எத்தனை PI நாணயங்கள் உள்ளன? இதற்குப் பதிலளிப்பது கடினம்
PI நாணயம் மைனிங் செய்யப்படுவது என்று நாமறிவோம். ஆனால் எத்தனை PI நாணயங்கள் உள்ளன?

உள்ளடக்கம்
- புழக்கத்திலுள்ள வழங்கல்
- தகவலில்லாச் சமன்பாடுகள்
- மற்ற கிரிப்டோக்களுடன் PI எவ்வாறு ஒப்பிடப்படுகிறது
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Pi வலைத்தொடர்பும் PI நாணயமும் அனைவருக்கும் கிரிப்டோ மைனிங் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் ஒரு கைபேசிச் செயலியை கொண்டு ஆர்வத்தை ஈர்த்துள்ளன. எத்தனை PI நாணயங்கள் தான் உண்மையில் உள்ளன? இது ஆச்சரியப்படும் வகையில் பதிலளிக்கச் சிரமமான கேள்வி.
புழக்கத்திலுள்ள வழங்கல்
இப்போதைக்கு, அதாவது 2022 பிப்ரவரி தொடக்கத்தில், PI நாணயங்கள் எதுவும் தற்போது புழக்கத்தில் இல்லை. அதாவது எதையும் வாங்கவோ, விற்கவோ அல்லது வெளிச்சந்தையில் வர்த்தகம் செய்யவோ முடியாது. இதற்குக் காரணம் தற்போது சந்தைகளில் நாணயம் கிடைக்கவில்லை. ஆரம்பகட்ட நாணய வழங்கலை (ICO) மேற்கொள்ளும் திட்டமும் இல்லை.
அதற்குப் பதிலாக, Pi வலைத்தொடர்பு நாணயத்தைப் பெற விரும்பும் ஒருவர் செயலியில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு அவர்கள் வலைத்தொடர்பில் ஏற்கெனவே செயலூக்கத்தில் உள்ள ஒருவரது பரிந்துரை தேவை. இதன் அர்த்தம் உங்களுக்கு PI மைனிங்கில் ஈடுபடும் ஒருவரை ஏற்கெனவே தெரிந்திருக்காவிட்டால், உங்களால் இந்த கிரிப்டோவைப் பெறமுடியாது. ஏனெனில், எந்த PI நாணயமும் Pi வலைத்தொடர்புச் செயலிக்கு வெளியில் வரவில்லை. எனவே இந்த டோக்கனுக்கு விலையும் இல்லை. PI மதிப்பு என்ன என்றோ அல்லது விலை என்னவாக இருக்கக்கூடுமென்ற எவ்விதப் புரிதலோ நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.
புழக்கத்தில் இல்லாத வழங்கல்
PI நாணயப் புழக்கம் தற்போது பூஜ்ஜியம் தான். அதனால் PI நாணயங்களே இல்லை என்று அர்த்தமில்லை. அது PI செயலியில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான நாணயங்கள் நிலையான வழங்கலுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்டிருக்கும்போது, PI இதை வேறுவிதமாகச் செய்கிறது. வலைத்தொடர்பு ஒவ்வொரு பயனருக்கும் நிலையான எண்ணிக்கையில் PI நாணயங்களை ஒதுக்கியுள்ளது. எனவே மக்கள் நாணயங்களுக்காக போட்டி போடாமல், ஒவ்வொரு பயனருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாணயங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இருந்தாலும், எல்லோரிடமும் மைனிங் செய்வதற்கு ஒரேயளவில் நாணயங்கள் உள்ளதாகச் சொல்ல முடியாது. காலப்போக்கில் வலைத்தொடர்பு மக்கள் வைத்திருக்கக்கூடிய PI எண்ணிக்கையைப் பாதியாக்கம் செய்துள்ளது. Pi வலைத்தொடர்பு முதலில் தொடங்கப்பட்டபோது, அடிப்படை மைனிங் வீதம் ஒரு மணி நேரத்துக்கு 1.6 என்று இருந்தது. 100,000 பயனர்கள் பதிவுசெய்ததும் இது ஒரு மணி நேரத்துக்கு 0.8 PI ஆகக் குறைந்தது. செயலியை ஒரு மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்கியதும் இது திரும்பவும் பாதியாகி ஒருமணி நேரத்துக்கு 0.4 PI என்று ஆனது. சமீபத்தில் பயனர்கள் எண்ணிக்கை 10 மில்லியனைத் தொட்டபோது ஒரு மணி நேரத்துக்கு 0.2 PI என்று குறைந்தது. செயலியில் பில்லியன் பேர் வந்ததும், எல்லா நாணயங்களும் மைனிங் செய்யப்பட்டதாகக் கணக்கிடப்பட்டு (குறைந்தது கருத்தாக்க அளவில்) இந்த வீதம் பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும்.
இதில் நமக்குள்ள பிரச்சினை, உண்மையில் எத்தனை நாணயங்கள் மைனிங் செய்யப்பட்டுள்ளன என்பது நமக்குத் தெரியாது. காரணம் உலகில் மொத்தம் எத்தனை பயனர்கள் உள்ளனர் என்பது நமக்குத் தெரியாது. இந்த நாணயம் வெளியில் வர்த்தகமாகி இருந்தால், இந்தளவு பிரச்சினை இருக்காது. குறைந்தபட்சம் அப்போது நம்மால் வெளிச்சந்தையில் எத்தனை நாணயங்கள் கிடைக்கின்றன என்று பார்க்க முடியும். அதிலிருந்து நம்மால் கணக்கிட முடியும். இது முழுக்கவே அனுமானம் சார்ந்தது. எனினும், நாம் ஏற்கெனவே கூறியபடி, இதை எழுதிக் கொண்டிருந்த நேரம் வரை PI எந்தச் சந்தையிலும் கிடைக்கவில்லை.
நமக்குத் தெரிய வருவதெல்லாம், 2021 நவம்பர் 29ல் Pi வலைத்தொடர்பில் செயலூக்கப் பயனர்கள் 29 மில்லியன் இருந்தனர் என்றும் அத்தகு செயலூக்கப் பயனர்களால் மைனிங் செய்ய முடியும் என்பது மட்டும்தான். மேலும், பயனர்களைப் பரிந்துரைப்போருக்கு தங்களது மைனிங் ஆற்றலில் 25% கூடுதல் சக்தி கிடைக்கும் என்றும் நமக்குத் தெரியும். இதனால் என்னாகிறதென்றால், ஆட்களால் மைனிங் செய்யும் வீதம் மாறுபடுகிறது. செல்வாக்குள்ள நபர்கள் இதில் இருக்கலாம். உதாரணமாக, பிரபலமான யூடியூபர்கள் அல்லது இன்ஸ்டாகிராம் நட்சத்திரங்கள். இவர்களால் நிறையபேரை பதிவுசெய்ய வைக்க முடியும். சிலரால் யாரையும் இணைக்க முடியாமலும் போகலாம். அத்துடன், அதிகம்பேர் பதிவுசெய்து சிறிதுகாலம் மைனிங்ல் ஈடுபட்டுவிட்டு பின்னர் செயலூக்க பயனர் நிலையிலிருந்து விலகியிருக்கலாம். எனவே நாணய வழங்கலில் நமக்குள்ள இந்தக் குறைந்தளவு புரிதலைக் கொண்டு சில ஊகங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. Pi வலைத்தொடர்பைத் தொடர்புகொண்டு அவர்களால் இதை நமக்குச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தோம். இதுவரை பதிலில்லை.
தகவலில்லாச் சமன்பாடுகள்

PI வெள்ளையறிக்கை சில சமன்பாடுகளை வழங்குகிறது. ஆனால் எரிச்சலூட்டும்படி அவை திண்ணமான எண்களை வழங்குவதில்லை. அதில் அதிகபட்ச வழங்கல் மொத்த மைனிங் வெகுமதிகளின் எண்ணிக்கை கூட்டல் மொத்த பரிந்துரை வெகுமதிகள் கூட்டல் மற்றும் மொத்த உருவாக்குநர் வெகுமதிகளுக்கு சமம் என்று உள்ளது. இதில் பரிந்துரை வீதமானது மைனிங் வெகுமதிகளில் 50% என்றும் உருவாக்குநர் வெகுமதி வீதமானது பரிந்துரை வெகுமதி எண்ணில் 25% என்று இருக்கிறது. ஆனால் மைனிங் வெகுமதியில் அதிகபட்சம் இது வழங்கக்கூடியது, “Pi வலைத்தொடர்பில் இணையும் ஒவ்வொருவருக்கும் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நிலையான அளவு Pi ஒதுக்கப்படும். பின்னர் அந்த உறுப்பினரின் ஈடுபாட்டு அளவுக்கும் வலைத்தொடர்பு பாதுகாப்பில் அளிக்கும் பங்களிப்புக்கும் ஏற்ப வாழ்நாள் முழுக்க வழங்கல் விடுவிக்கப்படும். இந்த வழங்கலானது பிட்காயின் உறுப்பினர்களின் வாழ்நாள் காலத்துக்கு வழங்குவதைப் போலவே மடங்குகளில் குறையும் முறையைப் பயன்படுத்தி விடுவிக்கப்படும்.”. ஆரம்பத்தில் வந்த உறுப்பினர்கள் அதிகம் மைன் செய்ய முடியும்.
இது ஒரு கணிதச் சமன்பாட்டையும் வழங்குகிறது. அது என்ன சொல்கிறதென்றால் மைனிங் வெகுமதியானது தொகையீட்டு எண்ணாக அல்லது “f(P) dx என்றும் இதில் f என்பது மடங்குகளில் குறையும் செயல்பாடு” என்பதுடன் “P = ஆட்களின் எண்ணிக்கை (உ.ம்., சேரும் 1வது நபர், சேரும் 2வது நபர் முதலியன)”. ஆனால் இதில் f என்பது என்ன என்று சரியாகக் குறிப்பிடாததால், இந்தச் சமன்பாடு ரொம்பப் பயனுள்ளதல்ல.
மற்ற கிரிப்டோக்களுடன் PI எவ்வாறு ஒப்பிடப்படுகிறது
பிட்காயின் வழங்கல் 21 பில்லியன் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது கடைசி பிட்காயின் மைன் செய்யப்பட்டதும் – இது 2040 வாக்கில் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது – அவ்வளவு தான். அதற்குமேல் புதிய பிட்காயின் எதுவும் சந்தைக்கு வராது. புழக்கத்திலுள்ள வழங்கலைக் கொண்டுதான் மக்கள் சமாளிக்க வேண்டும். ஏனெனில் நாணயம் மதிப்பைச் சேமிப்பதற்காக அதிகளவு பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. இப்போது இருப்பதைக் காட்டிலும் கூடுதல் மதிப்பை இது பெறுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சினை ஆக இருக்கும்.
இதற்கு மாறாக, டோஜ்காயினில் குறைந்தது வரம்பில்லாத வழங்கல் என்றொரு கோட்பாடாவது உள்ளது. இது நாணயத்தை செயலூக்கத்தில் வைத்திருக்கவும், நாணயத்தை எரிப்பதன் மூலம் (மீட்க முடியாத கணக்குக்கு மாற்றுவது) உண்மையான வழங்கலைப் பராமரிக்கவும் முடிகிறது. இந்த இரு உதாரணங்களும் Pi வலைத்தொடர்பின் கிரிப்டோகரன்சிக்குப் பொருந்தாது. காரணம், இப்போதைக்கு இதன் பயன்பாடு செயலிக்குள் மட்டும்தான். இது வெளியில் எந்தச் சந்தையிலும் கிடைக்காதென்பதால், தற்போது வழங்கலில் உள்ளவை குறித்தும் நாம் எதுவும் சொல்ல முடியாது. நம்மால் முடிந்தவரை பெறக்கூடிய புள்ளியியலின்படி, 29 மில்லியன் செயலூக்க Pi வலைத்தொடர்பு பயனர்கள் இருந்தால், அவர்கள் மணிக்கு 0.4 PI மைன் செய்வார்கள். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 278.4 மில்லியன் நாணயங்கள் மைனிங் செய்யப்படுகிறது. ஆனால் இது கல்விசார் ஊகம் மட்டுமே. Pi வலைத்தொடர்பு தானாகவே எத்தனைபேர் அமைப்பைப் பயன்படுத்துகிறார்கள், அதன் ஒட்டுமொத்த வழங்கல்-தேவை என்ன என்பதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கத் தொடங்காத வரை நம்மால் ஆகக் கூடியது இவ்வளவு தான். Pi வலைத்தொடர்பு இரகசியமாகச் செயல்படுவதால் இதை பற்றி நம்மால் உறுதியாக அறிய முடியாது. சிலர் இரகசியத் தன்மையை அபாய அறிகுறியாகப் பார்க்கக்கூடும். இதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
PI வரம்புக்குட்பட்ட வழங்கலைக் கொண்டுள்ளதா?
ஆம். ஆனால் Pi வலைத்தொடர்பு மொத்த வழங்கல் எவ்வளவு என்பதைச் சொல்லாமல் தவிர்க்கிறது. வழங்கலானது குறிப்பிட்ட எண்ணிக்கையாக இல்லாமல் எத்தனைபேர் வலைத்தொடர்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதோடு தொடர்புடையதாக உள்ளது. எத்தனைபேர் வலைத்தொடர்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையோ எத்தனை நாணயங்கள் மைனிங் செய்யப்பட்டுள்ளன என்பதையோ Pi முறையாக வெளிப்படுத்தாத காரணத்தினால், இதற்குப் பதில் இல்லை.
ஒரு நாளில் எத்தனை PI நாணயங்கள் மைனிங் செய்யப்படுகின்றன?
இந்தக் கேள்விக்கும் நம்மிடம் விடையில்லாமல் இருப்பதற்கு Pi வலைத்தொடர்பின் வெளிப்படைத்தன்மை இன்மைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தற்போதைக்கு, ஒவ்வொரு பயனரும் ஒரு மணி நேரத்தில் 0.4 PI மைனிங் செய்தால், வலைத்தொடர்பில் 29 மில்லியன் செயலூக்க பயனர்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு நாளில் 278.4 மில்லியன் PI மைனிங் செய்யப்படுவதாக அர்த்தமாகும். இருந்தாலும் இந்த எண்ணிக்கை, மிகக் குறைவானதாகவோ அல்லது மிக அதிகமானதாகவோ இருக்கலாம். வலைத்தொடர்பு அதன் புள்ளியியலைக் கிடைக்கச் செய்யாதவரை, இதற்கு உறுதியாகப் பதில் சொல்ல இயலாது.