BAND நாணயத்தின் விலைக் கணிப்பு: இது எந்தளவு வளரக்கூடும்?
BAND-ல் அப்படி என்ன வித்தியாசம்? அதன் விலை குறித்து வல்லுநர்களின் கணிப்பு என்ன?

உள்ளடக்கம்
- Band நெறிமுறை: அது என்ன, அது எப்படி வேலை செய்கிறது?
- BAND நாணயம்
- இதுவரை நடந்த கதை
- என்ன நடக்கக்கூடும்?
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மையமில்லா நிதி அல்லது DeFi உலகில், டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல், மையமில்லா உலகத்தை மையப்படுத்தப்பட்ட உலகத்துடன் இணைப்பதாகும். Band நெறிமுறையும் அதனுடன் தொடர்புடைய BAND டோக்கன் மூலமும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
BAND என்றால் என்ன - நாம் ஒரு BAND நாணயத்தின் விலையைக் கணிக்க முடியுமா? பார்க்கலாம்.
Band நெறிமுறை: அது என்ன, அது எப்படி வேலை செய்கிறது?
இதன் இணையதளத்தின்படி, Band நெறிமுறை என்பது "ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் பாரம்பரிய வலைக்கு இடையே பாதுகாப்பான இயங்குநிலைகளைச் செயல்படுத்துவதற்கு ஒரு மையமில்லா இணைப்பை உருவாக்குவதன் மூலம்" இணைப்புச் சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
அதாவது, மையமில்லா செயலிகள் (dApps) நெறிமுறையின் ஸ்மார்ட் ஒப்பந்தத் தரவு புள்ளிகளைப் பயன்படுத்தி கணினிக்கு வெளியே உள்ள தரவை அணுகலாம். தரவுப் புள்ளிகள் வெளிப்புற மூலங்களிலிருந்து வரும் ஊட்டங்களின் ஒரு பகுதியாகும். இது மேலும் dApp பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் தரவு மூலங்களைத் தாங்களே கட்டுப்படுத்தவும், இயக்கவும், நிர்வகிக்கவும் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. அதாவது தரவு மூலங்கள் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருக்கும்.
Band நெறிமுறைகள் 2017ல் சொராவிஸ் ஸ்ரீநவக்கோன் (முன்னாள் Ericsson மென்பொருள் பொறியாளர் மற்றும் Boston Consulting Group நிர்வாக ஆலோசகர்), பால் நட்டபத்சிரி (முன்னாள் Turfmapp வெப் டெவலப்பர் மற்றும் Tripadvisor பொறியாளர்) மற்றும் சொராவிட் சூரியகர்ன் (முன்னாள் Dropbox மற்றும் Quora மென்பொருள் பொறியாளர்) ஆகியோரால் நிறுவப்பட்டது. ஸ்ரீநவக்கோன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார், நட்டபத்சிரி தலைமை தயாரிப்பு அதிகாரியாகவும், சூரியகர்ன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.
Band நெறிமுறையைப் பற்றி இது போதுமானது. ஆனால் BAND நாணயம்?
BAND நாணயம்
BAND நாணயம் என்பது Band நெறிமுறையின் சொந்த டோக்கன் ஆகும். இது நெறிமுறையில் பயன்படுத்தப்படும் தரவுத் தொகுப்புகளைக் குறிக்கிறது. மேலும் இது பல வழிகளில் பயன்படுத்தப்படலாம்.
முதலில், பதிவு டோக்கன்களை வழங்குவதற்கு பிணையமாகப் பயன்படுத்தலாம். இரண்டாவதாக, வலைத்தொடர்பில் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க இது பயன்படுத்தப்படலாம். மூன்றாவதாக, பிரதிநிதித்துவ பங்குச்சான்று (dPoS) கருத்தொற்றுமை இயக்கமுறை மூலம் வலைத்தொடர்பைப் பாதுகாக்க வாக்களிக்கப் பயன்படுத்தலாம்.
உங்களிடம் BAND நாணயம் இருந்தால், நீங்கள் நெறிமுறைக்கான தரவு வழங்குநராகலாம். தரவு மூல ஒப்பந்தத்தைப் பெற்று, அதில் தொடர்புடைய தரவை உள்ளிடுவதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியதும் பிணையமாகப் பயன்படக்கூடியதுமான டோக்கன்களைப் பயன்படுத்தி நீங்கள் வேட்பாளரை வழங்குபவராக முடியும்.
டோக்கன்களை ஸ்டேபிள்காயின்களாகவும், ஒரு தொகுப்பாக்கப் பொறி வாயிலாகத் தரவுகளைப் பெறக்கூடிய dApps மூலம் மையமில்லா கடனளிப்பு மற்றும் பிற செலுத்துகைச் சேவைகளை நடத்துவதற்கு பிற சொத்து விலையிடல்களைச் செய்யவும் பயன்படுத்தலாம்.
கவனிக்க வேண்டிய ஒன்று, BAND டோக்கன்களின் மதிப்பு படிப்படியாகக் குறைகிறது. ஸ்டேக்கிங் வெகுமதிகள் மூலம் அதிக டோக்கன்களைப் பெறுவதற்கு, வலைத்தொடர்பு ஸ்டேக்கிங்கில் பங்கேற்பதற்காக பயனர்களை ஊக்குவித்து, எந்த நேரத்திலும் அனைத்து டோக்கன்களில் 66% பங்குகளை ஸ்டேக் செய்திருப்பதை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் தங்கள் BAND நாணயங்களைப் பயன்படுத்த வேண்டும். அவற்றை வாலெட்டில் அல்லது சந்தையில் உட்கார வைக்க வேண்டாம்.
செப்டம்பர் 2019ல், BAND நாணயம் Binance சந்தையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கான முதல் சந்தை அளிப்பின்போது (IEO) அறிமுகப்படுத்தப்பட்டது. Binanceல் $0.473க்கு BAND டோக்கன் வழங்கப்பட்டது. மொத்தத்தில், IEOல் 27.37 மில்லியன் BAND விற்பனையானது. இது மொத்தமுள்ள 100 மில்லியன் BAND நாணயங்களில் 27.37% ஆகும்.
இந்த அமைப்பு முதலில் எதேரியமில் இயங்கியது. ஆனால் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது காஸ்மோஸ் அமைப்பைப் பயன்படுத்துவதற்கு மாற்றப்பட்டது. இதன் பொருள் இது ஓர் எளியதும், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட வடிவத்திலும் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையினால் இது செர்ஜி நசரோவின் Chainlink திட்டத்திற்கு போட்டியாளராகக் கூடுமெனக் கருதப்பட்டது.
2020 டிசம்பரில், OpenAPI முன்முயற்சியில் இணைந்த முதல் பிளாக்செயின் நிறுவனமாக BAND உருவானது என்ற BAND நாணயத்தின் ஒரு முக்கிய செய்தி வெளிவந்தது. Microsoft, Google, eBay, IBM போன்ற பிற உறுப்பினர்களை உள்ளடக்கிய இத்திட்டமானது, பிளாக்செயினில் செயலிகளையும் செயல்திட்டங்களையும் அனுமதிக்கக்கூடிய மென்பொருளை உருவாக்கி அதன் மூலம் அவை ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டது.
Band நெறிமுறை ரொக்கப் பணத்தையும் செலாவணியாகக்கூடிய உலோகத்தையும் கண்காணிக்கிறது. அதன் அந்நியச் செலாவணி விகிதங்கள், கமாடிட்டிளின் விலைகளை, பல APIகள் மற்றும் Fixer, OXR, XE, AlphaVantage போன்ற மூலங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு, பிளாக்செயினிலுள்ள ஆரக்கிள் எண்ட்பாயிண்ட் மூலம் வழங்குகிறது. கிரிப்டோகரன்ஸிகளுக்கு, CoinMarketCap, CoinGecko, Brave New Coin, பிற மையப்படுத்தப்பட்ட சந்தைகள் போன்ற தளங்களில் இருந்து Band நெறிமுறை ஸ்பாட் விலைகளை ஒருங்கிணைக்கிறது.
What is your sentiment on BAND/USD?
இண்டர்-பிளாக்செயின் கம்யூனிகேஷன் (IBC) நெறிமுறையுடன் காஸ்மோஸின் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தி, செயின் முழுவதும் தரவு பரிமாற்றத்தை மேம்படுத்த Band திட்டமிட்டுள்ளது. ஒன்றோடொன்று இயங்கக்கூடிய, பல சங்கிலி கொண்டு எதிர்காலத்தில் உருவாகுவதற்கு இது தீவிர ஆற்றலைக் கொண்டுள்ளது.
BAND நாணயத்தின் அடிப்படைகளை விளக்கிவிட்டோம். ஆனால் BAND நாணயத்தின் விலை எப்படி இருக்கிறது? 2022 மற்றும் அதற்குப் பிறகான BAND நாணயத்தின் விலையைக் கணிக்க இது நமக்கு உதவுமா என்பதைப் பார்ப்போம்.
BAND - US டாலர் வர்த்தகம் - BAND/USD வரைபடம்
இதுவரை நடந்த கதை
நாம் பார்த்தது போல், நாணயம் செப்டம்பர் 2019ல் Binanceல் $0.473 விலைக்கு வெளியிடப்பட்டது. முதல் ஆறு மாதங்களில் அதன் விலை $0.20 முதல் $0.30 வரை இருந்தது.
இருப்பினும், ஏப்ரல் 2020ன் பிற்பகுதியில் $1 தடையை உடைத்து நாணயத்தின் விலை உயரத் தொடங்கியது. அதன் மறுதொடக்கம் வெற்றிகரமாக இருந்தது; ஜூலை 22 அன்று CoinMarketCap அறிக்கைப்படி $4.55 ஐ எட்டியது. ஆகஸ்ட் 1 அன்று சற்று குறைந்து $3.98 ஆக இருந்தது. பின்னர் ஒரு பெரிய விலை ஏற்றத்தைக் கண்டது. ஆகஸ்ட் 12 க்குள் $15.05 ஆக உயர்ந்தது - வெறும் 11 நாட்களில் கிட்டத்தட்ட 280% உயர்வு.
ஆகஸ்ட் நடுப்பகுதியில் $10.34 ஆகக் குறைந்தாலும், அது செப்டம்பர் 1 அன்று (அப்போது) அதுவரை இல்லாத உச்சமான $15.46க்கு உயர்ந்தது. இது ஒரு மாதத்தில் 288% விலை உயர்வு. இருப்பினும், இது மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்து. ஆண்டின் பிற்பகுதியில் $6 குறியைச் சுற்றி வந்தது.
கடந்த ஆண்டு கிரிப்டோவிற்கு ஒரு பெரிய முன்னேற்றம் இருந்தது. BAND நாணயமும் இதற்கு விதிவிலக்கல்ல. இது 2021ல் $5.51ல் தொடங்கியது. பின்னர் ஜனவரி 8 அன்று $10.35 ஆக உயர்ந்தது. ஒரு வார இடைவெளியில் கிட்டத்தட்ட இரட்டிப்பானது. விலையானது பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு சுமார் $9 ஆக இருந்தது, ஆனால் பிப்ரவரி 12 அன்று இது $18.83ஐ எட்டியது.
இவ்வளவு பெரிய உயர்வுக்குப் பிறகு தவிர்க்க முடியாத சரிவு ஏற்பட்டாலும், மார்ச் மாத இறுதியில், ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் அது மீண்டும் மேலே சென்றது. இது மார்ச் 25 அன்று $11.75 ஆக இருந்தது. ஆனால் மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 16 அன்று, அதன் புதிய உச்சமான $21.11ஐத் தொட்டது. ஏப்ரல் 24 அன்று, $13.71 ஆகக் குறைந்தது. ஆனால் மே 6 அன்று $18.26 ஆக மீண்டு வந்தது.
மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் கிரிப்டோ டே சரிவு BANDஐயும் தாக்கியது. மே 23ல் $6.84 ஆக இருந்தது. ஜூன் 14 அன்று, விலை இந்த அளவைச் சுற்றியே இருந்தது. இது ஒரு மாதத்திற்கு முன் இருந்ததை விட 62%க்கு மேல் குறைவு. 16 அக்டோபர் 2021 அன்று, BAND நாணயத்தின் விலை $8.19 ஆகவும், 25 நவம்பர் 2021ல் நாணயத்தின் மதிப்பு $7.52 ஆகவும் இருந்தது.
டிசம்பர் 20, 2021 அன்று, நாணயத்தின் மதிப்பு $4.87 ஆக இருந்தது. மேலும் கிரிப்டோ சந்தைகளின் கடினமான காலம் புத்தாண்டு வரை நீடித்ததால், ஜனவரி 19, 2022க்குள் நாணயத்தின் மதிப்பு $4.86 ஆக இருந்தது.
இதுதான் இதுவரை நடந்துள்ளது. நாம் இப்போது தெரிந்து கொள்ள விரும்புவது BAND நாணயத்தின் விலைக் கணிப்புகள் எப்படி இருக்கின்றன என்பதைத்தான்.
BAND/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
Feb 3, 2023 | 2.1843 | -0.0036 | -0.16% | 2.1879 | 2.2142 | 2.1371 |
Feb 2, 2023 | 2.1869 | -0.0201 | -0.91% | 2.2070 | 2.3450 | 2.1551 |
Feb 1, 2023 | 2.2120 | 0.0769 | 3.60% | 2.1351 | 2.2230 | 1.9840 |
Jan 31, 2023 | 2.1361 | 0.0730 | 3.54% | 2.0631 | 2.3837 | 2.0201 |
Jan 30, 2023 | 2.0671 | -0.0048 | -0.23% | 2.0719 | 2.1509 | 1.8891 |
Jan 29, 2023 | 2.0709 | 0.0626 | 3.12% | 2.0083 | 2.0808 | 1.9943 |
Jan 28, 2023 | 2.0083 | -0.0880 | -4.20% | 2.0963 | 2.1033 | 1.9705 |
Jan 27, 2023 | 2.0943 | -0.1202 | -5.43% | 2.2145 | 2.2145 | 2.0113 |
Jan 26, 2023 | 2.2145 | 0.2844 | 14.73% | 1.9301 | 2.2645 | 1.8780 |
Jan 25, 2023 | 1.9281 | 0.1180 | 6.52% | 1.8101 | 1.9841 | 1.7712 |
Jan 24, 2023 | 1.8091 | -0.1382 | -7.10% | 1.9473 | 2.0581 | 1.7832 |
Jan 23, 2023 | 1.9463 | 0.0190 | 0.99% | 1.9273 | 2.0163 | 1.9051 |
Jan 22, 2023 | 1.9263 | 0.0472 | 2.51% | 1.8791 | 2.0913 | 1.8771 |
Jan 21, 2023 | 1.8801 | -0.0570 | -2.94% | 1.9371 | 2.0081 | 1.8557 |
Jan 20, 2023 | 1.9361 | 0.2082 | 12.05% | 1.7279 | 1.9401 | 1.7059 |
Jan 19, 2023 | 1.7259 | 0.0500 | 2.98% | 1.6759 | 1.7429 | 1.6727 |
Jan 18, 2023 | 1.6789 | -0.1394 | -7.67% | 1.8183 | 1.9100 | 1.6689 |
Jan 17, 2023 | 1.8173 | -0.0707 | -3.74% | 1.8880 | 1.9168 | 1.8163 |
Jan 16, 2023 | 1.8880 | 0.0387 | 2.09% | 1.8493 | 2.0073 | 1.8060 |
Jan 15, 2023 | 1.8503 | -0.0277 | -1.47% | 1.8780 | 1.9060 | 1.7981 |
என்ன நடக்கக்கூடும்?
எதிர்காலத்தில் BAND விலைக்கு என்ன நடக்கும் என்று வரும்போது மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
உதாரணமாக, WalletInvestor-இன் BAND விலைக் கணிப்பு, அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் $1.37 ஆகவும், மேலும் ஐந்து ஆண்டுகளில் $1.14 ஆகவும் குறையும் என்று கூறுகிறது.
இதற்கிடையில், DigitalCoinPrice, டோக்கன் ஒரு வருடத்தில் $7.95ஐ எட்டும் என்றும், மார்ச் 2024க்குள் $10 தடையைத் தாண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான சராசரி BAND நாணயத்தின் விலை $10.54 ஆக இருக்குமென்றும் அதற்கடுத்த ஐந்து வருடங்களில், நாணயம் $12.64 ஆக உயரக்கூடும். 2029 ஆம் ஆண்டிற்கான ஏழு வருட BAND நாணயத்தின் விலை $20.65 ஆகும்.
இறுதியாக, Gov.capital, BAND நாணயத்தின் விலை மார்ச் 2022 இன் இறுதியில் $10 மதிப்பை எட்டக்கூடும் என்று கூறுகிறது. BAND விலையானது ஜனவரி 2024ல் $50 தடையை உடைத்து, ஆகஸ்ட் 2025ல் $100ஐ எட்டக்கூடும் என்றும் அது கூறுகிறது. நாணயத்திற்கான ஒரு வருட விலை இலக்கு $25.07; ஐந்து ஆண்டு இலக்கு $164.66.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
BAND நாணயம் ஒரு நல்ல முதலீடு தானா?
இருக்கலாம். எவ்வளவு உயருமென்பதில் வேறுபாடு இருந்தாலும், உயரும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது.
கணிப்புகள் எப்போதும் துல்லியமானவையாக இருப்பதில்லை என்பதையும் சந்தையைத் தாக்கக்கூடிய எதுவும் கணிப்புகளில் கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கிரிப்டோகரன்ஸிகள் மிகவும் நிலையற்றவை என்பதையும், உங்கள் முதலீட்டின் மதிப்பு குறையவோ, கூடவோ செய்யலாம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இழக்கத் தயாராக இருக்கும் அளவுக்கு அதிகமான பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
BAND நாணயத்திற்கு எதிர்காலம் உள்ளதா?
அநேகமாக உள்ளது. கணிப்புகள் நம்பிக்கையானவையாக உள்ளன. நெறிமுறையின் முதலாளிகள் கணினியை விரிவுபடுத்துவதிலும், OpenAPI முன்முயற்சியின் மூலம் மற்ற பெரிய நிறுவனங்களுடன் இணைப்பதிலும் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், எந்த நேரத்திலும் விஷயங்கள் செயலிழக்கக்கூடும். Band நெறிமுறை விலைக் கணிப்பு ஒன்றும் கல்லில் செதுக்கப்படவில்லை. எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியை செய்யுங்கள்.
BAND நாணயத்தை எப்படி வாங்குவது
நீங்கள் BAND ஐ வாங்க ஆர்வமாக இருந்தால், ஏன் Currency.com மூலமாக முதலீடு செய்யக்கூடாது?
உங்கள் ஆராய்ச்சியை முதலில் செய்ய மறக்காதீர்கள். மேலும் நீங்கள் இழக்கத் தயாராக இருக்கும் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.