அதிகளவு பிட்காயின்கள் யாரிடம் உள்ளன? குறிப்பு: அது Tesla கிடையாது
அதிகளவு பிட்காயின் யாரிடம் உள்ளது? தரவுகளின்படி நீங்கள் நினைக்கும் அளவுக்கு நிறுவனங்கள் சொந்தமாக வைத்திருக்கவில்லை

தலைப்புச்செய்திகளில் அமைப்புசார் முதலீட்டாளர்களின் எழுச்சி பற்றி அதிகம் பேசப்படுகிறது – Tesla, MicroStrategy மற்றும் எண்ணிறந்த நிதி நிறுவனங்கள் போன்றவை கிரிப்டோகரன்சிகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளன.
ஆனால் யாரிடம் அதிகளவு பிட்காயின்கள் உள்ளன என்பதற்கான விடை உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். பொதுவாகச் சொன்னால், இந்த வெளியில் துவக்ககட்டத்தில் இதை ஏற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிட பெரு நிறுவனங்கள் வைத்திருக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில், பல நிறுவனங்கள் டிஜிட்டல் சொத்துக்களின் ஏற்ற இறக்கம் காரணமாக அவற்றில் ஈடுபடத் தயக்கம் காட்டி வருகின்றன. இரண்டாவதாக, அதிகளவு கையிருப்பு வைத்திருப்பவர்கள் கிரிப்டோவின் விலை பத்தாயிரக் கணக்கில் இருக்கும்போது அல்லாமல் நூற்றுக்கணக்கான டாலர்களாக இருக்கும்போது அவர்கள் பிட்காயினை சேர்க்கத் தொடங்கியிருக்க வேண்டும்.
இங்கே, உலகிலேயே அதிகளவு பிட்காயின் வைத்திருப்பவரை பாதியாக்கம் செய்யவுள்ளோம். – இதன்மூலம் முதல் 1% சொந்தமாக வைத்திருக்க எவ்வளவு கிரிப்டோ தேவை என்று வெளிக்காட்டவுள்ளோம்.
அதிகளவு பிட்காயின்கள் யாரிடம் உள்ளன?
இந்த இடத்தில் இருக்கக்கூடிய BTC-யின் அதிகபட்ச எண்ணிக்கை 21 மில்லியன் என்பதை மனதில் கொள்வது தகும். இப்போதைக்கும் 2140க்கும் இடையில் படிப்படியாக சப்ளை விடுவிக்கப்படும் – இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, அவற்றில் 18.8 மில்லியன் சுழற்சியில் இருக்கிறது. திறந்த சந்தையில் உள்ள மொத்த பிட்காயின்களின் எண்ணிக்கை இதைவிடக் குறைவாகவே இருக்கும். ஏனெனில் BTC ஏற்படுத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மில்லியன் அளவு எப்போதைக்குமாகத் தொலைந்துவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
BitInfoCharts அளிக்கும் தரவுப்படி மூன்று கிரிப்டோ முகவரிகளில் 100,000BTCக்கும் 1,000,000BTCக்கும் இடையில் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கிறது – இருக்கக்கூடிய நாணயங்களில் இது 3.03% ஆகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வாலெட்டுகள் கொண்டிருக்கும் மதிப்பு $34.7பில்லியன் ஆகும். இந்த முகவரிகள் யாருக்குச் சொந்தமானவை என்பதை நாம் அறிவோம்; இவை ஹூவோபி, பினான்ஸ் மற்றும் பிட்ஃபினெக்ஸ் சந்தைகளின் கோல்டு வாலெட்டுகள் – BTC அதாவது இணையத் தொடர்பிலிருந்து பத்திரமாக சேமிக்கப்பட்டுள்ளன.
அடுத்த நிலைக்கு இறங்கிச் சென்று பார்க்கலாம். 10,000BTCக்கும் 100,000BTCக்கும் இடையில் வைத்திருக்கும் வாலெட்டுகளின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது – மொத்தமாக இவற்றின் மதிப்பு $122.8 பில்லியன் அதாவது மொத்த பிட்காயின்களில் 10.7%. மீதியுள்ள பிட்காயின்களின் உடைமை விபரங்கள் இதோ:
- 2,080 முகவரிகள் 1,000 முதல் 10,000 பிட்காயின்கள் வரை கொண்டுள்ளன. மொத்தமாக அவை 5.3 மில்லியன் BTC வைத்துள்ளன – மொத்த நாணயங்களில் இது 28.2%. இதன் ரொக்க மதிப்பு $322.9 பில்லியன்.
- 13,964 முகவரிகள் 100 முதல் 1,000 பிட்காயின்கள் வரை கொண்டுள்ளன. மொத்தமாக அவை 3.9 மில்லியன் BTC வைத்துள்ளன – மொத்த நாணயங்களில் இது 21.1%. இதன் ரொக்க மதிப்பு $241.9 பில்லியன்.
- 1,31,380 முகவரிகள் 10 முதல் 100 பிட்காயின்கள் வரை கொண்டுள்ளன. மொத்தமாக அவை 4.3 மில்லியன் BTC வைத்துள்ளன – மொத்த நாணயங்களில் இது 22.6%. இதன் ரொக்க மதிப்பு $259.1 பில்லியன்.
கலவையாக 85% பிட்காயின்கள் 10BTCக்கு மேல் வைத்திருக்கும் வாலெட்டுகளில் உள்ளன – இருக்கக்கூடிய அனைத்து முகவரிகளில் 40% 0.001BTC முதல் 1BTC வரை வைத்துள்ளன.
பண மதிப்பில் இதைப் பார்ப்போம். $100க்கும் மேலான மதிப்புள்ள பிட்காயினை எத்தனை பேர் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அந்த எண்ணிக்கை 16.4 மில்லியன் ஆக உள்ளது. $1,000க்கும் அதிக மதிப்புள்ள BTC வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 7.1 மில்லியனில் இருந்து 2.4 மில்லியன் ஆகக் குறைந்துவிட்டது. இவர்கள் $10,000க்கும் அதிக மதிப்புள்ள பிட்காயினை பதுக்கியுள்ளனர். உங்கள் கிரிப்டோ முகவரியின் ரொக்க மதிப்பு $100,000 இருந்தால் நீங்கள் 506,839 பேரில் ஒருவராக இருப்பீர்கள். கவர்ச்சிகரமாக இங்கு 105,388 பிட்காயின் மில்லியனர்கள் உள்ளனர்.
What is your sentiment on BTC/USD?
பிட்காயினை யார் வைத்திருக்கிறார்கள் – அது ஏன் முக்கியமாகிறது
இந்தப் புள்ளி விபரங்கள் முதலில் பயனற்றதுபோல் தோன்றக்கூடும். ஆனால் அவை முக்கியமான ஒரு விசயத்தைச் சொல்கின்றன. 2021ல் $1 டிரில்லியனைக் கடந்தை பிட்காயினின் சந்தை முதலீடு அதிகரிப்புக்குப் பின்னால் நிறுவனங்களின் கட்டுப்பாடு இல்லை. மாறாக வாய்ப்பை இழந்துவிடக்கூடாதே என்று கிரிப்டோ வண்டிக்குள் குதித்த நுகர்வோர் கையிலேயே உள்ளது. அதிகப் புள்ளி இருக்கும்போது வாங்குவது அதிக ஆபத்தான யுக்தியாகத் தோன்றலாம் – ஆனால் அப்போதும் BTC முந்தைய உச்சமான $20,089-ஐ கடந்த ஆண்டு இறுதியில் கடந்தபோது அதை வாங்கியவர்கள் கூட தங்கள் முதலீடு மும்மடங்கு பெருகியதைப் பார்த்திருப்பார்கள்.
பிட்காயின் அதிகம் வைத்திருப்பவர்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். பட்டியலின் முதலில் சடோஷி நகமோடோ இருக்கிறார். இவர்தான் கிரிப்டோகரன்சியின் பெயரறியப்படாத உருவாக்குநர். கிட்டத்தட்ட 1.1 மில்லியன் BTCயை பல்வேறு வாலெட்டுகளில் பரவலாக இவர் இட்டுவைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சகாப்தத்தில் அவ்வப்போது பிட்காயின் மைனிங் செய்யப்பட்டு முகவரிகளுக்கிடையில் நகர்த்தப்படுவதைப் பார்த்துள்ளோம் – இந்த நடவடிக்கையானது கிரிப்டோ சந்தைகளைப் பயமுறுத்துகிறது.
சட்ட அமலாக்க முகமைகளும் இந்தப் பட்டியலில் அதிகம் காணப்படுகின்றன. பல்கேரியா 213,500BTCயை 2017ல் கைப்பற்றி இருந்தது – அதாவது முதல்முறையாக கிரிப்டோகரன்சி $20,000ஐத் தாண்டும் முன். இந்த நாணயங்களை அது வைத்திருந்தது எனில், இதை எழுதும் நேரத்தில் அதன் மதிப்பு $12.8 பில்லியனாக இருக்கும். அதுவே அரசாங்கத்தின் கடனைப் போல ஐந்து மடங்குக்கும் அதிகம் இருக்கும்.
தவிர்க்க முடியாதபடி, FBI-யையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 2013ல் சில்க் ரோடு இணையதளத்தை மூடியபோது இவர்களது அலுவலகம் 144,000BTCயைக் கையகப்படுத்தியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அது ஒரு நாணயம் $334 விலைக்கு விற்றுவிட்டது – அதாவது $8.6 பில்லியன் இலாபத்தை இழந்துவிட்டது.
பிட்காயின் பணக்காரர்கள் பட்டியலில் கேமரனும் டைலர் வின்க்லெவாஸ் தலையாயவர்களாக இருக்கிறார்கள். மார்க் ஸக்கர்பெர்க்குடன் வழக்கு உடன்படிக்கைக்கு வந்ததிலும் BTC மூலம் பெற்றதில் $11 மில்லியன் செலவழித்தபோதும் அவர்கள் பில்லியனர்கள் ஆனார்கள். – 1.5 மில்லியன் நாணயங்களை ஒன்று $120 வீதம் வாங்கினார்கள். பிட்காயினின் விலை அதிலிருந்து 49,900% கூடியுள்ளது. நடப்பு சந்தையில் இந்த BTC அனைத்தையும் வைத்திருக்க மாட்டார்கள் எனினும், நிச்சயம் அவர்கள் தங்கச் சுரங்கத்தில்தான் அமர்ந்திருக்கிறார்கள்.
பிட்காயினின் விலை
அடுது நடக்க இருப்பதைப் பொறுத்தவரை – அக்டோபர் 2021ல் பிட்காயின் $65,000 மண்டலத்தை கடைசியாக உடைத்தது – JPMorgan-ன் கவலையெல்லாம் கிரிப்டோகரன்சியை மேலும் உயரத்துக்கு எடுத்துச் செல்லும் அளவு நிறுவன ஆர்வம் வலுவாக இல்லையே என்பதுதான்.
அந்த வகையில் சில ஆய்வாளர்கள் பிட்காயின் சந்தைகளில் விரைவில் வரத்து இருக்குமென்றும் புதிய BTC நாளொண்றுக்கு 900 வீதம் மைனிங் செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். கிரேஸ்கேல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் போன்றோர் அவை மைனிங் செய்யப்படும் வேகத்தைக் காட்டிலும் வேகமாக கிரிப்டோகரன்சியை வாங்கி வைத்தால், தேவையானது $100,000க்கும் மேலாகக் கடக்கும் என்கிறார்கள். PayPla தற்போது தனது சொந்த கிரிப்டோ சேவையை வழங்குகிறது. MasterCard டிஜிட்டல் சொத்துக்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்கத் தொடங்கியுள்ளது. வரும் மாதங்களில் மேலும் பலர் கிரிப்டோவின் பைத்திய உலகில் அறிமுகம் செய்துகொள்வதைப் பார்க்க முடியும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிட்காயின் நல்லதொரு முதலீடு தானா?
இருக்கலாம். நிச்சயமாக பிட்காயின் 2021ல் புதிய உச்சங்களை எட்டியுள்ளது. எனினும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிரிப்டோகரன்சிகள் அதிக நிலையற்ற தன்மையுடையவை. விலைகள் நிச்சயம் கீழே செல்லும்; அதேபோல் மேலேயும் ஏறும். உங்களது சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம். தாங்கக்கூடிய இழப்புக்கு மேல் முதலீடு செய்வதைத் தவிருங்கள்.
எவ்வளவு பிட்காயின்கள் உள்ளன?
உலகின் முதல் கிரிப்டோகரன்சிக்கான வெள்ளையறிக்கையை 2000களில் சடோஷி நகமோடோ எழுதியபோது, அவர் BTC 21 மில்லியன் எண்ணிக்கையோடு மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். எனினும், கிரிப்டோகரன்சியின் வழக்கத்துக்கு மாறான வடிவமைப்பானது இருக்கக்கூடியதிலேயே மிக அதிகளவில் புழங்கக்கூடிய பிட்காயினாக – கிட்டத்தட்ட மொத்த சப்ளையில் 90% – ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளது.
பிட்காயினைப் பெறுவது எப்படி
Currency.com தளத்தில் BTC கிடைக்கிறது. உங்களது சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம் என்பதை எப்போதும் நினைவு கூறுங்கள். எனினும் தாங்கக்கூடிய இழப்புக்கு மேல் முதலீடு செய்வதைத் தவிருங்கள்.