அற்புத அசைவி வர்த்தகச் சுட்டிக்காட்டியை எப்படிப் படித்துப் பயன்படுத்துவது

By Currency.com Research Team

அற்புத அசைவி (Awesome Oscillator) சந்தை ஏற்றயிறக்கத்தின் போது விழிப்பூட்டல்களைக் கண்டறிய பயனுள்ள சுட்டிக்காட்டியாக இருக்கக்கூடும்

அற்புத அசைவி                                 

அற்புத அசைவி சுட்டிக்காட்டி (AO) என்பது ஒரு டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டி. இது அமெரிக்க வர்த்தகரான பில் வில்லியம்ஸ் என்பவரால் சந்தையில் ஏறுமுக அல்லது இறங்குமுக ஆற்றல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா என்பதைத் தீர்மானிக்க உருவாக்கப்பட்டது. இது சந்தையின் மொமண்டத்தை வாய்ப்புள்ள போக்கு திசை அல்லது போக்கு தலைகீழ் மாற்றத்தைக் கண்டறியும் நோக்கத்துடன் அளவிடுகிறது. குறுகிய கால மற்றும் நீண்டகால வரம்புகளின் எளிய நகர்வு சராசரிகளை இணைத்து சந்தை மொமண்டம் மதிப்பிடப்படுகிறது; வேறுவகையில் சொல்வதென்றால், அதிக வரம்புள்ள மொமண்டத்துடன் ஒப்பிடுகையில் இது சமீபத்திய மொமண்டத்தை கணக்கில் எடுக்கிறது.

அற்புத அசைவி உத்தியானது புதிய ஐந்து பருவங்களின் (பார்கள்) எளிய நகரும் சராசரிக்கும் (SMA) 34 பார்களின் எளிய நகர்வு சராசரிக்கும் இடையிலான வேறுபாட்டைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் இறுதி விலைக்கு மாறாக, சுட்டிக்காட்டி பாரின் நடுப்புள்ளி மதிப்பைப் பயன்படுத்துகிறது. அற்புத அசைவியின் சூத்திரம் சிக்கலானதுபோலத் தோன்றினாலும், இது உண்மையில் கீழே காட்டப்பட்டதுபோல மிக எளிதானது:

நடுப்புள்ளி மதிப்பு = (பார் உச்சம் - பார் அடிமட்டம்) / 2

அற்புத அசைவி = SMA5 - SMA34

சுட்டிக்காட்டியானது வரைபடத்தின் கீழ்ப்புறத்தில் ஒரு பெட்டிக்குள் ஒரு ஹிஸ்டோகிராமாக வரையப்பட்டுள்ளது. ஹிஸ்டோகிராம் பார்களை சிவப்பு நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ காணலாம் (சில வர்த்தகத் தளங்களில் கோடுகள் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும்). கடைசி விலையின் நடுப்புள்ளி மதிப்பு முந்த்தைய பாரின் நடுப்புள்ளியைக் காட்டிலும் அதிகம் இருக்கும்போது, ஹிஸ்டோகிராம் பச்சையாக (ஊதா) இருக்கும். கடைசி பாரின் நடுப்புள்ளி முந்தைய பாருடன் ஒப்பிடக் குறைவாக இருந்தால், சிவப்பாகவும் இருக்கும்.

அற்புத அசைவியை எப்படிப் புரிந்துகொள்வது

எளிமையாகச் சொல்வ்தென்றால், முந்தைய பாரவிட மதிப்பு அதிகமிருந்தால் பார் பச்சை நிறத்தில் இருக்கும். குறைவாக இருந்தால் சிவப்பு நிறத்தில் இருக்கும். இன்னொரு உட்கூறு பூஜ்ஜிய கோடு. இதைச் சுற்றிலும் சுட்டிக்காட்டியானது நேர்மறை அல்லது எதிர்மறை மதிப்புகளுக்கிடையில் நகர்ந்தபடி ஊசலாடும். சுட்டிக்காட்டி மதிப்புகள் பூஜ்ஜியக் கோட்டுக்கு மேல் இருந்தால், குறுகிய காலமானது நீண்ட கால வரம்பைக்காட்டிலும் உயர்வாக இருப்பதையும் பூஜ்ஜியத்துக்குக் கீழ் இருந்தால் இதற்கு தலைகீழ் அர்த்தத்தையும் தரும். இவ்வாறாக, ஹிஸ்டோகிராம் பூஜ்ஜியக் கோட்டுக்கு மேல் நகரும்போது, ஏறுமுக் ஆற்றல்கள் சந்தையைச் செலுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறது. அற்புத அசைவி மதிப்புகள் பூஜ்ஜியக் கோட்டுக்குக் கீழ் இருந்தால், இறங்குமுக மொமண்டத்தை நோக்கி அது இருக்கும்.

அற்புத அசைவியை எப்படிப் பயன்படுத்துவது

சாத்தியமுள்ள வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கு வர்த்தகர்களால் பல உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நன்கு அறியப்பட்ட அடிப்படை வர்த்தக அமைப்புகளாக பூஜ்ஜியக் கோட்டுத் தாண்டல், இரட்டை முகடுகள், கோப்பைத்தட்டு வடிவம் மற்றும் விரிந்து பரவல் உள்ளன.

அற்புத அசைவியும் பூஜ்ஜியக் கோட்டு தாண்டல்களும்

பூஜ்ஜியக் கோடு தாண்டல்கள் அடிப்படையில் அற்புத அசைவியை அடையாளம் காண்பதன் மூலம் அடிப்படையான விழிப்பூட்டல்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

 • AO சுட்டிக்காட்டி பூஜ்ஜியக் கோட்டுக்கு மேலாகத் தாண்டும்போது ஓர் ஏறுமுக வாங்கும் வாய்ப்பு விழிப்பூட்டல் நிகழ்கிறது. இது குறுகியகால மொமண்டம் நீண்டகாலத்துடன் ஒப்பிட வேகமாக அதிகரிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
 • சுட்டிக்காட்டி பூஜ்ஜியக் கோட்டுக்குக் கீழாகத் தாண்டும்போது ஒரு விற்பனை வாய்ப்பு நிகழ்கிறது. இது குறுகியகால மொமண்டம் நீண்டகாலத்துடன் ஒப்பிட வேகமாகக் குறைவதைச் சுட்டிக் காட்டுகிறது.

பின்வரும் வரைபடத்தைப் பாருங்கள்.

வாங்கும் மற்றும் விற்கும் வாய்ப்புகள்
வாங்கும் மற்றும் விற்கும் வாய்ப்புகள் – நன்றி: Currency.com

AO தாண்டல் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி வரைபடத்தில் வாங்கும் மற்றும் விற்கும் வாய்ப்புகளை அடையாளம் காணலாம். சிவப்பு வட்டத்தில் அடையாளமிடப்பட்டுள்ள புள்ளி ஓர் இறங்குமுகத் தாண்டலைக் காட்டுகிறது. இது விற்கும் வாய்ப்புக்கான விழிப்பூட்டலாகும். மேலும் வெள்ளை வட்டமானது ஓர் ஏறுமுகத் தாண்டலைக் குறிக்கிறது. AO பூஜ்ஜியக் கோட்டுக்கு மேல் தாண்டும்போது வாங்கும் வாய்ப்புக்கான ஓர் விழிப்பூட்டல் காட்டப்படுகிறது.

இரட்டை முகடுகளில் வர்த்தகம்

இரட்டை முகடுகளில் வர்த்தகம் என்பது அற்புத அசைவி சுட்டிக்காட்டியைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் ஏறுமுக அல்லது இறங்குமுக வாய்ப்புகளை அடையாளம் காணும் இன்னொரு வழியாகும். இரட்டை முகடுகளில் வாய்ப்புகளைத் தேடும்போது பொதுவான வழிகாட்டுதல்:

 • ஏறுமுக இரட்டை முகடுகள் – தொடர்ச்சியான இரு முகடுகள் பூஜ்ஜியக் கோட்டுக்குக் கீழ் இருக்கும்போது, இரண்டாவது முகடு முதலாவதைக் காட்டிலும், ஒரு பச்சை பாரைத் தொடர்ந்து உயரமாக இருப்பது. இரண்டு முகடுகளுக்கிடையில் கீழிழுப்பு (பள்ளம்) பூஜ்ஜியக் கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 • இறங்குமுக இரட்டை முகடுகள் – தொடர்ச்சியான இரு முகடுகள் பூஜ்ஜியக் கோட்டுக்குக் மேலே இருக்கும்போது, இரண்டாவது முகடு முதலாவதைக் காட்டிலும், ஒரு சிவப்பு பாரைத் தொடர்ந்து குறைவாக இருப்பது. மேலும் முகடுகளுக்கிடையில் கீழிழுப்பு பூஜ்ஜியக் கோட்டுக்கு மேலேயே இருக்க வேண்டும்.
ஏறுமுகம் மற்றும் இறங்குமுக இரட்டை முகடுகள்
ஏறுமுகம் மற்றும் இறங்குமுக இரட்டை முகடுகள் – நன்றி: Currency.com

ஏறுமுகம் மற்றும் இறங்குமுக இரட்டை முகடுகள் அமைப்புக்கான ஓர் உதாரணம் EUR/USDக்கான வாராந்திர வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

வெள்ளைக் கோடுகள் ஏறுமுக இரட்டை முகடுகளின் அமைப்பை அடையாளம் காண்கின்றன. இங்கு இரண்டு முகடுகள் இருப்பதையும் இரண்டாவது உயரமாக இருப்பதையும் பூஜ்ஜியத்துக்குக் கீழே பார் ஊதா நிறத்தில் (பச்சை) இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும். மேலும் கீழிழுப்பு ஒட்டுமொத்த அமைப்பு முழுவதிலும் பூஜ்ஜியத்துக்குக் கீழேயே உள்ளது. விலை பார்களுக்குக் கீழ் உள்ள ஊதா கோடு, இரட்டை முகடுகள் அடையாளம் காணப்பட்டபின் விலையில் ஏற்றம் இருப்பதைக் காட்டுகிறது. சிவப்பு கோடுகள் பூஜ்ஜியக் கோட்டுக்கு மேலே இரட்டை முகடுகளை அடையாளம் காண்பதன் மூலம் இறங்குமுக அமைப்பாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது முதலாவதைக் காட்டிலும் தாழ்வாக இருப்பதையும் குறைவான முகடுக்குப் பின் சிவப்பு ஹிஸ்டோகிராம் இருப்பதையும் காணலாம். மேலும் கீழிழுப்பு ஒட்டுமொத்த அமைப்பு முழுவதிலும் பூஜ்ஜியத்துக்கு மேலேயே உள்ளது. மேலும் விலை பார்களுக்குக் கீழேயுள்ள சிவப்பு கோடானது இரட்டை முகடு அமைப்பு உருவாக்கத்திலிருந்து விலை வீழ்ச்சியைக் காட்டுவதையும் நீங்கள் பார்க்கலாம்.

அருமை அசைவி கோப்பைத்தட்டு உத்தி

அற்புத அசைவியை வர்த்தகர்கள் தங்களது வர்த்தக உத்தியில் பயன்படுத்தும்போது அவர்கள் கோப்பைத்தட்டு அமைப்பையும் தேடுகிறார்கள். கோப்பைத்தட்டு வர்த்தக உத்தி என்பது ஏறுமுகம் அல்லது இறங்குமுக சமிக்ஞையைக் கண்டறிவதற்காக ஹிஸ்டோகிராமில் தொடர்ச்சியான மூன்று பார்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பைக் காண முயற்சிப்பதைக் குறிக்கிறது. AO கோப்பைத்தட்டு அமைப்பை பின்வருமாறு அடையாளம் காணலாம்:

 • லாங் பொசிசன் அமைப்பு – இரண்டு அடுத்தடுத்த சிவப்பு பார்கள் இருந்து இரண்டாவது பார் முதலாவதைக் காட்டிலும் தாழ்வானதாக இருப்பது இதற்குச் சான்று. மேலும் இந்த அமைப்பு முழுமையடைவதற்கு மூன்றாவது பார் ஊதா நிறத்தில் (பச்சை) இருக்க வேண்டும். நீங்கள் பின்வருமாறு கண்டறிய முயற்சிக்க வேண்டும் – சிவப்பு – கீழ் உள்ள சிவப்பு-பச்சை ஹிஸ்டோகிராம். வர்த்தகர் நான்காவது பாரில் வாங்க முடிவெடுக்கலாம்.
 • இறங்குமுக அமைப்பு – இரண்டு தொடர்ச்சியான ஊதா (பச்சை) பார்கள் அடையாளம் காணப்படுவதும் இரண்டாவது பார் முதலாவதைக் காட்டிலும் தாழ்வாக இருப்பதும். மேலும் மூன்றாவது சிவப்பு ஹிஸ்டோகிராமுடன் அமைப்பு முழுமையடையும். அதற்கேற்ப, வர்த்தகர்கள் பின்வருமாறு கண்டறிய முயற்சிக்க வேண்டும் – பச்சை – தாழ்வான பச்சை–சிவப்பு ஹிஸ்டோகிராம்.

மற்ற சில அசைவி சுட்டிக்காட்டிகளையும் வர்த்தகர்கள் பயன்படுத்தி AO சுட்டிக்காட்டியுடன் விலகல் வாய்ப்புகளைத் தேடலாம். அதன் விளைவாக, விலையும் சுட்டிக்காட்டியும் ஒரே திசையில் நகராமல் இருக்கும் கட்டங்களை அடையாளம் காண முயற்சிக்கிறார்கள். அருமை அசைவி வர்த்தக உத்தியானது பிற சுட்டிக்காட்டிகளுடன் இணைத்துப் பயன்படுத்தும்வரை வாய்ப்புள்ள விழிப்பூட்டல்களை அடையாளம் காணப் பயனுள்ளதாக இருக்கும்.  அத்துடன், அதிக அனுபவமுள்ள வர்த்தகர்கள் பில் வில்லியம்ஸ் உருவாக்கிய பிற சுட்டிக்காட்டிகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கிறார்கள்.

அருமை அசைவி சுட்டிக்காட்டியின் பயன்கள்

 • நிலையற்ற சந்தையின் போது பயனுள்ள சுட்டிக்காட்டி;
 • சந்தை மொமண்டத்தை அளவிடுவதால் இதுவொரு முதன்மையான சுட்டிக்காட்டி;
 • வெவ்வேறு வகையான சொத்துக்களுக்கு இந்த சுட்டிக்காட்டியைப் பயன்படுத்த முடியும்.

அருமை அசைவி சுட்டிக்காட்டியின் குறைபாடுகள்

 • உத்தியைப் பொறுத்தவரை, இது பல்வேறு தவறான சமிக்ஞைகளைத் தரக்கூடும்;
 • வர்த்தகர்கள் இதை தனித்து நிற்கும் சுட்டிக்காட்டியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அருமை அசைவி எப்படி கணக்கிடப்படுகிறது?

அருமை அசைவி சுட்டிக்காட்டி சந்தையின் மொமண்டத்தை வாய்ப்புள்ள போக்கு திசை அல்லது போக்கு தலைகீழ் மாற்றத்தைக் கண்டறியும் நோக்கத்துடன் அளவிடுகிறது. இது புதிய ஐந்து பருவங்களின் (பார்கள்) எளிய நகரும் சராசரிக்கும் (SMA) 34 பார்களின் எளிய நகர்வு சராசரிக்கும் இடையிலான வேறுபாட்டைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் இறுதி விலைக்கு மாறாக, சுட்டிக்காட்டி பாரின் நடுப்புள்ளி மதிப்பைப் பயன்படுத்துகிறது.

அருமை அசைவி நல்லதொரு சுட்டிக்காட்டியா?

அருமை அசைவி சுட்டிக்காட்டியானது நிலையற்ற சந்தையில் பயனுள்ளதாக இருக்கும். காரணம் இது சந்தை மொமண்டத்தை அளவிடுவதால் இதை முதன்மையான சுட்டிக்காட்டியாகப் பயன்படுத்த முடியும். வெவ்வேறு வகையான சொத்துக்களுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். எனினும் இதை மட்டும் தனியாகப் பயன்படுத்துவதை வர்த்தகர்கள் தவிர்க்க வேண்டும். பயன்படுத்தும் உத்தியைப் பொறுத்து இது பல்வேறு தவறான சமிக்ஞைகளைத் தரக்கூடும்.

MACD அல்லது அருமை அசைவிக்கு இடையில் என்ன வேறுபாடு?

அருமை அசைவி மற்றும் MACD இரண்டுமே சந்தை மொமண்டத்தை அளவிடக்கூடிய டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டிகள். இவை ஒரு சொத்தின் பலவீனத்தை அல்லது பலத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் போக்கின் திசை, போக்கின் தலைகீழ் மாற்றம் அல்லது நுழைவு மற்றும் வெளியேறும் சமிக்ஞைகளைத் தர பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு சுட்டிக்காட்டிகளின் செயல்படும் விதமும் ஒரேமாதிரி இருந்தாலும், கணக்கீட்டிலும் வரைபடத்தில் அவை தோன்றும் விதத்திலும் சில அடிப்படை யுக்திகளிலும் சில வேறுபாடுகள் உள்ளன. 

அருமை அசைவி கணக்கீடுகள் நடுவளவு விலையை அடிப்படையாகக் கொண்டது. MACD இறுதிவிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. அருமை அசைவி சுட்டிக்காட்டி 34 பருவங்கள் மற்றும் 5 பருவ எளிய நகர்வு சராசரியைப் பயன்படுத்துகிறது. MACD சுட்டிக்காட்டியோ 26 பருவங்கள் மற்ரும் 12 பருவ மடங்குகளின் நகர்வு சராசரிகளை 9 பருவ சமிக்ஞைக் கோட்டுடன் பயன்படுத்துகிறது. மடங்குகளின் நகர்வு சராசரிகளைப் பயன்படுத்துவதால் MACD அருமை அசைவியைக் காட்டிலும் விரைவாக அது எதிர்வினையாற்ற முடியும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image