BTT விலைக் கணிப்பு: TRON அடிப்படையிலான நாணயத்தின் எதிர்காலம் என்ன?

By Currency.com Research Team

BitTorrent மேடுகளையும் பள்ளங்களையும் கண்டுள்ளது. ஆனால் சமீபத்திய விலைக் கணிப்பு என்ன?

BTT விலைக் கணிப்பு                                 
இந்த கிரிப்டோகரன்சி மிகப்பெரிய மையமில்லா P2P தகவல் தொடர்பு நெறிமுறையாக விவரிக்கப்பட்டுள்ளது - புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்
                                

உள்ளடக்கம்

பிப்ரவரி 2019ல் TRON பிளாக்செயினில் தொடங்கப்பட்ட BitTorrent (BTT) டோக்கன், 2021 வசந்த காலத்தில் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் கண்டது. BTT இணையதளத்தின்படி, உலகின் "மிகப்பெரிய மையமில்லா P2P தகவல் தொடர்பு நெறிமுறை" என விவரிக்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் உள்ளடக்கத்தைப் பெறுவதற்கும் பதிவிறக்குவதற்கும் உள்ள வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில் இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது.

பொழுதுபோக்கு மற்றும் இசைத் துறையில் விநியோக வலைத்தொடர்புகளை சீர்குலைக்கும் முயற்சியில், நிறுவனர் பிராம் கோஹன், இணையப் பயனர்கள் தங்களுக்குள் உள்ளடக்கத்தை விநியோகிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் ஓர் அமைப்பை உருவாக்க விரும்பினார்.

ஜூலை 2018ல் TRON நெட்வொர்க்கால் கையகப்படுத்தப்பட்டபோது, BitTorrent பயனர் தளம் விரிவடைந்தது. பிப்ரவரி 2019ல், TRON நிறுவனர் ஜஸ்டின் சன் தலைமையில், BTT டோக்கன் BitTorrentன் சொந்த கிரிப்டோகரன்சியாக தொடங்கப்பட்டது. ஒப்பீட்டளவில் புதிய டோக்கனாக இருந்தாலும், 2021 ஆம் ஆண்டில் சந்தையின் கவனத்தை BTT ஈர்த்துள்ளது.

ஆனால் BitTorrent டோக்கன் விலைக் கணிப்புக்கு இது எந்த வகையில் பயன்படும்?

முதலில் முந்தைய செயல்பாடுகளைப் பார்ப்போம்:

வரலாற்றுச் செயல்திறன்

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதன் அறிமுகத்திற்குப் பிறகு, BitTorrent சிறிதளவு விலை அதிகரிப்பைத் தந்தது. 2019 மே 8ல் $0.0006646லிருந்து 2019 மே 29 அன்று $0.001628 ஆக உயர்ந்தது. விலைகள் 2020 முழுவதும் சரிந்து, 13 மார்ச் 2020ல் மிகக்குறைந்த விலையான $0.00013814ஐ எட்டியது.

2021ன் முற்பகுதியில், BitTorrent ஒரு விண்கல்லைப் போன்ற எழுச்சியை அனுபவித்தது. ஏப்ரல் 5 அன்று $0.013566 என்ற உச்சத்தை எட்டியது.

BTT விலை 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் குறையத் தொடங்கியது. ஜூலை 20 அன்று $0.001954 ஆகக் குறைந்தது. செப்டம்பர் முதல் நவம்பர் நடுப்பகுதி வரை, விலை சற்று மீண்டு $0.003443 ஆக இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விலை $0.002466 ஆகக் குறைந்தது; மேலும் 11 ஜனவரி 2022க்குள் மீண்டும் $0.002426க்குக் குறைந்தது.

BitTorrent கண்ணோட்டம்

CoinGecko கூற்றின்படி, BTTயின் மொத்த விநியோகம் 990,000,000,000. தற்போதைய சுழற்சி விநியோகம் 932,497,500,000 ஆகும்.

2022 ஜனவரி 11 அன்றைய நிலவரப்படி, BitTorrent-ன் தற்போதைய சந்தை மதிப்பு $2.39 பில்லியனுக்கும் சற்று அதிகமாக உள்ளது. CoinMarketCapன் தரவரிசைப்படி, BTT 54வது இடத்தில் உள்ளது. 

2021 ஆம் ஆண்டில், BitTorrentன் விலை 1,000% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்தப் புள்ளிவிபரங்கள் BitTorrent நாணயத்தின் விலைக் கணிப்பை எவ்வாறு பாதிக்கின்றன?

ஆய்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்...

BTT விலைக் கணிப்பு - நிபுணர் கருத்து

விலைக் கணிப்புகளைக் கவனத்தில் கொள்ளும்போது, விலை நகரக்கூடிய திசையைச் சுட்டிக்காட்டுவதில் இவை உதவிகரமாக இருக்கும் என்றாலும், இவற்றை முழு உண்மையாகக் கருதாமல் வாய்ப்புகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது முக்கியம். நீண்டகாலக் கணிப்புகளைப் பார்க்கும்போது இதைக் குறிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை சில சமயங்களில் முற்றிலுமாக மாறக்கூடும். இதற்கு கிரிப்டோ சந்தையின் உள்ளார்ந்த நிலையற்ற தன்மையும் எதிர்கால விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத பல காரணிகளும் காரணமாக அமைகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, சில BitTorrent நாணய விலைக் கணிப்புகளைப் பார்ப்போம்.

BTT விலை ஒரு வருடத்தில் $0.00551 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் $0.0175 ஆகவும் இருக்கும் என்று WalletInvestors கூறுகிறது.

Gov.capital கணிப்புப்படி, ஒரு வருடத்திற்குப் பிறகு BTT விலை $0.00742 ஆக உயரும்; ஐந்து ஆண்டுகளில், BitTorrent $0.0467 ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.

2022 டிசம்பரில் BTT மதிப்பு $0.00355 ஆக இருக்குமென்று DigitalCoinPrice கூறுகிறது. ஜனவரி 2023க்குள், நாணயத்தின் மதிப்பு $0.00386 ஆக இருக்கும்; ஜனவரி 2024க்குள் மதிப்பு $0.00338 ஆக இருக்கும். 2025 ஆம் ஆண்டிற்கான BTT விலைக் கணிப்புப்படி ஆண்டு சராசரி மதிப்பு $0.005154 ஆக இருக்கும். 2026ன் சராசரி மதிப்பு சுமார் $0.00465 ஆக இருக்கும். மேலும் ஐந்து ஆண்டுகளில் நாணயத்தின் மதிப்பு சராசரியாக $0.00667 ஆக இருக்கும். இருப்பினும், VWMA மற்றும் குறுகிய மற்றும் நீண்ட கால எளிய நகரும் சராசரிகள் இதை எழுதும் நேரத்தில் வலுவான விற்பனை நிலையைக் குறிக்கின்றன.  

BitTorrent ஒரு நல்ல முதலீடுதானா?

இது நல்ல முதலீடாக இருக்கலாம். மொத்தத்தில், பகுப்பாய்வாளர்கள் BTTக்கு சாதகமான குறுகிய மற்றும் நீண்ட கால விலைக் கணிப்புகளை வழங்கியுள்ளனர்.
முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்றவை. மேலும் விலைகள் நிச்சயமாகக் குறையவும் கூடவும் கூடும். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். எப்போதும் நீங்கள் இழப்பை தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

BitTorrent விலை உயருமா?

அடுத்த சில ஆண்டுகளில் இது படிப்படியாகவும் சீராகவும் உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும்,  கணிப்புகளையும் பயனுள்ள குறிகாட்டிகளையும் ஒருபோதும் நம்ப முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். BTT நன்றாக மேலே போகலாம். ஆனால் அதே சமயம் கீழேயும் இறங்கலாம். கிரிப்டோ பிரபலமாக பேசப்படுகிறது. ஆனால் அதிகம் நிரம்பி வழியும் சந்தையாகவும் வெவ்வேறு நிலப்பரப்புக்கான ஒழுங்குமுறை சம்பந்தமாக இன்னும் அறியப்படாமலும் உள்ளது.

நான் BitTorrent-ல் முதலீடு செய்ய வேண்டுமா?

உங்கள் நிதி இலக்குகள் மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து முதலீடு செய்வது உங்கள் தனிப்பட்ட விருப்பமாகும். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதுடன் கிரிப்டோ பற்றி அதிகம் அறிந்தவர்களிடம் பேசுவதும் முக்கியம். சமூக ஊடகத் தளங்களில் சுற்றி வரும் வார்த்தைகளை விட ஆழமாக ஆராய்ச்சி செய்யவும். ஏனெனில் இவை எப்போதும் மிகவும் நம்பகமான ஆதாரங்கள் அல்ல.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image