தொடங்குங்கள்

தானியங்கி வர்த்தகத்தைச் செயல்படுத்த இயங்கக்கூடிய ஒரு கணக்கை Currency.com REST அல்லது WebSocket API உடன் இணையுங்கள்.

எங்கள் API-ஐயைத் தொடங்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்:

 • ஒரு கணக்கைத் தொடங்குவது
 • எங்கள் செயற்தளத்துக்குள் வர்த்தகம் குறித்து மேலும் தெரிந்துகொள்வது
 • உங்கள் API குறிச்சொல்லைத் தோற்றுவிப்பது
 • நிரல் எழுதத் தொடங்குவது
API

உங்கள் கணக்கைத் துவங்குங்கள்

Currency.com கணக்கைத் தொடங்குங்கள்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தாராளமாக எங்கள் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளவும்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடவும் செய்யுங்கள்.

எங்கள் செயற்தளத்துக்குள் வர்த்தகம் செய்வது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

வர்த்தகம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள எங்களது 'Currency.com செயற்தளத்தில் வர்த்தகம் செய்வது எப்படி' என்ற பக்கத்தையும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் தாராளமாகப் பார்வையிடுங்கள்.

உங்கள்API குறிச்சொல்லைத் தோற்றுவிப்பதற்கு

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு பயன்பாட்டுச் செயலிக்கும் API குறிச்சொல் தேவை. API குறிச்சொல்லானது உங்கள் செயலியை அடையாளம் கண்டு அதைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

உங்கள் செயல்படக்கூடிய API குறிச்சொல்லை உருவாக்க:

 • எங்கள் இணைய செயற்தளத்தில் உங்கள் கணக்கின் நுழைவுச்சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையுங்கள்;
 • Settings > API integrations > Generate new key க்கு செல்லுங்கள்;
 • இருகாரணி உறுதிப்பாட்டை இயக்குங்கள் (2FA);
 • உங்கள் குறிச்சொல் அடையாளக்குறியீட்டை உள்ளிட்டு, அனுமதிகளை அமைத்து, உங்கள் IP முகவரியையும் காலாவதி தேதியையும் பிணையுங்கள்;
 • Generate Key பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்கள் API அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பாருங்கள்

நிரல் எழுதத் தொடங்குங்கள்

REST மற்றும் WebSocket API உடனான இடைவினையில் தேவைப்படும் உதவிகளுக்கு Swagger API ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சில கட்டுப்பாடுகள் பொருந்தும்

 • நொடிக்கு 10 தடவைகளுக்குமேல் கோரிக்கைகள் அனுப்பப்படக்கூடாது. *token_crypto வகையின் General Public API வகைக்கான விகித வரம்புகள் நிமிடத்துக்கு 2000 கோரிக்கைகளுக்கு மேல் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்;
 • வர்த்தக வரலாற்றைப் பொறுத்தவரை முந்தைய 1000 வர்த்தகங்களைப் பெறலாம்;
 • நிறுவனங்களின் டோக்கன்கள், டோக்கனைஸ்டு கடன் பத்திரங்கள், KARMA.cx டோக்கன்கள் மற்றும் ஹாங்காங் சந்தைகளிலுள்ள டோக்கனைஸ்டு சொத்துக்களைத் தவிர அனைத்து டோக்கனைஸ்டு சொத்துக்களும் எங்கள் API-யின் முதற்பதிப்பில் (v1) உள்ளது. இரண்டாம் API பதிப்பில் (v2) ஹாங்காங் சந்தைகளும் கிடைக்கின்றன;
 • API-க்குள் பயனீட்டு வர்த்தகத்துக்கான சொத்துக்களின் பட்டியலை இங்கு காணலாம்.

Troubleshooting