள் சந்தைகளில் கேடு விளைவிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
What is your sentiment on BTC/USD?
பிட்காயின் விலைக் கணிப்புகளைச் செய்யும்போது பல காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்
நிச்சயம் எந்த ஆய்வாளரும் 2030க்கான பிட்காயினின் விலையை ஊகிக்கலாம். ஆனால், முதலீட்டாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மையில் முக்கியம். காரணம் ஒரு புதிய தசாப்தத்துக்குள் நுழையும் நேரத்தில் அவர்களது எண்ணம் சந்தை எப்படி நகரவேண்டும் என்பதில் ஆதிக்கம் செலுத்தக் கூடும்.
ஜெனசிஸ் மைனிங் மூலம்ஒரு வாக்கெடுப்பு 2020 டிசம்பரில் நடத்தப்பட்டது. அது 2030க்கான பிட்காயின் விலையின் பொதுவான கணிப்புகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறிது வெளிச்சத்தைத் தருகிறது. இந்த டிஜிட்டல் சொத்து நீண்ட கால நோக்கில் ஏறுமுகமாக இருக்குமென்று 65.8% பிட்காயின் முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். 66.3%பேர் டாலரைக் காட்டிலும் நீண்டகால முதலீட்டுக்கு BTC சிறந்தது என்று நம்புகின்றனர்.
எனினும் 2030ல் பிட்காயின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டபோது வெவ்வேறு வகையான சித்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. வெறும் 4.8% பேர் மட்டுமே அது $500,000க்கு மேல் செல்லும் வாய்ப்புண்டு என்று நம்புகின்றனர். 5.5% பேர் $100,000க்கும் $500,000க்கும் இடையில் இருக்குமென்று நம்புகிறார்கள் – 18.6% பேர் மட்டுமே BTCயின் மதிப்பு $50,000க்கு மேல் செல்லும் என்று கணிக்கிறார்கள். இதற்கு முரணாக 21.8% பேர் விலை $5,000க்கும் கீழே சரியும் என்று நினைக்கிறார்கள்.
பிட்காயினின் மாபெரும் எழுச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்வது தகும். இது வெளியானபோது பிட்காயின் $19,000 அருகில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. இதே வாக்காளர்களிடம் 2021 அக்டோபர் 20ல் $66,900 என்ற புதிய உச்சத்தில் கரன்சி வர்த்தகமானபோது வாக்கெடுப்பு நடத்தியிருந்தால், அவர்கள் மனப்போக்கு மிகவும் வேறுபட்டதாக இருந்திருக்கும். எனினும் 2022 ஜனவரி 24ல் நாணயத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $33,400 ஆக இருந்தது. ஊகச் சொத்தின் எதிர்காலத்தை குறுகியகால நோக்கில் பார்த்தால் குறைவான நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.
2030க்கான பிட்காயினின் விலைக் கணிப்பு உலகளவில் கிரிப்டோவைச் செலாவணியாக ஏற்றுக்கொள்ளும் வீதத்தை அதிகளவு சார்ந்து உள்ளது. எல் சால்வடார் தனது பிட்காயின் நகரத்தைக் கட்டமைக்கும் திட்டத்தைத் தொடர்கிறது – மற்றும் இறங்கும்போது மேலும் வாங்குகிறது – பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைமைச் செயல் அதிகாரியான ரே டாலியோ போன்ற சில கருத்துடையவர்கள், உலகளவில் பிட்காயின் புறக்கணிப்பு ஏற்படக்கூடும் என்கிறார்கள். எதிர்காலத்தில் பிட்காயின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது குறித்து ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
2030க்கான பிட்காயின் கணிப்பு: குறைவான மாறியல்பு?
மற்றொருவகையான மக்களின் கருத்து என்ன சொல்கிறதென்றால் இந்த நாணயம் காலவோட்டத்தில் குறைவான மாறியல்பு கொண்டதாக ஆகிவிடும் என்கிறது. ரியல் விஷன் என்ற தேவையைப் பொறுத்த நிதிசார் தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனர் ரவுல் பால் அவர்களில் ஒருவர் ஆவார். 2030 நெருங்கும்போது பிட்காயின் மதிப்பில் ஆச்சரியகரமான ஊசலாட்டங்கள் மிகவும் குறைந்த அளவில் காணப்படும் என்கிறார் இவர். இதைச் சொல்லும்போது, அன்றாடக் கொள்முதல்களுக்குப் பயன்படுத்தப் போதுமான அளவில் நிலையானதாக BTC இருக்காது என்றும் அவர் நம்புகிறார்.
மற்றவர்கள் 2030 வாக்கில் ஒரு பில்லியன் மக்கள் பிட்காயினை வைத்திருப்பார்கள் என்கிறார்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சியின் மிகச் சிறிய பின்னத்தையே வைத்திருக்க முடியும் என்பதும் இதன் அர்த்தமாகிறது. இதுதான் பிரச்சினை. ஏனென்றால், வலைத்தொடர்பை இலகுவாக நடத்துவதற்கு மைனர்களுக்கு ஊக்கம் தேவை – ஆனால் BTC வெகுமதிகள் மிகச்சிறிய அளவாகக் குறைந்துவருகையில், பரிவர்த்தனைக் கட்டணங்கள் போன்ற வடிவிலான ஊக்கத்தொகை அவர்களுக்குத் தேவைப்படும். இதனால் அந்த கட்டணங்களின் விலை அதிகரிக்க கூடும்.
சிலரிடம் பிட்காயின் தங்கத்தின் சந்தை மூலதனத்தை மிஞ்சுமென்ற நீண்டகால நம்பிக்கை இருப்பினும், 2030க்கான பிட்காயின் விலைக் கணிப்புகளில் சில இந்த முன்னணி டிஜிட்டல் சொத்து ரொக்கப்பணத்தை முந்திச் செல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கூடுதல் ஒழுங்குமுறை
10 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறலாம். பத்தாண்டுகளுக்கு முன், பிட்காயின் மதிப்பு வெறும் $1 தான். 2020களில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் சொந்த மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சிகளைத் தோற்றுவிப்பதைப் பார்க்க முடியும்.
பிட்காயினை ஒழுங்குபடுத்துவதற்கு ஒத்திசைவான அழுத்தமும் இருக்கக்கூடும். BTCயின் இடி முழக்கத்தை, பளிச்சிடும் புதிய டிஜிட்டல் சொத்து அபகரித்து முன்னணி கிரிப்டோகரன்சி என்ற இடத்தைப் பிடிக்கலாம். உண்மையில், எதேரியம் 2.0 இந்த ஆண்டின் இறுதியில் வரும்போது, அதன் மிக விரைவான பரிவர்த்தனை வேகமும், சூழலுக்கு உகந்த பங்குச்சான்று (PoS) இயங்குமுறையும் BTCக்கு உண்மையான எதிரியாக ஈதரை (ETH) ஆக்கவும் அதை முந்தவும் வைக்கக்கூடும்.
அடுத்த பத்தாண்டு முழுக்கவே சுவாரசியமான எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்திருக்கப் போகிறது. கணிப்புகள் உண்மையில் வாசிப்பதற்கு சுவாரசியமானவை. ஆனால் அடுத்த ஒன்பது ஆண்டு காலத்தில் பிட்காயின் விலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பில் ஒரு முட்டாள்தான் பணத்தைப் பணயம் வைப்பார்.
சில கோட்பாடுகள் நாணயத்தின் முந்தைய நடத்தையின் அடிப்படையில் பிட்காயினின் சந்தை மூலதனம் 2030க்குள் $10 ட்ரில்லியனை தாண்டும் என்கின்றன.
பிட்காயின் - US டாலர் வர்த்தகம் – BTC/USD விளக்கப்படம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
2025ல் பிட்காயின் மதிப்பு என்னவாக இருக்கும்?
எங்களுக்குத் தெரியாது. ஆனால் பல கணிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, CoinPriceForecast 2025 இறுதியில் பிட்காயின் $92.173 விலையை எட்டும் என்றும் 10 ஆண்டுகளில் அதாவது 2032ல் பிட்காயின் $130,780 என்ற உயரம் வரை செல்லும் என்றும் கணிக்கிறது;அதேவேளையில் DigitalCoinPrice 2025ல் பிட்காயின் சராசரியாக $73,027.48 விலையில் இருக்கும் என்கிறது. இதற்கிடையில் சோசியல் கேபிடல் தலைமைச் செயல் அதிகாரியான சமத் பலிஹபிடியா, சொல்கிறார்: “பிட்காயின் $1 மில்லியன் மதிப்பை எட்டும் அல்லது அதற்கு மதிப்பே இல்லாமல் போகும்.”
பிட்காயின் $100,000 விலையை எட்டுமா?
நிச்சயம் முடியும். ஆனால் எப்போது என்பது வேறு விஷயம். சில நேர்மறையான கணிப்புகள் இருப்பினும், கிரிப்டோகரன்சிகள் மீதான ஒடுக்குமுறை ஒருவேளை வேறெந்த கிரிப்டோவைக் காட்டிலும் கடினமாக பிட்காயினைத் தாக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை என்பதையும் விலைகள் இறங்கவும் ஏறவும் செய்யும் என்பதையும் நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டும். உங்கள் சொந்த ஆய்வினைச் செய்வதுடன் ஒருபோதும் நீங்கள் தாங்கக்கூடிய இழப்புக்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.
பிட்காயினை வாங்க எவ்வளவு செலவாகும்?
நீங்கள் பிட்காயினை Currency.com தளத்தில் வாங்க விரும்பினால் அதற்கு $33,400 வாக்கில் செலவாகும் (இதை எழுதிக் கொண்டிருந்த 2022 ஜனவரி 24ம் தேதிப்படி). எனினும் எங்கள் தளத்தின் டோக்கனைஸ்டு அமைப்பு முறையின் மூலம் பிட்காயினை பின்னங்களில் நீங்கள் வாங்கமுடியும். முதலில் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யவும், நீங்கள் தாங்கக்கூடிய இழப்புக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.