கேட்காயின் விலைக் கணிப்பு: கேட்காயின் என்றால் என்ன (CATE)?

By Currency.com Research Team

கேட்காயினை (CateCoin) ஒரு டாகிகாயின் என்று அழைக்காதீர்கள். இது கேலிச்சித்திரங்களை (memes) பணமாக்கும் நோக்கம் கொண்ட கிரிப்டோ டோக்கன்.

 கேட்காயின் விலைக் கணிப்பு                                 
கேலிச் சித்திரங்களில் இருந்து மக்கள் பணம் ஈட்ட கேட்காயினால் உதவமுடியுமா? – புகழ்: CateCoin.club
                                

உள்ளடக்கம்

ஏதோ ஒன்றின் பதிப்பாக வந்த கேட்காயின் கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு முன் கிரிப்டோ உலகின் மிகப் பிரபலமான ஒன்றாக மாறியது. கேட்காயின் (CATE) என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? கேட்காயின் எதற்குப் பயன்படுத்தப்படுகிறது? கேட்காயினின் விலைக் கணிப்பு எப்படி உள்ளது? வாருங்கள், பார்க்கலாம்.

இதுவொரு டாகிகாயின் அல்ல

ஒரு விசயம் வெற்றிகரமானதாக ஆகிவிட்டால், அப்படியான வெற்றியாளரை பிரதி செய்யும் கூட்டம் உருவாகிவிடும். கிரிப்டோகரன்சியில் இது எப்போதும் நிகழ்வதுதான். டோஜ்காயினின் வெற்றியைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்ட கேலிச்சித்திர நாணயங்கள் போன்ற கிரிப்டோக்களில் இது பெரியளவில் நடந்துள்ளது. DOGE என்பது கிரிப்டோக்களைக் கேலி செய்யும் ஒன்றாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு கிரிப்டோகரன்சி. ஆனால் விரைவிலேயே குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தை ஈர்த்து மதிப்பீட்டு வரைபடங்களில் மேல்நோக்கிச் சென்று கிரிப்டோ உலகில் வலுவான இடத்தைப் பிடித்துக் கொண்டது. 2021 துவக்கத்தில் DOGE மிகப்பெரிய சாதனை புரிந்ததால், அந்த முன்னணி கேலிச்சித்திர கரன்சியின் கிரீடத்தைப் பறிக்கும் முயற்சியில் ஷிபா ஈனு, ஃப்ளோகி போன்ற கிரிப்டோக்கள் முயற்சிப்பதை நாம் பார்க்கிறோம். இந்த வரிசையில் இப்போது கேட்காயினும் வருகிறது.

டோஜ்காயின், ஷிபா ஈனு, ஃப்ளோக்கி ஈனு  ஆகியவை டாகிகாயின்களாக இருக்கும் விதத்தில், CateCoin ஒரு டாகிகாயின் அல்ல. கேட்காயின் ஏன் டாகிகாயின் இல்லை என்றால், இதன் சின்னம் பூனை. இருந்தாலும் அது தன்னைத்தானே கேலிச்சித்திர நாணயம் என்று அழைத்துக் கொள்வதால், டோஜ்காயின் சந்தையில் செயல்பட்ட வழியில் இது இயங்கியிருக்காவிட்டால், அது அநேகமாக இருந்திருக்காது.

கேலிச்சித்திரங்களுக்கு (Memes) பணமா?

கேட்காயினின் தனித்துவமான விற்பனைப் புள்ளி பூனையாக இல்லாவிட்டாலும், கேலிச்சித்திர நாணயத்தின் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் இது புதிய நிலையை உருவாக்கியது. உண்மையான கேலிச்சித்திரம் உருவாக்குபவர்களுக்கு கேட்காயின் மூலம் வெகுமதி அளிக்க முடியும். டோக்கனின் வெள்ளையறிக்கைப்படி கேலிச்சித்திரத்தை உருவாக்குவோர் அவற்றை வலைத்தொடர்பில் பதிகிறார்கள். அவர்களுக்கு 100 விருப்பக்குறிகளும் 10 பின்னூட்டங்களும் கிடைத்ததும் அவர்கள் CATE ஈட்டத் தொடங்குவர். எனினும் ஒரு கேலிச்சித்திரம் உருவாக்குநராகப் பார்க்கப்படுவதற்கு, நீங்கள் குறைந்தது 1,000,000 CATE உங்கள் வாலெட்டில் வைத்திருக்க வேண்டும்.

கேட்காயின் அமைப்பில் உள்ள கேலிச்சித்திரங்களை தனித்துவமான டோக்கனாக (NFT) மாற்றுவதன் மூலம் பணமாக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. இந்த NFTகளை வாங்க, விற்க, வலைத்தொடர்பில் வர்த்தகம் செய்ய முடியும். இதில் படைப்பாளிக்கு இலாபத்தில் பங்கு கிடைக்கும். NFTகளுக்கென மையமில்லா சந்தையைக் கொண்டுவரும் திட்டங்களும் உள்ளன. ஆனால் இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. மக்கள் வலைத்தொடர்பிலுள்ள ‘Rise Of Cats’ என்ற சம்பாதிக்க-விளையாடு ஆட்டத்திலும் பங்கெடுக்கலாம். 

Tokenomics அடிப்படையில் பார்த்தால், அதிகபட்சம் 100 டிரில்லியன் வழங்கலை CATE கொண்டுள்ளது. இதில் 45% எரிக்கப்படவுள்ளது. மேலும் 7% பணப்புழக்க தொகுப்புகளுக்குச் செல்கிறது; இன்னொரு 10% சந்தைப்படுத்தல் மற்றும் குழு பட்ஜெட்க்குச் செல்கிறது; இன்னொரு 5% மேம்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. கேட்காயினை வைத்திருப்பவர்கள் அதை ஸ்டேக் செய்யலாம். இதற்கு பிரதிபலனாக ஆண்டுக்கு 15% ஆதாயம் பெறலாம். வலைத்தொடர்பில் நடக்கும் எந்தப் பரிவர்த்தனைக்கும் 2% வரி உண்டு. கிரிப்டோவின் வெள்ளையறிக்கைப்படி, ”கேட்காயின் சூழல்மண்டலத்துக்குள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் CATE வழங்கலில் இருந்து 1% பரிவர்த்தனை மதிப்பு நிரந்தரமாக எரிக்கப்படும் மற்றும் 1% உடைமையாளர்கள் அனைவருக்கும் மறு விநியோகம் செய்யப்படும்.”

2021 ஜூலையில் வலைத்தொடர்பானது EtherAuthority மூலம் தணிக்கை செய்யப்பட்டது. அதில் இது பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது.

அபாய அறிகுறிகள் 

கேட்காயினில் சில அபாய அறிகுறிகள் உள்ளன. டோக்கனின் இணையதளத்திலோ அல்லது வெள்ளையறிக்கையிலோ இந்த வலைத்தொடர்பின் நிறுவனர்களின் பட்டியல் ஏதுமில்லை. எந்த கிரிப்டோகரன்சியை வாங்குவது என்பது குறித்து முடிவெடுக்கும் போது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை எதிர்பார்க்கக்கூடிய தகுதியான முதலீட்டாளர்களிடையில் இது கவலையை ஏற்படுத்தலாம். கேட்காயினிடம் அதன் நிறுவனர்கள் குறித்துக் கேட்டோம். ஆனால் இப்போதுவரை பதிலில்லை.

இரண்டாவதாக, CoinMarketCap கூற்றுப்படி கேட்காயின் பினான்ஸ் ஸ்மார்ட் செயினில் ஒரு ஸ்மார்ட் ஒப்பந்தமாக இருக்கிறது. இது வெள்ளையறிக்கையில் தெளிவாகத் தெரியவில்லை. திரும்பவும் நாங்கள் சொல்ல விரும்புவது, இதற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாங்கள் எதில் முதலீடு செய்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளருக்கு இது கவலையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். திரும்பவும் இதைத் தெளிவுபடுத்துமாறு கேட்காயினிடம் கேட்டோம். ஆனால் இப்போதுவரை பதிலில்லை.

கேட்காயின் விலை வரலாறு

கேட்காயின் விலை வரலாறு
கேட்காயின் விலை வரலாறு – புகழ்: Currency.com

முந்தைய செயல்திறன்களை எதிர்கால விளைவுகளுக்கான அறிகுறியாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் நாணயம் கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று அறிந்துகொள்வதால் கேட்காயின் விலைக் கணிப்பைச் செய்வதில் நமக்கு உதவக்கூடும். 

கேட்காயின் விலை வரலாற்றைப் பார்க்கையில், டோஜ்காயின் தனது அதிகபட்ச விலையை அடைந்த நேரத்தில், மே 2021ல் கேட்காயின் தோற்றுவிக்கப்பட்டது. மே 11ல் $0.0000007 என்ற விலையில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் மே 19ல் மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினத்தினால் பிரச்சனைகள் தீவிரப்படுத்தப்பட்டு விலை இறங்கத் தொடங்கியது. மே 26-28க்கு இடையில், நாணயமானது மிகக் குறைந்த விலையை அடைந்தது. விலை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு சென்றது.

பின் இதிலிருந்து சற்று மீண்டுவந்தது. கோடைகாலம் முழுவதிலும் மந்தகதியில் இருந்தது – இருந்தாலும் இது படு மோசமான மே மாதத்துக்கும் மேல் தான். ஆனால் வீழ்ச்சிக்கு முன்பிருந்த விலையுடன் ஒப்பிட்டால் மிகவும் கீழான நிலையில் இருந்தது – இலையுதிர்க்காலத்தில் நிலைமை சீரடைந்தது. அக்டோபரில் நாணயம் காளையோட்டத்தில் நுழைந்தது. மாதத் தொடக்கத்தில் $0.00000006601 என்ற விலையில் இருந்து முடிவில் $0.000003 என்று முடிந்தது. இது 4,444%க்கும் அதிகமான எழுச்சி. CATEக்கு எல்லாம் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆனால் நவம்பர் 10ல் அதுவரை இல்லாத உச்சவிலையான $0.0000119ஐத் தொட்டது.

இருந்தாலும் இதிலும் ஒரு பாதிப்பு இருந்தது. கோவிட்-19 மாற்றுரு ஒமிக்ரான் குறித்து ஏற்பட்ட நிலையற்ற தன்மையினால் கிரிப்டோகரன்சி சந்தை பாதிப்புக்குள்ளானது. வருட இறுதியில் நாணயத்தின் விலை $0.000002141 என முடிந்தது. ஜனவரியும் கரடிகளுக்கான மாதமாக அமைந்துவிட்டது. CATE-ன் விலை தொடர்ந்து சரிந்து பிப்ரவரி 3ல் $0.0000018 என்ற விலை அருகில் இருந்தது. இந்த சமயத்தில் 32.6 டிரில்லியன் நாணயம் புழக்கத்தில் இருப்பதாக CATE தெரிவித்தது. இது சரியான எண் எனில், இதன் சந்தை மூலதனம் $60 மில்லியனுக்கும் சற்று குறைவு. இந்த அளவுப்படி மிகப்பெரிய கிரிப்டோ வரிசையில் 3,300ஆவது இடத்தில் இது உள்ளது. 

கேட்காயின் விலைக் கணிப்பு

இப்போது கேட்காயின் விலைக் கணிப்பைப் பார்க்கும் நேரம். கிரிப்டோ முன்னறிவிப்புகள் அதிலும் குறிப்பாக நீண்டகால கிரிப்டோ முன்னறிவிப்புகள் தவறாகப் போகக்கூடும். மேலும் இந்த வகை கிரிப்டோகரன்சி விலைக் கணிப்புகள் பெரும்பாலும் சூத்திரங்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. இது எந்த நேரத்திலும் மாறக்கூடும்.

CoinsKid 2022க்கான கேட்காயின் விலைக் கணிப்பை செய்துள்ளது. இது குறுகிய காலத்துக்கு கேட்காயின் ஏறுமுகமாக இருக்குமென்றும் இந்த ஆண்டு டிசம்பரில் $0.0086 விலையைத் தொடுமென்றும் சொல்கிறது. 2023 இலையுதிர்க் காலத்தை ஒட்டி ஒரு சென்ட் என்ற தடையை உடைக்கலாம் என்றும் பிப்ரவரி 2024ல் $0.0118 என்ற சராசரிக்குச் செல்லும் என்றும் சொல்கிறது. அதிலிருந்து ஒரு வருடத்தில் டோக்கன் $0.0194 என்ற விலையை அடையும் என்று கணிக்கிறது. 2025 கடைசியிலும் 2026 துவகத்திலும் சந்தை இறங்குமுகமாக இருக்குமென்றும் 2026 பிப்ரவரியில் நாணயத்தின் சராசரி விலை $0.0158 ஆகவும் அந்த ஆண்டு மே மாதத்தில் $0.0145 விலையை ஒட்டி இருக்குமென்றும் சொல்கிறது.

Telegaon வழங்கும் CATE விலைக் கணிப்பு பரிந்துரைப்படி, 2022ல் நாணயம் $0.000005841 என்ற சராசரியில் வர்த்தகமாகும்; 2023ல் $0.00001298 விலைக்கு ஏறும்; 2024ல் இது $0.00001979 ஆக இருக்கும் என்று சொல்கிறது. 2025ல் நாணயம் $0.00002793 விலையிலும் 2026ல் $0.00004058 ஆகவும், 2027ல் $0.00006013 என்றும் இருக்குமென்கிறது. 2028ல் தொடர்ந்து ஏறி $0.00008568 விலையைத் தொட்டு  2030 முடிவில் $0.00012210 விலையை ஒட்டி அமையும் என்கிறது. 2030க்கான CATE விலைக் கணிப்புப்படி சராசரி விலை $0.00017741 ஆக இருக்குமென்றும் சொல்கிறது.

இதற்கிடையில், DigitalCoinPrice விலைக்கணிப்பு இந்த ஆண்டில் $0.00000257259 என்ற விலைக்கு CATE வர்த்தகமாகும் என்கிறது. 2023ல் $0.00000292702; 2024ல் $0.00000324788 ஆக உயரும் என்கிறது. இந்தத் தளத்தில் கேட்காயினுக்கான 2025 விலைக்கணிப்பு $0.00000393966 ஆக உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் விலை $0.00000358391 ஆக இறங்குமென்கிறது. 2027ல் மீண்டு எழுமென்றும் $0.00000511772 விலையைத் தொட்டு பின் 2028ல் $0.00000643726 விலையையும் 2029ல் $0.00000774731 விலையையும் தொடுமென்கிறது.

இறுதியாக, Wallet Investor உற்சாகமூட்டும் கணிப்பைத் தருகிறது. 2023 பிப்ரவரியில் கேட்காயின் $0.00000558 விலையை எட்டுமென்றும் பிப்ரவரி 2027ல் $0.00002082 விலையைத் தொடுமென்றும் சொல்கிறது.

நிறைவுரை

சில இறுதிச் சிந்தனைகள் இவை. முதலில் நீங்களே பார்த்ததுபோல கேட்காயின் ஒரு சென்டுக்கும் குறைவான விலையில் வர்த்தகமாகிறது. இது மோசமான விசயமில்லை எனும்போது, இது பெரும்பாலான கேலிச்சித்திர நாணயங்களைப் போலத்தான் இதுவுமென்றாலும், இது சில முதலீட்டாளர்களை விலகியிருக்கச் செய்யும். நடப்பு நிலையிலிருந்து கணிசமான அளவு வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க அளவு விலை உயர்வை அது அடையவேண்டியதில்லை எனும்போது, வழக்கமான முதலீட்டாளரின் கண்களை ஈர்ப்பதற்கு நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சிறு எண்களால் முடியாமல் போகலாம்.

இரண்டாவதாக வெளிப்படைத்தன்மை குறித்து சில கவலைகள் இருக்கலாம். இந்தத் தளத்திலோ அல்லது வெள்ளையறிக்கையிலோ நிறுவனர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. தங்கள் கிரிப்டோகரன்சிக்கு பொறுப்பாக ஒருவரை வைத்திருக்க விரும்புவோருக்கு இது கவலையளிக்கக்கூடும். அதேபோல, பினான்ஸ் ஸ்மார்ட் செயினில் CATE இயங்குவது குறித்தும் விவரிக்கப்படவில்லை. முதலீடு செய்யும் முன் முடிந்தவரை தகவல்களைப் பெற விரும்பும் மக்கள் இதனால் தயக்கம் காட்டக்கூடும்.

மூன்றாவதாக இந்த கேலிச்சித்திர நாணயச் சந்தையில் அதிகக் கூட்டம் தெரிகிறது. கேலிச்சித்திரங்களில் இருந்து NFTகளை உருவாக்குவது சுவாரசியமான ஒன்று எனினும், அது கவனத்தை ஈர்க்குமா, கேட்காயினை ஆராதிப்பவர்கள் நம்பும் ஊக்கத்தை அது வழங்குமா என்பதைப் பார்க்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை கேட்காயின்கள் உள்ளன?

தனது சுய அறிக்கைப்படி 32.63776 டிரில்லியன் கேட்காயின்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், அதிகபட்ச வழங்கல் 100 டிரில்லியன் என்றும் CATE சொல்கிறது.

கேட்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். விலைக் கணிப்புகள் நேர்மறையாக உள்ளன. ஆனாலும் விலைக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாகப் போகக்கூடியவை. ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் சரிவைச் சந்திக்கும் கட்டம் ஏற்படலாம் என்பதையும் சுட்டிக்காட்டுவது மதிப்புக்குரியது. எனவே நிலைமை சீரடையும் முன் மோசமடைவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்பு உடையவை என்பதால், எதுவும் அதி விரைவில் நடந்தேறும் என்பதால் விலை ஏறவும் இறங்கவும் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேட்காயின் விலை மேலே செல்லுமா?

செல்லக்கூடும். இங்கே நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது, நீண்டகாலக் கணிப்புகள் இவ்வாறு நடக்கக்கூடுமென்று பரிந்துரைக்கின்றன. ஆனால் சந்தைகள் இந்தக் கணிப்புகளைக் கேலிக்குரியதாக்கி விடும். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நான் கேட்காயினில் முதலீடு செய்ய வேண்டுமா?

இது முழுக்கவே உங்களைப் பொறுத்தது. நீங்கள் அவ்வாறு செய்வதற்கு முன், உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். விலை ஏறவும் இறங்கவும் கூடுமென்பதையும், நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image