எத்தனை மெட்டாஹீரோ நாணயங்கள் உள்ளன?

By Currency.com Research Team

பயனர்கள் தங்களின் 3D அவதாரங்களை ஸ்கேன் செய்து உருவாக்க HERO டோக்கன்களில் பணம் செலுத்தலாம்.

எத்தனை மெட்டாஹீரோ நாணயங்கள் உள்ளன?                                 
Codewise-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ராபர்ட் கிரைன் என்பவரால் மெட்டாஹீரோ நிறுவப்பட்டது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

மெட்டாஹீரோ, மக்கள் தங்கள் சொந்த 3D அவதாரத்தை மெட்டாவெர்ஸில் பயன்படுத்துவதற்கும், NFTகளை ஏலம் அல்லது வர்த்தகம் செய்வதற்கும் உதவும் ஒரு திட்டமாகும். இது $385.97 மில்லியன் சந்தை மூலதனத்துடன் முதல் 20 பெரிய மெட்டாவெர்ஸ் தளங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிட்காயின் மற்றும் எதேரியம் 1.0 போலல்லாமல், பினான்ஸ் ஸ்மார்ட் செயினில் இயங்கும் மெட்டாஹீரோ, அதன் டோக்கன் HERO-க்கு அடையாளப் பணயச் சான்று (proof-of-staked-authority (அல்லது PoSA)) என்ற கருத்தொற்றுமை மாதிரியைக் கொண்டுள்ளது.

இருப்பினும், பிட்காயினைப் போலவே, HEROவுக்கும் அதிகபட்ச விநியோகம் உள்ளது. HERO டோக்கன் மெட்டாஹீரோ சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியென்றால், எத்தனை மெட்டாஹீரோ நாணயங்கள் உள்ளன? 

எத்தனை HERO நாணயங்கள் உள்ளன?

HERO நாணயங்களின் அதிகபட்ச விநியோகம் 10 பில்லியனாக உள்ளது. எத்தனை HERO நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன? தற்போது 5.096 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. உலகில் தற்போது எத்தனை நாணயங்கள் கைமாறுகின்றன என்பதை ஆராய்ந்த பிறகு, ஒரு தர்க்கரீதியான அடுத்த கேள்வி: உலகில் எத்தனை HERO நாணயங்கள் எஞ்சி உள்ளன? சுமார் நான்கு பில்லியன் நாணயங்கள் மைன் செய்யப்பட உள்ளன.

டோக்கன் விநியோகம்

மெட்டாஹீரோ ஒரு குறிப்பிட்ட டோக்கன் விநியோக மாதிரியைக் கொண்டுள்ளது.

HERO நாணயங்களின் மொத்த விநியோகத்தில், 30% சந்தைப்படுத்தல், கூட்டாண்மை மற்றும் சந்தை பட்டியல்களில் பயன்படுத்தப்படும். HEROவின் அதிகபட்ச விநியோகத்தில் மற்றொரு 10% தனியார் விற்பனையில் விற்கப்படும். 10% பொது விற்பனை மூலம் விற்கப்படும். 10% சூழல்மண்டல காப்புக்கென பூட்டப்படும். அதே நேரத்தில் 20% நாணயங்கள் பணப்புழக்கத் தொகுதியில் பூட்டப்படும். மீதமுள்ள 20% குழுவுக்கென 30 மாத பூட்டு காலத்துடன் ஒதுக்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

HEROவுக்கு வரம்புக்குட்பட்ட விநியோகம் உள்ளதா?

ஆம் வரம்புக்குட்பட்ட விநியோகம் உள்ளது: 10 பில்லியன் நாணயங்கள் என்ற அதிகபட்ச வரம்பில் HERO உள்ளது.

எத்தனை HERO நாணயங்கள் மீதமுள்ளன?

சுமார் நான்கு பில்லியன் HERO நாணயங்கள் ஸ்டேகிங் செய்ய எஞ்சியுள்ளன.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image