BNB செயின் (பினான்ஸ் ஸ்மார்ட் செயின்) என்றால் என்ன?: ஓர் விரிவான பார்வை

By Currency.com Research Team

பினான்ஸ் பிளாக்செயின் நெறிமுறை 2020 முதலாக விரைந்து மேல்நோக்கிச் செல்கிறது. ஆனால் பத்திரிகைகளில் நேர்மறையான செய்தி இல்லை

உள்ளடக்கம்

2020 பின்பகுதியில் பினான்ஸ் செயினின் முக்கிய தரமேம்படுத்தலாகத் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து, BNB செயின் (முன்பு பினான்ஸ் ஸ்மார்ட் செயின் என்றழைக்கப்பட்டது) மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் ஒப்பந்த செயற்தளங்களில் ஒன்றாக, மிகக் குறிப்பாக மையமில்லா நிதி (DeFi) சந்தையில் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது.

கணிசமான அளவு குறைவான பரிவர்த்தனைக் கட்டணத்தைக் – தோராயமாக எதேரியம் கட்டணத்தில் ஏழில் ஒரு பங்கு – கொண்டிருப்பதாலும் எதேரியத்தின் தொகுதி நேரம் 15 உடன் ஒப்பிடுகையில்  மூன்று நொடிகளே கொண்டிருப்பதாலும் BNB செயினின் எதேரியம் மெய்நிகர் எந்திரத்துடன் (EVM) தடையில்லாமல் இணங்கிச் செல்லும் தன்மையினாலும், இந்த பிளாக்செயின் கடந்த ஆண்டில் பெருமளவில் பயனர்கள் இதற்கு மாறியுள்ளதைப் பார்க்க முடிந்தது.

பின்வரும் கட்டுரையில் நாம் BNB செயின் குறித்து அறியப்படாத விசயங்களைப் பார்க்க இருக்கிறோம். எதற்காக BNB செயின் பயன்படுத்தப்படுகிறது என்றோ இதன் பலங்கள், பலவீனங்கள் குறித்தோ உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் அவசியம் தொடர்ந்து படியுங்கள்.

BNB செயின்: முக்கிய புள்ளிவிபரங்கள்

பினான்ஸின் அதிகாரப்பூர்வ ஆய்வுப்பொறி BscScan-யில் உள்ள வரைபடங்களைப் பயன்படுத்தி BNB செயினில் நடைபெறும் அன்றாடப் பரிவர்த்தனைகளை நாம் காணலாம். டிசம்பர் 2021 முழுவதிலும் இது உச்சத்தில் இருந்துள்ளது. அதன்பின் கணிசமாகக் குறைந்துவிட்டது. பிப்ரவரி 7ல் 5.9 மில்லியனுக்கும் சற்று அதிகமான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இது 2021 உயரங்களைக் காட்டிலும் குறைவு என்ற நிலையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகம். இதற்கு முந்தைய ஆண்டில் ஒரு மில்லியன் பரிவர்த்தனைகளுக்குச் சற்று கூடுதலாகப் பதிவாகியிருந்தது.

டிசம்பரில் தினசரி பரிவர்த்தனைகள் கூராக அதிகரித்தது
டிசம்பரில் தினசரி பரிவர்த்தனைகள் கூராக அதிகரித்தது – புகழ்: bscscan.com

தனித்துவமான செயின் முகவரிகளும் 2021 மார்ச் முதல் திடமாக அதிகரித்துள்ளன. தற்போது 134 மில்லியனுக்கும் அதிகமாக அவை உள்ளன.

தனித்துவமான BSC முகவரிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன
தனித்துவமான BSC முகவரிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன – புகழ்: bscscan.com

2021 ஆகஸ்டில் இருந்து சராசரி எரிவாயு விலைகள் தொடர்ந்து ஏழு GWEI (பரிவர்த்தனை கட்டணம் & உறுதிப்படுத்தல் வெகுமதி)-க்குக் கீழேயே இருந்து வருகிறது. ஃபியட் அடிப்படையில் இதன் மதிப்பு ஒரு சென்ட்டின் சிறிய பின்னம். சராசரி தொகுதி நேரங்களும், 2021 மே மாதத்தில் வலுவான கிரிப்டோ காளையோட்டத்தினால் ஏற்பட்ட ஒரு சிறிய கூரான எழுச்சியைத் தவிர்த்து, நிலையாக மூன்று நொடிகளிலேயே உள்ளன. 

நன்மையோடு இணைந்து வரும் தீயவை

இந்த அதிகரித்துவரும் பிரபலத்தினால் 2021 முழுவதும் சில கேடான செய்தி வெளியீட்டுக்குக் காரணமாயிற்று. இந்த பிளாக்செயின் பெரியளவிலான பேர்போன ஊடுருவலும் மோசடிகளும் நடக்கும் இடமாக இருந்தது. இதில் யுரேனியம் ஃபைனான்ஸ், மீர்கட் ஃபைனான்ஸ், தலைப்புச் செய்தியாக வந்த ஸ்குயிட் கேம்ஸ் டோக்கன் வீழ்ச்சி போன்றவை அடங்கும்.

Crypto Briefing-ன் செய்தியறிக்கை சொல்வதாவது: “2020 செப்டம்பரில் BNB செயின் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து இந்த செயின் ஊடுருவல்கள், சுரண்டல்கள், மோசடிகள் ஆகியவற்றுக்கு ஆளாகக்கூடியதாக மாறிவிட்டது.”

ஆனால் உண்மையிலேயே BNB செயின், எதேரியத்தைக் காட்டிலும் மோசடிக்காரர்களின் புகலிடமாக மாறிவிட்டதா? BNB செயின் கட்டமைக்கப்பட்ட விதம் குறிப்பிட்ட தீய நடவடிக்கைகளை ஈர்க்கும்படி உள்ளதா? அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆர்டன் பல்கலைக்கழகத்தின் நிதி பேராசிரியரும் பிளாக்செயின் வல்லுநருமான ராஸ் தாம்ஸன்: “இதற்குக் காரணம் BNB தொகுதி அளவில் புதிய குழந்தை என்பதுதான்” என்று Currency.com-க்கு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது “இது போன்ற விசயங்களை கிரிப்டோகளில்  முன்னரே பார்த்திருக்கிறோம். ஒரு புதிய ஆர்வமூட்டும் செயற்தளம் என்பது ஆரம்பத்தில் மோசடிகாரர்களுக்கு இலக்காகத் தோன்றும். ஏனெனில், மிகையான விசயங்கள் எல்லாம் இழந்துவிடுவோமோ என்று பயப்படக்கூடிய மேலும் அப்பாவியான, எளிதில் ஏமாறக்கூடிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதால், இது அவர்களின் திறனாய்வை நிறுத்திவைக்க வழிவகுக்கும்.”

ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் பினான்ஸின் குறைந்த செலவு அணுகுமுறை இருமுனையிலும் கூரான வாளைப் போன்றது. உருவாக்குநர்கள் டன் கணக்கில் எரிவாயு கட்டணங்களைச் சேமிக்க முடியும் என்றாலும், நம்பகமான ஸ்மார்ட் ஒப்பந்தத் தணிக்கை நிறுவனமான CertiK-ன் இணை நிறுவனர் ரோங்குய் கு, Currency.comக்குக் கூறியதாவது: “இது புதியவர்களையும் கிரிப்டோ வெளிக்கு ஈர்க்கிறது…இந்தப் புதியவர்கள் மனசாட்சியில்லாத மோசடிகாரர்களுக்கு கச்சிதமான இலக்காக உள்ளனர். அவர்கள் தேவையான முயற்சியை எடுக்காமல் இதில் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் உள்ளனர் மற்றும் அதன் அவசியத்தை விரைவில் அறிந்து கொள்கின்றனர்.”

பொறுப்பு குறித்த கேள்வி

போட்டியாளர்களைவிட BNB செயின் மேலும் தீய கிரிப்டோ ஆட்டக்காரர்களை ஈர்க்கிறதோ இல்லையோ, திறந்த மூல இயல்புடைய பிளாக்செயின் தொழில்நுட்பம் பொறுப்புணர்வு குறித்த கடினமான உரையாடலை, தொழில்நுட்பப் பார்வையிலும் தத்துவார்த்த நிலைப்பாட்டிலும் ஏற்படுத்தியுள்ளது.

BNB செயின் ஏறத்தாழ ஒரு ஆப் ஸ்டோரைப் போல செயல்படுமா என்பது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அதன் நெறிமுறைப் பட்டியலிடல்களின் வாய்ப்புக்கான மேற்பார்வையுடன் ரோங்குய் கு கூறியதாவது: ”இந்த யோசனை நடைமுறையில் செயல்படுத்துவதைக் காட்டிலும் கருத்து ரீதியாக சிறப்பாகத் தெரிகிறது. இதற்குப் பின்னுள்ள சித்தாந்தம் கிரிப்டோ மற்றும் மையமில்லா நிதியின் பண்புகளுக்கு எதிராக இயங்குகிறது…இதன் இணையோடு சேர்ந்தியங்கும் இயல்பு காரணமாகவும், எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் அநியாயமாகப் பணத்தைப் பிடுங்கும் மையப்படுத்திய இடைநிலை ஆள் யாருமில்லாததும் தான் பலரையும் DeFiயை நோக்கி ஈர்க்கக் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

ஆனால் பினான்ஸ் மையப்படுத்தலுக்கு முற்றிலும் அந்நியமானதல்ல. விரிவான செயல்வீதம், பயன்பாட்டுத் தன்மைக்கு ஈடாக பினான்ஸ் அதற்கிணையாக கடுமையான மேற்பார்வையை தனது 21 பங்குச்சான்று உறுதிப்படுத்தல் முனையங்களின் வலைத்தொடர்பில் கொண்டுள்ளது. இவற்றில் CertiKயும் ஒன்று.

Meesari-யில் முதுநிலை ஆராய்ச்சியாளராக உள்ள ரியான் வாட்கின்ஸ், 2021 ஏப்ரலில் தொடர்ந்து டுவீட்டுகளைச் செய்துவந்தார். வார்த்தைகளைக் குதறி வைக்காமல் அவர் தெளிவாகவே குறிப்பிட்டார்: “BNB செயின் விரைவாகவும் மேலும் அளவு மாறத்தக்க பண்பும் கொண்டிருப்பதற்குக் காரணம் ஏதோ மாயாஜால தொழில்நுட்பப் புதுமையினால் அல்ல. அது மையப்படுத்தலின் மாயாஜாலத்தினால் தான். BNB செயின் மையப்படுத்திய உறுதிப்படுத்தும் தொகுப்பு கொண்ட எதேரியத்தின் பிரிவு. அவ்வளவுதான். வேறேதுமில்லை.” 

இருந்தாலும், பாதுகாப்புத் தரநிலைகளை அதிகரிப்பதும் DeFi எங்கிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதும் CertiK போன்ற தனிக்கையாளர்களின் வேலை என்று ரோங்குய் கு நம்புகிறார்: “புதுமை மற்றும் தனித்திறனை வளர்க்குமிடமாகச் செயல்படக்கூடிய உள்கட்டமைப்பை வழங்குவது பினான்ஸின் பணியாக இருக்கும் அதே நேரத்தில், கிரிப்டோ வெளியில் நோயாகப் பரவியிருக்கும் மோசடிகள் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இதன் காரணமாக நியாயமான புரட்சிகரமான பணி திசைமாறக் கூடாது.” 

பினான்ஸின் எதிர்வினை

பொறுப்புணர்வு குறித்து BNB செயினின் நிலைப்பாடு என்ன? Feedzai நிறுவனத்தின் அபாய மேலாண்மையில் AML தீர்வுகளின் துணைத் தலைவராயிருக்கும் கிரிஸ் கருவானா Currency.comக்குக் கூறியதாவது: “பினான்ஸின் தலைமைச் செயல் அதிகாரி, சாங்பெங் சாவ் ஏற்கெனவே தனது பொது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார் – பினான்ஸ், BNB செயினில் கட்டமைக்கப்படும் செயல்திட்டங்களைக் கட்டுப்படுத்தவோ ஆதிக்கம் செலுத்தவோ செய்யாது. மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், பிரச்சினையை அவர்களாகவே கையாள வேண்டும்.”

பினான்ஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஒருவகையில் இந்த அவதானிப்புடன் பொருந்துகிறது. ஸ்குயிட் கேம்ஸ் மோசடி குறித்து தனது அதிகாரப்பூர்வ பிளாக் பதிவில் சாவ் (வழக்கமாக CZ என்ற பெயரில் எழுதுவார்) கூறியதாவது: “சிலர் கேட்கக்கூடும், ஏன் பினான்ஸ் SQUID போன்ற DeFi செயல்திட்டங்கள் குறித்து எதுவும் செய்ய முடியாது? BNB செயின், எதேரியம் போன்ற பிளாக்செயின்கள் திறந்த மூலத்தைக் கொண்டவை என்பதை விளக்குவது இங்கு அவசியம் என்று நினைக்கிறேன். வலைத்தொடர்பில் கட்டமைக்கப்படும் செயல்திட்டங்கள் மீது எவ்விதக் கட்டுப்பாடோ அல்லது ஆதிக்கமோ நாங்கள் கொண்டிருக்கவில்லை.

“காரணம் BNB செயின் முழுக்கவே சமூகத்தால் இயக்கப்படுவது. ஆளுகை தொடர்பான முடிவுகள் சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். எந்தவொரு திறந்த-மூல பிளாக்செயினுக்கும், உதாரணமாக எதேரியம் போன்றவைக்கும் இது பொருந்தும். ”

What is your sentiment on BNB/USD?

321.02
Bullish
or
Bearish
Vote to see community's results!

எனினும் பாதிக்கப்பட்ட செயல்திட்டங்களிலிருந்து திருடுபோன நிதியை மீட்கும் முயற்சியாக ஆய்வாளர்களுடன் இணைந்து செயலூக்கத்துடன் பினான்ஸ் பணியாற்றுவதை கருவானா ஒப்புக் கொள்கிறார். மேலும், இந்த அபாயங்கள் முதலீட்டாளர்களைத் தயங்கச் செய்வதாகத் தெரியவில்லை. “தனிப்பட்ட பொறுப்புணர்வுகளை இத்தகு சூழல்களில் புறக்கணிக்கக் கூடாது. பிளாக்செயின் வழங்குபவர்களை நாம் பொறுப்பாக்கத் தொடங்கினால், முதல்தர மோசடிகள் அதிகளவில் நடைபெறத் தொடங்குவதை நாம் பார்க்க வேண்டி வரலாம். இது ‘வாங்குபவனே விழித்திரு’ என்ற பழைய கதைதான்.” என்கிறார் அவர். 

இந்தக் கட்டுரையில் பங்களிப்பு செய்யும்படி பினான்ஸுக்கு Currency.com வாய்ப்பை வழங்கியுள்ளது.

முக்கிய DApps

DeFiக்கு ஒரு திடமான செயற்தளத்தை உருவாக்கும் பினான்ஸின் நோக்கத்தை நல்லதாக ஆக்குவதில் அந்தத் துறையில் சில மிகப்பெரிய செயல்திட்டங்களுக்கு, குறிப்பிட்டுச் சொல்வதானால், பூட்டிய மொத்த மதிப்பாக கிட்டத்தட்ட $5 பில்லியனைக் கொண்டிருக்கும் PancakeSwap போன்றவைக்கு இல்லமாக BNB செயின் உள்ளது. சந்தை கண்காணிப்பாளரான DeFi Llama கூற்றுப்படி, BNB செயினிலுள்ள அனைத்து DeFi DAppsகளின் பூட்டிய மொத்த மதிப்பும் தற்போது $11.22 பில்லியனாக உள்ளது. PancakeSwap உடன் சேர்த்து முக்கிய பங்கேற்பாளர்களில் Venus $1.34 பில்லியன் TVL, Tranchess $683.61 மில்லியன் TVL, Alpaca Finance $595.88 மில்லியன் TVL, Ellipsis Finance $611.99 மில்லியன் TVL போன்றவை அடங்கும். 

சில முன்னணி DeFi நெறிமுறைகளுக்கு வீடாக இருப்பது தவிர்த்து, BNB செயினின் TVL சமீபத்தில் டெர்ரா பிளாக்செயினால் கையகப்படுத்தப்பட்டது. அதனிடத்தில் தற்போது $14.6 பில்லியன் TVL உள்ளது. BNB செயினின் இந்த மதிப்பு சந்தையில் முன்னணியில் உள்ள எதேரியமின் $135.27 பில்லியன் TVLல் 10%க்கும் குறைவுதான். இந்தளவு அதிக TVL கொண்டிருப்பதற்கு MakerDAO, Curve, Convex Finance, Wrapped Bitcoin, Aave, Compound, Uniswap ஆகிய பெரிய செயல்திட்டங்களே காரணம்.

2021ல் நடந்த சுரண்டல்களில் கவனம் பெற்றவைகளில் ஒன்று Meerkat Finance. மையமில்லா நிதி (DeFi) வெளியில் பொதுவான ஊடுருவலின் சமீபத்தில் நடந்த முன்மாதிரியாக இது உள்ளது. இங்கு “விளைபொருள் பண்ணைகள் (yield farms)” கையிருப்பானது தீய செயல்பாட்டாளர்களால் காலிசெய்யப்பட்டது. Meerkat-ன் நிகழ்வில், ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டுக்கான ஒரு வெளிப்படையான சோதனையில் $31 மில்லியன் தேய்த்து எடுக்கப்பட்டது

விளைபொருள் பண்ணைகள் ஒரு பயனரின் டோக்கன்களை ஸ்டேக்கிங் செய்து அதற்கேற்ப வட்டியை ஈட்டுவதன் மூலம் இயங்குகிறது. ”விளைபொருள் பண்ணை அபாயங்களால் நிறைந்துள்ளது” என்கிறது பிசினஸ் இன்சைடர். மாறியல்பு, மோசடி, சந்தையிலிருந்து காணாமல் போதல், நிலையற்ற இழப்பு, ஒழுங்குமுறைசார் அபாயம் போன்றவை முக்கிய அச்சுறுத்தல்களாக உள்ளன என்கிறது.

Meerkat Finance தொடங்கிய விதத்தைப் பார்த்தோமென்றால், இது எதேரியத்திலிருந்து பிரிந்து உருவான ஒன்று. அதைத் தொடர்ந்து BNB செயினில் பயன்படுத்தப்பட்டு வந்தது. CoinTelegraph அறிக்கைப்படி, எதேரியம் DeFi வட்டங்களில் பிரிந்து செல்லுதல் (forking) வழக்கமான ஒன்று. ஆனால் “BNB செயின் அதை ஒரு கலையாக மாற்றியுள்ளது. பல முக்கிய எதேரியம் DApps, ஏன் ஓவிய செயற்திட்டங்கள் கூட பினான்ஸை அப்படியே நகல் செய்கின்றன. இதன் அர்த்தம் DeFi கோடைகாலத்தில் கொள்ளை நோயாய்ப் பரவி பாதித்த முன்பு தாக்கிய கிருமிகள் இப்போது அதிகப் பிரபலமடைந்துவரும் செயினில் திரும்பத் தொடங்கியுள்ளன.”

பினான்ஸ் நேரடியாக இந்தப் பிரச்சனைகளுக்குப் பதிலளித்துள்ளது. ஒரு சமீபத்திய பிணைக்கப்படாத இணைய ஒளிபரப்பில் BNB செயினில் சூழல்மண்டல ஒருங்கிணைப்பாளராயிருக்கும் சாமி கரிம் கூறியதாவது: “நிச்சயம் ஏகப்பட்ட சுரண்டல்கள் உள்ளன. ஆனால் இது BNB செயினில் மட்டும் நடக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான புதிய பணர்கள் (மற்றும்) நிறைய DeFi நெறிமுறைகளில் அதிக TVL உள்ளதால் தீயவர்களையும் தீயச் செயல்பாட்டாளர்களையும் இந்த வெளியில் அதிகம் ஈர்க்கும் இலக்காக இது ஆகிவிட்டதாக நான் நினைக்கிறேன். ஆனால் உண்மையில் இதைத் தடுப்பதற்கு எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் இது பயனர் கல்வியால் மட்டுமே தீரும்.”

CZ vs ஒழுங்குமுறையாளர்கள்

2020 அக்டோபரில், பினான்ஸின் விரிவான குழும அமைப்பு முழுவதும் பணம் கையாடலைத் தவிர்ப்பதற்கான ஒழுங்குமுறையின் வெளிப்படையான திட்டம் குறித்து Forbes அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், Forbes ”கிரிப்டோகரன்சி கையாடலுக்கு” ஏற்ற இடமாக இருப்பது குறித்து பினான்ஸைக் குற்றம்சாட்டி ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டது. குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளைப் பொறுத்தவரை BNB செயின் எப்படி இயங்குகிறது?

அந்த வழக்கின் உள்ளடக்கத்தில், Fisco Cryptocurrency Exchange v Binance Holdings, குற்றச்சாட்டு: “பினான்ஸ், அல்லது பினான்ஸின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்லது அதன் உரிமையாளர், CZ,  BAM வர்த்தகச் சேவைகளை, d/b/a பினான்ஸ்.US. என்பதை உருவாக்கினார். பினான்ஸ்.US. குறிப்பாக அமெரிக்க பயனர்களிடத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட, அதேநேரத்தில் பினான்ஸ் ஹோல்டிங்க்ஸை அமெரிக்க ஆணையங்களின் ஒழுங்குமுறைக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.”

மேலும், “பினான்ஸின் நடைமுறையானது திறன்மிக்க கிரிப்டோகரன்சி ஊடுருவலாளர்களும் திருடர்களும் கிரிப்டோகரன்சியைத் திருடவும், கிரிப்டோகரன்சியை இரண்டு அல்லது அதற்குக் குறைவாக உடைப்பதன் மூலம் அதை மோசடி செய்யவும், அதை டெபாசிட் செய்யவும், கொள்ளையடிக்கப்பட்டதை சட்டத்துக்குப் புறம்பாக மாற்றுவது, அதை வெளியே எடுப்பது, இவை அனைத்தையும் அடையாளத்தை வழங்காமல் செய்வது போன்றவற்றைச் செய்வதற்கு இடமளித்திருந்ததுடன், இப்போதும் இடமளிக்கக் கூடியதாக உள்ளது”. 

இங்கே கேள்வி என்னவென்றால், இன்றைக்கு BNB செயின் (பினான்ஸ் ஸ்மார்ட் செயின்) மற்றும் பினான்ஸ் சந்தையின் கொள்கை என்ன? இந்த முரண்பாடுகளுக்கு பதிலளிக்க முயன்றுள்ளதா? இல்லை என்கிறது ரெய்ட்டர்ஸ் வழங்கிய சமீபத்திய ஆய்வு. அதன் ஆய்வு குறிப்பிடுவதாவது, “பினான்ஸ் கடுமையான நெறிமுறை இணக்கத்துக்கு வாக்குறுதி அளித்தாலும் இப்போதும் பலவீனமான பணம்-கையாடல் சரிபார்ப்புகளையே கொண்டுள்ளது” என்றும், “மரபார்ந்த நிதி நிறுவனங்களை மற்றும் பல கிரிப்டோ போட்டியாளர்களை ஆளும் விதிகளுக்கு வெளியே பினான்ஸ் செயல்படுகிறது. பலநாட்டின் ஒழுங்குமுறையாளர்கள் உள்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் விற்பதற்கு அனுமதிக்காத பொருட்களை பினான்ஸ் வழங்கும்படி ஒரு தெளிவில்லாத குழும அமைப்பைக் கொண்டுள்ளது.”

CZ இந்த அறிக்கையை “FUD” என்று சுருக்கமாக முத்திரையிட்டு நிராகரித்தார். அதாவது “பயம், நிலையில்லாமை, சந்தேகம்” என்பதன் சுருக்கமாக கிரிப்டோ மீது ஐயம் கொள்பவர்களை இழிவுபடுத்தும்படி அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை இது. 

இந்த விவாதத்துடன் இன்னொரு விசயமும் சேர்கிறது. மாறும் அளவுள்ள பிளாக்செயின் செயற்தளமான IoTeX-ன் பிரதிநிதியொருவர் Currency.com-க்குக் கூறியதாவது: “தங்கள் AMLஐ (பணம் கையாடல் எதிர்ப்பு) மேம்படுத்துவதற்கு அவர்களிடம் நடைமுறை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு பினான்ஸ் பயனாளியாக தங்கள் உறுதிப்படுத்தல் அளவுகளை அவர்கள் அதிகரித்துள்ளதும் புதிய மேம்படுத்திய உறுதிப்படுத்தல்களை பூர்த்திசெய்வோருக்கு வெகுமதி கூட அளிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்”

எத்தகைய மாற்று வழிகளை பினான்ஸ் கிடைக்கச் செய்கிறது?

பினான்ஸின் பயன்பாட்டு விதிகள் சில குறிப்பிட்ட தடைசெய்யத்தக்க மாற்று நடவடிக்கைகளை செயற்தளத்தைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு கோடிட்டுக் காட்டுகிறது. எந்த நடவடிக்கைகளும் ஹாங் காங் சர்வதேச தீர்ப்பாணைய மைய விதிகளின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென ஒரு தீர்ப்பாய உட்கூறு குறிப்பிடுகிறது. இது எந்தவொரு சராசரிப் பயனருக்கும் செலவுபிடிக்கும் முயற்சியாக இருக்கும்.

இதற்கிடையே பினான்ஸ் இந்தச் ”சுருக்கமான தீர்ப்புக்கான இந்த நடவடிக்கையில் பதிலளிக்கவோ அல்லது மனு தாக்கல் செய்யவோ இல்லை” என்றானபின் Fisco தனது புகாரை தானாகவே திரும்பப் பெற்றுக் கொண்டது. 

BSC அடுத்ததாக எங்கு செல்கிறது?

“2022ன் முக்கிய பேசுபொருளாக  cross-shard, செயின்களுக்கிடையில்/பல்வேறு-செயின் இடையியக்கம் இருக்கும்” என்று BNB செயினின் சமீபத்தில் வெளியன 2022 தொலைநோக்கு தெரிவிக்கிறது. கேமிங்குக்கான பக்கச்சங்கிலி நெறிமுறைகள், சமூகம் மற்றும் மெட்டாவெர்ஸ் பயன்பாடுகள், DeFi செயல்திட்டங்களுக்காக விரிவாக்கப்பட்ட அளவுமாறுதன்மை, மேலும் திறன்கொண்ட பிளாக்செயின் நடைமுறைகள், உறுதிப்படுத்தல் மட்டத்தில் விரிவுபடுத்திய மையமின்மை, BNB செயின் மேம்பாட்டு சமூகத்துக்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிறப்பான கவனம் உள்ளிட்டவை குறிப்பான இலக்குகளாக உள்ளன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

BNB செயினை உருவாக்கியவர் யார்?

BNB செயின் (பினான்ஸ் ஸ்மார்ட் செயின்) பினான்ஸ் செயினின் பினான்ஸ் 2020 தரமேம்பாடு ஆகும். இது சிறப்பான நெகிழ்வுதன்மையை DApps உருவாக்குநர்களுக்கும் பயனர்களுக்கும் அளிக்கிறது. பினான்ஸின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமாக, CZ என்ற சுருக்கப்பெயர் கொண்ட சாங்பெங் சாவ் இருக்கிறார்.

BNB செயின் சட்டப்பூர்வமானதா/முறையானதா?

BNB செயின் சடுதியில் மறைந்துபோகும் எண்ணற்ற கிரிப்டோகரன்சிகளுக்கும் பிற மோசடிகளுக்கும் புகலிடமாக இருந்துவந்தாலும், இதையே பெரும்பாலான அல்லது அனைத்து ஸ்மார்ட் ஒப்பந்த செயற்தளங்களுக்கும் சொல்ல முடியும். முதலீட்டாளர்கள் எந்த DeFi செயல்திட்டத்தில் ஈடுபடும்போதும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிவெடுக்கும் முன்பாக முறையான முனைப்புடன் ஆராய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

BNB செயினை தனித்துவமானதாகக் காட்டுவது எது?

எதேரியத்தைக் காட்டிலும் BNB செயின் விரைவான பரிவர்த்தனை நேரங்களையும் மலிவான எரிவாயு கட்டணத்தையும் கொண்டிருப்பதாக பெருமையடிக்கிறது. இதை ஈடுசெய்யும்படி, அதன் உறுதிப்படுத்தும் வலைத்தொடர்பு அதிகளவு மையப்படுத்தலினால் பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image