DENT விலைக் கணிப்பு: அதன் மாபெரும் திட்டங்கள் முத்திரை பதிக்குமா?

By Currency.com Research Team

DENT டோக்கன் telco செயல்படும் வேகத்தை மாற்றக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அதன் மதிப்பு ஏறுவதற்கான நேரம் வந்துவிட்டதா?

DENT விலைக் கணிப்பு                                 
DENT டோக்கன்கள் மிகப்பெரிய இலட்சியங்களைக் கொண்ட ‘தகர்த்தெறியும்’ பிளாக்செயின் செயற்தளத்துக்கு ஆற்றலை வழங்குகிறது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

கைபேசி தரவுக்கான செலவையும் தரவு சஞ்சார (roaming) கட்டணங்களையும் குறைப்பதற்காக DENT டோக்கனைப் பயன்படுத்தி DENT வடிவமைக்கப்பட்டது. இந்த அமைப்பானது மேலும் பரவலாக அறியப்பட்டு வரும் நிலையில் எந்த மாதிரியான DENT விலைக் கணிப்பை நாம் செய்யலாம்?

DENT என்றால் என்ன?

DENT டோக்கன் என்பது ஒரு கிரிப்டோகரன்சி. இது ERC-20 பிளாக்செயின் தரநிலையை அடிப்படையாகக் கொண்டு DENT கட்டுமானத்திற்கு ஆற்றலை வழங்குகிறது..

எதேரியம் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயலியான DENT, கைபேசி தரவுச் சந்தையில் மிகப்பெரிய வெடிப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் 2017 வெள்ளையறிக்கையின்படி, “ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என பயனர்களால் இடையூறின்றி தங்கள் கைபேசி தரவுகளை வாங்க, விற்க, நன்கொடை அளிக்க முடிவது” என்று குறிப்பிடுகிறது.

நிறுவனத்தின் மையப் பண்பாக கைபேசி ஒப்பந்தங்களோடு எழக்கூடிய மிகப்பெரும் சிக்கல்களை பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தீர்ப்பது ஆகும்: தரவு சஞ்சாரக் கட்டணங்கள்.

அநியாயமான சஞ்சாரக் கட்டணங்களோடு வெளியேறமுடியாமல் சிக்கிக் கிடப்பதற்கு மாறாக, பயனர்கள் ’முனையங்களின்’ மிகப்பெரிய வலைத்தொடர்புகளில் இருந்து தரவுத் திட்டங்களை வாங்க முடியும். அத்தகைய முனையங்ககளில் தனிநபர்கள் தங்களது பயன்படுத்தாத தரவு சலுகைகளின் மூலம் சில DENTகளை ஈட்டும் நம்பிக்கையோடு உள்ளனர்.

பிட்காயின் (BTC) மைனிங்கைப் போலவே இந்த முனையங்களுக்கும் DENT ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. எனினும் தற்போதைக்கு DENTஐ ரொக்கப் பணத்துக்கு மாற்றாக வர்த்தகம் செய்ய இயலாது; ஈட்டிய DENTஐ வருங்கால தரவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தவோ அல்லது ஒரு பரிசாக அளிக்கவோ செய்யலாம்.

DENTஐ வழக்கமான கிரிப்டோ சந்தைகளில் வாங்கவும் வர்த்தகம் செய்யவும் முடியும். அவற்றை உங்கள் DENT கணக்குக்கு மாற்றும்போது மட்டுமே ரொக்கத்துக்கு மாற்றக்கூடிய தன்மையை இழக்கும்.

DENT உங்கள் தற்போதைய தொலைத்தொடர்பு வழங்குநரை மாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக, அது ஒரு துணைவனாகப் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலகம் சுற்றிகள் தடையின்றி தேவைப்படும்போது தங்கள் வழக்கமான வழங்குநரிடமிருந்து மையமில்லா DENT வலைத்தொடர்புக்கு மாறிக்கொள்ளவும் உதவுகிறது.

DENT விலைக் கணிப்புக்கு தொடர்ந்து கீழே படியுங்கள்.

ஆரம்ப கட்டங்கள்

DENT-ன் துவக்ககட்ட நாணய வழங்கல் (ICO) 2017ல் நடந்தது. 70 பில்லியன் டோக்கன்களைக் காப்பாகக் கொண்டு $4.3 மில்லியனைத் (£3.3 மில்லியன்) திரட்டியது. நிறுவனம் எஞ்சிய 30 பில்லியனை செயல்பாட்டுச் செலவுகளுக்காக வைத்துக் கொண்டது. ICO நிலையில் DENT-ன் விலை $0.00006 என்று இருந்தது.

ஒரு மிகப்பெரிய விலையேற்றம் ஜனவரியில் நடந்தது. அதைத் தொடர்ந்து காளைகள் விலையை இழுத்துச் சென்று $0.10 குறியீட்டை உடைத்தது. அடுத்த ஆறுமாதங்களுக்கு சந்தை நேர்செய்தல் ஏற்பட்டது. DENT விலை பெயரளவுக்கு 2019, 2020ல் நகர்ந்தது. வர்த்தகம் $0.0001க்கும் $0.0002வுக்கும் இடையில் நிகழ்ந்து வந்தது.

ஆனால் 2021ல் டோக்கன் சிறப்பாகச் செயல்பட்டு முந்தைய சராசரிகளைக் காட்டிலும் நன்கு மேலேயே நிலைத்திருந்தது. இதைச் சொல்லும்போது மிகக்குறைந்த மதிப்புள்ள ஆல்ட்காயின்களில் மாறியல்பு என்பது நன்கு அறிந்தது தான். இதனால் ஒரு சரியான DENT நாணய விலைக் கணிப்பைச் செய்வது சிரமமானது. வர்த்தகங்களின் இறுதி விலை $0.02வுக்கும் $0.0002வுக்கும் இடையில் ஆடிக் கொண்டிருந்தன. 2021 இறுதியில் இந்த நாணயம் $0.00388ல் முடிவடைந்தது.

இப்போது DENT விலை என்னவாக இருக்கிறது?

2022 ஜனவரி 25ன்படி DENT சந்தை மூலதனமானது கிட்டத்தட்ட $240 மில்லியனாக இருந்தது. இதன் 24 மணிநேர வர்த்தக அளவு $38 மில்லியன். இதன் சந்தை மூலதனப்படி இதன் தரமதிப்பு எண் 159. டிசம்பரில் 163-ல் இருந்தும் நவம்பர் நடுவில் 177-ல்  இருந்தும் மேலெழுந்துள்ளது. எனவே கடந்த மூன்று மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் 18 தரமதிப்புகள் மேலெழுந்துள்ளது.

இதை எழுதிக் கொண்டிருந்த நாளான 2022 ஜனவரி 25ல் வர்த்தக விலை $0.002425 ஆக இருந்தது. இது முந்தைய இறுதி விலையைக் காட்டிலும் 8.5% அதிகம். 

எனினும் எந்த DENT கிரிப்டோ விலைக் கணிப்பிலும் தீவிர ஆல்ட்காயின் மாறியல்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சந்தை தற்போது இறங்குமுகமாக உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ரிலேடிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் இரண்டும் கெட்டானாக 38.27ல் உள்ளது. ஆனால் Stoch RSI மற்றும் Stochastic fast இதை வாங்குவதற்கு நல்ல நேரம் என்று பரிந்துரைக்கிறது. எனினும் ஆவரேஜ் டைரக்‌ஷனல் இன்டெக்ஸ் படி இது தாக்கமில்லாத நிலையில் உள்ளதால் கையில் வைத்திருக்கப் பரிந்துரைக்கிறது. DigitalCoinPrice-ன் 26 ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 13 பேர் விற்கவும், 9 பேர் வைத்திருக்கவும் 4 பேர் வாங்கவும் பரிந்துரைக்கின்றனர்.

இந்த எண்கள் அதிக ஊகத்துக்கு உட்பட்டவை என்பதையும் இதை அதிகாரப்பூர்வ நிதி ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் தயவுசெய்து முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.

2022, 2025 ஏன் 2030ல் DENT எங்கு செல்லும்?

WalletInvestor-ன் 12 மாத முன்னறிவிப்பாக $0.00523 உள்ளது. 2025க்கான DENT விலை முன்னறிவிப்பைப் பார்க்கையில், கணிப்பாளர்கள் ஒரு சென்டை அந்த வருடத்தின் பிப்ரவரியில் உடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதலீட்டில் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்குமென்றும், ஐந்தாண்டுகளில் இது 683.5%-க்கு மேல் இருக்குமென்றும் கணிப்பாளர்கள் கூறுகிறார்கள். கடந்த 30 நாட்களில் சற்று இறங்குமுகமாக இருப்பதால் குறுகிய காலத்தில் எதுவும் சொல்லும்படி இல்லை.

DigitalCoinPrice 2029ல் $0.01047 என்ற இலக்கைத் தொடும் என்கிறது. DENT கணிப்பாளர்களின் 2022க்கான கணிப்பு சராசரி விலையான $0.00331-ல் நிற்கிறது . PricePrediction.net தரும் 2030க்கான DENT முன்னறிவிப்பு ஆண்டுக்கான சராசரி விலை $0.069 என்கிறது.

TradingBeasts தனது எதிர்காலக் கணிப்புகளில் மிகவும் நடுத்தரமாக உள்ளது. இது 2022 நடுவில் சராசரி விலை இலக்காக $0.00347-ஐக் குறிப்பிடுகிறது. 2024ன் இடையில் இது $0.00474க்கு ஏறுமென்றும் கணிக்கிறது. நீண்டகால நோக்கில் இப்போதும் விலை ஏறும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கையில், இந்த உத்தேசங்கள் ஒரு சிறிய அளவில் வருடாவருடம் வருவாய் இருப்பதைக் காட்டுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

DENT நாணயம் ஒரு நல்ல முதலீடு தானா?

DENT ஒரு நல்ல முதலீடாக இருக்கக்கூடும்.சராசரியாக பெரும்பாலான கணிப்பாளர்கள் குறுகிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்குள் டோக்கன் மதிப்பு எழும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதன் DENT கைபேசி தரவு தயாரிப்பே உண்மையில் இதைத் தீர்மானிக்கக்கூடியது. அதன் வாக்குறுதிகளுக்கேற்ப அது செயல்பட்டால், தொழில்நுட்பத்தின் மையஓட்டத்தில் ஒரு கூறாக அது மாறும். அதைத்தொடர்ந்து DENT விலையும் அதிகரிக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி, எந்தவொரு முதலீடும் அதிலும் குறிப்பாக அதிக மாறியல்புள்ள ஆல்ட்காயின் அபாயத்துடன் தான் வருகிறது. உங்கள் முதலீட்டில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

DENT நாணயம் $1-ஐத் தொடுமா?

குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவ்வாறு நடக்க பெரும்பாலும் சாத்தியமில்லை. எந்த கணிப்பாளரும் $1 விலையைக் குறிப்பிடவும் இல்லை.

DENT நாணயத்தில் நான் முதலீடு செய்யலாமா?

DENT தொடர்ந்து மேலெழுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கணக்கில் ஒரே நிலையில் வர்த்தகம் ஆனபின், மிகச் சமீபத்தியச் செயல்பாடுகள் ஏறுமுகமாக உள்ளன. இது ஒரு நல்ல சமிக்ஞை. கணிப்பாளர்களும் பெருமளவில் நேர்மறையான எண்ணத்தையே கொண்டிருக்கின்றனர்.

DENT-ல் முதலீடு செய்ய நீங்கள் தீர்மானித்தால் தயவுசெய்து முழுக் கவனத்துடன் செயல்படுங்கள். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image