டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்பு: டாகிலான் மார்ஸ் (ELON) என்றால் என்ன?

By Currency.com Research Team

டாகிலான் மார்ஸ் கேலிச்சித்திர நாணயம் முந்தைய உயரங்களுக்குத் திரும்புமா? அது முதலில் ஒரு குணாதிசயத்தைக் கண்டடைய வேண்டும்

டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்பு: டாகிலான் மார்ஸ் (ELON) என்றால் என்ன?                                 
முன்னணி நாய் நாணயங்களில் ஒன்றாக டாகிலான் மார்ஸ் ஆகுமா? – புகழ்: dogelonmars.com
                                

Nội dung

டாகிலான் மார்ஸ் என்பது பல கேலிச்சித்திர நாணயங்களுள் ஒன்று. 2021 துவக்கத்தில் கணிசமான காளையோட்டத்தை DOGE அனுபவித்தபோது இது சந்தைக்கு வந்தது. சரி, டாகிலான் மார்ஸ் (ELON) என்றால் என்ன? டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்பு என்ன சொல்கிறது? பார்க்கலாம் வாருங்கள்.  

டாகிலான் மார்ஸ் விளக்கம் 

விளையாட்டாகத் தொடங்கிய கிரிப்டோவான டோஜ்காயின், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே முக்கிய ஒன்றாக மாறிய வெற்றிக்குப்பின் ஷிபா ஈனு நாய் வளர்ப்பைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்ட மீம்காயின்களில், அவை மிகக் குறைவான பயன்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும் அதில் ஒரு வளர்ச்சி இருந்தது. SHIB, FLOKI போன்ற டோக்கன்களை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றுக்கென சொந்தமாகப் பின் தொடர்வோர் உள்ளனர். ஆனால் அவற்றுக்கு மட்டுமல்ல. டெஸ்லா நிறுவனரும் DOGE ஆராதகருமான எலான் மஸ்கைத் திருப்தி படுத்தும்படி ஏற்படுத்தப்பட்ட டாகிலான் மார்ஸ் அத்தகைய நாணயங்களில் ஒன்று.

டாகிலான் மார்ஸின் கவலைதரும் ஓர் அம்சம், இதற்கென வெள்ளையறிக்கை இல்லை. இது வழக்கத்துக்கு மாறானது. உண்மையில் தகுதியான முதலீட்டாளர்கள் இதை ஓர் அபாய அறிகுறியாகப் பார்க்க வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டாக ELON சந்தைப் புழக்கத்தில் இருக்கிறது. அதாவது இதை உருவாக்கியவர்கள் எப்போது வேண்டுமானாலும் பின் வாங்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும். இப்போதும் இந்த நாணயம் என்ன செய்கிறது, எதற்குப் பயன்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ விளக்கம் இன்மையைப் பார்க்கையில் குழப்பமாக உள்ளது. டாகிலான் மார்ஸையோ அல்லது அதற்குப் பின்னால் உள்ளவர்களையோ நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி இல்லை.  

அத்துடன் ELON தனக்கென ஒரு பாதையையும் வகுத்துக் கொள்ளவில்லை. இந்த டோக்கனும் அதன் பின்னுள்ளோரும் அடைய விரும்பும் மேம்பாடுகளைக் காட்டக்கூடிய அறிகுறிகள் எதுவும் பொதுவில் இல்லை. மாறாக, டாகிலான் மார்ஸ் இணையதளத்துக்கு வருகை தருவோர் பிரபஞ்சத்தில் தனது பாதையைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட நாயின் சாகசத்தை விளக்கும் இணைய காமிக்ஸ் தொடரை மட்டுமே பார்க்கலாம்.

உண்மையில் தற்போதைக்கு அது வளரும் என்ற நம்பிக்கையில் வாங்கி, விற்று, டோக்கனைப் பரிமாறிக்கொண்டு உங்கள் வாலெட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர ELON-க்கு சொல்லிக்கொள்ளும்படி பயன்பாடுகள் இல்லை. இதேபோல சில்லறைப் பயன்பாடும் ஸ்டேக்கிங் திறனும் கொண்ட பிற டாகிகாயின்களோடு ஒப்பிடுகையில், டாகிலான் மார்ஸ் அந்தளவு நடைமுறைக்கான கிரிப்டோகரன்சி இல்லை. ஒரு கட்டத்தில் சில பயன்பாடு வரக்கூடும் என்று ஒருவர் நம்பலாம். அப்படி ஒன்று நடந்தால், ELON விலையில் மட்டுமல்லாது டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்பிலும் அதன் தாக்கம் இருக்கும்.

இந்த டோக்கன் எதேரியம் பிளாக்செயினை அடிப்படையாகக் கொண்டது. இதில் நிறுவனர்கள் பட்டியலிடப்படவில்லை. இது முழுக்கவே வழக்கத்தில் இல்லாதது என்று சொல்ல முடியாவிட்டாலும், இதுவும் டோக்கன் யாரிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடத்தில் கவலையை ஏற்படுத்தக்கூடும். ELON தொடங்கப்பட்டபோது, அதன் மொத்த வழங்கலில் பாதியான ஐநூறு இலட்சம் கோடி நாணயங்கள் எதேரியம் நிறுவனர் விடாலிக் புடெரினுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அவர் அந்த டோக்கன்களை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்தார். எஞ்சிய நாணயங்கள் பணப்புழக்க தொகுதிக்குச் சென்றது.

டாகிலான் மார்ஸ் விலை வரலாறு

டாகிலான் மார்ஸ் விலை வரலாறு எதிர்கால முடிவுகளைச் சுட்டிக்காட்டும் ஒன்றல்ல. ஆனால் இந்த நாணயம் என்ன செய்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதால் டாகிலான் மார்ஸின் விலைக் கணிப்புக்கான சில கள நிலவரங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். 

2021 ஏப்ரலில் கிரிப்டோகரன்சிகளும் குறிப்பாக DOGE நாணயமும் காளையோட்டத்தில் இருந்தபோது ELON முதன்முதலாக திறந்த சந்தைக்கு வந்தது. ஏப்ரல் 23 முடிவில் $0.00000005 விலையில் வர்த்தகமானது. பின்னர் மெதுவாக மேலேறத் தொடங்கியது. அதிசயமாக மே 8ம் தேதி சனிக்கிழமை இரவு நேரலையில் எலான் மஸ்க் தோன்றி டாகிகாயினில் “அசைவு” இருக்குமென்று சொன்னதும் அது டாகிலான் மார்ஸை எதிர்மறையாகப் பாதிக்கவில்லை. மாறாக அந்த சமயத்தில் உச்சவிலையான $0.00000232-ஐ மே 11ல் தொட்டது. பின்னர் மே 19ல் மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினத்தின்போது நாணயம் திரும்பவும் கீழிறங்கியது. கோடைகாலத்தின் பெரும்பகுதியை மிகக் கீழான நிலையில் வர்த்தகமாகி கழித்தது. ஒரேயொரு விதிவிலக்கைத் தாண்டி அந்த காலகட்டத்தில் $0.00000005க்கும் $0.00000006க்கும் இடையில் வர்த்தகமானது. ஜூலை 31ல் $0.00000005 என்ற விலையில் தொடங்கி ராக்கெட் வேகத்தில் 65,000%க்கும் மேல் மேலேறி அதுவரை இல்லாத உச்ச விலையான $0.00003263ஐத் தொட்டு பின் 99%க்கும் அதிகமாகக் கீழ் இறங்கி $0.00000011 விலையில் முடிந்தது. மறுநாளும் இதே கதைதான். இன்ட்ராடே வர்த்தகத்தில் 20,000%க்கும் அதிகம் ஏறி உச்சவிலையாக $0.00002422ஐத் தொட்டு கடைசியில் அந்த மதிப்பை அப்படியே இழந்து முந்தைய நாளிறுதி விலையான $0.00000011-ல் முடிந்தது.

டாகிலான் மார்ஸ் விலை வரலாறு
டாகிலான் மார்ஸ் விலை வரலாறு – புகழ்: Currency.com

அடுத்த இரு மாதங்களின் பெரும்பகுதியை கோடைகாலத்தில் இருந்த அதே விலையில் ELON கழித்தது. அக்டோபர் தொடக்கத்தில், அது $0.00000005201 விலையில் வர்த்தகமானது. மாத இறுதியை 4,000%க்கும் அதிகம் மேலேறி $0.000002279 ஆக முடித்தது. பின்னர் மெதுவாகச் சரியத் தொடங்கி நவம்பரில் $0.00000164 விலையில் முடிந்தது. டிசம்பர் மாதம் பொதுவாக கிரிப்டோகரன்சிகளுக்கு மோசமானதாக அமைந்தது. ஆனால் படுமோசமான நிலைமையிலிருந்து ELON தன்னைக் காத்துக் கொண்டு ஆண்டு இறுதியில் $0.000001566 ஆக முடிந்தது. இது நவம்பர் மாத இறுதி விலையைக் காட்டிலும் குறைவுதான். ஆனால் சமீபத்திய விலைகளுக்கு அருகிலும் கோடைகாலத்தின் பெரும்பகுதியில் இருந்த விலை வரம்பைக் காட்டிலும் கணிசமான அளவு அதிகமாகவும் இருந்தது. 2022 ஜனவர் மேடு பள்ளங்கள் நிறைந்ததிருந்தது. மாத இறுதியில் $0.0000008736 விலையில் முடிந்தது. பிப்ரவரி முதல் பாதியில் பெயரளவிலான விலை ஏற்றத்தை கண்டு, பிப்ரவரி 15ல் விலை $0.00000099-ல் நின்றது. இந்த நேரத்தில் ELON-ன் ஆயிரம் இலட்சம் கோடி மொத்த வழங்கலில் 553.9 டிரில்லியன் புழக்கத்தில் இருந்தது. சந்தை மூலதனம் $548.7 மில்லியன். இந்த அளவுப்படி 121வது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இது உள்ளது.

டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்பு

டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்புகளைப் பார்க்கும்முன் நீண்டகால கிரிப்டோ விலைக் கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை; அவை பெரும்பாலும் சூத்திரங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன; எந்த நேரத்திலும் அவை மாறக்கூடும் என்று அறிவுறுத்த வேண்டியுள்ளது.

Cryptopolitan தனது 2022க்கான டாகிலான் மார்ஸ் விலைக் கணிப்பாக இந்த ஆண்டில் அதன் சராசரி விலையான $0.00000163ஐத் தொடுமென்றும் 2023ல் $0.00000234ஐயும் 2024ல் $0.00000357ஐயும் தொடுமென்கிறது. 2025ல் டோக்கன் விலை $0.00000519 ஆகவும் 2026ல் $0.00000769 ஆகவும் இருக்கும் என்று இந்த தளம் கணித்துள்ளது. 2027ல் ஒரேயொரு தசம புள்ளியை இழந்து ELON $0.00001129க்கு வர்த்தகமாகுமென்று Cryptopolitan சொல்கிறது. 2028ல் $0.00001593; இந்த தசாப்தத்தை முடிப்பதற்கு முன் $0.00002383; 2030ல் $0.00003396 விலையைத் தொடுமென்றும் கணிக்கிறது.

CryptoNewsZ பரிந்துரைப்படி நாணயம் 2022 நடுவில் $0.000002276ஐத் தொட்டு ஆண்டு இறுதியில் $0.000002327ஐத் தொடுமென்று கணிக்கிறது. எனினும் 2022க்கான ஒட்டுமொத்த சராசரி விலை $0.00000195 ஆக இருக்கும். இந்தத் தளத்தின் 2023க்கான ELON விலைக் கணிப்பு $0.0000023. 2024ல் சராசரி விலை $0.00000267க்கும் $0.00000323க்கும் இடையில் இருக்கும் என்று கருதுகிறது. ஆண்டு இறுதியில் $0.00000289 ஆகவும் 2025 இறுதியில் $0.0000032 ஆகவும் 2026ல் குறைந்தது $0.0000035 விலையிலும் இருக்கும் என்கிறது. 2030ல் டோக்கனின் சராசரி விலை $0.0000413 ஆக இருக்குமென்று கணிக்கிறது.

PricePrediction.net வழங்கும் டாகிலான் மார்ஸ் விலைக்கணிப்பு: 2022ல் சராசரி விலை $0.00000147; 2023ல் இது $0.0000021; 2024ல் $0.00000302; 2025ல் $0.00000452; 2026ல் $0.00000626 ஆக இருக்குமென்று கணிக்கிறது. 2027ல் ELON $0.0000091 விலையைச் சுற்றி இருக்குமென்று கணிக்கிறது. 2028ல் ஒரு பூஜ்ஜியத்தை இது இழக்குமென்றும் $0.00001322 ஆக இருக்குமென்றும் கணிக்கிறது. 2029 முடிவில் $0.00001829-ஐத் தொடுமென்றும் 2030ல் சராசரி விலை $0.00002684 ஆக இருக்குமென்றும் 2031ல் $0.00003824ஐ எட்டுமென்றும் கணிக்கிறது.

இறுதியாக, DigitalCoinPrice உற்சாகமூட்டும் கணிப்புகளைத் தந்தாலும் மற்ற கணிப்புகளைக் காட்டிலும் எச்சரிக்கையாக உள்ளது. இது 2022ல் $0.00000139ஐச் சுற்றி வர்த்தகமாகுமென்றும், 2023ல் $0.00000151க்கும் 2024ல் $0.00000172க்கும் நகருமென்று கணிக்கிறது. இந்த ஏற்றல் 2025லும் தொடர்ந்து $0.00000221ஐ அடைந்து 2026ல் $0.00000188 ஆகச் சரியும் என்கிறது. 2027ல் காளையோட்டம் இருக்குமென்றும் விலை $0.00000269ஐ எட்டுமென்றும், 2028ல் $0.00000332வையும் 2029ல் $0.00000422வையும் எட்டுமென்று கணிக்கிறது. 2030ல் $0.00000476ஐயும், 2031ல் $0.00000529ஐயும் எட்டுமெனக் கணிக்கிறது.

இறுதியாக சில சிந்தனைகள்

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, டாகிலான் மார்ஸுக்கு முறையான வெள்ளையறிக்கையோ அந்த நானயம் என்ன செய்ய விரும்புகிறது என்பதற்கான திட்டமிடலோ இல்லை. சந்தையில் ஏகப்பட்ட டாகிகாயின்கள் உள்ளன. பெரும்பாலானவற்றில் நானயம் என்ன செய்ய விரும்புகிறது என்பதற்கான திட்டமும் வெள்ளையறிக்கையும் உள்ளன. ELON ஒரு மோசடி என்று சொல்வதற்காக இதைச் சொல்லவில்லை. ஆனால் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பட்டியலிடப்பட்டுள்ள நாணயத்துக்கு நிறுவனர்களும் இல்லை. ஆனாலும் இது வழக்கத்துக்கு மாறானது என்று சொல்லமுடியாது என்றாலும் வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையூட்டலையும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் தங்கள் கிரிப்டோ முதலீட்டை வேறொன்றில் இட நினைக்கலாம். 

மூன்றாவதாக, இந்த நாணயம் ஒரு சென்டில் மிகக்குறைவான பின்னத்திலேயே வர்த்தகமாகிறது. மீம்காயின்கள் என்று வரும்போது இது ஓரளவு அவற்றுக்கு இணையானது என்றாலும், மாபெரும் காளையோட்டத்தில் இது இறங்க முடியுமென்றாலும் அப்போதும் அதன் மதிப்பு ஒன்றும் அதிகமிருக்காது. இதனால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டக்கூடும்.

மோட்லே ஃபூல் நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் வில்லியம்ஸ், 2022ன் கொள்ளை நோயைப் போலத் தவிர்க்க வேண்டிய நான்கு நாணயங்களில் ஒன்றாக ELONஐயும் பட்டியலிட்டுள்ளார். எனினும் வில்லியம்ஸுக்கு டாகிகாயின்கள் மீது குறிப்பாக தரக்குறைவான அபிப்பிராயம் உள்ளதையும் சொல்ல வேண்டும். அப்படியே இருந்தாலும், டாகிலான் மார்ஸில் முதலீடு செய்யும் முன் மிகுந்த எச்சரிக்கையுடன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

2022 பிப்ரவரி 15ம் தேதிப்படி, மொத்த வழங்கலான ஆயிரம் இலட்சம் கோடியில்  553.9 டிரில்லியன் ELON நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.

முதலீடு செய்யத்தக்கவர்கள் சிலர் வெள்ளையறிக்கை இல்லாததையும், தெளிவான திட்ட வரைபடம் இல்லாததையும் அபாய அறிகுறிகளாகக் கருதக்கூடும். இந்த டோக்கனுக்கு சில கவர்ச்சியான உற்சாகமூட்டும் கணிப்புகள் உள்ளன. ஆனால் கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை. நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதுடன் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாமல் இருக்க வேண்டும்.

செல்லக்கூடும். இப்போது அது இருக்கும் விலைக்கும் சமீபத்தில் இருந்த விலைக்கும் நிச்சயம் ஓர் இடைவெளி இருக்கிறது. எனினும் எதிர்காலத்தில் ஒரு புள்ளியில் ELON அப்படியே இருக்குமென்றோ அல்லது நிலைகுலைவைச் சந்திக்குமென்றோ சொல்ல இயலாது. விலைகள் கீழே இறங்கவும் அதுபோல மேலே ஏறவும் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தக் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படிப் பதில் சொல்லும்முன், உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும். விலை எப்போதும் மேலே ஏறவும், கீழே இறங்கவும் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாமல் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image