எதேரியம் நேரலை விலையை கண்காணித்து, உங்கள் முதலீட்டை 100x பெருக்கி வர்த்தகம் செய்யுங்கள்

உங்கள் கணக்கைத் துவங்குங்கள்

விருது பெற்ற செயற்பாட்டுத்தளம்.
முழுமையாக விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டது.

எதேரியம் விலையை எது பாதிக்கிறது?

எதேரியமின் விலை பெரும்பாலும் DeFi தொழில்நுட்பம் அதிகம் வரவேற்கப்படுவதையும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ETH 2.0 வெளியீட்டையும் பொறுத்தது. பரவலாக்கப்பட்ட நிதித்துறையில் எதிர்பாராத வளர்ச்சி ETH விலையை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்தது. ஏனெனில் பெரும்பாலான DeFi திட்டங்கள் எதேரியம் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் எதேரியம் விலைக்கணிப்புகள் ETH 2.0 பிளாக்செயினின் அறிமுகத்தால் பாதிக்கப்படலாம். இது முதலீட்டாளர்களின் பார்வையில் எதேரியமின் மதிப்பு முன்மொழிவை அதிகரிக்கும்.

எதேரியம் விலையை எது பாதிக்கிறது?

எதேரியமின் விலை பெரும்பாலும் DeFi தொழில்நுட்பம் அதிகம் வரவேற்கப்படுவதையும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ETH 2.0 வெளியீட்டையும் பொறுத்தது. பரவலாக்கப்பட்ட நிதித்துறையில் எதிர்பாராத வளர்ச்சி ETH விலையை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்தது. ஏனெனில் பெரும்பாலான DeFi திட்டங்கள் எதேரியம் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் எதேரியம் விலைக்கணிப்புகள் ETH 2.0 பிளாக்செயினின் அறிமுகத்தால் பாதிக்கப்படலாம். இது முதலீட்டாளர்களின் பார்வையில் எதேரியமின் மதிப்பு முன்மொழிவை அதிகரிக்கும்.

மூலாதாரமான கிரிப்டோ பரிமாற்றம் நடக்கும் சந்தையில் எதேரியமில் முதலீடு செய்யுங்கள்

எப்படி என்பதை அறிக
உங்கள் கிரிப்டோ முதலீடுகளை மீண்டும் உருவாக்குங்கள். எதேரியம் உடன் 2000+ டோக்கனாக்கப்பட்ட பங்குகள், கமாடிட்டிகள், இன்டெக்ஸ்கள் மற்றும் கரன்சி இணைகளில் வர்த்தகம் செய்யுங்கள். 1:500 வரை முதலீட்டைப் பெருக்கி, இறுக்கமான பரவல்கள் மற்றும் 50மில்லி விநாடிக்குள் ஆர்டர் செயல்படுத்தல் ஆகியவற்றிலிருந்து பயன்பெறுங்கள்.
எதேரியம் பங்கை வர்த்தகம் செய்க
கடன் அல்லது பற்று அட்டை மூலம் எதேரியம் பங்கை உடனடியாக வாங்கவும். 0.03 ETH இல் தொடங்கி உங்கள் கிரிப்டோ பங்குகளை அதிகரிக்கவும். பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான கிரிப்டோ செயற்பாட்டுத்தளத்தில் எதேரியம் பங்கை வாங்கி, விற்று மற்றும் இருப்பில் வைத்துக் கொள்ளலாம்.
எதேரியம் வாங்குங்கள்

முக்கிய எதேரியம் விலை இயக்கிகள்

வழங்கல் மற்றும் தேவைக்கு இடையே உள்ள சமநிலை ETH வளர்ச்சியின் ஒரு முக்கியமான தீர்மானமாகும். ஈதர் விலையின் எதிர்காலம், அதனை டிஜிட்டல் சொத்தாகவும் மற்றொரு கட்டணம் முறையாகவும் பயன்படுத்துவதில் இருந்து உருவாகும். கிரிப்டோகரன்சிகளுக்கான தேவையை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்றாலும், பரவலாக்கப்பட்ட நிதித் துறையில்(DeFi) எதிர்பாராத வளர்ச்சி, ETH 2.0 மற்றும் நீடித்த கிரிப்டோ சந்தை ஏற்றத்தால், ஆல்ட்காயின் சந்தையை வழிநடத்த எதேரியம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஈதர் பிரபலமானதற்குக் காரணம் அதனை டிஜிட்டல் நாணயமாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், எதேரியம் வலைத்தொடர்பில் ஸ்கிரிப்ட்கள் மற்றும் ஒப்பந்தங்களை செயல்படுத்தத் தேவையான பிணைய சக்திக்கான கட்டணமாகவும் பயன்படுகிறது. பல பரவலாக்கப்பட்ட செயலிகளுக்கு(dApps) பயன்படுத்தப்படுவதால், எதேரியம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. பிட்காயினுக்குப் பிறகு இரண்டாவது பெரிய பிளாக்செயின் செயற்பாட்டுத்தளமான எதேரியம் நீண்ட காலத்திற்கு மேலும் வளர்ச்சிக்கான வலுவான ஆற்றலுடன் ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது.

உலகம் தொடர்ந்து டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு மாறுகிறது. எதேரியம் பல்வேறு இடங்களில் பொருந்தக்கூடிய தன்மையின் காரணமாக வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புகளைப் பெறுகிறது. ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் dApps ஐ எளிதாக்குவதே ஈதரின் முக்கிய நோக்கம் என்பதால், பல வல்லுநர்கள் மிகப்பெரிய ETH திறனை நம்புகிறார்கள். பரவலாக்கப்பட்ட நிதிக்கான தேவை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி தீவிர உச்சத்தை எட்டும் என்ற வலுவான நம்பிக்கையை வழங்குகிறது.

எதேரியம் சுருக்கம்

எதேரியம் என்பது ஒரு திறந்தவள பிளாக்செயின் அடிப்படையிலான தொழில்நுட்பமாகும். இது பயனர்களுக்கு கிரிப்டோகரன்சியை சிறிய கட்டணத்தில் அனுப்ப அனுமதிக்கிறது. இது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பரவலாக்கப்பட்ட செயலிகளை இயக்குகிறது. எதேரியம் ஒரு நிரல்படுத்தக்கூடிய பிளாக்செயின் என்றும் அறியப்படுகிறது. இதனை கட்டணம் செலுத்துவதற்கு பயன்படுத்துவதைத் தாண்டியும் மேலும் அதிகமானவற்றில் பயன்படுத்தலாம்.

ஈதர் (ETH) என்பது ஒரு சொந்த கிரிப்டோகரன்சி ஆகும். இது பிளாக்செயினில் புதிய தொகுதிகளைச் சேர்ப்பதற்கான வெகுமதியாக மைனர்கள் உருவாக்கியது. எதேரியம் 1,900 டோக்கன்களுக்கான செயற்பாட்டுத்தளமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் முதல் 100 கிரிப்டோகரன்சிகளில் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 47 கிரிப்டோகரன்ஸிகள் இத்தளத்தில் உள்ளன.

விடாலிக் புட்டெரின் முதன்முதலில் எதேரியம்-ஐ தனது வெள்ளையறிக்கையில் 2013ஆம் ஆண்டு பரவலாக்கப்பட்ட செயலிகளை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தினார். செயலிகளுக்கு ஸ்கிரிப்டிங் மொழியின் அவசியம் இருப்பதாக புட்டரின் நம்பி புதிய செயற்பாட்டுத்தளத்தை உருவாக்க முன்வந்தார்.

2014-ல், புட்டரின் மற்றும் பிற இணை நிறுவனர்கள் ஒரு கிரவுட்சோர்சிங் பிரச்சாரத்தைத் தொடங்கினர். அங்கு அவர்கள் தங்கள் திட்டத்தை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த ஈதர்களை விற்றனர். ஃபிரான்டியர் என அறியப்படும் எதேரியமின் முதல் நேரடி வெளியீடு 2015ல் நடந்தது. அதன் பின்னர் இத்தளம் தொடர்ந்து வளர்ந்து வந்து, எல்லையற்ற திறனை வெளிப்படுத்துகிறது.

மற்ற கிரிப்டோகரன்சிகளைப் போலவே, ஈதர்களையும் வெவ்வேறு கிரிப்டோ வாலெட்களில் சேமிக்க முடியும். நீங்கள் மூன்றாம் தரப்பு வாலெட் அல்லது சந்தை வழங்கும் வாலெட்டையும் தேர்வு செய்யலாம். இது எங்கள் நிதிகளை எளிதாக அணுகவும் மற்றும் வர்த்தகச் செயல்முறைகளை விரிவுபடுத்தவும் உதவுகிறது என்றாலும், பல்வேறு சந்தைகள் சில நேரங்களில் ஊடுருவல் நடப்பதால் இது ஆபத்தானது.

எதேரியம் செயற்பாட்டுத்தளமானது தனிப்பட்ட வாலெட்டை உருவாக்க உங்களுக்கு உதவுகிறது. அங்கு உங்களுக்கு மட்டுமே தனிப்பட்ட குறிச்சொல்லும் உங்கள் நிதியின் மீது முழுக் கட்டுப்பாடும் இருக்கும். உங்கள் ஈதர் நாணயங்களை பாதுகாப்பாக சேமிக்க ஹாட் அல்லது கோல்ட் வாலெட்டை அல்லது இரண்டையும் தேர்வு செய்யலாம்.

எதேரியமில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்: ETH பயன்பாட்டு வழக்குகள்

ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் dApps

எதேரியம் வலைத்தொடர்பில் தோராயமாக 1,900 dApps உள்ளன. அதன் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. வங்கித் துறையில் ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவது, நிதி பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவதுடன் பல நிதி நடைமுறைகளையும் எளிதாக்கும்.

ஊகச் சொத்து

எதேரியம் விலை எப்போதும் நிலையற்றதாகவே இருந்து வருகிறது. வர்த்தகர்கள் மத்தியில் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான கிரிப்டோகரன்சி, ETH எப்போதும் அதன் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து இலாபத்திற்கான கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்குகிறது.

மதிப்பு சேமிப்பகம்

2020 எதேரியத்துக்கான ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் எதேரியத்திற்கு ஐந்து வயதாகிவிட்டதால், ஈதர் ஆதிக்கம் செலுத்தும் ஆல்ட்காயின் ஆனது. உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் எதேரியம் விரைவில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இது ஈதரை ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு இலாபகரமான முதலீடாக மாற்றுகிறது.

எதேரியம் விலை விளக்கப்படம்: வரலாற்று தகவல்

2015-ல் அதன் தொடக்கத்திலிருந்தே எதேரியம் குறிப்பிடத்தக்க விலை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதன் இருப்பு ஐந்து ஆண்டுகளில், எதேரியம் செயற்பாட்டுத்தளம் மகத்தான முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது சுமார் 2,000 dApps இயங்குகின்றன. இன்று, அதன் சொந்த கிரிப்டோ ஈதரின் சந்தை மூலதனம் $39bn ஆகும்.

ஆண்டு
எதேரியம் செயல்திறன்
2013/2014
எதேரியமைப் பற்றிய சிந்தனை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வளர்ச்சிக்காக $18m திரட்டப்பட்டது
2015
எதேரியம் வலைத்தொடர்பு ஜூலை 30, 2015 அன்று தொடங்கப்பட்டது. இது ஃபிரான்டியர் என்று அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 7, 2015 அன்று Kraken சந்தையில் கிரிப்டோ சேர்க்கப்பட்டபோது ஈதரின் முதல் பதிவு செய்யப்பட்ட விலை $2.77 ஆகும்.
2016
நெறிமுறையின் மிகவும் நிலையான பதிப்பு - ஹோம்ஸ்டெட், அறிமுகப்படுத்தப்பட்ட செய்தியில் ஈதர் விலை வேகமாக வளர்ந்தது. இதன் விளைவாக, எதேரியம் முதலில் ஒரு நாணயத்திற்கு $15 என்ற தீவிர இலக்கை எட்டியது. DAO திட்டத்தின் (வரவிருக்கும் ICO சகாப்தத்தின் முன்னோடி) வெற்றியில் இந்த கிரிப்டோ $21க்கு உயர்ந்தது.
சர்ச்சைக்குரிய DAO-ன் இன்டெக்ஸ் தாக்குதலுக்குப் பிறகு, எதேரியம் இரண்டாகப் பிரிந்தது: எதேரியம் கிளாசிக் மற்றும் எதேரியம்.
2017
முதலீட்டாளர்கள் மற்றும் dApps டெவலபர்கள் மத்தியில் கிரிப்டோவின் புகழ் அதிகரித்ததால் ஈதர் ஒரு நாணயத்திற்கு $95 ஆக உயர்ந்தது. ICO பற்றிய எதிர்பார்ப்பு ETH க்கான அதிகரித்த தேவைக்கு பங்களித்தது. இறுதியில், விலை $400 ஆக உயர்ந்தது.
பைசான்டியம் வலைத்தொடர்பு மேம்படுத்தப்பட்ட பிறகு ETH விலை கிட்டத்தட்ட $800 ஆக உயர்ந்தது.
2018
எதேரியத்துக்கான மிகவும் வெற்றிகரமான காலம். ETH இதுவரை காணாத அதிக விலை $1,400ஐ எட்டியது. ICO பற்றிய எதிர்பார்ப்பு குறைந்தவுடன், கிரிப்டோவின் விலை $85 ஆகக் குறைந்தது.
2019
எதேரியம் வலைத்தொடர்புக்குள் DeFi மிகப்பெரிய தொழில்துறையாக உருவெடுத்தது. MakerDAO ஆனது DeFi நெறிமுறைகளில் ஒன்றாகும். 1.86 மில்லியன் ETH இன் குறிப்பிடத்தக்க நிதியுதவி கொண்டது.
பிப்ரவரியில், இந்த வலைத்தொடர்பு கான்ஸ்டான்டினோபிள் எனப்படும் ஹார்ட் ஃபோர்க் மேம்பாடு செய்யப்பட்டது. இஸ்தான்புல் எனப்படும் எட்டாவது மேம்படுத்தல் செயல்படுத்தப்பட்டது.
2020
எதேரியம் 2.0 மேம்படுத்தல் அதிகபடியான வேலைப்பளுவைக் கையாளுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் செயற்பாட்டுத்தளம் மலிவானதாகவும், வேகமாகவும், நெகிழ்வானதாகவும் மாறும் என்று நம்பப்படுகிறது.
DeFi துறையில் செயல்பாடு அதிகரித்து வருகிறது. DeFi செயலிகள் வழியாக மாற்றப்பட்ட மதிப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $4.9bn ஐ எட்டியது.
2021
ஈதர் இதுவரை காணாத அதிக விலை $4,165 ஐ எட்டியது. எதேரியத்துக்கான மொத்த மைனிங் வருவாய் பிப்ரவரியில் $1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அதே மாதத்தில் நாணயம் மொத்தமாக ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளை எட்டியது. DeFiயின் இடம் தொடர்ந்து முதிர்ச்சியடைகிறது. மேலும் NFT-களுக்கு அதிகத் தேவை உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை எதேரியம் பிளாக்செயினின் பகுதியாகும்.

எதேரியமில் முதலீடு செய்யுங்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்மார்ட் ஒப்பந்தங்களுக்கான பிளாக்செயின் செயற்பாட்டுத்தளத்தின் கருத்தை எதேரியம் புரட்சிகரமாக்கியது. இரு தரப்பினரிடையே ஒரு ஒப்பந்தத்தைத் தானாகச் செயல்படுத்தும் திட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு இடையே நம்பகமான இடைத்தரகர்களின் தேவையை அகற்ற உருவாக்கப்பட்டது. இவை பரிவர்த்தனைகளின் செலவைக் குறைப்பதாகவும், பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாகவும் உறுதியளிக்கிறது.

எதேரியம் இணை நிறுவனர் கவின் உட் கருத்துப்படி, எதேரியம் பிளாக்செயின் எந்தவொரு நிரலையும் மோசடிக்கு வாய்ப்பில்லாதவாறு செய்து மற்றும் உலகளாவிய பொது முனைகளின் வலைத்தொடர்பில் இயங்குவதன் மூலம் மிகவும் வலுவானதாக மாற்றும் நோக்கத்துடன் "ஒரு கணினி அல்லது முழு கிரகமாக" வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் தவிர, எதேரியம் வலைத்தொடர்பு மற்ற கிரிப்டோகரன்சிகளை அதன் ERC-20 இணக்கத் தரத்தின் மூலம் ஹோஸ்ட் செய்யும் திறன் கொண்டது. 2020-ல் USDT, BNB மற்றும் LINK உட்பட 280,000 ETC-20-இணக்கமான டோக்கன்கள் தொடங்கப்பட்டுள்ளன.

2020 கோடையின் முடிவில், கிட்டத்தட்ட 112 மில்லியன் ஈதர்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் 72 மில்லியன் ஜெனிசிஸ் பிளாக்கில் வெளியிடப்பட்டது (எதேரியத்தின் முதல் பிளாக்).

ஆரம்பகட்ட 72 மில்லியனில், 60 மில்லியன் இணையத்தில் கூட்டு விற்பனை மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது திட்டத்திற்கு ஊக்கமளித்தது. மேலும் 12 மில்லியன் திட்டத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டது.

மற்ற ஈதர்கள் மைனர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்டன. 2015-ல், ஒரு பிளாக்கிற்கு 5 ETH வெகுமதியாக இருந்தது. பின்னர் அது 2017-ல் 3 ETH ஆகவும், 2019-ல் 2 ETH ஆகவும் குறைந்தது. எதேரியம் பிளாக்கை எடுக்க 13-15 வினாடிகள் ஆகும். பிட்காயின் போலல்லாமல், எதேரியமின் மொத்த விநியோகம் மட்டுப்படுத்தப்படவில்லை.

அதன் வரலாறு முழுவதும் சில கடுமையான விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், எதேரியம் அதன் வெற்றிக்கான பாதையில் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "நான் எதேரியமில் முதலீடு செய்ய வேண்டுமா" என்பதில் திட்டவட்டமான பதில் இல்லை என்றாலும், நீங்கள் கிரிப்டோவின் செயல்திறனை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம். நிபுணரின் கருத்து மற்றும் சமீபத்திய எதேரியம் விலை கணிப்புகளைப் பின்பற்றலாம்.

எடுத்துக்காட்டாக, மிகவும் பிரபலமான கிரிப்டோ பிளாக்கர்களில் ஒருவரான தி கிரிப்டோ டாக், 2020ஆம் ஆண்டில் BTC ஐ விட எதேரியமின் விலை அதிகரிக்கும் என்ற கருத்தைப் பகிர்ந்துள்ளார். பல ஆய்வாளர்கள் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். நீண்ட காலக் கண்ணோட்டத்தில் ஈதரின் விலை உயரும் என்று கணிக்கின்றனர்.

2020-2025க்கான வாலெட்இன்வெஸ்டரின் ETH விலைக் கணிப்புப்படி, ஈதரின் விலை 2021ல் $415 ஆக உயரும். மேலும் 2025ல் $674 ஆக உயரும். காயின்சுவிட்ச் இன்னும் கூடுதலான கணிப்புகளை வழங்குகிறது. எதேரியம் 2022ல் $2,4282 என்ற அளவை எட்டும் என்றும் 2025ல் $3,844 என்ற அளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதேரியம் இதுவரை மிகவும் வெற்றிகரமான ஆல்ட்காயினாக மாறியுள்ளது. இது பிட்காயின் போல் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், நீங்கள் eBay அல்லது Amazon-ல் ஈதர்களைச் செலவிட முடியாது என்றாலும் (இன்னும்) எதேரியமை ஏற்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உள்ளன.

அவை பின்வருமாறு: டாப்ஜெட்ஸ், தனியார் ஜெட் புக்கிங் செயற்பாட்டுத்தளம் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த விமான போக்குவரத்து நிறுவனம்; ஓவர்ஸ்டாக், பிரபலமான ஆன்லைன் வீட்டு மேம்பாட்டுக் கடை; Snel.com, VPS ஹோஸ்டிங் சேவையை வழங்குகிறது; கிரிப்டோபெட் - செல்லப்பிராணிகளுக்குத் தேவையான பொருட்கள் கொண்ட கடை; மற்றும் 1000 எக்கோபார்ம்ஸ், புதிய பண்ணை பொருட்களை விற்கும் கடை.

பட்டியல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.