ATOM நாணய விலைக் கணிப்பு: காஸ்மோஸ் விரிவடையக் கூடுமா?

By Currency.com Research Team

காஸ்மோஸ் பரபரப்பாகப் பேசப்படுவதால், ATOM நாணய விலைக் கணிப்பு குறித்துப் பார்க்கலாம்

ATOM நாணயம் என்பது காஸ்மோஸ் அமைப்பின் சொந்த டோக்கனாகும். இந்த வலைத்தொடர்பு தன்னைத்தானே பிளாக்செயின் 3.0 என்று அழைத்துக் கொள்கிறது. இதன் நோக்கம் வெவ்வேறு பிளாக்செயின்களை ஒன்றிணைத்து பரிவர்த்தனைகளை விரைவாகவும், மலிவாகவும், மேலும் நடைமுறைக்கு உகந்ததாகவும் செய்வதாகும். இதன் வெள்ளையறிக்கையில் இதன் கொள்கைகளும் “பிளாக்செயின் இணையத் தொடர்பு” பயன்பாடும், “ஒட்டுமொத்த ஆற்றல் போதாமை, மோசமான அல்லது வரம்புக்குட்பட்ட செயல்பாடு மற்றும் முதிர்வற்ற ஆளுகை அமைப்புகள்” ஆகியவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துதல் போன்றவை கோடியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. எனவே ATOM நாணயத்தின் விலைக் கணிப்பு என்ன?

முந்தைய செயல்பாடுகள் வருங்கால முடிவுகளைச் சுட்டிக்காட்டுவதில்லை என்றாலும், காஸ்மோஸ் நாணய விலைக் கணிப்பு என்று வரும்போது நாணயம் முந்தைய காலத்தில் என்ன செய்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். எனவே ATOM நாணய வரலாற்றைப் பார்ப்போம்.

ATOM விலை வரலாறு: வளர்ச்சி காலம்

2019ல் காஸ்மோஸ் முதன்முறையாக வெளிச்சந்தைக்கு வந்தபோது, இப்போது இருப்பதைக் காட்டிலும் கிரிப்டோவின் விலை மிகக் குறைவாகவே இருந்தது. 2019 மார்ச் 16ல், நாணயம் $7.39 வாக்கில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த ஆண்டு அல்லது இரு ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச விலையாகவும் இருந்தது. ஏனெனில் 2019 பின்பகுதியில் $3க்கும் $5க்கும் இடையிலேயே அதிக காலம் இருந்தது. 2020ல் கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியது உட்பட பல காரணிகளால்  ATOMன் நிலை மோசமடைந்தது. அந்த ஆண்டில் மார்ச் 13ல் அதுவரையில்லாத குறைந்தவிலையான $1.13ஐத் தொட்டது. 2020ன் எஞ்சிய காலத்தில் சற்று மீட்சியைப் பார்க்க முடிந்தது. அந்த ஆண்டில் ஆகஸ்ட் 23ல் $8.52 என்ற அந்த ஆண்டுக்கான அதிகபட்ச விலையைத் தொட்டது. எனினும் அந்த உச்சத்தை அந்த வருடத்தில் திரும்பப் பார்க்க முடியவில்லை. ஆண்டிறுதியில் காஸ்மோஸ் $6.49 விலையில் முடிவடைந்தது.

ஜனவரியில் ATOM சற்றே எழுச்சியைக் கண்டது. முந்தைய ஆண்டின் உச்சத்தை ஜனவரி 16ல் இன்ட்ராடே வர்த்தகத்தின் உச்சவிலையான $9.51ஐத் தொட்டு உடைத்தது. ஜனவரி 19ல் இன்ட்ராடே வர்த்தக உச்சவிலையும் அந்த மாதத்தின் உச்சவிலையுமான $10.13ஐத் தொட்டபோது $10 தடையை உடைத்தது. இருப்பினும் சற்று சறுக்கலும் இருந்தது. ஆனால் மாத முடிவில் டிசம்பர் இறுதியில் இருந்ததைக் காட்டிலும் 25%க்கும் கொஞ்சம் அதிகமாக $8.14 என்று இருந்தது. 

ஆண்டின் முதல் சில மாதங்களின்போது இருந்த கிரிப்டோ மூழ்கடிப்பில் காஸ்மோஸும் ஆட்பட்டு ஒட்டுமொத்த ஏறுமுகச் சந்தையில் பிப்ரவரி மாதத்தில் இணைந்துகொண்டது. திரும்பவும் பிப்ரவரி 5ல் $10 குறியீடு உடைக்கப்பட்டு இன்ட்ராடே வர்த்தக அதிகபட்ச விலையான $12.66ஐத் தொட்டது. இந்த வளர்ச்சி இத்துடன் நிற்கவில்லை. பிப்ரவரி 12ல் $20 தடையை உடைத்து பிப்ரவரி 16ல் மாதத்தின் உச்ச விலையான $26.42ஐத் தொட்டது. சில பின்னடைவினால் மாத இறுதியில் $17.62 என்று முடிந்தது. இது ஜனவரி இறுதி விலையைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகம்.

மார்ச் மாதத்தை எடுத்துக் கொண்டால், மார்ச் 18ல் இன்ட்ராடே வர்த்தகத்தில் $24.52ஐத் தொட்டதுதான் அந்த மாதத்தின் உச்சம். இது பிப்ரவரியைக் காட்டிலும் குறைவுதான். மாதம் முழுக்க $20 குறியீட்டுக்கு மேலேயே விலை இருந்தது. மார்ச் 25ல் மாதத்தின் மிகக்குறைந்த விலையான $16.76க்கு வந்தது. மாத இறுதியில் $19.11 என்று முடிந்தது. இது ஒப்பீட்டளவில் சென்ற மாதத்தைக் காட்டிலும் 8.5%க்கும் சற்று குறைவான ஒரு சாதாரண ஆதாயமாகச் சொல்லலாம். எனினும் வளர்ச்சியையும் நீடித்த தன்மையையும் பார்க்க முடிந்தது.

ஏப்ரலில் நாணயம் திரும்பவும் $20களிலேயே இருந்தது. மாதத்தின் அதிகபட்ச விலை $28.49ஐ ஏப்ரல் 15ல் தொட்டது. இந்த நிலையில், ATOM நாணய விலைக் கணிப்பு ஏறுமுகமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்திருக்கும்.

ATOM விலை வரலாறு: வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும்

சரிவையும் நிலைகுலைவையும் தொடர்ந்து மே மாதத்தில் சற்று வளர்ச்சியைப் பார்க்க முடிந்தது. மே 7ல் $30 குறியீட்டை உடைத்து மாத உச்சமான $32.14ஐத் தொட்டது. ஆனால் விரைவிலேயே கீழிறங்கி மே 19ல் $23.49ல் நிலைகொண்டது. பின்னர் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி நாளான மே 19ல், ATOM சிலமணி நேரங்களில் பாதிக்கும் கீழாகக் குறைந்து $9.87 என்ற அடிவிலையைத் தொட்டது. பின்னர் சற்று மீண்டெழுந்து $13.94 என்று முடிவடைந்தது. எஞ்சிய மாதம் முழுவதும் மந்தமாக இருந்தது. மே மாத முடிவில் கிட்டத்தட்ட 50% முந்தைய மாதத்தைக் காட்டிலும் குறைந்து $13.99ல் முடிவடைந்தது. 

ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் இரண்டுமே மோசமாக இருந்தன. இந்தத் தேக்கநிலை நாணய முதலீட்டாளர்களிடத்தில் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஜூன் மாதத்தில் 14% இழப்புடன், அந்த மாதத்தில் $10க்கும் கீழே சென்றதை மறக்கும்படி $12க்கு முடிவடைந்தது. ஜூலை ஏறத்தாழ அதே இடத்தில் $12.15க்கு முடிவடைந்தது. 

What is your sentiment on ATOM/USD?

8.1727
Bullish
or
Bearish
Vote to see community's results!

ஆகஸ்ட் மாதத்தில் கிரிப்டோசந்தை மீள ஆரம்பித்தது. இதில் காஸ்மோஸும் ஒரு பகுதியாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் முதன்முறையாக ஆகஸ்ட் 19ல் $20 குறியீட்டை உடைத்து $20.39ஐத் தொட்டது. ஆகஸ்ட் 31 இன்ட்ராடே வர்த்தகத்தில் அந்த மாத உச்சவிலையான $26.17ஐத் தொட்டு பின் மாத இறுதியை $22.87ல் முடித்து வைத்தது. எனினும் முந்தைய மாதத்தைக் காட்டிலும் 88% ஊக்கமளிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க எழுச்சி இது.

முந்தைய காலப் பிரச்சினைகளை மறக்கடிக்கும்படி செப்டம்பர் மாதம் அமைந்திருந்தது. இனி இந்த நிலையிலேயே நீடிக்கும் என்று சொல்லும்வண்ணம் $30 குறியீடு செப்டம்பர் 10ல் உடைக்கப்பட்டது. செப்டம்பர் 18ல் கிரிப்டோவின் விலை $40க்கும் மேல் சென்று செப்டம்பர் 20ல் அதுவரை இல்லாத உச்சவிலையான $44.70ஐத் தொட்டது. இந்த நிலையிலிருந்து தவிர்க்கமுடியாதபடி ஒரு பின்வாங்கல் ஏற்பட்டு மாதமுடிவில் $36.21க்குச் சென்று 58%க்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.  

அக்டோபர் மாதத்தில் $30 குறியீட்டுக்கு மேலேயே மாதம் முழுவதிலும் விலை நிலையாகவும் ஊக்கமளிப்பதாகவும் நிலவியதுடன் அக்டோபர் 26ல் $43.22 என்ற அந்த மாதத்தின் அதிகபட்ச விலையைத் தொட்டது. மாத இறுதி விலையாக $37.26 இருந்தது. இது செப்டம்பர் இறுதிவிலையை விட சற்றே கூடுதல். இதற்கிடையில் நவம்பரில் சில பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. நவம்பர் 4ல் மாத உச்சமாக $39.22 இருந்தது. அதன்பின் விலை மெதுமெதுவாகச் சரிய ஆரம்பித்து நவம்பர் 30 பின்மதியத்தில் $29 என்று இருந்தது.மேலும் குறைந்து இது டிசம்பர் 14ல் $21.21க்குச் சென்றது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதுவரையிலான காலகட்டத்தின் மிகக் குறைந்த விலை இது. எனினும் அந்தக் குறைந்த விலைக்குப்பின் கணிசமான மீட்சியைக் கண்டு டிசம்பர் 16ல் $43.61ஐத் தொட்டது. அது வரையிலான உச்சத்தைக் காட்டிலும் இது வெறும் $1.09 மட்டுமே குறைவு. இதை எழுதிக் கொண்டிருந்த 2022 ஜனவரி 24ல் நாணயத்தின் விலை $34.23 ஆக இருந்தது. 

இதை ஒருபுறம் வைத்துவிட்டு, ATOM நாணய விலைக் கணிப்பு மக்களிடம் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம். கணிப்புகள் பெரும்பாலும் தவறாகப் போகக்கூடும் என்பதை மனதில் கொள்வது நல்லது. நீண்டகால கிரிப்டோ கணிப்புகளில் அவை பெரும்பாலும் சூத்திரங்களைக் கொண்டு செய்யப்படுவதால் எந்த தருணத்திலும் அவை மாறக்கூடும்.

ATOM நாணய விலைக் கணிப்பு

முதலில், WalletInvestor-ன் 2022க்கான காஸ்மோஸ் விலைக் கணிப்புப்படி பிப்ரவரியில் $40 குறியீட்டை உடைக்குமென்றும் ஒருவருடத்தில் $56.01 கிட்ட வருமென்றும் கூறுகிறது. இணையதளமானது ஐந்தாண்டு காலத்தில் நாணயம் $149.03ஐத் தொடும் என்கிறது.

PricePrediction 2022ன் சராசரி விலையாக $46.59 இருக்கும் என்கிறது. அதற்கு மறு ஆண்டில் இது $69.02 ஆக இருக்கும்; 2024க்கான இணையதளக் கணிப்பு $102.25 ஆக உள்ளது. அதற்கடுத்த 12 மாதங்களில் இதுவே $144.28 ஆக இருக்கும். 2026ல், காஸ்மோஸின் சராசரி விலை $215.86 ஆக இருக்குமென்று அது கருதுகிறது. PricePrediction-ன் அடுத்த ஆண்டு கணிப்பாக $319.80 உள்ளது. 2028ல் சராசரி விலையாக $483.03 கணிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்த ஆண்டில் இதுவே $701.79 ஆக உயருமென்று தளம் கூறுகிறது. 2030க்கான காஸ்மோஸ் விலைக்கணிப்புப்படி சராசரி விலை $980.89 ஆக இருக்கக்கூடும். 

இறுதியாக, Gov.capital ஒருவருட காலத்தில் ATOM $61.56 மதிப்பு இருக்குமென்றும் ஐந்து ஆண்டுகளில் இது $367.02 ஆக இருக்கும் என்றும் கூறுகிறது. இணையதளத்தின் 2025க்கான காஸ்மோஸ் விலைக்கணிப்புப்படி பிப்ரவரியில் இது $200 குறியீட்டை உடைக்குமென்றும் 2026 ஏப்ரலில் $300ஐத் தாண்டுமென்றும் கூறுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இருக்கலாம். கடந்த 12 மாதங்களில் காஸ்மோஸின் மதிப்பு மேற்கிளர்ந்து நிச்சயம் மிக நன்றாகச் செயல்பட்டுள்ளது என்று சொல்லலாம். இதைச் சொல்லும் அதே நேரத்தில், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்களே உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

செல்லலாம். கடந்த ஆண்டு ஒருவகையில் சந்தை ஏறுமுகமாக இருந்தது; அத்துடன் ATOM எழுச்சி கண்டது. கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்பு கொண்டவை. அதன் விலைகள் இறங்கவும் அதேபோல ஏறவும் கூடும்.

இந்தக் கேள்விக்கு நீங்கள் மட்டும்தான் பதிலளிக்க முடியும். எதுவாயினும், நீங்கள் உங்கள் சொந்த ஆய்வினைச் செய்ய வேண்டும். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்பு கொண்டவை என்பதையும் விலைகள் நிச்சயம் இறங்கவும் அதேபோல ஏறவும் செய்யும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதுடன் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image