கார்டனோ விலைக் கணிப்பு: கார்டனோவின் மதிப்பு என்ன?
கார்டனோவின் ADA நாணயம் 2021ல் இலாபம் ஈட்டியது. ஆனால் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. 2022ல் மீண்டு வருமா?

உள்ளடக்கம்
கார்டனோ மற்றும் ADA நாணயம் சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் நான்காவது பெரிய கிரிப்டோகரன்சியாக மாறியதில் இருந்து அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தற்போது ஏழாவது பெரிய கிரிப்டோகரன்சியாக உள்ளது. எதிர்காலத்தில் இந்த கிரிப்டோகரன்சிக்கு என்ன நடக்கும்? 2022 மற்றும் அதற்குப் பின்னர் வரும் காலங்களில் கார்டனோ விலைக் கணிப்பு பற்றி இங்கே பார்ப்போம்.
ADA மற்றும் கார்டனோ விளக்கம்
கார்டனோ பிளாக்செயின் மற்றும் ADA நாணயம் என்றால் என்ன? கார்டனோ என்பது வலைத்தொடர்பு; ADA என்பது கிரிப்டோகரன்சி. இது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். "கார்டனோ கிரிப்டோகரன்சி" மற்றும் "கார்டனோ நாணயம்" பற்றி மக்கள் பேசும்போது, அது துல்லியமாக இல்லை. எப்படியாயினும், ADA நாணய விலைக் கணிப்பு என்பது கார்டனோ விலைக்கணிப்பு தான். எனவே சொற்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
கார்டனோ ஒரு பிளாக்செயின் ஆகும். இத் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருக்கும் நிறுவனம் வலியுறுத்த விரும்புவது எந்தளவு ஆராய்ச்சியில் அது ஈடுபடுகிறது என்பதைத்தான். சக துறைஞரால் மதிப்பாய்வு செய்யப்பட்ட தாள்களில் அதன் அறிக்கைகள் வெளியிடுவதன் மூலம் அதன் பணியின் கல்விசார் இயல்பை மக்கள் கவனிக்க வேண்டும், அதன் மூலம் மக்கள் தங்களுக்குள்ளா பிளாக்செயினைப் பயன்படுத்த ஊக்குவித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறது.
2017ல் எதேரியமின் நிறுவனர்களில் ஒருவரான சார்லஸ் ஹோஸ்கின்சன் என்பவரால் கார்டனோ தொடங்கப்பட்டது. இது DeFi என்றும் அறியப்படும் மையமில்லா நிதி உலகில் உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.
DeFiயின் பின்னணியில் உள்ள கருத்து, கிரிப்டோகரன்சியின் பின்னணியில் உள்ள அதே கருத்தாகும். உலகெங்கிலும் உள்ள பலரிடமும் கைபேசி உள்ளது. ஆனால் வங்கிக் கணக்கு இல்லை. மேலும் வங்கிக்குச் செல்லாமல் நிதிச் சேவைகளை அணுகுவதற்கு DeFi வடிவமைக்கப்பட்டுள்ளது. DeFi, கமிஷன் செலுத்தாமல் மக்கள் சர்வதேச அளவில் பணத்தை அனுப்ப உதவுகிறது. இது பிற எல்லைகளுக்கிடையில் பணத்தை மாற்றுவதை எளிதாகவும் மலிவாகவும் ஆக்குகிறது.
பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கார்டனோ ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகிறது. இவை குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் கணினி நிரல்களாகும். இருப்பினும் மிக முக்கியமாக, கார்டனோ ADA எனப்படும் சொந்த நாணயத்தைக் கொண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் கணிதவியலாளர் அடா லவ்லேஸ் - கவிஞர் லார்ட் பைரனின் மகள் - அவர் சார்லஸ் பாபேஜின் முன்மொழியப்பட்ட இயந்திரக் கணினியான அனலிட்டிகல் எஞ்சினில் பணிபுரிந்தார். அவர் பெரும்பாலும் உலகின் முதல் கணினி நிரலர் என்று கருதப்படுகிறார்.
பிளாக்செயினின் நிர்வாகம் தொடர்பான முன்மொழிவுகளில் வாக்களிக்க நாணயம் வைத்திருப்பவர்களை ADA அனுமதிக்கிறது. வெகுமதிகளுக்குப் பதிலாக அவர்கள் வாக்களிக்கும் உரிமையையும் வழங்கலாம்.
ADAஐப் பெறுவதற்கு, இது பலவிதமான பரிமாற்றங்களில் வாங்கப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் இது mCore நோட்ஸ் எனப்படும் பிளாக்செயினை நிர்வகிக்கும் நபர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நாணயம், தனது வாலைத் தானே விழுங்கும் புராணப் பாம்பின் பெயரான அவுரோபோரோஸ் எனப்படும் அல்காரிதத்தைப் பயன்படுத்தி மைன் செய்யப்படுகிறது. இது பங்குச்சான்று முறையைப் பயன்படுத்துகிறது. அதாவது இது மென்மேலும் சிக்கலான சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு மாறாக எந்தளவு நாணயங்களை உங்களால் மைன் செய்யமுடியும் என்பது எந்தளவு நாணயங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பங்குச்சான்று குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், பணிச்சான்றைக் காட்டிலும் சூழலியல் ரீதியாக மிகவும் உறுதியானது.
டிசம்பரில், கார்டனோ குழு வாலெட்டின் இடைமுகத்தில் பல UX மேம்பாடுகளைச் செய்தது. அவர்கள் UTXO HD பண்புகள், மேம்படுத்தப்பட்ட சங்கிலி தரவுத்தள செயல்பாடுகள், தொகுப்பாக உறுதிப்படுத்துவதற்கு டிரேசர்களை செயல்படுத்தியது போன்ற வளர்ச்சிப் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். கூடுதலாக, குழு நிக்ஸ் அமைவு கருவியைப் புதுப்பித்தது; முனையம் v.1.33க்கு ஒரு புதிய தேர்வுப்பொருளைச் சோதித்து அனுப்பியது; மேலும் வளங்களைப் பயன்படுத்தும் Bitte கருவியை மட்டுப்படுத்தியது. இதனால் அது குறைந்த அளவில் AWS சார்ந்ததாக இருக்கும்.
ஜனவரியில், மேம்பாட்டுக் குழு பின்வரும் புதுப்பிப்புகளைச் செய்தது: அவர்கள் ட்ரெஸர்-கனெக்ட் (trezor-connect) சார்புநிலையை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்து முடித்தனர். கார்டனோ-முனையம் (cardano-node) மற்றும் வாலெட் பின்புலப் பதிப்பு புதுப்பிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொகுப்புகளை வழங்கினர்.
முனைய மேம்படுத்தல் மற்றும் அடுத்த செயல்திட்டம் ஜனவரியில் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் எதிர்காலம் என்ன? ADA நாணய விலைக் கணிப்பைச் செய்வதற்கு முன், ADA நாணய விலை வரலாற்றைப் பார்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். கடந்தகாலச் செயல்திறன் எதிர்கால முடிவுகளின் குறிகாட்டியாக இருக்காது என்றாலும், கார்டனோவுக்கும் ADAவுக்கும் மக்கள் எப்படி எதிர்வினை புரிகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
2017ல் ADA தொடங்கப்பட்டபோது, அது ஆண்டின் பெரும்பகுதியும் $0.02 மதிப்பில் வர்த்தகம் ஆனது. இது 2018ன் தொடக்கத்தில் வியத்தகு முறையில் மாறியது. இந்த நேரத்தில் கிரிப்டோகரன்சி விலைகள் உயர்ந்தன. அதற்கு ADAவும் விதிவிலக்கல்ல. இது 2017 டிசம்பர் 28ல் நாள்வர்த்தகத்தில் குறைந்த விலையாக $0.3679 இருந்து ஜனவரி 4 அன்று நாள்வர்த்தகத்தில் அதிகபட்ச விலையாக $1.33க்குச் சென்றது. ஒரு வாரத்திற்குள் 260% க்கும் அதிகமாக உயர்ந்தது.
அந்த உயர்நிலைகள், இறுதியில் நீடித்து நிலைக்க முடியாதவையாக இருந்தபோதிலும், நாணயம் அடுத்த சில ஆண்டுகளுக்கு $0.08 மதிப்பில் நிலைபெற்றது. ADA நாணயம் மற்றும் கார்டனோ பிளாக்செயின் ஆகியவை குறுகிய காலம் என்றாலும், கிரிப்டோ சந்தையைப் பின்தொடர்ந்தவர்கள் மீது தங்கள் அடையாளத்தை ஏற்படுத்தின.
What is your sentiment on ADA/USD?
ADA/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
Jun 1, 2023 | 0.36291 | -0.01036 | -2.78% | 0.37327 | 0.37476 | 0.36206 |
May 31, 2023 | 0.37347 | -0.00328 | -0.87% | 0.37675 | 0.37965 | 0.36925 |
May 30, 2023 | 0.37685 | -0.00100 | -0.26% | 0.37785 | 0.38235 | 0.37363 |
May 29, 2023 | 0.37765 | -0.00424 | -1.11% | 0.38189 | 0.38530 | 0.37452 |
May 28, 2023 | 0.38179 | 0.01590 | 4.35% | 0.36589 | 0.38330 | 0.36519 |
May 27, 2023 | 0.36579 | 0.00382 | 1.06% | 0.36197 | 0.36648 | 0.35986 |
May 26, 2023 | 0.36177 | 0.00453 | 1.27% | 0.35724 | 0.36591 | 0.35276 |
May 25, 2023 | 0.35714 | -0.00577 | -1.59% | 0.36291 | 0.36369 | 0.35405 |
May 24, 2023 | 0.36281 | -0.00640 | -1.73% | 0.36921 | 0.36951 | 0.35913 |
May 23, 2023 | 0.36931 | 0.00234 | 0.64% | 0.36697 | 0.37442 | 0.36480 |
May 22, 2023 | 0.36687 | 0.00768 | 2.14% | 0.35919 | 0.37301 | 0.35527 |
May 21, 2023 | 0.35929 | -0.00614 | -1.68% | 0.36543 | 0.36663 | 0.35589 |
May 20, 2023 | 0.36533 | -0.00166 | -0.45% | 0.36699 | 0.36739 | 0.36255 |
May 19, 2023 | 0.36708 | -0.00331 | -0.89% | 0.37039 | 0.37197 | 0.36509 |
May 18, 2023 | 0.37029 | -0.00433 | -1.16% | 0.37462 | 0.37916 | 0.36472 |
May 17, 2023 | 0.37452 | 0.00720 | 1.96% | 0.36732 | 0.37934 | 0.36357 |
May 16, 2023 | 0.36722 | 0.00133 | 0.36% | 0.36589 | 0.36951 | 0.36042 |
May 15, 2023 | 0.36599 | -0.00406 | -1.10% | 0.37005 | 0.37483 | 0.36488 |
May 14, 2023 | 0.37015 | 0.00622 | 1.71% | 0.36393 | 0.37207 | 0.36186 |
May 13, 2023 | 0.36383 | -0.00589 | -1.59% | 0.36972 | 0.37012 | 0.36143 |
2021, 2022ல் ADA
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ADA நாணயத்தின் விலை கணிசமாக மாறியது. இது கிரிப்டோகரன்சி சந்தையில் கணிசமான வளர்ச்சியின் காலமாகும். இது சிலரின் ADA கணிப்புகளை திருத்தியெழுதச் செய்தது. ஜனவரி 1 அன்று, நாணயம் $0.1814ல் தொடங்கியது. ஜனவரி 16 ஆம் தேதிக்குள், அது இருமடங்காக அதிகரித்து $0.3654 ஆக இருந்தது.
இதைத் தொடர்ந்து சில நிலையான முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர், பிப்ரவரி 5 அன்று, அது உயர்ந்தது. ADAவின் நாள்வர்த்தகத்தில் குறைந்தபட்சம் $0.4396 ஆக இருந்தது. அதே நாளில் நாள் வர்த்தகத்தில் அதிகபட்சமாக $0.5567 இருந்தது. சில மணிநேரங்களில் 25%க்கும் அதிகமான உயர்வைக் கண்டது. ADA மற்றும் கார்டனோ அங்கேயே நிற்கவில்லை. இருப்பினும் - பிப்ரவரி 10 அன்று, நாணயம் நாள்வர்த்தகத்தில் அதிகபட்ச விலையான $0.9439ஐ எட்டியது. ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 70% அதிகரிப்பை இது குறிக்கிறது.
இந்தச் சமயத்தில், ADA நாணயத்தின் விலையானது ஒரு டாலர் என்ற தடையை உடைப்பது தவிர்க்க முடியாததாகத் தெரிந்தது. அது பிப்ரவரி 20 அன்று $1.12ல் முடிவடைந்தது.
அதன் பிறகு ஓரளவு பின்வாங்கினாலும், மார்ச் 13 அன்று நாள்வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக $0.9931 இருந்தது. அடுத்த மாதத்தின் பெரும்பகுதியும் ஒரு டாலருக்கு மேலேயே இருந்தது. ADA ஏப்ரல் 14 அன்று $1.56 ஐ எட்டியதுடன், மேலும் வளர்ச்சியைத் தொடர்ந்தது. இருப்பினும், மீண்டும் உச்சத்தைத் தொடர்ந்து ஒரு பள்ளம் ஏற்பட்டது. ஏப்ரல் 23 அன்று குறைந்தபட்ச விலையாக $0.9352 பதிவுசெய்து $1.16ல் முடிந்தது.
கிரிப்டோகரன்சியைப் பின்தொடர்பவர்களுக்கு இந்தச் சிறிய நிகழ்வுக்குப்பின் விஷயங்கள் உண்மையிலேயே ஊக்கமளித்தன. ADA மே 12 அன்று $1.55 இல் முடிவடைந்தது. ஆனால் அந்த நாளின் அதிகபட்சமான $1.82லிருந்து குறைந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அது முதல் முறையாக $2ஐ உடைத்து, மே 16 அன்று $2.46 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இருப்பினும், புயல் மேகங்கள் அடிவானத்தில் இருந்தன. மே 19ன் மாபெரும் கிரிப்டோகரன்சி சரிவு ADAவின் மதிப்பைக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்தது - நாள் வர்த்தகத்தின் அதிகபட்சம் $2.03லிருந்து $1.03 குறைந்தபட்சமாக ஆனது. சிறிது மீட்சி இருந்தபோதும், அந்த நாள் $1.48ல் முடிவடைந்தது. அது சேதம் ஏற்பட்டது போல் தோன்றியது. ADA நாணயத்தின் விலை $2 குறிக்கு கீழே இருந்தது.
இது செப்டம்பர் தொடக்கம் வரை இருந்தது. செப்டம்பர் 2 அன்று அது எப்போதும் இல்லாத அளவு $3.10ஐ எட்டியது. எவ்வாறாயினும், செப்டம்பர் 12 அன்று அலோன்சோ ஹார்ட் ஃபோர்க் மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ADA விலை சரிந்தது. அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமானவை என்ற சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து கார்டனோவும் 3% வீழ்ச்சியைச் சந்தித்தது. அக்டோபர் 5 ஆம் தேதி, ADA விலை $2.23 ஆக முடிந்தது. அடுத்த வாரம் அல்லது அதற்கு மேலாக இந்தப் புள்ளியில் விலை நிலைப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் குறையத் தொடங்கியது. அக்டோபர் 12 அன்று $2.07க்கு சற்று அதிகமாக இருந்தது. அக்டோபர் 14 அன்று காலை $2.19க்கு சற்று அதிகமாகி அன்று மாலை $2.22 வரை முன்னேறியது. ஐந்து நாட்களுக்குப் பிறகு, அது மீண்டும் $2.10 ஆகக் குறைந்தது. அக்டோபர் 24 அன்று, நாணயம் $2.17ல் வர்த்தகம் ஆனது.
நவம்பர் 26 அன்று, நாணயம் வெறும் $1.50க்கு வர்த்தகம் ஆனது. ஒழுங்குமுறை கவலைகளை மேற்கோள் காட்டி eToro இந்த நாணயத்தைப் பட்டியலில் இருந்து நீக்குகிறது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம். டிசம்பரில், பல ஆல்ட்காயின்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் மாதத்தின் நடுப்பகுதியில், கணிப்புகள் அதிகளவில் நம்பிக்கையுடன் காணப்பட்டன. கார்டனோ (ADA) டிசம்பர் 17 அன்று ஜெமினி-ஆதரவு கொண்ட கிரிப்டோ செலுத்துகை வலைத் தொடர்பான ஃப்ளெக்ஸாவில் (Flexa) நேரலைக்கு வந்தது. மேலும் கார்டனோ பயனர்கள் 40,000 அமெரிக்க ஸ்டோர்களில் ADAவைச் செலவிடலாம். டிசம்பரின் தொடக்கத்தில் அதன் மதிப்பில் கிட்டத்தட்ட கால் பகுதியை இழந்தாலும், நீண்ட காலத்திற்கு நாணயம் 40% உயர்வுக்குத் தயாராக இருக்கலாம்.
ஜனவரி 13, 2022 அன்று பிற்பகலில், நாணயத்தின் மதிப்பு $1.29 ஆக இருந்தது, இதன் நாள்வர்த்தகத்தின் அதிகபட்சம் $1.35 ஆக இருந்தது. சில ஊடகங்கள் டிசம்பர் சரிவுக்குப் பின் விரைவாக மீண்டு வந்ததற்கான காரணத்தைக் கூறுகின்றன. இது கார்பன்-எதிர்மறை பிளாக்செயினாக மாறுவதற்கான கார்டனோவின் திட்டத்தின் காரணமாக இருக்கலாம். ஏனெனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டதற்கான செய்தி ஆன்லைனில் எதிரொலித்தது.
சரி, எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ன வகையான கார்டனோ விலைக் கணிப்புகளைச் செய்யலாம்? 2022 மற்றும் அதற்குப் பிறகு கார்டனோ விலைக் கணிப்பு என்ன? அதைப்பற்றிப் பார்க்கலாம்.
ADA நாணய விலைக் கணிப்பு
நீண்ட கால நாணய விலைக் கணிப்புகள் கணினி அல்காரிதம்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன; அதை கார்டனோ எதிர்கால விலையின் துல்லியமான கணிப்பாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது. WalletInvestor-ன் கார்டனோ நாணயத்தின் விலைக் கணிப்பு மெதுவான வளர்ச்சியைக் குறிக்கிறது. ADA நாணயத்தின் விலை ஒரு வருடத்தில் $2.79 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் $9.22 ஆகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான CoinPriceForecast-ன் ADA நாணயத்தின் விலைக் கணிப்பு, ஆண்டிறுதியில் $1.40ல் முடியுமென்றும், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் $2.28 ஆகவும், இறுதியில் $2.62 ஆகவும் இருக்கும் என்றும் கூறுகிறது. 2030 ஆம் ஆண்டிற்கான ADA விலைக் கணிப்புப்படி, ஆண்டின் இறுதிக்குள் நாணயம் $5.13 ஐ எட்டும் என்கிறது.
2022 ஆம் ஆண்டிற்கான DigitalCoinPrice-ன் கார்டனோ கணிப்பு பிப்ரவரி 2022 க்குள் ADA நாணயத்தின் விலை $1.90 ஆக இருக்கலாம்; ஆனால் டிசம்பரில் $1.83 ஆகக் குறையும் என்று கூறுகிறது. 2023க்கான அதன் கார்டனோ கணிப்பு சராசரி விலை $2.03 ஆக இருக்கும்; 2024ல் சராசரியாக $2.13; 2025ல் சராசரியாக $2.88; 2026ல் சராசரியாக $2.47. 2028 ஆம் ஆண்டிற்கான அவர்களின் கார்டனோ கணிப்பு $4.51 ஆகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை ADA நாணயங்கள் உள்ளன?
CoinMarketCap கூற்றுப்படி, 13 ஜனவரி 2022 தேதிப்படி, அதிகபட்ச விநியோகமான 45 பில்லியனில் 33.51 பில்லியன் ADA நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இது கிட்டத்தட்ட 75%.
கார்டனோ $10ஐ எட்டுமா?
பத்தாண்டுகளுக்குள் கார்டனோ $10ஐ எட்டும் என்று பரிந்துரைக்கும் முன்கணிப்புத் தரவு எதுவும் வெளியிடப்படவில்லை; ஆனால் CoinPriceForecast 2033 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாணயத்தின் மதிப்பு $6.33 ஆக இருக்கலாம் என்று கூறுகிறது. இருப்பினும், கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்றவை; விலைக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2025ல் கார்டனோவின் மதிப்பு எவ்வளவு?
DigitalCoinPrice இந்த ஆண்டு $2.88 மதிப்பைப் பரிந்துரைக்கிறது; WalletInvestors அதிகபட்சமாக $7.46ஐப் பரிந்துரைக்கிறது; CoinPriceForecast ஆண்டு நடுப்பகுதியில் $2.96 என்ற மதிப்பைப் பரிந்துரைக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் ஊகமானவை; எனவே நீங்கள் ADAல் ஈடுபடுவதற்கு முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும்.
கார்டனோ ஒரு நல்ல முதலீடுதானா?
ADA நாணயம் நல்ல முதலீடாக இருக்கலாம். ஆனால் அதே போல நல்ல முதலீடாக இல்லாமலும் இருக்கலாம். கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்றவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். விலைகள் குறையலாம்; உயரலாம். நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். எப்போதும் இழப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.