ஆக்ஸி இன்ஃபினிட்டி விலைக் கணிப்பு: AXS மேல் எழுவதற்கான போராட்டம்

By Currency.com Research Team
• புதுப்பிக்கப்பட்டது

ஆக்ஸி இன்ஃபினிட்டி கடினமான Q4 2021லிருந்து மீண்டு 2022ல் விலை ஏற்றத்தைக் காணுமா?

ஆக்ஸி இன்ஃபினிட்டி விலைக் கணிப்பு                                 
AXS-ன் ஏற்றத்திற்கான போக்கு தொடருமா? – புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்
                                

உள்ளடக்கம்

தீவிரமான நடவடிக்கைகளைக் கண்டது ஆக்ஸி இன்ஃபினிட்டி கேம் மட்டுமல்ல: Axie Infinity Shards-ன் (AXS) விலையும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் 50 சென்ட்டுகளிலிருந்து நவம்பரில் $160 ஆக உயர்ந்தது.

ஆக்ஸி இன்ஃபினிட்டி என்பது ஒரு பிளாக்செயின் கேம் ஆகும். இது ஆக்சிஸ் (Axies) எனப்படும் கதாபாத்திரங்களுடன் சண்டையிட்டு அதன் NFT சந்தையில் வர்த்தகம் செய்வதன் மூலம் ஆட்டக்காரர்கள் கிரிப்டோகரன்சியைப் பெற அனுமதிக்கிறது. Smooth Love Potions (SLP), AXS ஆகிய இரண்டு டோக்கன்கள் போர்களில் வெற்றி பெறும் ஆட்டக்காரர்களுக்கு வெகுமதியாக அளிக்கப்படுகிறது. AXS இந்த இரண்டில் அரிதானதும் அதிக விலை கொண்டதுமாக உள்ளது; கடந்த ஆண்டில் அதன் விலை கூடியுள்ளது.

பாரம்பரிய கேம்களுடன், டெவலப்பர்கள் பிளேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போதைய பயனர்களைத் தக்கவைக்கவும் தங்கள் திட்டங்களை புதுப்பிப்பார்கள். ஆனால் ஆக்ஸி இன்ஃபினிட்டியின் புதுப்பிப்புகள் அதிக மதிப்புடையவை என்பதை நிரூபித்துள்ளன. ஏனெனில் இதுபோன்ற மேம்படுத்தல்களுக்குப் பிறகு AXS அடிக்கடி நேர்மறை போக்குகளைக் கண்டுள்ளது. கேமின் பிரபலம் அதிகரிக்கிறது என்றால் ஆக்ஸி இன்ஃபினிட்டி விலை 80% உயரும் என்பதாகும்.

கிரிப்டோ கேம் டோக்கனின் எதிர்காலம் என்ன என்பதை அறியும் முன், அதன் விலை வரலாற்றைப் பார்ப்போம்.

AXS-ன் ஏற்ற விலை வரலாறு

2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் AXS விலை மிகவும் சீரற்றதாக இருந்தது. டோக்கன் விலை $2 க்கு மேல் செல்லவில்லை.

ஆக்ஸி இன்பினிட்டிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எதேரியம்-இணைக்கப்பட்ட சைட்செயினான ரோனினுக்கு எதேரியமிலிருந்து ஆக்ஸி இன்ஃபினிட்டி இடம்பெயர்ந்ததால் AXS ஆனது ஏப்ரல் மாதத்தில் ஒரு கூரான விலையேற்றத்தை கண்டது. ஏப்ரல் முதல், ஆக்சிஸ் ரோனினில் விருத்தி செய்யப்பட்டு, வாங்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. AXS கேம்ப்ளே வெகுமதிகளும் சைட்செயினில் கோரப்படுகின்றன.

ரோனின், Sky Mavis தயாரிப்பின் திசையை வழிநடத்த அனுமதித்துள்ளது. மேலும் ஆட்டக்காரர்களுக்கு பல போனஸும் தருகிறது. இது எரிவாயுக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளதுடன் புதிய பயனர்களுக்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. ஆட்டக்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 இலவசச் சந்தை நடவடிக்கைகளை வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, பிளாக்செயின் இடம்பெயர்வுக்குப் பிறகு AXS விலை உயர்ந்து, ஏப்ரல் 28 அன்று $10.85ஐ எட்டியது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் விலை சுமார் $4 ஆகக் குறைந்தது. ஆனால் ஜூலை இறுதியில் 100% உயர்ந்தது. Sky Mavis குழுவின் ஜூலை புதுப்பிப்பு, தினசரி 800,000 செயலில் உள்ள பயனர்களை எட்டியது. 30-நாள் அளவில் NFT தயாரிப்பில் முதலிடத்தில், $600 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையுடன் இருந்தது.

இந்தப் புதுப்பிப்பு, சாகசப் பயன்முறைக்கான உள்ளடக்கத்தை அறிவித்தது. இதில் ஆட்டக்காரர்கள் கணினியின் செயற்கை அறிவுக்கு எதிராகப் போராடுகிறார்கள். அத்துடன் Land புதுப்பிப்பில், சந்தையைப் பயன்படுத்தி விளையாட்டில் விளையாடுபவர்கள் நிலங்களை வாங்க முடியும். 

AXS விலையானது ஜூலை 15 அன்று தொடக்கத்தில் அதிகரித்து $23.96ஐ எட்டியது. ஜூலை 31 அன்று $40க்கு மேல் உயர்ந்து, மீதமுள்ள மாதம் முழுவதும் ஏற்றமான போக்கு தொடர்ந்தது.

AXS விலையின் வேகம் ஆகஸ்ட் வரை தொடர்ந்தது. ஆக்ஸி இன்பினிட்டியின் மற்ற கிரிப்டோ டோக்கன் ஆன SLP, பணவீக்கப் பாதையில் இருப்பதை Sky Mavis கண்டறிந்தது - உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு ஐந்து SLP களுக்கும், ஒன்று மட்டுமே எரிக்கப்பட்டது. இதன் விளைவாக, கேம் ஸ்டுடியோ SLP வெகுமதிகளை மிகவும் அரிதானதாக மாற்ற ஆக்ஸி இன்ஃபினிட்டி-ஐ மேம்படுத்தியது.

ஆகஸ்ட் 10 அன்று, புதிய புதுப்பிப்பு நேரலையில், AXS விலை $43.71லிருந்து $64.05 ஆக உயர்ந்தது. இந்த மாதம் முழுவதும் விலை உயர்ந்து கொண்டே வந்து ஆகஸ்ட் 31 அன்று $72.20ஐ எட்டியது.

செப்டம்பரில் ஆக்ஸி இன்ஃபினிட்டிக்கு மற்றொரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்தது. ஸ்டேக்கிங் அம்சம் செப்டம்பர் 30 அன்று நேரலைக்கு வந்து, பயனர்கள் தங்கள் AXS டோக்கன்களை வைத்து பங்குபெற அனுமதித்தது. AXS ஸ்டேக்கிங் மூலம், பயனர்களுக்கு AXS வெகுமதிகள் மற்றும் கேமின் எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமைகள் வழங்கப்படுகின்றன. வாக்களிக்கும் உரிமை பயனர்களுக்கு சமூகக் கருவூலத்தின் மீது ஒரு கருத்தை முன்வைக்கும் உரிமையை வழங்குகிறது. இந்தக் கருவூலம் தற்போது $2.7 பில்லியன் மதிப்புள்ள AXS ஐக் கொண்டுள்ளது. 

இந்தப் புதுப்பிப்பு மூலம் AXS  $100ஐக் கடந்தது. ஏனெனில் இது பயனர்களுக்கு நீண்ட காலத்திற்கு இதில் பயன்பெற ஒரு காரணத்தை அளித்தது. செப்டம்பர் 30 அன்று $74.51 ஆக இருந்த விலை அக்டோபர் 1 அன்று $110.54 ஆக உயர்ந்தது.

அடுத்த சில மாதங்களுக்கும் ஏற்றமான போக்கு நிற்கவில்லை. நவம்பர் தொடக்கத்தில், Sky Mavis, ரோனினுக்கான மையமில்லா சந்தையாக Katanaவைத் தொடங்கியது. இந்தச் சந்தை தொடக்கத்தில், பயனர்கள் AXS, SLP, USD Coin (USDC), Wrapped Ether (WETH) ஆகியவற்றுக்கு இடையே வர்த்தகம் செய்ய அனுமதித்தது. ஆக்ஸி இன்ஃபினிட்டி மற்றும் அடுத்தடுத்த டோக்கன்களைப் பயன்படுத்த எளிதானதும் குறைவான விலையில் வழங்கவும் Katana வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வெற்றியை நிரூபித்தது - நவம்பர் 5 அன்று, அது தொடங்கப்பட்ட மறுநாளே, விலை $150 ஐத் தாண்டியது.

நவம்பர் 7 அன்று, விலை இதுவரை இல்லாத அளவுக்கு $160.36 ஐ எட்டியது. ஆனால் புதிய ஆராய்ச்சியின் மூலம் ஆக்ஸி இன்ஃபினிட்டி அதன் பயனர் தளத்தை இழக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்திய பின்னர் அது வீழ்ச்சியடைந்துள்ளது.

PlayerCount அறிக்கைப்படி, 40% ஆக்ஸி இன்ஃபினிட்டி ஆட்டக்காரர்கள் பிலிப்பைன்ஸில் உள்ளனர். இருப்பினும், செப்டம்பர் முதல், முழுநேர ஆட்டக்காரர்கள் பிலிப்பைன்ஸின் தினசரி சராசரி ஊதியத்தை விடக் குறைவாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர் என்று Naavik-ன் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. பின் விலை $150க்குக் கீழே சரிந்தது. நவம்பர் 16 அன்று விலை $133ஐச் சுற்றிக் கொண்டிருந்தது.

நவம்பர் 24 அன்று, பிரபலமான மெட்டாவெர்ஸ் கேம் 500 ETHக்கு ஒரு டிஜிட்டல் ப்ளாட்டை விற்றது. மெட்டாவெர்ஸில் டிஜிட்டல் ப்ளாட் நிலத்திற்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச விலை இதுதான் என்று ஆக்ஸி இன்பினிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் அமெரிக்காவும் மெட்டாவெர்ஸ் வழங்கிய "மாபெரும் வாய்ப்பு" குறித்து நேர்மறை அறிக்கைகளை வெளியிட்டது. 2021 டிசம்பர் 3ம் தேதிக்குள் விலை மீண்டு வந்து டோக்கன் மதிப்பு சுமார் $141 ஆக இருந்தது.

AXS-ன் விலை வரலாறு, ஆக்ஸி இன்ஃபினிட்டி போரைப் போலவே அதிரடியாக உள்ளது. 11 மாதங்களுக்குள், விலை $1க்கு கீழ் இருந்து $160 ஆக உயர்ந்தது. ஆனால் பின்னர் சரிவுகளைச் சந்திக்கத் தொடங்கியது. ஜனவரி 6, 2022 நிலவரப்படி, ஆக்ஸி இன்ஃபினிட்டி விலை $78.63 ஆக இருந்தது.

எனவே AXS அதன் வேகத்தை மீண்டும் பெறுமா? AXS கிரிப்டோ விலைக் கணிப்பைத் தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

ஆக்ஸி இன்ஃபினிட்டி விலைக் கணிப்பு

ஆக்ஸி இன்ஃபினிட்டி விலையானது $90 முதல் $100 மதிப்புள்ள பகுதிகளுக்கு இடையே நிலைகொண்டிருப்பதாகத் தோன்றுவதால், FX Street-ன் AXS நாணய விலைக் கணிப்பு $170க்கு மீண்டும் வரத் தயாராக இருப்பதாக நம்புகிறது. அத்துடன், திடமான வாங்கல்-விற்றல் சமிக்ஞைகள் $5.00/three-box தலைகீழ்த் திருப்பப்புள்ளியிலும் Figure வரைபடத்திலும் உள்ளது.

AXS ஒரு "அற்புதமான நீண்ட கால முதலீடு" என்று WalletInvestor கூறுகிறது. அதன் ஆக்ஸி இன்ஃபினிட்டி 2022 விலைக் கணிப்பின்படி பிப்ரவரி 2022க்குள் $100ஐத் தாண்டிவிடும் என்று கூறுகிறது. இந்த விலை உயர்வு தொடரும் என்றும், டிசம்பர் 31, 2022க்கான அதன் AXS நாணயத்தின் விலைக் கணிப்பு $276.13 என WalletInvestor கூறுகிறது. WalletInvestor-ன் கூற்றுப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த வேகம் தொடரும்: ஐந்தாண்டு காலத்திற்கான அதன் ஆக்ஸி இன்ஃபினிட்டி நாணயத்தின் விலைக் கணிப்பு $1,000.41 ஆகும்.

Gov.capital இதைவிட நேர்மறையான கணிப்பைத் தருகிறது. இதன் விலை ஒரு வருடத்தில் $442.17ஐ எட்டும் என்றும் அக்டோபர் 2022 இறுதியில் $500க்கு மேல் உயரும் என்றும் கூறுகிறது. 2027 ஆம் ஆண்டிற்கான ஐந்தாண்டு AXS கணிப்பு $4,410.84 ஆகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

2025 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸி இன்ஃபினிட்டி நாணயத்தின் விலைக் கணிப்பு என்ன?

DigitalCoinPrice-ன் கணிப்புப்படி, 2025ல் ஆக்ஸி இன்ஃபினிட்டியின் சராசரி விலை $232.44 ஆகும்.

2025 ஆம் ஆண்டில் நாணயத்தின் சராசரி விலை $371.13 ஆக இருக்கும் என்று PricePrediction தெரிவிக்கிறது.

இந்தக் கணிப்புகள் சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை; இவற்றின் தரவுகளில் உள்ள மதிப்புகளை மாற்றக்கூடிய அனைத்து வெளிப்புறக் காரணிகளையும் தாக்கங்களையும் இது குறிக்காது என்பதையும் தயவுசெய்து கவனிக்கவும். அனைத்து விலைக் கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் பொதுவான தகவலுக்கு மட்டுமே.

ஆக்ஸி இன்ஃபினிட்டி ஒரு நல்ல முதலீடுதானா?

இது ஒரு நல்ல முதலீடாக இருக்கலாம். கடந்த ஆண்டில், AXS விலை $1 முதல் $160 வரை அதிகரித்தது. மேலும் இந்த வேகம் புதிய ஆண்டிலும் தொடரும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். WalletInvestor-ன் ஆக்ஸி இன்ஃபினிட்டியின் விலைக் கணிப்பு, ஐந்தாண்டு காலத்தில் இது கிட்டத்தட்ட $1,000 என்ற உச்சத்தை எட்டும் என்று கூறுகிறது.

நினைவில் கொள்ளுங்கள், ஆய்வாளர்கள் எப்போதும் சரியாக இருப்பதில்லை. எனவே நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை எப்போதும் செய்ய வேண்டும். நீங்கள் இழப்பை தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

ஆக்ஸி இன்ஃபினிட்டியில் முதலீடு செய்வது எப்படி

Kraken, Katana உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் AXSஐ வாங்கலாம். ஆக்ஸி இன்ஃபினிட்டியை விளையாடுவதன் மூலமும், டோக்கன்களை ஸ்டேக்கிங் செய்வதன் மூலமும் இதை வெகுமதிகளாகப் பெறலாம்.

இருப்பினும், விலை எப்போது வேண்டுமானாலும் குறையக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - எனவே நீங்கள் இழப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image