Currency.com பற்றி
எங்கள் குறிக்கோள்
குழுவானது முதலீட்டை ஜனநாயகப்படுத்துவதற்கான குறிக்கோளுடன் இயங்கி வருகிறது, அதாவது இது சலுகைகள் கொண்ட முதல் தர நாடுகளின் கைப்பிடியில் இருந்த முதலீட்டு சக்தியை, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ய பணியாற்றி வருகிறது. வெற்றிகரமான முதலீட்டாளர்கள் சமூகத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் - இது மிகவும் பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்திற்கு வழிவகுக்கும்.
நிதியை ஜனநாயகப்படுத்துவதற்காக நாங்கள் Currency.com-ஐ நிறுவினோம்

Currency.com என்பது அதிகம் வளர்ச்சிப் பெற்ற கிரிப்டோ பிளாட்ஃபார்ம் ஆகும், இது வளர்ந்து வரும் டிஜிட்டல் சொத்துக்களுடன் அனைவரையும் இணைப்பதற்கு உதவுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதன் மூலம் மக்கள் கிரிப்டோக்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க உதவுகிறோம். மேலும் எங்களின் எளிமையான, பயன்படுத்துவதற்கு எளிதான, இணையம் மற்றும் கைபேசி அடிப்படையிலான அப்ளிகேஷன்கள் மூலம் பிரபலமான கிரிப்டோகரன்சிகளை வாங்கவும் விற்கவும் மற்றும் முதலீடு செய்யவும் உதவுகிறோம்.
பல்வேறு நாடுகளில் வகுக்கப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையின்படி Currency.com- ஆனது தன்னுடைய பல்வேறு தயாரிப்புகளை டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் வழங்குகிறது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்ய உதவும் வகையில், பிளாட்ஃபார்ம் ஆனது வலுவான இடர் மேலாண்மை கட்டுப்பாடுகள், வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் நிதி ரீதியான விஷயங்களை அறிந்துக் கொள்ள விரிவான உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டில், கிரிப்டோ பிளாட்ஃபார்ம் ஆனது அதன் வாடிக்கையாளர் தளத்தில் 374% வளர்ச்சியைப் பதிவு செய்ததின் மூலம் ஐரோப்பாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சிக்கான பரிமாற்ற பிளாட்ஃபார்ம்களில் ஒன்றாக இது அமைகிறது. 2021-ஆம் ஆண்டின் முதல் பாதியில், Currency.com-ல் கணக்கைத் தொடங்கிய புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 196% அதிகரித்தது. மேலும் 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து வர்த்த வால்யூம்கள் 85% அதிகரித்தன.

எங்களின் விருதுபெற்ற கைபேசி செயலி மூலம், நீங்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் வர்த்தகம் செய்யலாம்.







பாதுகாப்பு எங்கள் தலையாய அக்கறை

- இதில் முயற்சித்து பரிசோதிக்கப்பட்ட அளவிடக்கூடிய பொருத்த இயந்திரமும் அடங்கும்;
- வலுவான பணமோசடி எதிர்ப்பு (AML) மற்றும் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) அனுசரிப்பு;
- அங்கீகரிக்கப்படாத அணுகலிலிருந்து பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு;
- அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை சேவை நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தப்படும் தணிக்கைகள்.
நிறுவனர்
விக்டர் ப்ரோகோபென்யா தொடர் தொழில்நுட்பத்தின் தொழிலதிபர் மற்றும் லண்டனை மையமாகக் கொண்ட உலகளாவிய முதலீட்டு நிறுவனமான VP Capital-இன் நிறுவனர் ஆவார், இதன் மூலம் அவர் Currency.com நிறுவனத்தின் 100% பங்குகளை வைத்திருக்கிறார், மேலும் Capital.com என்ற நிதி தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருக்கிறார். விக்டர் ப்ரோகோபென்யா நவீன தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றார். தகுதி வாய்ந்த வழக்கறிஞராக இருப்பதுடன், விக்டர் ப்ரோகோபென்யா நிதித்துறையில் முதுகலைப் பட்டமும்,சுவிஸ் வணிகப் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டமும், இணைய சந்தைப்படுத்தலில் முதுகலைப் பட்டமும், கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
எங்கள் அணி










