டோஜ்காயின் விலைக் கணிப்பு: உண்மையிலேயே இது $1ஐத் தொடுமா?

By Currency.com Research Team

விஷயங்கள் எல்லாமே விரைவாக மாறக்கூடும். சிலநேரம் எலான் மஸ்கின் ஒரேயொரு டுவிட்டர் பதிவுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. 2022ல் டோஜ்காயின் விலைக்கணிப்பில் இதன் பங்கு என்ன?

இந்த முன்னறிவிப்பில்

டோஜ்காயின் (DOGE) எந்த வெளிப்படையான காரணமும் இன்றி ஏறுவதும் வீழ்வதுமாக தனக்கெனத் தனி மனதைக் கொண்டுள்ளதுபோல் தோன்றுகிறது. இப்படி நிறைய இருப்பதால் டோஜ்காயின் விலைக்கணிப்புகளில் நிதி ஆரோக்கிய எச்சரிக்கையையும் ஒருவேளை சேர்த்தால் நல்லது என்று தோன்றுகிறது. 

DOGE முதலில் ஒரு நகைச்சுவையாக அமைக்கப்பட்டது. அதன் மாறியல்பின் அர்த்தம் “நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்” என்ற அறிவுரை வேறு எதற்கும் இந்த அளவிற்கு பொருந்தியது இல்லை. இதன் விளைவாக, எந்தவிதமான 2022 மற்றும் அதைத்தாண்டிய டோஜ்காயினில் விலைக்கணிப்பை பலவீனமான இதயமுடையவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

டோஜ்காயினின் மூன்று இலக்கப் பாய்ச்சல் 2021 ஏப்ரலில் ஏற்பட்டது. அப்போது நம்பமுடியாத அளவு 514%க்கு ஏப்ரல் 12ம் தேதி திங்கள் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை 16ம் தேதிக்குள் மேலேறியது. என்னவோ பெரிதக நடக்கப்போகிறது என்பதுபோல் தோன்றியது. ஆனால் முழுக்கதையும் அத்தோடு முடியவில்லை.

அந்த வாரத்தில் $0.07ல் தொடங்கி $0.43ல் முடித்து, DOGE தொடர்ந்து ஏறியபடி இருந்தது. பின்னர் அதன் விலை ஏப்ரல் 19ல் $0.25க்கு விழுந்தது. விரைவிலேயே நீங்கள் டோஜ்காயின் விலைப் பகுப்பாய்வில் பார்க்கமுடிவதுபோல் திரும்பவும் ஏற ஆரம்பித்தது.

சந்தை மனப்போக்கு ஒரேநாளில் மாறக்கூடிய சூழலில் ஒரு டோஜ்காயின் முன்னறிவிப்பைச் செய்வது தந்திரமான ஒன்று. மே 7ம் தேதி $0.72 என்ற புதிய உச்சத்தை எட்டும்முன் மே 3ம் தேதி திங்கள்கிழமை இது $0.40 தடையை உடைத்தபோது, டோஜ்காயின் விலைக் கணிப்புகள் நம்பிக்கையளிக்கும்படி இருந்தன. ஆனால் அதன் பின்னர் அது வேகமாகத் தரையை நோக்கி வந்து தொம்மென்று இடித்துக் கொண்டது.

டெஸ்லா மற்றும் SpaceX-ன் தலைமைச் செயல் அதிகாரியும் ஆச்சரியப்படும்படி DOGE ஆர்வலர்களில் மிக முக்கிய பிரபலரும் ஆன  எலான் மஸ்க் மே 8ம் தேதி US TV நிகழ்ச்சியில் சனிக்கிழமை இரவு நேரலையில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவரிடம் டோஜ்காயின் என்றால் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்னது:

“இது எதிர்காலத்துக்கான கரன்சி. இந்த உலகை கையகப்படுத்தப்போகும் தடுக்கவே முடியாத நிதி ஆவணம் இது.”

நிகழ்ச்சியில் அங்கே பணியாற்றும் நகைச்சுவையாளர்களில் ஒருவரான மைக்கேல் சே பதிலளித்தார்:

“அடிச்சுப் பிடிச்சு ஓடிவருதோ?”

மஸ்க் நகைச்சுவையாகப் பதிலளித்தார்:

“ஆமா. அப்படித்தான்.”

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மஸ்கின் தாயார் மாயே நகைச்சுவையாகச் சொன்னதும் போகிறபோக்கில் மஸ்க் அடித்த கமெண்டோடு சேர்ந்துகொண்டது. மாயே தனது மகன் அன்னையர் தினப் பரிசாக டோஜ்காயினைக் கொடுக்கமாட்டார் என்று தான் நம்புவதாகச் சொன்னார். அப்போது ஆல்ட்காயினின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு தடுமாறிக் கொண்டிருந்தது. மே 9 ஞாயிற்றுக் கிழமை காலையில் $0.48க்கும் கீழே தொட்டிருந்தது.

பின்னர் DOGE எழத் தொடங்கி அன்று மாலையில் $0.58ஐ அடைந்தது – பின்னர் மே 11 காலையில் திரும்பவும் இறங்கி $0.45ஐத் தொட்டது. மே 14ல் இன்ட்ராடே வர்த்தகத்தில் $0.59க்கும் சற்று குறைவான உச்சத்தை எட்டியது. 

இடிமேகங்கள் பின்னர் DOGE-ஐச் சுற்றியும் பொதுவாகவே கிரிப்டோகரன்சி சந்தையையும் சுற்றி சேரத் தொடங்கின. மே 19ல் சந்தை சரிவடைந்தபோது நிலவரம் உண்மையிலேயே மோசமடைந்ததில், கிரிப்டோ பரிவர்த்தனைகள் மீது சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கும் குறைந்தது ஒரு பங்கு இருந்தது. 

DOGE இன்ட்ராடே வர்த்தகத்தின் அடி விலையாக $0.23ஐத் தொட்டது. ஜூன் 2, 3 தேதிகளில் இன்ட்ராடே வர்த்தகத்தில் $0.44 உச்சங்களைத் தொட்டபோது நாணயம் தனது பாதையில் மீண்டுவருவதாகத் தோன்றியது. காயின்பேஸ் சந்தையில் பட்டியலும் இடப்பட்டிருந்தது. ஆனால் விஷயங்கள் ஒருபோதும் அத்தனை எளிதாக கடக்கமுடியவில்லை. மாதத்தின் மீதி நாட்கள் முழுவதும் அப்படியே அமைதிப் பூங்காவாக இருந்தது. ஜூன் 21, 22 தேதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாக $0.16 என்ற இன்ட்ராடே வர்த்தக அடிவிலையை எட்டியது. ஒரு சிறிய மீட்சி இருந்தாலும் ஜூலை துவக்கத்தில் DOGE பெரும்பாலும் $0.20வுக்கும் $0.25க்கும் இடையிலேயே வர்த்தகமானது.

ஜூலை 7ம் தேதி, ஈடல்மேன் ஃபைனான்சியல் எஞ்சின்ஸைச் சேர்ந்த ரிக் ஈடல்மேன் ஒரு நேர்காணலில் “டோஜ்காயினை முழுக்கவே நிராகரிக்கிறேன். இது ஒரு நகைச்சுவை என்பதைத் தவிர வேறில்லை. இதுவொரு சூழ்ச்சி. படு மோசமான முடிவை இது அடையப் போகிறது.” என்று கூறியது டோஜ்காயினுக்கு மேலும் மோசமான செய்தியாக அமைந்தது. சந்தை இதற்கு மிகக் கூர்மையாக எதிர்வினையாற்றியது. விலை திரும்பவும் கீழே விழுந்து ஜூலை 20ல் $0.16ஐத் திரும்பவும் தொட்டது.

மஸ்க் DOGE பெயரை அவ்வப்போது குறிப்பிட்டு வந்ததில் DOGE அக்டோபர் மாதம் பரபரப்பாக இருந்தது. டுவிட்டரில் மேலும் சிலவற்றை அவர் குறிப்பிட்டபோது விலை மேலேறியது. அக்டோபர் 28ல் விலை $0.30ஐத் தொட்டது. எனினும் நவம்பர், டிசம்பர் அத்துடன் ஜனவரி 1ல் திரும்பவும் விழுந்து விலை $0.17 ஆக இருந்தது. 

இதை எழுதிக் கொண்டிருந்த ஜனவர் 14ல், மஸ்கின் இன்னொரு டுவிட்டில், டெஸ்லா இணையவழி விற்பனையகங்களில் DOGE மூலம் பொருட்களை வாங்கமுடியும் என்று குறிப்பிட்டிருந்ததால் DOGE திரும்பவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. நானயம் தற்போது $0.18 குறியீட்டுக்கு அருகில் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒரு புதிய வேகத்துடன் மேல்நோக்கிச் செல்ல முடியுமா? 

மாறுபட்ட அபிப்பிராயங்கள்

நீங்கள் எதிர்பார்த்திருக்கக்கூடியது போலவே, டோஜ்காயினின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்பதில் அபிப்பிராயங்களும் மாறுபட்டவையாக உள்ளன. இதை எழுதிக் கொண்டிருந்த (14 ஜனவரி) வேளையில், DOGEன் சந்தை மூலதனம் தோராயமாக $25 பில்லியனாக இருந்து இதை 11வது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக ஆக்கியிருந்தது.

What is your sentiment on DOGE/USD?

0.0899360
Bullish
or
Bearish
Vote to see community's results!

மே 5ம் தேதி அது அடைந்திருந்த $83.08 பில்லியனிலிருந்து கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆனால் எண்களில் காட்டுவதற்கு மேலும் சற்று நேரம் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மதிப்பீட்டில், வாழ்க்கையே ஒரு நகைச்சுவை என்று தொடங்கிய இந்த கிரிப்டோகரன்சியானது Best Buy, LG Electronics, Delta Air Lines, Tesco ஆகியவற்றைக் காட்டிலும்  அதிக மதிப்புடையது.

டோஜ்காயின் கணிப்புகளில் புதிதாக ஒன்றும் இல்லை. 2020 கோடையில், ஒரு டிக்டாக் (TikTok) போட்டியில் DOGE உடன் அதிகப் பரிட்சயம் பண்ணிக்கொள்ளும்படி குறிப்பாக இளவயது பயனர்கள் ஊக்கப்படுத்தப்பட்டது வைரலானது. ஒரு காணொளியில் இந்த ஆல்ட்காயினை அவர்கள் $25 மதிப்புக்கு வாங்கினால் DOGE மதிப்பு ஒரு டாலரைத் தொடும்போது அவர்கள் முதலீடு $10,000 மதிப்பிருக்கும் என்று சொல்லப்பட்டது. 

செயற்கை விலையேற்றக் குற்றச்சாட்டுகள்

இதுவொரு செயற்கையான விலையேற்றம் என்ற பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. அனுபவமில்லாத முதலீட்டாளர்கள் முடிவில் காயப்படுவார்கள் என்ற முடிவில்லாத எச்சரிக்கைகள் வருகின்றன. டிக்டாக் காணொளி வெளியான சமயம், ஒரு DOGEன் விலை வெறும் $0.0023 ஆக இருந்தது. இருந்தாலும் சில்லறைத் தேவை அதிகரிப்பின் காரணமாக இந்த ஆல்ட்காயின் மேலெழத் தொடங்கியிருந்தாலும், அதன் மதிப்பு இருமடங்காகி $0.0046க்கு உயர்ந்தது. அதன்பின் விலை அதிர்ச்சிகரமாகச் சரிந்தபோது சில வாங்குவோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

ஒரு வருடத்தில், DOGE வைத்திருந்தவர்கள் என்னவோ தங்கச் சுரங்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் போலிருந்தனர். $0.0023யிலிருந்து $0.52வுக்கு ஓடிய இந்த ஓட்டத்தில் வாயைப் பிளக்க வைக்கும் 22,508% ஆதாயம் இருந்தது. கடந்த கோடையில் $25 மதிப்புள்ள ஆல்ட்காயினை ஒருவர் வாங்கி வைத்திருந்தால், அவரது முதலீடு மே 19 வீழ்ச்சிக்கு முன்பாக $5,650க்கும் மேல் அதிகரித்திருந்திருக்கும்.

அவ்வளவு ஏன், இப்போது இருக்கும் $0.18 விலைகூட 7,700% கூடுதல் அதிகரிப்பைத்தான் காட்டுகிறது. அதாவது $25ன் இன்றைய மதிப்பு $4,500க்கும் மேல்.

மறுபக்கத்தில், 2021 கோடைக்குப் பிறகு இருமாதங்களில் பாதிக்குமேல் DOGE குறைந்துள்ளதைப் பார்க்கிறோம். இது இந்நாணயம் கடுமையான மாறியல்புடையது என்பதைக் காட்டுகிறது. 

டோஜ்காயின் கணிப்புகளில் இப்போது உள்ள அபாயம் என்னவென்றால் கடந்த சில மாதங்களில் சில கடுமையான இழப்புகளைச் சந்தித்த நாணயத்தில் முதலீடு செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். முன்னோக்கிப் பார்க்கையில், 2025க்கோ அல்லது அதைத்தாண்டிய நீண்டகாலமான 2030க்கோ துல்லியமாக டோஜ்காயின் விலைக் கணிப்பு செய்வது ஆய்வாலர்களுக்குக் கடினமானதாக இருக்கும்.

இதன் பொதுவான வர்த்தக வடிவங்களும் உதவவில்லை. ஒரு சொத்தின் விலை ஏறுவதற்கு எலான் மஸ்கின் டுவிட்டுகளையும் ஜெனே சிம்மன்ஸின் குறிப்புகளையும் நம்பியிருக்கும்போது எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

இது இவ்வாறு இருக்க, கிரிப்டோ டுவிட்டரின் ஆழத்தில் அதீத ஆர்வமுள்ள குழுவினர் DOGE நிச்சயம் $1ஐத் தொடும் என்று நம்புகிறார்கள்.

இது சம்பந்தமே இல்லாததுபோலத் தோன்றினாலும், ஏப்ரல் இறுதியிலும் மே துவக்கத்திலும் இருந்த பொன்னான நாட்களில் இருந்த மதிப்பைக்கூட ஒருபுறம் வைத்துவிடுவோம். வருடத் தொடக்கத்தில், ஆல்ட்காயின் இப்போது இருக்கும் மதிப்பை அடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று சொன்ன மறுப்பாளர்கள் தங்கள் எண்ணத்தை இந்நேரம் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.  

டோஜ்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?

சமீபத்திய டோஜ்காயின் விலைக் கணிப்பைப் பார்க்கும்போது நீங்கள் வேறு எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

டோஜ்காயினின் எதிர்கால விலை சென்டுகளில் அல்லாது டாலர்களில் அளவிடப்படும் என்று அதீத ஆர்வத்துடன் நம்பக்கூடியவர்களில் டல்லாஸ் மேவரிக்ஸின் (Dallas Mavericks) கோடீஸ்வர உரிமையாளர் மார்க் கூபனும் ஒருவர். அவரது கூடைப்பந்துக் குழு DOGE மூலம் தொகை செலுத்துவதை ஏற்கிறது. வலுவான ஆதாயத்துக்கு வாய்ப்புள்ளது என்று அவர் நம்புகிறார். கடந்த ஆகஸ்டில் DOGE என்பது ”மக்கள் தொகை செலுத்தும் முறை” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆல்ட்காயினுக்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், முதலீட்டாளர் இப்படி டுவீட் செய்கிறார்: 

அப்படியென்றால், 2022க்கான டோஜ்காயினின் புதிய விலைக் கணிப்பு என்ன?

DOGE கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்று $1க்கு அதிக நெருக்கத்தில் உள்ளது. இதை எழுதிக் கொண்டிருந்த ஜனவரி 14 அன்று, ஆல்ட்காயின் விலை $0.18. டாலர் எனும் மைல்கல்லை அடைய இது 455%க்கும் அதிகமாக மேலெழ வேண்டும். அதற்கு வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை என்றாலும், 2020 டிசம்பர் இறுதிக்கும் இப்போதைக்கும் இடையில் கண்ட எழுச்சியைக் காட்டிலும் குறைவான விலையேற்றத்தைக் கொண்டுள்ளது.

ஒருவேளை DOGE $1ஐத் தொட்டால் அப்போது அதன் சந்தை மூலதன மதிப்பு $131 பில்லியனாக இருக்கும். அதாவது பினான்ஸ் காயின், சொலானா, டெதர் ஆகியவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளி மூன்றாவது மிகப்பெரிய நாணயம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் திரும்பவும் சொல்கிறோம். எந்த டோஜ்காயின் விலை கணிப்பையும் சந்தேகத்தோடே அணுகுங்கள் – எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியை முதலில் செய்யுங்கள். சமீபத்திய முன்னேற்றங்க்ள் குறித்த செய்திகளைக் கணக்கில் கொள்ளுங்கள்.

FXStreet ஆய்வாளர்கள் டோஜ் ஒரு வெடிக்கப்போகும் விளிம்பில் இருப்பதாக நம்புகிறார்கள். பிளாக்செயின் நடவடிக்கைகள் 2022ல் பெருகியுள்ளன. மேலும் ஒருமித்த பொதுக் கருத்தாக நீண்டகால நோக்கில் ஏறுமுகமாக இருக்குமென நம்பப்படுகிறது. டோஜ்காயின் விலை சமீபத்தில் ஒரு வெடிப்பாக புது எழுச்சியை ஏற்படுத்தி மிகப்பெரிய ஆதாயங்களைக் கண்டுள்ளது.

டோஜ்காயின் - US டாலர் வர்த்தகம் – DOGE/USD விளக்கப்படம்

DogeCoin to US Dollar
தினசரி மாற்றம்
0.0894373
குறைவு: 0.0871554
அதிகம்: 0.0899774

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டோஜ்காயின் $1 விலையைத் தொடுமா?

DOGE 2021 தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் மிக அதிகமாக $1க்கு நெருக்கமாக இன்று உள்ளது. இதை எழுதிய ஜனவரி 14 அன்று அது தோராயமாக $0.18ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. டாலர் மைல்கல்லை அடைய அது 455%க்கும் மேல் அதிகரிக்க வேண்டியுள்ளது.

DOGE விலை $1ஐத் தொடுகையில் அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு $131 பில்லியனாக இருக்கும்; தற்போதைய சந்தை மூலதன மதிப்பு $25 பில்லியன். gov.capital வெளியிட்ட தரவின்படி 2024 ஏப்ரலில் டோஜ் $0.5ஐ எட்டக்கூடும்.

எனினும் இந்தக் கணிப்புகள் கடந்தகாலச் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும், அனைத்து நடப்பு அல்லது எதிர்காலச் சந்தைச் சூழல்களை இது கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

டோஜ்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?

டோஜ்காயினின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்பதில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. இதை எழுதிய நேரத்தில் (2022 ஜனவரி 14), DOGE தோராயமாக $25 பில்லியன் சந்தை மூலதனத்தைக் கொண்டு உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சிகளில் 11வது இடத்தில் இருந்தது. முன்னோக்கிப் பார்க்கையில், 2025 அல்லது அதைவிட நீண்டகாலமான 2030க்கான துல்லியமான டோஜ்காயின் விலைக்கணிப்பைச் செய்வது ஆய்வாளர்களுக்கு சிரமமானதாக இருக்கும்.

எந்த டோஜ்காயின் விலைக் கணிப்பையும் சந்தேகத்தோடே அணுகுங்கள் – எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியை முதலில் செய்யுங்கள் மற்றும் சமீபத்திய மேம்பாடுகள் குறித்த செய்திகளைக் கணக்கில் கொள்ளுங்கள். 

டோஜ்காயினை எப்படி வாங்குவது

Currency.com உள்ளிட்ட பெரும்பாலான கிரிப்டோ சந்தைகளில் DOGE கிடைக்கிறது. எது சிறந்த விலையை வழங்குகிறது என்று நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் விலை இறங்கவும் ஏறவும் கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image