எத்தனை போல்காடாட் நாணயங்கள் உள்ளன?

By Currency.com Research Team

போல்காடாட்டிற்கு, பிட்காயின் மற்றும் ஈதர் போல, அதிகபட்ச வழங்கல் வரம்பு கிடையாது. இதை உடனடியாக வாங்குவதால் பலனுண்டா?

எத்தனை போல்காடாட் நாணயங்கள் உள்ளன?                                 
போல்காடாட் பணவீக்க மாதிரியை ஏற்றுக்கொண்டு, ஆண்டுதோறும் 10% உயர்வை நோக்கமாகக் கொண்டுள்ளது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

போல்காடாட் வலைத்தொடர்பை நிர்வகிக்கும் பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற விரும்புவோருக்கு உள்ள ஒரு முக்கியமான கேள்வி: எத்தனை போல்காடாட் நாணயங்கள் உள்ளன?

DOT என்பது போல்காடாட் வலைத்தொடர்பின் சொந்த டோக்கன். இந்தத் திட்டம், ஒரு துண்டிக்கப்பட்ட பல சங்கிலிகளைக் கொண்ட வலைத்தொடர்பு ஆகும். இது எதேரியம் மற்றும் பிட்காயினிலிருந்து சற்று வித்தியாசமாக வேலை செய்கிறது. ஏனெனில் இது "முன்மொழியப்பட்ட பங்குச்சான்று" என்ற இயங்குமுறையால் (NPoS) பாதுகாக்கப்படுகிறது. போல்காடாட் நாணயத்திற்கும் அதிகபட்ச வழங்கல் வரம்பு கிடையாது.

எத்தனை போல்காடாட் டோக்கன்கள் உள்ளன?

CoinGecko படி, 1.079 பில்லியன் DOT நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.

இந்த நாணயம் ஆகஸ்ட் 2021ன் பிற்பகுதியில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இதன் பொருள் என்ன? உலகில் எத்தனை DOT நாணயங்கள் உள்ளன என்பதில் அதன் தாக்கம் என்ன?

பிட்காயினில் சடோஷிஸ் இருப்பது போல், போல்காடாட்டின் மிகச்சிறிய அலகு பிளாங்க் என்று அழைக்கப்படுகிறது. மறுமதிப்பீட்டுக்கு முன், ஒரு DOT ஆனது ஒரு பிளாங்கின் 0.00000000001 (நூறு மில்லியனில் ஒரு பங்கு)க்குச் சமமாக இருந்தது. மறுமதிப்பீட்டின் விளைவாக, ஒரு DOT என்பது பிளாங்கின் 0.0000000001 (பத்து மில்லியனில் ஒரு பங்கு) க்கு சமம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், DOT முன்பு 11 தசமப் புள்ளிகளாகக் குறிப்பிடப்பட்டது. இப்போது அது 10 தசமப் புள்ளிகளாகக் குறிப்பிடப்படுகிறது. மறுமதிப்பீடு நாணயத்தின் விகிதாச்சார மதிப்பை மாற்றவில்லை. சிறிய தசமங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும் கணக்கீடுகளை எளிதாக்குவதற்காகவும் DOT நாணயங்கள் மறுமதிப்பீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

எத்தனை DOT நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன?

இதற்கு அதிகபட்ச வழங்கல் வரம்பு கிடையாது. DOT என்பது பணவீக்கம் கொண்டது. போல்காடாட் இணையதளத்தின்படி, பணவீக்கம் ஆண்டுதோறும் 10% உயரும்.

பணவீக்க மாதிரியானது DOT வைத்திருப்பவர்களை அவர்களின் நாணயங்களை பணயம் வைக்க ஊக்குவிக்கிறது - அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களின் டோக்கன்களின் மதிப்பு நீண்ட காலத்தில் குறைந்துவிடும். 50% என்ற அதிக ஸ்டேக்கிங் விகிதம் வலைத்தொடர்பை உறுதிப்படுத்தவும் பணப்புழக்கத்தை உருவாக்கவும் உதவுகிறது.

போல்காடாட்டிற்கு வரையறுக்கப்பட்ட விநியோகம் உள்ளதா?

இல்லை, போல்காடாட் வரம்பற்ற விநியோகத்தைக் கொண்டுள்ளது.

எத்தனை போல்காடாட்களை மைன் செய்து எடுக்க முடியும்?

நீங்கள் போல்காடாட் நாணயங்களை மைன் செய்து எடுக்க முடியாது. ஏனெனில் வலைத்தொடர்பு பங்குச்சான்று இயங்குமுறையைப் பின்பற்றுகிறது. 

போல்காடாட் நாணயங்களுக்கு அதிகபட்ச விநியோகம் கிடையாது.

எத்தனை போல்காடாட் நாணயங்கள் மீதமுள்ளன?

போல்காடாட் நாணயங்களின் விநியோகத்திற்கு வரம்பு இல்லை. அதாவது வரம்பற்ற அளவிலான போல்காடாட் நாணயங்கள் பணயம் (stake) வைப்பதற்கு எஞ்சியுள்ளன.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image