ஃபேண்டம் விலைக் கணிப்பு: FTM அலையெழுச்சி ஏற்படப் போகிறதா?
The ஃபேண்டம் மையமில்லா நிதிச் செயல்திட்டம் செயல்படத் துவங்கிவிட்டது. ஆனால் டோக்கன் மதிப்பு அதனோடு சேர்ந்து ஏறுமா?

உள்ளடக்கம்
- FTM எதற்கு ஆற்றல் அளிக்கிறது?
- பின்புலத் தகவல்கள்
- புதிய உச்சம்
- ஃபேண்டம் கிரிப்டோ விலைக் கணிப்பு – கணிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
FTM எதற்கு ஆற்றல் அளிக்கிறது?
FTM என்பது ஃபேண்டமின் சொந்த கிரிப்டோகரன்சி. மையமில்லா நிதி (DeFi) பிளாக்செயின் தீர்வு சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.
ஃபேண்டமின் தொழில்நுட்ப அடுக்கில் சுழற்சியில்லா வரைபட பேரேட்டு வடிவமைப்பும் லாசெசிஸ் (Lachesis) என்றழைக்கப்படும் கருத்தொற்றுமைச் சூத்திரமும் உள்ளது. அனைத்துமே அளவு மாறுதிறனையும் விரைவான பரிவர்த்தனை நேரங்கள் மற்றும் பாதுகாப்பைச் சுற்றிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் எங்கள் விளக்கத்தில் நீங்கள் காண்பதுபோல, எல்லா கூறுகளும் குறையின்றி நடக்கவில்லை.
எவ்வாறாயினும், 2018ல் துவக்ககட்ட நாணய வழங்கலுக்குப்பின் (ICO), செழிப்பான DApp சூழலுடனும் திடமான ஸ்டேக்கிங் சமூகத்துடனும் FTM குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் காட்டியுள்ளது.
ஆனால் ஃபேண்டமின் நாணய விலைக் கணிப்பு என்ன? கணிப்பாளர்கள் தங்கள் ஃபேண்டம் விலைக் கணிப்பு குறித்து என்ன சொல்கிறார்கள்?
பின்புலத் தகவல்கள்
ஃபேண்டம் விலைக் கணிப்புக்கு நாம் செல்லும்முன் அடிப்படைகளைப் பார்க்கலாம். 24 ஜனவரி 2022 அன்று எழுதும் நேரத்தில், ஃபேண்டம் $2.04 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. சுழற்சியிலுள்ள 2.55 பில்லியன் FTM வழங்கல் (80%) சந்தை மூலதனத்தை $5.1 பில்லியன் ஆக ஆக்கியுள்ளதுடன், பட்டியலில் 28வது இடத்தையும் தந்துள்ளது.
சமீபத்திய அதிகளவிலான வர்த்தக அளவு கிட்டத்தட்ட $1.9 பில்லியன்; 26.78% அதிகரித்துள்ளது; திடமான வர்த்தக நடவடிக்கைக்கு இதுவொரு நல்ல அறிகுறி.
FTM-ன் அதிகபட்ச வழங்கல் 3.175 பில்லியன். வெளியே சுழற்சியிலுள்ள மீதி ஸ்டேக்கிங் வெகுமதிகளாகச் செல்லும். வழங்கல் முடிந்தவுடன், பரிவர்த்தனைக் கட்டணங்களிலிருந்து ஸ்டேக்கிங் வெகுமதிகள் வழங்கப்படும்.
ERC-20 மற்றும் BEP2 நெறிமுறைகள் இரண்டிலுமே FTM உள்ளது. ஃபேண்டம் சொந்தமாகவும் OPERA டோக்கன் நெறிமுறை அமைப்பைக் கொண்டுள்ளது.
2018 ஜூனில் ஃபேண்டம் ICO நிறைவேறியபோது, அந்நாளுக்குள் கடினமான மூலதன இலக்கான $40 மில்லியனை அது அடைந்தது. ஆரம்பகட்ட முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வருவாய் தற்போது 8,500%க்கு மேல் உள்ளது.
புதிய உச்சம்
திடமான வலைத்தொடர்பு சுவீகாரத்தைப் பின்புலமாகக் கொண்டு, 2021 இறுதி காலாண்டில் குறிப்பிடத்தக்க சில ஆதாயங்களை FTM பெற்றது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் 150 மடங்குகளுக்கும் மேலான $3.482 என்ற அதுவரையில்லாத உச்சத்தை அக்டோபர் 28ல் தொட்டது.
அந்த உச்சத்தைத் தொட்டதிலிருந்து விலை ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. டிசம்பர் 14ல் FTM விலை $1.27க்கு விழுந்தது. சில வாரங்களுக்குப்பின் ஏறுமுகமாக மாறும்வரை சிவப்பு மண்டலத்திலேயே இருந்துவந்தது. ஜனவரி 17ல் $3.30 விலையைத் தொட்டது. எனினும், விரிந்த கிரிப்டோ சந்தையுடன் சேர்ந்து விலை திரும்பவும் ஊசலாட ஆரம்பித்து ஜனவரி 22ல் $1.94க்கு விழுந்தது.
ஜனவரி 23ல், ஃபேண்டம், பினான்ஸ் ஸ்மார்ட் செயினை முந்திக்கொண்டு மூன்றாவது பெரிய மையமில்லா நிதிச் சூழல் அமைப்பாக (DeFi) மொத்த வைப்பு மதிப்பு மூலம் ஆனது. பகுப்பாய்வுக் கருவியான DeFiLlama-வின்படி, சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் சந்தை வீழ்ச்சிகளைத் தொடர்ந்து பிற கிரிப்டோக்களைக் காட்டிலும் இதை வைத்திருப்பது சிறந்தது என்கிறது. இதை எழுதிய ஜனவரி 24ம் தேதியில், FTM விலை $2.04 என வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.
இது இவ்வாறிருக்க, FTM விலைக் கணிப்பில் இந்த அளவீடுகளின் அர்த்தமென்ன?
ஃபேண்டம் கிரிப்டோ விலைக் கணிப்பு – கணிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
PricePrediction-ன் 2025க்கான ஃபேண்டம் விலைக் கணிப்பானது தற்போது $9.59 என்று நிற்கிறது. 2030 முன்னறிவிப்பு சராசரியாக $60.91 என்கிறது.
இணையவழி கணிப்பாளர் Wallet Investor-ன் 2022க்கான ஃபேண்டம் விலைக்கணிப்பு டிசம்பர் இறுதிக்குள் $4.619 வரும் என்கிறது. இவர்களது ஐந்தாண்டு கணிப்பாக $15.453 உள்ளது.
Digitalcoin-ல் உள்ள கணிப்பாளர்கள் 2025க்கான விலைக்கணிப்பாக $4.19ஐச் சொல்கிறார்கள். இது 2027ல் $6.26 ஆக அதிகரிக்கும் என்கிறார்கள்.
2022ல் கிரிப்டோ சந்தை தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கப் போகிறது. எனினும், மிகச்சிறந்த அடிப்படைகளையும் திடமான தயாரிப்பு உள்ளெடுப்புகளுடன், சந்தை மாறத் தொடங்கியதும் ஃபேண்டம் நல்ல நிலையை அடையக் கூடும்.
FTM ஒரு கண் வைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இந்த FTM விலைக் கணிப்பு கட்டுரை கல்விசார் நோக்கங்களுக்கானது மட்டுமே என்பதையும் உண்மையான முதலீட்டு ஆலோசனையாக இதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஃபேண்டம் ஒரு நல்ல முதலீடு தானா?
இருக்கலாம். இணையவழி கணிப்பாளர்கள் மிக உயர்வான விலை இலக்குகளைக் கொண்டுள்ளனர். இது வலுவான அடித்தளங்களைக் கொண்டுள்ளதால் கிரிப்டோ சந்தை தன்னை நேர்செய்யும்போது, ஒரு நல்ல நிலைக்கு இது வர வாய்ப்புள்ளது.
ஃபேண்டம் மேலே செல்லுமா?
இணையவழி கணிப்பாளர் ஒருவரது கூற்றின்படி 2022ல் ஃபேண்டம் $3.797 குறியீட்டை அடையலாம். 2026ல் $13.13க்கும் மேலேற வாய்ப்புள்ளது. நிச்சயம் இதுவொரு அனுமானம் மட்டுமே. தயவுசெய்து வர்த்தகத்தைத் தொடங்கும்முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.
ஃபேண்டமில் நான் முதலீடு செய்யலாமா?
ஒரு வர்த்தகத்தைத் தொடங்குமுன் உள்ளார்ந்த அடிப்படைகளை ஆராயவும் கூடுதல் முதலீட்டு ஆலோசனையைப் பெறவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்பு கொண்டவையாக இருக்கலாம். எனவே ஒருபோதும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.