செயின்லின்க் மற்றும் போல்காடாட்
செயின்லின்க்குக்கும் போல்காடாட்டுக்கும் என்ன வேறுபாடு?

செயின்லின்க் மற்றும் போல்காடாட் விளக்கம்
செயின்லின்க் ஒரு ஆரக்கிள் அடிப்படையிலான வலைத்தொடர்பு. இது எதேரியம் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்டது. இது எதேரியம் செயல்திட்டங்களுக்காக விலையைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
போல்காடாட் ஒரு புதிய தலைமுறை பிளாக்செயின் ஆகும். இது எதேரியத்தை பாதிக்கும் எந்தவொரு குறையாடும் இல்லாமல் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டது. பிளாக்செயின்களுக்கிடையில் செயல்பாடுகளை அதிகரிக்கும் வழிகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
செயின்லின்க் மற்றும் போல்காடாட்: எது எதைச் சேர்ந்தது?
இன்வெஸ்ட்மெண்ட் மாஸ்டரி மற்றும் யுவர் கிரிப்டோ கிளப் ஆகியவற்றின் முதன்மைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான மார்கஸ் டி மரியா என்ன சொல்கிறாரென்றால், போல்காடாட் (DOT) மற்றும் செயின்லின்க் (LINK) ஆகிய இரண்டுமே இடையகச் செயல்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்கிறார்:
”இரண்டுமே அனைத்து வலைத்தொடர்புகளும் பிளாக்செயின்களும் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளவும் இணைந்து பணியாற்றவும் கூடிய ஓர் உலகத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இதை நாளைய இணையம் என்று நீங்கள் அழைக்கலாம்.”
இதேபோன்ற பிரச்சினையை அவர்கள் தீர்ப்பதால், அவை ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன என்று சொல்வது எளிதானது, ஆனால் இதில் அதிகமும் ஒத்துழைப்பு இருக்கும் என்று நம்புகிறார்:
”பிளாக்செயின் வெளியானது பல ஆட்டக்கரர்களுக்குப் போதிய அளவு பெரியது. அவர்கள் ஒருங்கிணைத்து பணியாற்றினால், ஏற்றுக்கொள்ளுதல் இன்னும் வேகமாக நடைபெறும்.”
செயின்லின்க்குக்கும் போல்காடாட்டுக்கும் என்ன வேறுபாடு?
போல்காடாட் 2016ல் ஏற்படுத்தப்பட்டது. 2020 இறுதியில் வர்த்தகச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை எதேரியமின் இணை நிறுவனர்களில் ஒருவரான கவின் வுட் உருவாக்கினார். போல்காடாட் என்பது பிளாக்செயின் பயன்பாடுகளை இணைக்கவும் தொடங்கவும் உள்ள ஓர் வலைத்தொடர்பு. இதன் பாராசெயின் தொழில்நுட்பம் வெவ்வேறு பிளாக்செயின்களுக்கிடையில் ஒரு பாலமாகச் செயல்படுகிறது.
”இடையகச் செயல்படுதிறனின் நோக்கம் பயனர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடிய முழுமையான மையமற்ற தன்மையை, தனிப்பட்ட இணையத்தை உருவாக்குவதுதான்” என்கிறார் டி மரியா. ”இதை இன்று இணையத்திலுள்ள அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் மேம்பட்ட பதிப்பாகப் பார்க்கலாம் - உ.ம்., இணையம் 2.0”
Rennes School of Business-ல் துணைப் பேராசிரியராயிருக்கும் டாக்டர் ரோமன் மக்கோவ்ஸ்கி, இதனை வேறு பிற பிளாக்செயின்களுடன் இணைக்கும் பங்குச்சான்று (PoS) நம்பிக்கையற்ற பிளாக்செயின் என்கிறார்.
”இதுவொரு அடுத்த தலைமுறை பிளாக்செயின். படலம்-0 நெறிமுறையானது பல்வேறு சிறப்பு வாய்ந்த பிளாக்செயின்களை இணைத்து ஒன்றாக்கி மாறத்தக்க அளவுள்ள வலைத்தொடர்பாக ஆக்குகிறது.”
தொழில்நுட்ப ரீதியாக, இது ரிலே சங்கிலி கருத்தாக்கத்தை அதன் அடித்தள படலத்துக்கும் பாராசெயின்களுக்கும் பயன்படுத்துகிறது. இந்த பிளாக்செயின்களே ரிலே செயினுடன் இணைக்கின்றன.
பாராசெயின்களுக்கிடையில் சிக்கிலின்றி தகவல்கள் கடத்தப்படவும், பிளாக்செயினின் அளவு மாறும் பிரச்சினையையும் திறம்படத் தீர்க்கவும் போல்காடாட் அனுமதிக்கிறது.
”உதாரணமாக, போல்காடாட்டுடன் பிட்காயின், மோனெரோ, எதேரியம் அல்லது வேறு ஏதேனும் கிரிப்டோகரன்சி இணைக்கப்பட்டதும், முதலீட்டாளர்கள் அல்லது பயனர்களால் BTC-யை எதேரியத்துக்கு நகர்த்தவும் இலாபத்தை மோனெரோ அல்லது செயின்லின்க் மூலமாக எடுக்கவும் முடியும்.”
செயின்லின்க்கைப் போலின்றி, எதேரியம் பிளாக்செயினில் கட்டமைக்கப்படும் போல்காடாட் ஒரு புதிய எதேரியம் வகையாக மாற முயற்சிக்கிறது.
17 டிசம்பர் 2021ம் தேதிப்படி, 515 செயல்திட்டங்கள் போல்காடாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
போல்காடாட் விலைக்கு என்ன ஆயிற்று?
17 டிசம்பர் 2021ம் தேதிப்படி, போல்காடாட்டின் நடப்பு விலை $24.91ஐ ஒட்டி அசைந்துகொண்டிருக்கிறது. சந்தை முதலீடு $24.5 பில்லியனையும் (£18.6 பில்லியன்) தாண்டிவிட்டது.
- சுழற்சியில் உள்ள வழங்கல் 987,579,314.96 DOT நாணயங்களாகும்.
- போல்காடாட் அதிகபட்ச வழங்கலைக் கொண்டிருக்கவில்லை. இதன் நாணயமான DOT பணவீக்கமுடையது.
- விலையும் அதிக மாறியல்பு உடையது: நவம்பர் 2021 துவக்கத்தில், DOT நாணய விலை $53.88 என்ற உச்சத்தைத் தொட்டது. இதுவே இதுவரையிலான உச்சமாக உள்ளது.
செயின்லின்க் விளக்கம்
செயின்லின்க் செர்ஜி நஸரோ என்பவரால் 2014ல் உருவாக்கப்பட்டு 2017ல் நிறுவப்பட்டது. இதன் பிரதான வலைத்தொடர்பு மே 2019ல் நேரலைக்கு வந்தது.
இதன் ‘மையமில்லா ஆரக்கிள் வலைத்தொடர்பைப்’ பயன்படுத்தி பிற பிளாக்செயின்களில் ஸ்மாட் ஒப்பந்தங்களை மேற்கொண்ட முதல் கிரிப்டோகரன்சி செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று.
ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் என்பது மாற்ற இயலாததும் சரிபார்க்கக்கூடியதுமான ஒப்பந்தங்களாகும். இது IF/THEN சட்டகத்தில் நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது தானாகவே நிறைவேற்றுகிறது.
எளிதாகச் சொல்வதெனில், இதன் அர்த்தம் அனைத்து வெவ்வேறு பிளாக்செயின்கள்களும் ஒன்றுக்கொன்று பேசவும், பலன்பெறவும் முடியும்.
What is your sentiment on LINK/USD?
செயின்லின்க் வெவ்வேறு வெளிப்புறத் தரவு ஊட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் செலுத்துகை முறைகளுடன் பிளாக்செயின்கள் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ளச் செய்கிறது.
வெவ்வேறு பிளாக்செயின்களிலிருந்து தகவல்கள் செயின்லின்க் மூலம் ஒன்றாக்கப்பட்டு புதிய சிக்கலான டிஜிட்டல் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன.
”இதில் சுவாரசியமானது என்னவென்றால், போல்காடாட் செயின்லின்க்கின் ஆரக்கிள் செயல்திறனைப் பயன்படுத்துகிறது” என்கிறார் டி மரியா.
அளவு மாறத்தக்க வலைத்தொடர்பு
செயின்லின்க் என்பது எதேரியத்தில் கட்டமைக்கப்பட்ட மையமில்லாத முடிவற்ற அளவுமாறத்தக்க முனையங்களின் வலைத்தொடர்பு என்று டாக்டர் மக்கோவ்ஸ்கி கூறுகிறார்.
தொழில்நுட்பரீதியாக, எந்தவொரு இணைக்கப்பட்ட பிளாக்செயினுக்கும், செயினில் இல்லாத தரவினை ஸ்மார்ட் ஒப்பந்தங்களில் ஒருங்கிணைக்க அனுமதிப்பதற்கான தரவுகளை வழங்கக்கூடிய இதுவொரு ERC-20 டோக்கன்.
செயின்லின்க் என்பது ஓர் ஆரக்கிள் வழங்குநர். இது யதார்த்த உலகிலிருந்து பிளாக்செயினுக்கு தரவு உள்ளீட்டுக்காக அழைக்கிறது. இது பங்குச்சான்றினை (PoS) ஒருமித்த கருத்து இயங்கியலைப் பயன்படுத்துகிறது. இது பிட்காயின், லைட்காயின் மற்றும் எதேரியமில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பணிச்சான்று நெறிமுறையைக் காட்டிலும் ஆற்றல் நுகர்வில் குறைவானதையே எடுக்கிறது.
இதன் வழங்கல் அதிகபட்சம் 1,000,000,000 LINK டோக்கன்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 17 அக்டோபர் 2021ம் தேதிப்படி, தற்போதைய வழங்கல் அதிகபட்ச அளவில் 54%க்குச் சமமாகவும் சந்தை முதலீடு $27.4 பில்லியனைத் தாண்டியதாகவும் உள்ளது.
”உதாரணமாக, EUR/GBP சந்தை வீதம் தேவைப்படும் ஒரு ஸ்மார்ட் ஒப்பந்தத்துக்கு செயின்லின்க் முன்வந்து, ஒரேயொரு மூலத்தை மட்டும் சார்ந்திருக்காமல் வலைத்தொடர்பில் LINK டோக்கன்களைச் செலுத்திய அதன் பங்கேற்பாளர்களைச் சரிபார்த்தபின் இந்தத் தகவலை அளிக்கிறது”
இதுவரை 120 தரவு மூலங்களும் 13 தரவு வழங்குநர்களும் கிரிப்டோகரன்சிக்கும் மரபார்ந்த நிதிச்சந்தை தரவுகளுக்கும் உள்ளன. இது 65,000 பங்குகள் மற்றும் ETFகள், ஆப்ஷன்கள் இன்னபிறவற்றை வழங்குகின்றன. அத்துடன் இவை சொத்துரிமை மற்றும் மொத்த விளையாட்டு வாய்ப்புக்கூறுகள், விளையாட்டு முடிவுகளின் தரவு, பதிவில் உள்ள சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் தரவு, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் சேகரிப்பாளர் பற்றிய தரவுத்தள விபரங்கள் போன்றவற்றையும் அளிக்கின்றன.
செயின்லின்க் விலையில் என்ன நடந்துள்ளது?
தற்போது, 17 டிசம்பர் 2021ல், செயின்லின்க் விலை $18 அடையாளத்தைச் சுற்றி நகர்ந்து வருகிறது. நவம்பர் உச்சத்திலிருந்து 60%க்கும் மேல் அதிகளவு இழப்புகளை LINK சந்தித்துள்ளது.
செயின்லின்க் ஆனது சராசரியாக பிட்காயின் (BTC) மற்றும் ஈதரைக் (ETH) காட்டிலும் அதிக மாறியல்பு கொண்டது. இது பிரபலமாவதற்கு அதிகளவு சாத்தியம் கொண்டிருப்பினும் பிற கிரிப்டோகரன்சிகளுடன் ஒப்பிட குறைவான வர்த்தக அள்வு, சந்தை மூலதனம் தொடர்பான பிற அபாயங்கள் உள்ளன. அதிகளவு இழப்புகள் தொடர்ந்தால், இந்த நாணயம் தனது முடிவை அறிவிக்க வேண்டியிருக்கும். எனினும் இந்த நாணயத்தின் போக்கு தலைகீழாக மாறுவதற்குத் தயாராக உள்ளது. செயின்லின்க்கின் விலை ஒரு தெளிவான ஏறுமுக சந்தையாக மாறுவதற்கு, ஃபைபோனாச்சி திரும்பிச்செல்லுதல்படி இது $35 மதிப்புக்கு மேல் செல்ல வேண்டும் - பிற சுட்டிக்காட்டிகளுடன் சேர்த்து - என TradingView தெரிவிக்கிறது.
LINK/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
Jan 29, 2023 | 7.28656 | 0.09384 | 1.30% | 7.19272 | 7.39038 | 7.12783 |
Jan 28, 2023 | 7.19472 | -0.17170 | -2.33% | 7.36642 | 7.49221 | 7.11285 |
Jan 27, 2023 | 7.36742 | 0.21364 | 2.99% | 7.15378 | 7.48023 | 6.91119 |
Jan 26, 2023 | 7.15279 | 0.20665 | 2.98% | 6.94614 | 7.28855 | 6.81137 |
Jan 25, 2023 | 6.94314 | 0.29849 | 4.49% | 6.64465 | 7.03698 | 6.49790 |
Jan 24, 2023 | 6.64465 | -0.35540 | -5.08% | 7.00005 | 7.18074 | 6.53684 |
Jan 23, 2023 | 6.99805 | 0.02995 | 0.43% | 6.96810 | 7.21568 | 6.83832 |
Jan 22, 2023 | 6.96910 | 0.13278 | 1.94% | 6.83632 | 7.25162 | 6.76445 |
Jan 21, 2023 | 6.83632 | -0.08985 | -1.30% | 6.92617 | 7.09289 | 6.79439 |
Jan 20, 2023 | 6.92717 | 0.43825 | 6.75% | 6.48892 | 6.95512 | 6.40007 |
Jan 19, 2023 | 6.48991 | 0.17070 | 2.70% | 6.31921 | 6.52785 | 6.29924 |
Jan 18, 2023 | 6.31921 | -0.47319 | -6.97% | 6.79240 | 6.96810 | 6.25530 |
Jan 17, 2023 | 6.78940 | 0.13377 | 2.01% | 6.65563 | 6.97110 | 6.53683 |
Jan 16, 2023 | 6.65464 | -0.02695 | -0.40% | 6.68159 | 6.93116 | 6.40106 |
Jan 15, 2023 | 6.68259 | -0.15873 | -2.32% | 6.84132 | 6.91519 | 6.58475 |
Jan 14, 2023 | 6.84231 | 0.25356 | 3.85% | 6.58875 | 7.08989 | 6.44898 |
Jan 13, 2023 | 6.58775 | 0.22063 | 3.47% | 6.36712 | 6.60073 | 6.24533 |
Jan 12, 2023 | 6.36712 | 0.10182 | 1.63% | 6.26530 | 6.38909 | 6.05565 |
Jan 11, 2023 | 6.26430 | 0.11281 | 1.83% | 6.15149 | 6.28627 | 5.99875 |
Jan 10, 2023 | 6.15149 | 0.10183 | 1.68% | 6.04966 | 6.28327 | 5.97280 |
எது சிறந்தது - செயின்லின்க் அல்லது போல்காடாட்?
ஒரு முதலீடாக இரண்டு செயல்திட்டங்களுமே மிகவும் நம்பிக்கையளிப்பதுதான் - எனினும் சமீபத்திய செய்திகளில் போக்குகள் மற்றும் மேம்பாடுகள் போன்ற காரணிகளை உட்படுத்தி எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியை முதலில் மேற்கொள்ளுங்கள்.
”ஒவ்வொன்றுக்கும் நிதியை நான் ஒதுக்கியுள்ளேன். எனக்கு அதிகளவு பொசிசன் செயின்லின்க்கில் உள்ளது” என்கிறார் டி மரியா.
UK மற்றும் அயர்லாந்தில் Dacxiயின் மேலாண்மை இயக்குநரான கேதரின் வூலர், இரு கிரிப்டோகரன்சிகளுமே ‘தெளிவான கிரிப்டோ’ விரும்பும் முதலீட்டாளர்களின் நலனுக்கானவை என்கிறார். அவர் சொல்வது: ”பிட்காயினின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து Elon Musk-ன் சமீபத்திய கருத்துக்கள் 50% விலைச்சரிவுக்குக் காரணமாயிற்று. சரியாகச் சொல்வதானால், கிரிப்டோ துறையில் சற்றே ஆன்மாவுக்கான தேடல் போல.
”கடந்த ஓராண்டு செயல்பாட்டின்படி, செயின்லின்க்குக்கும் போல்காடாட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எனினும் சில முக்கிய வேறுபாடுகள் போல்காடாட் குறுகிய காலத்தில் நன்கு வெற்றிபெறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
”கடந்த எட்டு மாதங்களில் போல்காடாட்டின் சந்தை ஆதிக்கம் இரட்டிப்பாகியுள்ளது; 2020ல் நிலையான தொடக்கத்திலிருந்து Master Ventures என்ற ஆசியாவைச் சேர்ந்த துணிகர மூலதன நிறுவனம் $30 மில்லியன் முதலீட்டை அறிவித்துள்ளதைப் போன்று நிதிச்சமூகத்திலிருந்து குறிப்பிடத்தக்க ஆதரவைக் கண்டறிந்துள்ளது.
”இது போல்காடாட் சமூக மதிப்பில் நம்பிக்கைகொள்ளச் செய்கிறது” என்கிறார் வூலர்.
நிச்சயமாக செயின்லின்க் அதற்கன நன்மைகளைக் கொண்டுள்ளது: இது ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலம் சிக்கலான தகவல் புலங்களை இணைக்கவும், தரவு செயலாக்கத்தில் முன்னணியில் இருக்கக்கூடியதாகவும் உள்ளது.
வூலர் சொல்கிறார்: ”பிக் டேட்டா ஏற்கெனவே உலகில் அதிக்கம் செலுத்திவருவதை நாம் மறக்கக்கூடாது. இது தன்னைத்தானே நிரூபித்துள்ளதுடன் DeFi-யில் பில்லியன் கணக்கிலான டாலர்களைப் பாதுகாப்பதில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டும் உள்ளது. இருந்தாலும் என் மனதில் விரிவான பயன்பாட்டிலும் கிரிப்டோவின் இயல்பில் இருக்கும் சில பிரச்சினைகளைத் ‘தீர்ப்பதிலும்’ போல்காடாட்டுக்கு இடமுள்ளதாகவே தோன்றுகிறது.”
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எவ்வளவு செயின்லின்க் நாணயங்கள் உள்ளன?
CoinMarketCap கூற்றுப்படி தற்போது 467,009,550.44 LINK நாணயங்கள் புழகத்தில் உள்ளன. அல்லது 1,000,000,000 மொத்த வழங்கலில் கிட்டத்தட்ட 47% உள்ளன.
எவ்வளவு போல்காடாட் நாணயங்கள் உள்ளன?
CoinMarketCap கூற்றுப்படி 987,579,315 DOT நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன.