சாய்கின் பணப்புழக்க வர்த்தகச் சுட்டிக்காட்டியை எப்படிப் படித்துப் பயன்படுத்துவது

By Currency.com Research Team

சாய்கின் பணப்புழக்க சுட்டிக்காட்டியானது சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அழுத்தங்களின் வகைகளை அளவிடுகிறது

சாய்கின் பணப்புழக்கம்                                 

சாய்கின் பணப்புழக்கம் என்றால் என்ன?

மார்க் சாய்கின் என்பவர் 1980களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பணப்புழக்க அளவினை அளவிடக்கூடிய தொழில்நுட்ப சுட்டிக்காட்டியாக சாய்கின் பணப்புழக்க சுட்டிக்காட்டியை (CMF) அறிமுகப்படுத்தினார். CMF சுட்டிக்காட்டியை சந்தையில் வாங்கும் அழுத்தம் அல்லது விற்பதற்கான அழுத்தம் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தலாம். இறுதிவிலையானது உச்சவிலைக்கு நெருக்கமாக இருக்கும்போது அது திரட்சிக்குச் சான்றாக இருக்கும். அதுவே இறுதிவிலை அடிமட்ட விலையோடு நெருங்கி இருந்தால், பரவல் நிகழ்வதாக அர்த்தம். இந்தக் கருத்தை இந்தச் சுட்டிக்காட்டி அடிப்படையாகக் கொண்டுள்ளது. பொதுவாக ஒரு போக்கினை உறுதிப்படுத்தவும், போக்கின் வலிமையை அளவிட அல்லது போக்கின் தலைகீழ் மாற்றம் அல்லது முறிவுக்கான சாத்தியத்தை அடையாளம் காண CMF பயன்படுகிறது.

சுட்டிக்காட்டியின் இயல்பான அமைப்பில் 20 அல்லது 21 பருவங்கள் இருக்கும். சாய்கின் பணப்புழக்கக் கணக்கீடு மூன்று படிநிலைகளில் செய்யப்படுகிறது:

 • பணப்புழக்கப் பெருக்கியைக் கணக்கிடுதல்

பணப்புழக்கப் பெருக்கி = [(இறுதிவிலை - அடிமட்ட விலை) - (உச்ச விலை - இறுதிவிலை)] / (உயர்வு - தாழ்வு)

 • ஒவ்வொரு பருவத்துக்கும் தொடர்புடைய வர்த்தக அளவினால் பணப்புழக்கப் பெருக்கியால் பெருக்குவதன் மூலம் பணப்புழக்க அளவைக் கண்டறியவும்

பணப்புழக்க அளவு = பணப்புழக்கப் பெருக்கி x காலகட்டத்துக்கான வர்த்தக அளவு

 • கணக்கில் எடுக்கும் பருவங்களின் எண்ணிக்கைக்குரிய பணப்புழக்க அளவைச் சேர்த்து (இயல்பாக அமைந்திருப்பது 20) அந்த மதிப்பை 20 கால அளவின் வர்த்தக அளவு கூட்டுத் தொகையால் வகுக்கவும்

20 பருவ CMF = 20 பருவ பணப்புழக்க அளவின் கூட்டுதொகை / 20 பருவ வர்த்தக அளவின் கூட்டுத்தொகை

நீங்கள் பார்ப்பதுபோல், பணப்புழக்க அளவு பெருக்கியின் மதிப்பைச் சார்ந்து இருக்கும். கொடுக்கப்பட்ட காலத்தில் இறுதிவிலையானது உயர்வு-தாழ்வு நடுப்புள்ளிக்கு மேலே இருக்கும்போது பெருக்கியின் மதிப்பு நேர்மறையாக இருக்கும். நடுப்புள்ளிக்குக் கீழே இருந்தால் எதிர்மறையாக இருக்கும்.

சாய்கின் பணப்புழக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது

ஒரு ஊசலாட்ட சுட்டிக்காட்டியாக, சாய்கின் பணப்புழக்க சுட்டிக்காட்டி பெரும்பாலான வர்த்தகத் தளங்களில் கிடைக்கிறது. இது சொத்தின் வரைபடத்தில் கீழே பூஜ்ஜியக் கோட்டைச் சுற்றிலும் மாறிவரும் ஒரு கோடாக இருக்கும். இயல்பான அமைப்பில் 20 பருவங்கள் கொண்டிருக்கும். உங்கள் விருப்பத்துக்கும் உத்திக்கும் ஏற்ப இதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். CMF ஆனது +1 மற்றும் -1க்கு இடையிலான மதிப்புகளை எடுக்கும். ஆனால் அதீத மதிப்பை அடிக்கடி இது அடைவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மத்தியக் கோட்டுக்கு அல்லது பூஜ்ஜியக் கோட்டுக்கு மேல் உள்ள பகுதி ஏறுமுகப் பிரதேசமாகக் கருதப்படுகிறது. கோட்டுக்குக் கீழ் உள்ள பகுதி இறங்குமுகப் பகுதியாகும். எனவே, CMF மதிப்புகள் பூஜ்ஜியக் கோட்டுக்கு மேலே இருக்கும்போது, வாங்கும் அழுத்தம் இருப்பதைக் குறிக்கும். சுட்டிக்காட்டியின் மதிப்புகள் எதிர்மறைப் பகுதியில் இருக்கும்போது விற்பனை அழுத்தம் இருக்கலாம் என்பதைக் காட்டும்.

உங்கள் வர்த்தகத் தளத்தில் இது வரையப்படும்போது, CMF சுட்டிக்காட்டி பின்வரும் வரைபடத்தில் காட்டப்பட்டது போலிருக்கும்.

Euro/USD தினசரி சந்தை விலை
Euro/USD தினசரி சந்தை விலை – நன்றி: Currency.com

CMF கோடு வெண் செவ்வகத்துடன் அடையாளப்ப்டுத்தியிருக்கும் பகுதியில் இருக்கும்போது அது மேல்நோக்கு போக்கினைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. CMF கோடு சிவப்புச் செவ்வகத்தில் இருக்கும்போது சரிவுப் போக்கினைக் குறிக்கும். பொதுவாக, CMF மதிப்புகள் +0.5 முதல் -0.5 இடைவெளிக்குள் இருக்கும். இது அரிதாகவே +1 அல்லது -1ஐ அடையும். அதுபோலவே, இதனை பின்வருமாறு குறிப்பிடலாம்:

 • CMF +1ஐ நெருங்கும்போது, வாங்கும் அழுத்தம் அதிகரிக்கும்.
 • CMF -1ஐ நெருங்கும்போது, விற்பனை அழுத்தம் அதிகரிக்கும்.

சாய்கின் பணப்புழக்க வர்த்தகம்

வர்த்தகர்கள் வாய்ப்புள்ள விழிப்பூட்டல்களை அடையாளம் காண்பதற்காக சுட்டிக்காட்டியைப் பயன்படுத்தும் ஒரு வழியாக சாய்கின் பணப்புழக்க தாண்டல்கள் உள்ளன. CMF கோட்டுக்கும் மத்திய கோட்டுக்கும் இடையில் தாண்டல்களைக் கண்டறிவதன் மூலம் அவை வாய்ப்புள்ள சமிக்ஞைகளைக் காட்டுகின்றன. விலை தொடர்ந்து மேல்நோக்கி நகரும்போது CMF கோடு பூஜ்ஜியக் கோட்டுக்கு மேலே தாண்டுவது வாங்கும் சமிக்ஞையைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை வழி. இதற்கு மாறாக, விலையின் கீழ்நோக்கிய நகர்தலுடன் சாய்கின் பணப்புழக்க சுட்டிக்காட்டி பூஜ்ஜியத்துக்குக் கீழே தாண்டும்போது விற்பனை சமிக்ஞை அடையாளம் காணப்படுகிறது.

இந்த தாண்டல் சமிக்ஞைகளில் உள்ள பாதகமான அம்சம், அவை தவறானவையாக இருக்கக்கூடும் என்பதுதான். காரணம் CMF கோடு குறுகிய நேரத்துக்கு பூஜ்ஜியக் கோட்டைத் தாண்டி பின்னர் திரும்பவும் எதிர்மாறாகத் தாண்டக்கூடும். எனவே, சில வர்த்தகர்கள் +0.05 மற்றும் -0.05 மட்டங்களை கோடுகளை வரைந்து அடையாளமிட்டிருப்பார்கள். CMF +0.05க்கு மேலே செல்கையில் லாங் பொசிசனை எடுக்கவும் CMF -0.05க்குக் கீழே செல்கையில் ஷார்ட் பொசிசனை எடுக்கவும் செய்கிறார்கள்.

அடுத்த வரைபடத்தில் CMF தாண்டல் சமிக்ஞைகள் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு மாதிரி தரப்பட்டுள்ளது.

வரைபடத்தை ஆராய்கையில், பூஜ்ஜியக் கோட்டுக்கு மேல் CMF தாண்டுமிடம் இடதுபுறத்தில் சிவப்பு வட்டமாக அடையாளமிடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். இது வாங்குவதற்கான சமிக்ஞை. ஒரு லாங் பிசிசனை எடுத்தபின், விலையானது தொடர்ந்து மேல்நோக்கி நகர்கிறது. வர்த்தகர் ஒரு ஷார்ட் பொசிசனை எடுக்க நினைக்கும்போது, விற்பனைத் தாண்டலானது வலதுபுறம் சிவப்பு வட்டத்தில் அடையாளமிடப்பட்டிருக்கிறது. விலை தொடர்ந்து விழுவதையும் நாம் பார்க்க முடியும். வெள்ளை வட்டங்களில் உள்ள புள்ளிகள் நீங்களே பார்ப்பதுபோல் ஏன் சில வர்த்தகர்கள் +0.05க்கும் -0.05 மட்டங்களுக்கும் இடையில் வரைகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான். முதல் பர்வையில் பூஜ்ஜியக் கோட்டில் ஒரு தாண்டல் இருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால் இந்தத் தாண்டல் (அப்படி ஏதும் இருந்தால்) அது தற்காலிகமானது மட்டுமே. மதிப்புகள் திரும்பவும் ஏறுமுகப் பகுதிக்குத் திரும்புகின்றன.

கச்சா எண்ணெய் தினசரி விலை
கச்சா எண்ணெய் தினசரி விலை – நன்றி: Currency.com

சாய்கின் பணப்புழக்கத்தை எப்படிப் பயன்படுத்துவது

சாய்கின் பணப்புழக்கத்தை ஆதரவு மற்றும் தடையுடன் சேர்த்து அவை இந்த மட்டங்களில் இருந்து ஒரு முறிவை உறுதிப்படுத்தும்போது பயன்படுத்தலாம். அதைத் தொடர்ந்து, விலையானது ஒரு ஏறுமுகப் போக்கின்போது CMF அதிக உயரத்தைக் காட்டும்வேளையில் தடை மட்டத்தை உடைத்தால் அது தொடர்ந்து ஏறுமுக திசையிலேயே போக்கு இருக்கும் என்பதைக் குறிக்கும். இதற்கு மாறாக, இறங்குமுகப் போக்கில், விலையானது ஆதரவு நிலைக்குக் கீழே உடைத்தால், அப்போது CMF புதிய அடிமட்டத்தை அடைந்தால், இறங்குமுகப் போக்கு தொடருமென்பதை அது உறுதிசெய்கிறது.

விலை மாறுபாடும் CMF நகர்வும் எதிரெதிர் திசையில் இருக்கும்போது விலகல்களுக்கான சாத்தியத்தின் ஊடாக போக்கு தலைகீழாக மாறும் சாத்தியத்தை அடையாளம் காணலாம். விலை நகர்வுகள் புதிய தாழ்நிலைக்குச் செல்லும்போது CMF அதே நகர்வைப் பின்தொடராதபோது ஏறுமுக விலகல் தோன்றக்கூடும். இது மேல்நோக்கிய போக்கு உருவாவதற்கான அறிகுறியாகும். மாறாக, விலை நகர்வுகள் ஒரு புதிய உச்சத்தை நோக்கி நகரும்போது, CMF தொடர்ந்து அதே நிலையில் இருந்தாலோ அல்லது கீழே விழுந்தாலோ ஒரு இறங்குமுக விலகல் உருவாகிறது. இது இறங்குமுகப் போக்கின் தொடக்கத்துக்கான சாத்தியத்தைக் குறிக்கிறது.

வர்த்தக அளவு அதிகம் கொண்ட வர்த்தகர்கள் பொதுவாக CMFஐப் பயன்படுத்தினாலும், குறிப்பாக தனித்து நிற்கக்கூடிய சுட்டிக்காட்டியாக இது நம்பத்தகுந்தது அல்ல. எனவே, அடையாளம் கண்ட சமிக்ஞைகளை உறுதிப்படுத்தவும் உங்கள் சாய்கின் பணப்புழக்க உத்தியை உருவாக்கவும் பிற டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டிகளுடன் சேர்த்து இதைப் பயன்படுத்த வேண்டும்.

சாய்கின் பணப்புழக்க சுட்டிக்காட்டியின் நன்மைகள்

 • சாய்கின் பணப்புழக்க சூத்திரம் சந்தை மாற்றம் நிகழும்போது பயனுள்ள சுட்டிக்காட்டியாக இருக்கும்.
 • போக்கின் திசையை உறுதிப்படுத்துவதற்கு பயனுள்ள கருவி.
 • ஒரு போக்கில் தலைகீழ் மாற்றம் நிகழும் சாத்தியம் இருக்கும்போது வாய்ப்புள்ள வெளியேறும் சமிக்ஞையை CMF வழங்கும்.

சாய்கின் பணப்புழக்க சுட்டிக்காட்டியின் குறைபாடுகள்

 • இதை தனியாகப் பயன்படுத்த முடியாது.
 • வர்த்தகர்கள் வாய்ப்புள்ள ஸ்டாப்-லாஸ் மற்றும் இலாபமெடுக்கும் புள்ளிகளைத் தீர்மானிக்க முடியாது.
 • சந்தை ஒரு வரம்புக்குள் இருக்கும்போது, மதிப்புகள் பூஜ்ஜியக் கோட்டைச் சுற்றி ஏறியிறங்குவதால் CMF தவறான சமிக்ஞைகளைத் தரக்கூடும்.
 • குறுகிய கால வரம்புக்குள் வைத்து இதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

RECOMMENDED READING

iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image