எத்தனை XRP நாணயங்கள் உள்ளன? ரிப்பிள்களின் எண்ணிக்கை

By Currency.com Research Team

XRP நிலையான மொத்த அதிகபட்ச வழங்கல்களைக் கொண்டுள்ளது – ஆனால் எவ்வளவு?

உள்ளடக்கம்

ரிப்பிளின் XRP கிரிப்டோகரன்சி பழமையான கிரிப்டோக்களில் ஒன்று. இதன் வரலாறு 2012ல் தொடங்குகிறது. கிரிப்டோகரன்சி சொற்களில் கூறுவதானால் புராதானமானது. ஆனால் இன்று எத்தனை ரிப்பிள் நாணயங்கள் உள்ளன? நம்மால் கண்டறிய முடியுமா என்று பார்க்கலாம்.

XRP நாணயங்களின் எண்ணிக்கை

அதிகபட்ச வழங்கலாக ரிப்பிள் 100 பில்லியன் XRP நாணயங்களைக் கொண்டுள்ளது. இதில் 47.74 பில்லியன் புழக்கத்தில் உள்ளது. இதே போன்ற DOGE போன்றவற்றிலிருந்து இந்த வரம்புக்குட்பட்ட வழங்கல் வேறுபடுத்திக் காட்டுகிறது. குறைந்தது கருத்தியல் ரீதியாக இந்த DOGE நாணயங்களை வரம்பின்றி உருவாக்க முடியும். தற்போதைக்கு, XRP-யின் மொத்த வழங்கல் 99,989,789,601. அதிகபட்சத்தைக் காட்டிலும் தோராயமாக 10 மில்லியன் நாணயங்கள் குறைவு. இதன் அர்த்தம் அந்த நாணயங்கள் எரிக்கப்படவோ அல்லது ஏதோவொரு சமயத்தில் கழிக்கப்படவோ செய்திருக்கலாம். இது ‘எத்தனை XRP நாணயங்கள் உள்ளன?’ என்ற கேள்விக்கு உடனடியாக பதிலளிக்கிறது. ஆனால் மேலும் சில விசயங்கள் உள்ளன.

ரிப்பிள்களை வெளியிடுதல்

நாணயத்தைப் பெறும் நடைமுறையைப் பொறுத்தவரை BTC போன்றவை பயன்படுத்தும் முறைகளிலிருந்து XRP மாறுபட்டது. பிட்காயின் பணிச்சான்று கருத்தொற்றுமையைச் சார்ந்துள்ளது. இதில் கணினிகள் மென்மேலும் சிக்கலான சமன்பாடுகளைத் தீர்த்து தொகுதிகளை பிளாக்செயினில் சேர்க்கின்றன. XRP பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதற்காக சேவையகங்கள் மூலம் வலைத்தொடர்புக்கு அனுப்புவதை அனுமதிக்கிறது. இன்னொருபுறம் வலைத்தொடர்பிலுள்ள கணினிகள் அல்லது முனையங்கள் இந்தப் பரிவர்த்தனைகளுக்கு தங்கள் ஒப்புதல் அடையாளத்தை அளித்து அடுத்த கட்ட நகர்வுக்கு உதவுகின்றன. தனது காப்போலை(escrow) கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் தனக்குத்தானே ஒரு பில்லியன் XRPயை ரிப்பிள் வெளியிடுகிறது (இது பற்றி பின்னர் விவரிப்போம்). இவற்றில் சில சந்தையில் வைக்கப்படுகின்றன. எஞ்சியவை காப்போலைக்குத் திரும்புகின்றன. 2022 ஜனவரி கடைசியில், 46.5 பில்லியன் XRP காப்போலையில் இருந்தன.

தேவையும் வழங்களும்

XRPயின் அதிகளவு வழங்கல் காரணமாக அதன் விலை நிச்சயமாக ஒருபோதும் பிட்காயின் விலையைத் தொட முடியாது. இதற்குக் காரணம், மொத்த வழங்கல் 100 பில்லியனாக உள்ளதால் கிரிப்டோகரன்சி சூழல்மமண்டலத்தில் XRP நாணயங்கள் BTCயை காட்டிலும் அதிகளவில் இருக்கும். BTCயின் அதிகபட்ச வழங்கல் 21 மில்லியன் மட்டுமே.

அத்துடன், பெரும்பாலான நாணயங்கள் XRPக்குப் பின்னாலுள்ள ரிப்பிள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தப் பெரியளவிலான ஆனால் வரம்புக்குட்பட்ட வழங்கல் இரு உலகங்களிலும் முதலீட்டாளர்களுக்கு மிக மோசமான சேவையளிக்கும் வாய்ப்பு உள்ளது. மக்கள் விலை குறைவாயிருக்கிறதே என்று பார்க்கலாம்; பின் எத்தனை நாணயங்கள் உள்ளன என்று பார்த்தால் அதுவும் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. எனவே அவர்கள் அதிக இலாபம் கிடைக்கும் வேறு ஒன்றில் முதலீடு செய்ய நினைக்கலாம்.

What is your sentiment on XRP/USD?

0.41492
Bullish
or
Bearish
Vote to see community's results!

ரிப்பிளுக்கு ஒரு நீதிமன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. அமெரிக்க ஈட்டாவணங்கள் மற்றும் சந்தை வாரியம் (SEC) பதிவுசெய்யாத ஈட்டாவணத்தை இயக்குவதாக ரிப்பிள் மீது குற்றம் சாட்டியுள்ளது. சட்ட நடவடிக்கை நடைபெற்று வருகிறது. விசாரணையில் உறுதியற்ற நிலை இருப்பதால் அதன் விளைவாக தக்க முதலீட்டாளர்கள் XRPயிலிருந்து விலகியிருக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக, வழக்க ரிப்பிளுக்குச் சாதகமாக முடிந்தால், XRP விலையில் ஏற்றம் இருக்கக்கூடும்.

XRPயின் நோக்கம்

மக்கள் மாற்றுகைக் கட்டணம் குறித்தோ கமிஷன் குறித்தோ கவலைப்படாமல் சர்வதேச அளவில் பணத்தை அனுப்ப உதவுவதற்காக XRP வடிவமைக்கப்பட்டது. பயனர் A தனது ரொக்கப் பணத்தை XRP ஆக மாற்றி அயல்நாட்டிலுள்ள பயனர் Bக்கு அனுப்ப முடியும். அவர் மரபான பணம் பரிமாற்றத்தோடு தொடர்புடைய செலவுக்கு ஒரு சிறு பகுதியைச் செலுத்தி அதை தனது உள்நாட்டுப் பணமாக மாற்ற முடியும். இதில் பயனுள்ள விசயம் என்னவென்றால் XRPயை எந்தவொரு ரொக்கப்பணத்துடனும் இணைக்க முடியும். வழக்கமாக ஒன்றுக்கொன்று வர்த்தகமாகாத கரன்சிகளையும் அவை எதுவாக இருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விரைவாக, மலிவாக, மேலும் எளிதாக – குறைந்தது கருத்தளவிலாவது- மாற்றிக்கொள்ள முடியும். 

எரித்தலும் காப்போலையும் (Burning and escrow)

புழக்கத்தில் உள்ளதைக் காட்டிலும் அதிக XRPயை ரிப்பிள் வைத்துள்ளது
புழக்கத்தில் உள்ளதைக் காட்டிலும் அதிக XRPயை ரிப்பிள் வைத்துள்ளது – புகைப்படம்: Shutterstock

சில கிரிப்டோக்கள் செய்வதைப் போல விலையைப் பேணுவதற்கோ அல்லது அதிகரிப்பதற்கோ ரிப்பிள் XRP நாணயங்களை எரிக்க முயற்சிக்கவில்லை. இது இவ்வாறிருக்க, ரிப்பிளின் தலைமைச் செயல் அதிகாரி பிராட் வெஸ்டிங்ஹவுஸ் 2021ல் ஒரு கட்டத்தில் அப்படியொரு திட்டத்தைத் தவிர்க்க முடியாது என்று கூறினார். ரிப்பிளின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியான டேவிட் ஸ்க்வர்ட்ஸ், பயனர்கள் தாங்களாகவே XRP நாணயத்தை எரிப்பதை தானோ தனது நிறுவனமோ தடுக்காது என்று சொன்னபிறகுதான் மேற்கண்ட வரியைச் சொன்னார். தற்போது எத்தனை ரிப்பிள் நாணயங்கள் உள்ளன என்று கேட்டால் அதிகபட்ச வழங்கலுக்கும் மொத்த வழங்கலுக்கும் இடையே 10 மில்லியன் வேறுபாடு இருக்கக்கூடும்.

வெளிச்சந்தையில் இல்லாத XRP ரிப்பிளின் உடைமையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் அதிகளவு பணம் காப்போலையில் உள்ளது. இதன் அர்த்தம் குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் இவை அளிக்கப்படலாம். இதனால் முழுவதுமாக எதேரியம் அடிப்படையிலான ஸ்மார்ட் ஒப்பந்தங்களோடு பிணைக்கப்பட்ட கிரிப்டோக்களைப் போலின்றி உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரிப்பிள் வழங்கல் வரம்புக்குட்பட்டதா?

ஆம். இதன் அதிகபட்ச வழங்கல் 100 பில்லியன் XRP.

எத்தனை ரிப்பிள் நாணயங்கள் எஞ்சியுள்ளன?

பிப்ரவரி 3ம் தேதிப்படி, 47.74 பில்லியன் XRP புழக்கத்தில் இருந்தன. அதாவது மொத்த வழங்கலில் இன்னும் 52.25 பில்லியனுக்கு சற்று குறைவானவை புழக்கத்துக்கு இன்னும் வரவிருக்கின்றன. இப்போதிருந்த்து ஒவ்வொரு மாதமும் ரிப்பிள் தொடர்ந்து ஒரு பில்லியன் XRPயை வெளியிட்டால், அதன் வழங்கல் 2026 கோடைகாலத்தோடு முடிவடையும். இது இவ்வாறிருக்க பெருமளவிலான எண்ணிக்கை காப்போலையில் உள்ளது. 

யாரிடம் மிக அதிகளவில் XRP உள்ளது?

அதிகளவிலான XRP இன்னும் புழக்கத்திற்கு வரவேண்டியுள்ளதால், அதிகளவு XRP வைத்துள்ள நபர் அல்லது நிறுவனம் ரிப்பிள் தான்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image