எத்தனை காலா (Gala) நாணயங்கள் உள்ளன?
காலா நாணயம் வைத்திருப்பவர்கள் விளையாடுவதன் மூலமும் NFTகளை சொந்தமாகக் கொண்டிருப்பதன் மூலமும் பல்வேறு வெகுமதிகளைப் பெற முடியும்

உள்ளடக்கம்
காலா செயற்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் முக்கியக் கேள்வி: எத்தனை காலா நாணயங்கள் உள்ளன?
சம்பாதிக்க-விளையாடு கிரிப்டோ விளையாட்டில் நான்காமிடத்தில் காலா உள்ளது. இதன் சந்தை மூலதனம் $2.56 பில்லியன். பிட்காயின் போன்ற பிற முன்னணி கிரிப்டோவைக் காட்டிலும் சற்று மாறுபட்ட வகையில் இது செயல்படுகிறது.
காலா எதேரியத்திலும் பினான்ஸ் ஸ்மார்ட் செயின் வலைத்தொடர்பிலும் இயங்குகிறது. அதாவது தொழில்நுட்ப ரீதியாக GALA என்பது ஒரு டோக்கன் தான். நாணயமல்ல. ஏனெனில், இது தனது சொந்த பிளாக்செயினில் உருவாக்கப்படவில்லை.
பிட்காயினைப் போலவே, காலாவுக்கும் அதிகபட்ச வழங்கல் உள்ளது.
எத்தனை காலா நாணயங்கள் உள்ளன?
GALA நாணயங்களின் அதிகபட்ச வழங்கள் 35.24 பில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் 6.98 பில்லியன் உள்ளது.
சுழற்சியில் தற்போது உள்ள நாணயங்களைத் தெரிந்துகொண்டபின் எழும் தர்க்கப்பூர்வமான கேள்வி: எத்தனை காலா நாணயங்கள் எஞ்சியுள்ளன?
கிட்டத்தட்ட 28 பில்லியன் நாணயங்கள் இன்னும் மைன் செய்யப்படவுள்ளன.
பிட்காயினைப் போலவே, பணவாட்ட மாதிரியும் இதிலுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 21ம் தேதி, GALA பாதியாக்கம் நடைபெறும். அதாவது தினசரி வெகுமதி விநியோகங்கள் ஒவ்வோர் ஆண்டும் பாதியாக்கப்படும்.
தற்போது, தினசரி GALA நாணய விநியோகம் 17,123,286 ஆக உள்ளது. 2022 ஜூலை 21ல் மொத்த தினசரி விநியோகம் 8,561,643 ஆகக் குறையும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
காலா நாணயத்தின் அதிகபட்ச வழங்கல் 35.24 பில்லியன் மட்டுமே. வேறு வகையில் சொல்வதானால், 35.24 பில்லியனுக்குமேல் உலகில் ஒரு காலா நாணயமும் இருக்காது.
இன்னும் 28 மில்லியன் காலா நாணயங்கள் உறுதிப்படுத்தப்பட (மைனின் செய்ய) வேண்டியுள்ளது.