BAT நாணய விலைக் கணிப்பு: பேசிக் அட்டென்ஷன் டோக்கனுக்கு என்ன நடக்கும்?

By Currency.com Research Team

பேசிக் அட்டென்ஷன் டோக்கன் (BAT நாணயம்) நம் கவனத்தை ஈர்த்து வருகிறது; ஆனால் அதன் எதிர்காலம் எப்படியிருக்கும்?

இந்த விலைக் கணிப்பில்

பேசிக் அட்டென்ஷன் டோக்கன் (BAT) என்பது ஆர்வமூட்டும் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாகும். இங்கு, வெவ்வேறு பேசிக் அட்டென்ஷன் டோக்கன் விலைக் கணிப்புகளைப் பார்க்கும் முன்பாக இந்த டோக்கன் எப்படி வந்தது, இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விளக்க இருக்கிறோம்.

இணையவழி விளம்பரத்திலுள்ள பிரச்சினை

2017ல் கிட்டத்தட்ட $240 பில்லியன் இணையவழி விளம்பரத்துக்கென செலவிடப்பட்டுள்ளது. மரபார்ந்த அச்சு ஊடகம், விளம்பரப் பலகைகள் மற்றும் ஒளிபரப்பு விளம்பரங்களைக் காட்டிலும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கான பட்ஜெட் அதிகரித்தது இதுவே முதல்முறை. இணையவழி விளம்பரம் மிகப்பெரும் துறையாக மாறியுள்ளது. ஆயினும் மக்கள் இணையவழி விளம்பரங்களில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இதில் எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்கள் உட்பட வெவ்வேறு வடிவங்கள் முயற்சிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை நிறைய பயனாளிகள் பார்த்தவுடன் விரைந்து மூடிவிடுகின்றனர்.

இதில் தனியுரிமை விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. சில இணையதளங்கள் தங்கள் பயனாளிகள் இணையவழியாக என்ன தேடுகிறார்கள் என்று பகுப்பாய்வு செய்தன. இது சட்டவிரோதமானதல்ல. ஆனால் பலரும், குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் வேறொரு நிறுவனத்துக்கு விற்கப்படுகையில் இதை நெறிமுறைக்குப் புறம்பானதாகக் கருதுகின்றனர். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்தேறவில்லை.

BAT வெள்ளையறிக்கையின்படி; "டிஜிட்டல் விளம்பரம் முடிவுக்கு வந்துவிட்டது. இணையவழி விளம்பரத்துக்கான சந்தை ஒரு காலத்தில் விளம்பரதாரர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் பயனர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இது `இடைநிலையரான` விளம்பரச் சந்தைகள், பார்வையாளர்களைக் கூறுகளாகப் பிரித்தல், சிக்கலான நடத்தை மற்றும் சாதனங்களுகிடையிலான பயனர் கண்காணிப்பு மற்றும் இறுக்கமான வெவ்வேறு தரப்பினர்களுக்கிடையில் தரவு மேலாண்மை செயற்தளங்கள் மூலமாகப் பகிரப்படுதல் ஆகியவற்றால் தாண்டப்பட்டுவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு சாத்தியமான ஒரு தீர்வினை Brave இணைய உலவியும் பேசிக் அட்டென்ஷன் டோக்கனும் வழங்குகின்றன".

BAT-ன் நோக்கம் ”விளம்பரதாரர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் அதிக பலனைத் தரும் அதே வேளையில் பயனர்களுக்கு வெகுமதியோடு பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு தொகை செலுத்தும் அமைப்பாக ஆவது; BAT மற்றும் அதனுடன் சேர்ந்த தொழில்நுட்பங்கள் வருங்கால இணையத் தரநிலைகளின் பகுதியாக இருந்து, பயனரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வேளையில் வெளியீட்டாளரின் உள்ளடக்கத்தைப் பணமாக மாற்றும் முக்கியப் பிரச்சினையைத் தீர்ப்பது” ஆகியவற்றைச் செய்வதாகும்.

Brave மற்றும் BAT

2016ல் ஜாவாஸ்கிரிப்டை உருவாக்கியவரும் மோஸில்லா (Mozilla) செயற்திட்டத்தை நிறுவிய மென்பொருள் மேம்பாட்டாளருமான பிரெண்டன் ஐக் என்பவரால் Brave தோற்றுவிக்கப்பட்டது. இந்த இணைய உலவி விளம்பரங்களையும் கண்காணிப்பாளர்களையும் இயல்பாகவே முடக்கும்படி வடிவமைக்கப்பட்டது, இதுவொரு திறந்த மூல நிரல் திட்டமாகும். இதன் நோக்கம் பயனர்களின் தனியுரிமையைக் காப்பதாகும். இந்த உலவி, தொகை செலுத்தும் முறைக்கு பேசிக் அட்டென்ஷன் டோக்கனுக்கான (BAT) ஆதரவும் கொண்டதாக உள்ளது.

பேசிக் அட்டென்ஷன் டோக்கன் எதேரியம் பிளாக்செயின் வலைத்தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பயன்பாட்டு டோக்கனாகவும் பயன்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள யோசனை ஒப்பீட்டளவில் நேரடியானது.

Brave இணைய உலவி வாயிலாக மக்கள் விளம்பரங்களைப் பார்க்கத் தாங்களாகவே முடிவெடுக்கலாம். அவ்வாறு அவர்கள் செய்தால், பேசிக் அட்டென்ஷன் டோக்கன் மூலமாக ஒரு சிறிய தொகையை அவர்கள் பெறுவார்கள். Brave Payments என்றழைக்கப்படும் ஓர் அமைப்பானது பயனரின் விளம்பர நுகர்வினை அவர்கள் உலவல் அடிப்படையில் தீர்மானிக்கும். ஒவ்வொரு மாத இறுதியிலும் தானாகவே எத்தனைபேருக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை உள்ளடக்கங்களைப் பார்ப்பதில் செலவிட்ட நேரத்தின் அடிப்படையில் கணக்கிடுகிறது.

பயனர்கள் உள்ளடக்கத்தைப் பார்ப்பதில் நேரம் செலவிடாமல் கூட, படைப்பூக்கமுள்ள உள்ளடக்கம் வழங்குபவர்களை Patreon செயற்தளம் போன்றவற்றின் வாயிலாக ஆதரிப்பதன் மூலம் கிட்டத்தட்ட அதே வழியில் குறிப்பிட்ட பங்களிப்புகளைத் தரலாம்.

விளம்பரதாரர்கள் விளம்பர இடத்தை வாங்க முடியும். எனவே பயனர் கவனம் BAT உடன் உள்ளது. உள்ளடக்கம் உருவாக்குபவர்களும் வெளியீட்டாளர்களும் கட்டணங்களையும் விளம்பர வருவாயையும் பேசிக் அட்டென்ஷன் டோக்கனில் பெறுகிறார்கள்.

இதுவரை மேலோட்டமாகப் பார்த்துவிட்டோம். ஆனால் இதன் விலையில் என்ன நடந்துள்ளது? இதைப் பயன்படுத்தி நாம் BAT விலைக் கணிப்பைச் செய்யமுடியுமா?

இதுவரையிலான கதை

பேசிக் அட்டென்ஷன் டோக்கன் 2017 மே 31ல் தொடங்கப்பட்டது. ஒரு ஆரம்பகட்ட நாணய வழங்கலுக்குப்பின் 30 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் $35 மில்லியன் திரட்டப்பட்டது. ஜூலை 16ல் இது $0.06621 என்று கீழே விழுந்தாலும், மீண்டெழுந்து 2017 செப்டம்பர் 2ல் $0.2444 என்ற விலையில் வர்த்தகமானது.

அதன் பின் தொடர்ச்சியான மேடுகள் மற்றும் பள்ளங்கள் இருந்தன. பின்னர் 2018 துவக்கத்தில் ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்து அந்த ஆண்டு ஜனவரி 8ல் $0.8482 தொட்டது. ஆனால் விரைவிலேயே ராக்கெட் பூமிக்குத் திரும்பிவிட்டது. எனினும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு $0.10வுக்கும் $0.40வுக்கும் இடையில் விலை நிலவியது.

What is your sentiment on BAT/USD?

0.27869
Bullish
or
Bearish
Vote to see community's results!

2022 ஜனவரி 19ல் BAT விலை தோராயமாக $0.9572 என்று வர்த்தகமாகியது.

BAT - US Dollar வர்த்தகம் – BAT/USD விளக்கப்படம் 

BAT to US Dollar
தினசரி மாற்றம்
0.27849
குறைவு: 0.27412
அதிகம்: 0.283

எனினும் பல கிரிப்டோகரன்சிகளைப் போலவே BAT நாணயத்துக்கும் 2021ல் எல்லாம் மாறத் தொடங்கின. ஒரு வளர்ந்துவரும் நாணயச் சந்தை பேசிக் அட்டென்ஷன் டோக்கனுகுப் பலனளித்ததால் அதன் மதிப்பு கிளர்ந்தெழுந்தது.

அந்த வருடத்தில் $0.2015 எனத் தொடங்கிய விலை, சந்தை வேகமெடுக்கவும் அதன் மதிப்பு அதிகரித்தது. ஜனவரி இறுதியில் $0.3011 என்றும் பிப்ரவரி 28ல் இது $0.4899 எனவும் இருந்தது. மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை பேசிக் அட்டென்ஷன் டோக்கன் விலை இதைவிட நன்றாக இருந்தது. மார்ச் 18ல் $1.3294 என்ற உச்சத்தைத் தொட்டது. மாத முடிவில் $1.1233 ஆகக் குறைந்தது. ஆனால் மூன்று மாதங்களில் விலை 273% உயர்ந்ததை நாம் கவனிக்கலாம்.

ஏப்ரல் துவக்கதில் நிலவரம் மேலும் மேம்பட்டு ஏப்ரல் 9ம் தேதி அதுவரை இல்லாத உச்ச விலையான $1.65ஐத் தொட்டது. எனினும் சந்தை தன்னைத்தானே சீர்படுத்திக் கொள்ளும்போது, மே 19ன் கிரிப்டோ நிலைகுலைவுடன் சேர்ந்து பேசிக் அட்டென்ஷன் டோக்கனின் விலை வீழ்ச்சியடைந்தது. மே 23ல் அடிவிலையாக $0.5069ஐத் தொட்டது (ஆறு வாரங்களில் 69% வீழ்ச்சி). ஜூன் 4ல் திரும்பவும் ஏறி $0.7436க்கு வந்தது.

பின்னர் ஜூலை 20ல் $0.46க்கு விழுந்தது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் உச்சங்களுக்கு ஏறியது. செப்டம்பர் 5ல் $0.98 என்ற உயரத்தை எட்டியது. பின்னர் செப்டம்பர் 28ல் அடிவிலையான $0.58க்கு இறங்கியது. 2021 அக்டோபர் 31ல் தோராய வர்த்தக விலை $1.09 என்று இருந்தது. 2021 நவம்பர் 27ல் முத்திரை பதிக்கும் உயரத்தையும் அதுவரை இல்லாத உச்ச விலையான $1.77ஐயும் தொட்டது. ஆயினும் விலை தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் விதமாக 2021 டிசம்பர் 30ல் $1.19க்கு வந்தது.

2022 தொடக்கம் கிரிப்டோ சந்தைகளுக்கு மந்தமாக இருந்தது. நாணயம் பக்கவாட்டுகளில் நகர்ந்து கொண்டிருந்தது. ஜனவரி 19ல் நாணயம் தோராயமாக $0.9572 என்ற அளவில் வர்த்தகமானது. DigitalCoinPrice வெளியிட்ட குறிகாட்டிகளின்படி, வில்லியம்ஸ் பெர்சண்ட் ரேஞ்ச் சொல்வதுபோலவே RSI-ம் வாங்கும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும், நகரும் சராசரிகளின் தொழில்நுட்ப குறிகாட்டிகள் விற்கும் நிலையைச் சுட்டிக் காட்டுகின்றன. அதிகபட்ச வழங்கலாக 1.5 பில்லியனைக் கொண்டு 1.49 பில்லியன் டோக்கன்கள் கிடைக்கும் நிலையில், இந்த நாணயம் திரும்ப எழுமா?

இதுவரை நடந்தது இதுதான். ஆனால் வருங்காலம் எப்படி இருக்கும்? 2022 மற்றும் அதற்குப் பிறகான காலத்தில் BAT விலைக் கணிப்பு குறித்து சிலர் சொல்வதைப் பார்க்கலாம்.

2022 மற்றும் அதன் பிறகான பேசிக் அட்டென்ஷன் டோக்கனின் விலைக் கணிப்பு 

எதிர்காலம் என்று வரும்போது, பல்வேறு BAT விலைக் கணிப்புகள் உள்ளன.

உதாரணமாக, Gov.Capital-ன் BAT விலைக் கணிப்பு ஒரு வருட காலத்தில் $1.53 என்றும் ஐந்து ஆண்டுகளில் $5.18 என்றும் உள்ளது. மே 2022க்குள் $1.50 என்ற குறியீட்டை நாணயம் உடைக்கும் என்று இந்தத் தளம் நம்புகிறது. அதேபோல $2 குறியீட்டை 2023 ஏப்ரலில் தாண்டும். 2024 ஜனவரி 1ல், கணிக்கப்பட்ட மதிப்பாக $2.21 உள்ளது. 2025 துவக்கத்தில் நாணயத்தின் மதிப்பு $3.15 என்று இருக்குமென கணிக்கிறது.

WalletInvestor ஒருவருட காலத்தில் இது $1.60 அடையுமென்றும் ஐந்து ஆண்டுகளில் $3.84 தொடுமென்றும் கணிக்கிறது. இதற்கு மாறாக, DigitalCoinPrice-ன் BAT விலைக் கணிப்பு 2022ல் சராசரி விலையாக $1.32; 2023ல் $1.56; 2025ல் $2.10; 2027ல் $2.54 இருக்குமென்று கணிக்கிறது. மிகவும் நம்பிக்கை கொண்டதாக, Ripple Coin News உள்ளது. மாறியல்புள்ள சந்தையிலும் BATக்கு உள்ள நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டால் இது 2025 இறுதிக்குள் $15 இலக்கை அடையுமென்று வாதிடுகிறது. 

எப்போதும்போல, கணிப்புகள் எப்போதும் துல்லியமானவையாக இருப்பதில்லை என்பதையும் கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் முதலீட்டின் மதிப்பு கீழே இறங்கவோ மேலே செல்லவோ கூடும். உங்களால் தாங்கக்கூடிய இழப்புக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

BAT ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். எப்போதும் போல, உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் முதலீட்டின் மதிப்பு கீழே இறங்கவோ மேலே செல்லவோ கூடும். உங்களால் தாங்கக்கூடிய இழப்புக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

2025ல் BAT மதிப்பு என்னவாக இருக்கும்?

இது நீங்கள் பின்பற்றும் BAT நாணய விலைக் கணிப்பைப் பொறுத்தது. உதாரணமாக DigitalCoinPrice இது $2.10 பக்கத்தில் இருக்குமென்று நினைக்கிறது. இதற்கிடையில் Gov.Capital அந்த ஆண்டின் ஜனவரி துவக்கத்தில் $3.16 இருக்குமென்கிறது. மீண்டும் சொல்கிறோம். இவையெல்லாமே சூத்திரங்களும் தொழில்நுட்பக் கணிப்புகளும் தான்; இந்த எண்கள் ஒன்றும் கல்லில் பொறிக்கப்படவில்லை. மற்றும் கடந்தகால வெற்றியைக் கொண்டு எதிர்கால இலாபத்துக்கு உத்தரவாதம் தர முடியாது.

BAT $100-ஐத் தொடுமா?

தொடுவது சாத்தியம்தான். அப்படித் தொட்டால், ரொம்ப நீண்ட காலத்துக்கு அவ்வாறு இருக்காது. அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், விலையானது 10,209.3%க்கும் அதிகமாக ஏற வேண்டும். BAT மீது மிகவும் நம்பிக்கையுள்ள கணிப்புப்படி 2026ல் விலை $15 அடையக்கூடும். இதுவே கிட்டத்தட்ட 1,446.4% அதிகரிப்பைக் காட்டுகிறது. 

BAT நாணயத்தை எங்கு வாங்குவது

நீங்கள் BAT நாணயத்தை வாங்க விரும்பினால், Currency.com உட்பட கிரிப்டோ சந்தைகள் மூலம் வாங்கலாம். இதை ரொக்கப் பணத்தின் மூலமாகவோ அல்லது உங்கள் கிரிப்டோகரன்சிகளில் சிலவற்றைப் பரிமாற்றம் செய்தோ வாங்கமுடியும். 

எனினும், இதற்குத் தொகை செலுத்த நீங்கள் விரும்பவில்லை எனில், நீங்கள் Brave பயன்படுத்தி உலவியின் வாலெட்டுக்குப் பதிவுசெய்து கொள்ளலாம். உலவியில் விளம்பரத்தை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் அதற்குரிய தொகை உங்களுக்கு பேசிக் அட்டென்ஷன் டோக்கனாகக் கிடைக்கும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image