எவ்வளவு எதேரியம் நாணயங்கள் உள்ளன?

By Currency.com Research Team

எதேரியம் வழங்கல் முன்பு முடிவில்லாததாக கருதப்பட்டது – ஆனால் அவையெல்லாம் மாறப்போகின்றன

கிரிப்டோகரன்சிகள் எப்படி இயங்குகின்றன என்ற விசயத்தில் இப்போதுதான் தங்கள் தலையை நுழைத்திருப்பவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான கேள்வி: எவ்வளவு எதேரியம் நாணயங்கள் உள்ளன?

நல்லது. பிட்காயினைக் காட்டிலும் உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ வேறுபட்ட அமைப்பைக் கொண்டது. 21 மில்லியன் BTC மட்டுமே அதிகபட்சம் இருக்கமுடியும் எனும்போது, எதேரியம் தற்போது 118.6 மில்லியனை புழக்கத்தில் கொண்டுள்ளது.

எத்தனை எதேரியம் உள்ளது என்பது விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக, பொதுமக்களிடத்தில் அதிகளவு நாணயங்கள் புழங்கும்போது, மதிப்பு குறைவாக இருக்கும். 47 பில்லியன் டோக்கன்களை புழக்கத்தில் வைத்திருக்கும் ரிப்பிள் (XRP) 2018ல் தொட்ட உச்ச விலையான $3.84-ஐ இதுவரை ஏன் தாண்டவில்லை என்பதை இது விளக்குகிறது.

பிட்காயினைப் போல, எதேரியம் பிளாக்செயின் தற்போது பணிச்சான்று (PoW) பொது ஏற்பு முறையில் இயங்குகிறது. எனினும், தொலைதூரத்தில் பெருமாற்றங்கள் வரும் அறிகுறிகள் தெரிகின்றன.

விரைவில் எதேரியம் பங்குச்சான்றுக்கு (PoS) மாற இருக்கிறது. – இந்த நகர்வு ETH 2.0 என்று அறியப்படுகிறது. இது எதேரியம் பிளாக்செயினில் பரிவர்த்தனைகளை விரைவாக மேற்கொள்ளும். முக்கியமாக, PoW இயங்குமுறையைக் காட்டிலும் குறைவான அளவு மின்னாற்றலை எடுப்பதால் பசுமையான முறையாகவும் உள்ளது. இது எத்தனை எதேரியம்களை மைனிங் செய்யமுடியும் என்பதையும் பாதிக்கும் – அத்துடன் பரிவர்த்தனைகள் எப்படி உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதையும்.

எதேரியத்துக்கு அதிகபட்ச வழங்கல் உள்ளதா?

எவ்வளவு எதேரியம் நாணயங்கள் இப்போது உள்ளன என்பதைக் காட்டிலும் 2015 கோடைகாலத்தில் முதன்முதலாக எதேரியம் பிளாக்செயின் ஏற்படுத்தப்பட்டபோது பெரியளவில் வேறுபட்டு இருந்தது. அப்போது 72 மில்லியன் ETH இருந்தன. குறுகிய காலத்திலேயே அதாவது 12 மாதங்களுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு சுழற்சியிலுள்ள வழங்கல் தோராயமாக 4.1% அதிகம்.

ஆனால் எத்தனை புதிய எதேரியம் நாணயங்கள் காலப்போக்கில் வியத்தகு வகையில் குறைக்கப்படப் போகின்றன என்ற கருத்துக்கள் நிலவுகின்றன - இது PoW-லிருந்து PoSக்கு மாறுவதோடு ஒத்துப் போவதாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக மைனர்களின் தேவையை நீக்கக்கூடிய மேம்படுத்தல்கள் செய்யப்படுகின்றன. இதனால் ETH பணச் சுருக்கமுள்ள சொத்தாக ஆகக்கூடும். மக்கள் வாங்குவதற்கு வெகுசில நாணயங்களே இருக்கும்போது அதன் விளைவாக விலைகள் அதிகரிக்கும்.

எத்தனை எதேரியம் முனையங்கள் உள்ளன?

எத்தனை எதேரியம் முனையங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்வது இன்னொரு முக்கிய அளவிடுமுறையாகும். நீண்ட காத்திருப்பிலுள்ள ETH 2.0 மேம்பாட்டில் உள்ள ஒரு புதிய முன்னேற்றம் ஸ்டேக்கிங் (Staking) - இது இலகுவான பிளாக்செயின் ஓட்டத்தில் மக்களுக்கு நிதிசார் பலன்களைப் பெறும் வாய்ப்பினை வழங்குகிறது.

வலைத்தொடர்பைப் பாதுகாக்க உதவுவதன் மூலம், சரிபார்ப்பு முனையங்கள் பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதலளிக்கும் போதெல்லாம் அவை வெகுமதிகளை ஈட்டமுடியும் - எனினும் அவர்களின் நடவடிக்கை வலைத்தொடர்பின் சிறந்த நலன்களுக்கு எதிராகச் சென்றால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

ஸ்டேக்கிங்கில் ஈடுபடுவது ஒரு செலவுபிடித்த முயற்சிதான். இதை எழுதும் நேரத்தில், தங்களது சொந்த உறுதிபடுத்தும் முனையத்தை நடத்த விரும்புவோர், 32 ETH கொடுத்தால் போதும் - அதன் மதிப்பு இதை எழுதும் வேளையில் $136,192 (£103,042). எனினும் மக்கள் தங்களது எதேரியத்தைத் தொகுக்கவும் மொத்தமாக இணைந்து ஒரு முனையத்தை நடத்தவும், ஒவ்வொரு பங்கேற்பாளரும் வெகுமதியில் பங்கினை எடுத்துக் கொள்ளவும் பல்வேறு சேவைகள் அனுமதிக்கின்றன.

எவ்வளவு எதேரியம் நாணயங்கள் எஞ்சியுள்ளன?

சமீபத்திய எண்களின்படி 8.5 மில்லியன் ETHக்கும் அதிகமானவை ஏற்கெனவே ஸ்டேக்கில் வைக்கப்பட்டுள்ளன - இதை எழுதும் நேரத்தில் மொத்தத்தில் தோராயமாக இதன் மதிப்பு $36.5 பில்லியன். இதுவும் எதேரியம் விலைகளில் தாக்கத்தைக் கொண்டிருக்க முடியும். ஏனெனில் கிடைக்கக்கூடிய வழங்கலில் இருந்து கணிசமான அளவு சந்தையிலிருந்து எடுத்து ஓர் ஒப்பந்தத்துக்குள் இது அடைத்து விடுகிறது. 

எத்தனை எதேரியம் நாணயங்கள் உள்ளன என்பதில் இன்னொரு காரணியாக, 5 ஆகஸ்ட் 2021 அன்று நடைமுறைக்கு வந்த EIP-1559 என்றும் ‘London hard fork' என்றும் அறியப்படும்  இலட்சியத்துடன் ஏற்படுத்தப்பட்ட புதிய மேம்பாட்டு முன்மொழிதல்.

What is your sentiment on ETH/USD?

1643.81
Bullish
or
Bearish
Vote to see community's results!

இந்த முரண்பாடான அளவீடு காரணமாக, பரிவர்த்தனையை நிறைவுசெய்ய பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நேரமும் பல நாணயங்கள் அழிக்கப்படுகிறது (அல்லது எரிக்கப்படுகிறது). இதை எழுதும்போது $4.4 பில்லியன் தரமுயர்த்தலுக்காக எரிக்கப்பட்டுள்ளன - இது மணிக்கு கிட்டத்தட்ட 233 ETH என்ற வீதம். கிரிப்டோ ஆர்வலர்கள் முன்கூட்டியே ஆகக்கூடிய செலவினைக் கணக்கிடுவதை தரமேம்பாடு எளிதானதாக ஆக்குமென்றும் நம்பப்படுகிறது.

இவை அனைத்தும் எதிர்கால வழங்கல் குறித்த நிச்சயத்தன்மையை உருவாக்கவும் ஈதரின் வழங்கல் முடிவற்றதாக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களும் முடிவுக்கு வர உதவுகிறது.

எதேரியம் பிளாக்செயின் எந்தளவு பெரியது?

பல கிரிப்டோ முதலீட்டாளர்கள் எதேரியம் வாங்குவதற்குத் தூண்டப்பட்டுள்ளார்கள். காரணம் இது பிட்காயினைவிடச் சிறப்பாகச் செயல்பட்டதற்கான வரலாறு இருக்கிறது. பல ஆர்வலர்கள் இந்தப் போக்கு தொடருமென நம்புகிறார்கள் - சிலர் ETHக்கு $10,000 என விலை இலக்கு கூட அமைத்திருக்கிறார்கள்.

இதற்கு ரொம்ப காலம் ஆகுமென்று தோன்றலாம். ஆனால் இதற்கு வெறும் 300% வளர்ச்சி மட்டுமே தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...இந்த டிஜிட்டல் சொத்தின் தரநிலைக்குப் பழக்கப்படுத்திய ஒன்று.

சில சந்தைப் பங்கினை குறைவான கட்டணங்களையும் விரைவான பரிவர்த்தனை நேரங்களையும் வழங்கக்கூடிய எதிரி வலைத்தொடர்புகளிடம் இழந்திருந்தாலும், மையமற்ற நிதி மற்றும் பூஞ்சையற்ற டோக்கன்கள் (NFTகள்) உட்பட முக்கிய கிரிப்டோ போக்குகளில் எதேரியம் பிளாக்செயின் தான் அடித்தளமாக உள்ளது.

கிரிப்டோகரன்சி பகுப்பாய்வு நிறுவனம் மெஸ்ஸாரியிடமிருந்து கிடைத்த திகைப்பூட்டும் அவதானம் எந்தளவு பரவலாக ETH-ஐப் பயன்படுத்தமுடியும் என்பதைக் காட்டுகிறது: 2021 முதல் காலாண்டில், இந்த வலைத்தொடர்பில் $1.5 டிரில்லியனுக்கு மேலான பரிவர்த்தனைகள் தீர்க்கப்பட்டன - இது முந்தைய ஏழு காலாண்டுகளின் மொத்தத்தைக் காட்டிலும் அதிகம். நிச்சயமாக, சமீபத்திய ஏறுமுக ஓட்டம் இதனோடு தொடர்புடையது என்று சொல்லலாம்.

எதேரியத்துக்கான தேவை அதிகரிப்பு

முன்னோக்கிப் பார்க்கையில் எதேரியத்தின் தேவை அதிகரிப்புக்கு ஏதோவொன்று முக்கியமானதாக இருக்கப் போகிறது - நிறுவனங்கள் ஏற்ப்தை ஊக்குவிப்பதில் - தற்போது வலைத்தொடர்பில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதும் அடங்கியுள்ளது.

பரிவர்த்தனைச் செலவுகள் உச்சத்துக்குச் சென்றுவிட்டன. காரணம் மைனர்கள் தற்போது அதிகக் கட்டணங்களைத் தரத் தயாராயிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். எதேரியத்தின் இணை நிறுவனர் விடாலிக் புடரின் முன்வைக்கும் ஒரு தீர்வு என்னவென்றால் (குறைந்தது ETH 2.0 தோற்றுவிக்கப்படும்வரை) சுருட்டுதல். பிரதான பிளாக்செயினில் சமர்ப்பிக்கப்படும் முன்பாக பரிவர்த்தனைகளை திறம்பட ஒன்றிணைக்கும் இந்த 2வது படலத்துக்கான தீர்வு வலைத்தொடர்பை மேலும் திறனுடைய ஆக்க உதவுகிறது.

இதற்குமேல், பிளாக்செயின் உருவாக்குநர்கள் மற்றும் கிரிப்டோ ஆர்வலர்கள் ETH 2.0 துவக்கத்துக்காக பொறுமையற்று காத்திருக்க வேண்டும் - Merge என்று அறியப்படுவது - இது 2022 ஜூன் இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தல் நடைமுறையின் பகுதியாக, பீகன் சங்கிலி என்று அறியப்படும் புதிய ஸ்டேக்கிங் இயங்குமுறை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. பீகன் சங்கிலி பிரதான வலைத்தொடர்பில் பிணைக்கப்படும்போது Merge அதில் இடம் பிடிப்பதுடன் ETC 2.0 நேரலைக்கு வரும்.

இந்த தரமேம்பாட்டுச் செயல்முறை மிக சவாலான ஒரு நகர்வு என்பதால் Merge தேதி ஏற்கெனவே பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.  எந்தவொரு தொழில்நுட்பத் தடங்கலும் பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைத் தகர்ப்பதுடன் ஒட்டுமொத்த வலைத்தொடர்பு மீதான நம்பிக்கையையும் பாதிக்கும்.

PayPal முதன்மைச் செயல் அதிகாரி டான் ஷூல்மன் போன்றோர் எதிர்காலத்தில் நிதிசார் கட்டமைப்பில் டிஜிட்டல் சொத்துக்கள் முக்கியப் பங்கினை வகிக்கும் என்று கணிக்கின்றனர். Visa-வும் எதேரியம் பிளாக்செயினைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ETH 2.0 என்னதான் விரைவான பரிவர்த்தனை நேரத்தை புதிய இயங்குமுறை கொண்டிருந்தாலும், மிக விரைவிலேயே நெரிசலில் பாதிக்கப்பட்டு முடிந்துவிடும். இது திரும்பவும் செயல்திட்டத்தை துவக்கநிலைக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடும். திரும்பவும் அளவிடும் வலிமிகுந்த நடைமுறையைச் செய்யவேண்டியிருக்கும்.  

கிரிப்டோகரன்சிகள் அதிகளவு மாறியல்பு கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தவொரு முதலீட்டு முடிவும் ஆபத்தை எதிர்கொள்ளும் உங்கள் மனப்பாங்கு, இந்தச் சந்தையில் உங்கள் அனுபவம், உங்கள் தொகுமுதலீட்டின் பரவல் மற்றும் பணம் இழப்பது உங்களுக்கு எந்தளவு வசதிப்படும் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். நீங்கள் இழக்கத் தயாராக உள்ள தொகைக்கு மேல் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். கடந்தகாலச் செயல்திறன் எதிர்கால வருவாய்க்கு உத்தரவாதமளிப்பதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எதேரியம் பிளாக்செயின் எந்தளவு பெரியது?

எதேரியம் பிளாக்செயினின் அளவு நிலையானதல்ல - இது தேவையைப் பூர்த்திசெய்ய வளர்ந்தபடி உள்ளது. இந்த நெகிழ்தன்மை காரணமாக, எதேரியம் பிளாக்செயின் ஆனது மையமில்லா நிதி மற்றும் பூஞ்சையில்லா டோக்கன்கள் (NFTகள்) உள்ளிட்ட முக்கிய கிரிப்டோ போக்குகளுக்கு அடித்தளமாக ஆகியுள்ளது. உதாரணமாக 2021 முதல் காலாண்டில், $1.5 டிரில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இந்த வலைத்தொடர்பில் தீர்க்கப்பட்டுள்ளன - இது முந்தைய ஏழு காலாண்டுகளின் கூட்டுத்தொகையைவிட அதிகம்.

எவ்வளவு எதேரியம் எஞ்சியுள்ளன?

எத்தனை எதேரியம் நாணயங்கள் உள்ளன என்பது, 5 ஆகஸ்ட் 2021 அன்று நடைமுறைக்கு வந்த EIP-1559 என்றும் ‘London hard fork' என்றும் அறியப்படும் புதிய மேம்பாட்டு முன்மொழிதலுடன் தொடர்புடையது. இந்த முரண்பாடான அளவீடு காரணமாக, பரிவர்த்தனையை நிறைவுசெய்யப்படும் ஒவ்வொரு நேரமும் பல நாணயங்கள் அழிக்கப்படுகிறது (அல்லது எரிக்கப்படுகிறது). இதை எழுதும்போது $4.4 பில்லியன் தரமுயர்த்தலுக்காக எரிக்கப்பட்டுள்ளன - இது மணிக்கு கிட்டத்தட்ட 233 ETH என்ற வீதம். இவை அனைத்தும் எதிர்கால வழங்கல் குறித்த நிச்சயத்தன்மையை உருவாக்கவும் ஈதரின் வழங்கல் முடிவற்றதாக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களும் முடிவுக்கு வர உதவுகிறது.

எதேரியத்துக்கு அதிகபட்ச வழங்கல் உள்ளதா?

இப்போது உள்ள எதேரியம் நாணயங்களைக் காட்டிலும் 2015 கோடைகாலத்தில் முதன்முதலாக எதேரியம் பிளாக்செயின் ஏற்படுத்தப்பட்டபோது பெரியளவில் வேறுபட்டு இருந்தது. அப்போது 72 மில்லியன் ETH இருந்தன. குறுகிய காலத்திலேயே அதாவது 12 மாதங்களுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு சுழற்சியிலுள்ள வழங்கல் தோராயமாக 4.1% அதிகம். ஆனால் புதிய எதேரியம் நாணயங்கள் காலப்போக்கில் வியத்தகு வகையில் குறைக்கப்படப் போகின்றன என்ற கருத்துக்கள் நிலவுகின்றன - இது PoW-லிருந்து PoSக்கு மாறுவதோடு ஒத்துப் போவதாக இருக்கும். 

Ethereum to US Dollar
தினசரி மாற்றம்
1643.74
குறைவு: 1633.67
அதிகம்: 1702.19

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image