தேதிமாற்றங்கள்
ஜூலை, 2021

REST API மற்றும் WebSocket API

REST மற்றும் WS API-யின் இரண்டாம் பதிப்பில் (v2) அதிலுள்ள பயனீட்டு முறையாவணங்களின் முழுமையான பட்டியல் சேர்க்கப்பட்டது. டெமோ கணக்குகளுக்கு முதல் பதிப்பு (v1) மட்டுமே உள்ளது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்; குறியீடுகளின் வர்த்தக வரலாற்றைக் காண்பதற்கான வாய்ப்பை புதிதாக சேர்க்கப்பட்ட /tradingPositionsHistory இறுதி முனையம் வழங்குகிறது.

ஜூன், 2021

REST API மற்றும் WebSocket API

REST மற்றும் WS API-யின் முதற்பதிப்பில் (v1) டெமோ கணக்கைப் பயன்படுத்தும் வாய்ப்பு சேர்க்கப்பட்டது;  வாடிக்கையாளர்கள் பூஜ்ஜிய இருப்புகளின் சித்தரிப்பை எதிர்வினைகளில் இயக்கவோ அல்லது அணைக்கவோ செய்யும் வகையில் /account இறுதி முனையத்தில் showZeroBalance அளவுரு சேர்க்கப்பட்டது.

மே, 2021

REST API மற்றும் WebSocket API

/klines இறுதிமுனையம், REST API மற்றும் OHLCMarketData.subscribe stream, WS API ஆகியவற்றில் Heiken-Ashi வகை பார்களில் தரவுகளைக் காணும் வாய்ப்பு சேர்க்கப்பட்டது.

டிசம்பர், 2020

REST API மற்றும் WebSocket API

தவறான stopLoss அல்லது takeProfit மதிப்புகளை அமைக்கும்போது வரும் பிழைச் செய்தி சரிசெய்யப்பட்டது, openOrders இறுதிமுனையத்தின் கோரிக்கை வரம்புகள் புதுப்பிக்கப்பட்டன. இப்போது இது நொடிக்கு 10க்குப் பதில் 5 கோரிக்கைகள் என்று உள்ளது. accountId அளவுரு மதிப்புகள் தவறாகக் காட்டுவது சரிசெய்யப்பட்டது.ஒரே நேரத்தில் நிகழும் Websocket கோரிக்கைகளுடனான பிரச்சினை சரிசெய்யப்பட்டது.

நவம்பர், 2020

REST API மற்றும் WebSocket API

HTTP குறியீடுகளின் லாஜிக் மாற்றமும் அவற்றை சரியானபடி குறிப்பிடுதலும், Rest மற்றும் Websocket APIகளுக்கிடையில் பிழைச் செய்திகளை ஒருமைப்படுத்துதல், /updateTradingOrder இறுதிமுனையம் சரிசெய்தல், /myTrades, /aggTrades, /order மற்றும் /updateTradingOrder இறுதிமுனையங்களில் தேவையற்ற அளவுருக்கள் நீக்கப்பட்டன, சந்தை வரம்பு ஆர்டர்களுக்கு expireTimestamp அளவுரு அமைக்க முடியாமல் இருந்தது சரிசெய்யப்பட்டது.

ஜூன், 2020

REST API மற்றும் WebSocket API

50 டோக்கனைஸ்டு சொத்துக்களும் கிரிப்டோகரன்சி சந்தை இணைகளும் சேர்க்கப்பட்டு எங்கள் API-க்குள் பயனீட்டு முறையில் வர்த்தகத்துக்குக் கிடைக்கின்றன..

மே, 2020

REST API மற்றும் WebSocket API

ஒரு புதிய STOP ஆர்டர் வகை சேர்க்கப்பட்டது. இது ‘பயனீடு’ வர்த்தகப் பயன்முறைக்குள் கிடைக்கிறது; BTC/USD; ETH/USD; Crude Oil (XTI.cx); Brent Oil (XBR.cx); S&P 500 (SPXm.cx); LTC/USD; Gold (XAUm.cx); EUR/USD; Tesla (TSLA.cx); XRP/USD போன்ற சந்தை இணைகளுடன் ’பயனீட்டு’ வர்த்தகப் பயன்முறையைப் பயன்படுத்தும் வாய்ப்பு சேர்க்கப்பட்டது.

மே, 2020

பொது API

/aggTrades இறுதிமுனையத்திலிருந்து startTime மற்றும் endTime அளவுருக்கள் அனைத்து வகையான சந்தை தரவு API-யிலிருந்தும் நீக்கப்பட்டது; /candles இறுதிமுனையமானது கிரிப்டோ சந்தை தரவு API-க்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது.

மார்ச், 2020

REST API

POST-க்கான SIGNED இறுதிமுனைய உதாரணங்கள் ERL குறியீடாக்கத் தேவைகளுக்கு இணங்க /api/v1/order மாற்றப்பட்டது; API ஆவணப் பாகங்களான GET/api/v1/klines மற்றும் GET/api/v1/aggTrades களில், பதிலளிப்புகளுக்கான விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.