FLOW விலைக் கணிப்பு: FLOW நாணயத்தில் அடுத்து என்ன நடக்கும்?

By Currency.com Research Team

ஃப்ளோ நாணயம் கடந்த ஆண்டில் அதன் மதிப்பில் 20%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. ஆனால் தொடுவானில் அதன் மீட்சி தென்படுகிறதா?

ஃப்ளோ விலைக் கணிப்பு                                 
2021 இலையுதிர்க் காலத்திலிருந்தே FLOW நாணயத்தில் முதலீட்டாளர்கள் சரிவையே கண்டு வருகின்றனர் – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

ஒரு முதல் லேயர் பிளாக்செயினான ஃப்ளோ, அதன் இணையதளத்தின்படி, பிளாக்செயினை மைய ஓட்டத்திற்குக் கொண்டுவரும் பணியில் உள்ளது. டெவலபர் எளிதாக அணுகக்கூடிய பிளாக்செயினாகக் கூறப்படும் ஃப்ளோ, புதிய செயலி மற்றும் நிரல்களை உருவாக்குவதற்கான மையமாக மாறும் என்று நம்புகிறது.

பாதுகாப்பிலோ அல்லது எளிமையான தன்மையிலோ சமரசம் செய்யாமல் அளவு மாறும் தன்மையை மேம்படுத்துவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களுடன், Web3 காட்சியில் முக்கியச் செயல்பாட்டாளராக ஆகும் முயற்சியில் ஃப்ளோ உள்ளது. ஆனால் இந்தத் திட்டம் வெற்றியடையுமா? ஃப்ளோ விலைக் கணிப்பு என்ன?

முன்னறிவிப்புகளைப் பார்ப்பதற்கு முன், நாணயத்தின் விரைவான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

ஃப்ளோ (FLOW) என்றால் என்ன? - ஒரு கண்ணோட்டம்

"திறந்த உலகத்திற்கான பிளாக்செயின்" என்று தன்னை விவரித்துக்கொண்டு, ஃப்ளோ 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. இது பல்முனையக் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. அதன் வலைத்தளத்தின்படி, சிறுதகவல்-பன்முனைப் பரவல் முறையைப் (sharding) பயன்படுத்தாமல் அளவு மாறத்தக்க தன்மையை (scalability) மேம்படுத்துகிறது. இது "ACID அல்லாத இணக்கம்" என்று கூறப்படுகிறது; அதாவது, அணு, நிலைத்தன்மை, தனிமைப்படுத்தல் மற்றும் நீடித்த தன்மை ஆகிய நான்கு பண்புகளைக் கொள்ளாத தரவுத்தளமானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

பல்முனைய (multi-node) கட்டமைப்பு என்றால் என்ன? ஒவ்வொரு முனையமும் அனைத்து தகவல்களையும் சேமித்து, அனைத்து வேலைகளையும் செய்கிற பாரம்பரிய பிளாக்செயின்களைப் போலல்லாமல், ஃப்ளோ தொழில்நுட்பம் பைப்லைனிங் செயல்முறையை நகலெடுத்து அதை பிளாக்செயினில் பயன்படுத்துவதன் மூலம் செயல்முறையை மிகவும் திறனுடையதாக்குகிறது. முனையங்களால் செய்யப்படும் வேலைகள் நான்கு பாத்திரங்களாகப் பிரிக்கப்படுகின்றன: சேகரிப்பு, ஒருமித்த கருத்து, செயல்படுத்தல் மற்றும் சரிபார்ப்பு. உழைப்பு கிடைமட்டமாக விநியோகிக்கப்படுகிற சிறுதகவல்-பன்முனைப் பரவல் போலல்லாமல், இதில் உழைப்பு செங்குத்தாகப் பிரிக்கப்படுகிறது.

தகவல் தாளில் கூறப்பட்டிருப்பது போல அனைத்து முனையங்களும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஃப்ளோவின் படி, சிறுதகவல்-பன்முனைப் பரவல் (sharding) என்பது பிளாக்செயின்களை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வலைத்தொடர்பாகப் பிரிப்பது. இது பரிவர்த்தனை வரிசைமுறையை நீக்குகிறது. பரிவர்த்தனை வரிசைமுறை என்பது பயன்பாட்டுக் கட்டமைப்பை மிகவும் கடினமாகவும், பிழைகளால் பாதிக்கப்படக்கூடியதாகவும் ஆக்குகிறது.

ஃப்ளோ வலைத்தளத்தின்படி: "நெறிமுறை அளவில் அதைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சிறுதகவல்-பன்முனைப் பரவல் என்ன செய்கிறதென்றால் பயன்பாடு உருவாக்குநர்கள் மீது பிளாக்செயினின் அளவு மாறும் தன்மையின் கடினமான பகுதியைச் சுமக்க வைக்கிறது.”

டெவலபர்கள் விரும்பும் பிளாக்செயின்

நிறைவுக்கும் மேலாக அதிகரித்து வரும் சந்தையில் தங்களை வேறுபடுத்திக் காட்டும் இன்னொரு முக்கிய அம்சமாக ஃப்ளோ கூறுவது, அது டெவலபர்களின் அனுபவத்தை முன்னுரிமைப்படுத்தும் வழி.

இந்தச் சூழல் அமைப்பு கேடென்ஸ் (Gadence) நிரலைப் பயன்படுத்துகிறது. இதன் தகவல் தாளின்படி, "முதலாவது வளம் சார்ந்த ஸ்மார்ட் ஒப்பந்த நிரல் மொழிக்கான பணிச்சூழல்" ஆகும்.

இந்தத் திட்டமானது வளம் சார்ந்த நிரலாக்கத்தையும் பயன்படுத்துகிறது. இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது.

இறுதியாக, ஃப்ளோ குழு ஸ்மார்ட் ஒப்பந்தங்களை ஒரு முறை பயன்படுத்திய பிறகும் மேம்படுத்தும் வழியை உருவாக்கியுள்ளனர். வலைத்தளத்தின்படி, ஸ்மார்ட் ஒப்பந்தங்களை "பீட்டா நிலையில்" மெயின்நெட்டில் வைக்கலாம். இந்த ஒப்பந்தங்களை அதன் அசல் ஆசிரியர்கள் மாற்றி அமைக்கலாம். மாற்றங்கள் முடிந்ததும், ஸ்மார்ட் ஒப்பந்தத்தை வெளியிடலாம். பின்னர் இது மாறாத தன்மை கொண்டதாக ஆகும். அதாவது அதன்பின் மாற்ற முடியாது.

FLOW சொந்த டோக்கன்

FLOW நாணயம் சூழல் அமைப்பில் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கணினியில் பயனர்களும் டெவலப்பர்களும் பரிவர்த்தனை செய்யும் நாணயம் இது. FLOW ஆனது பயனர்களிடையே வைத்திருப்பதோடு பரிவர்த்தனையும் செய்யலாம். அதே போல் வெகுமதிகளைப் பெறுவதற்குப் பணயம் வைக்கலாம்.

ஃப்ளோவின் நிறுவனர்கள்

Dapper, CryptoKitties, NBA Top Shot ஆகியவற்றை நிறுவிய அதே குழுவால் ஃப்ளோ அமைக்கப்பட்டுள்ளது.

டைட்டர் ஷெர்லி ஃப்ளோவை நிறுவினார். இவர் CryptoKitties-ன் இணை நிறுவனர். அவர் தற்போது ஃப்ளோவின் CTO ஆகவும் உள்ளார்.

ஷெர்லி 1990 களின் முற்பகுதியில் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலைப் படித்தார். பின்னர் அவர் Metrowerks, Vertigo 3D, Schemasoft, Apple, Axiom Zen போன்ற நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.

அவர் கனடாவின் வான்கூவரில் உள்ளார். மார்ச் 2018ல் தொடங்கப்பட்ட நிறுவனமான Dapper Labs-ன் CTO ஆனார்.

ரோஹாம் கரேகோஸ்லோ, Dapper Labs-ன் CEO ஆவார். இவர் ஃப்ளோவின் தலைமைச் செயல் அதிகாரி. CryptoKitties, NBA Top Shot ஆகிய இரண்டின் இணை நிறுவனரும் ஆவார்.

கரேகோஸ்லோ வான்கூவரைச் சேர்ந்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியலில் MS மற்றும் BS ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முன்பு, அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் BA முடித்தார்.

2022க்கான ஃப்ளோ விலைக் கணிப்பை இப்போது வழங்கலாமா? அல்லது 2030க்கான ஃப்ளோ விலைக் கணிப்பு? கணிப்புகளைப் பார்க்கும் முன், நாணயத்தின் சமீபத்திய செயல்திறனைப் பார்ப்போம்.  

நாணயச் செயல்திறன்

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஃப்ளோ காயின் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. வெளியான உடனேயே, FLOW ஆனது 4 பிப்ரவரி 2021 அன்று $8.6883லிருந்து 4 மார்ச் 2021 அன்று $39.04 ஆக உயர்ந்தது. நாணயத்தின் மதிப்பு 24 மார்ச் 2021க்கு முன் $25.66 ஆகக் குறைந்து 5 ஏப்ரல் 2021 அன்று $38.55 ஆக எழுந்தது. விரைவில், ஃப்ளோ காயின் 22 ஜூன் 2021 அன்று $7.1324 ஆக உயர்ந்து, பின் 29 ஆகஸ்ட் 2021 அன்று $27.57 ஆக உயர்ந்தது. 2021 இலையுதிர்காலத்தில் இருந்து, ஃப்ளோ காயின் கீழ்நோக்கிய போக்கில் உள்ளது. 24 ஜனவரி 2022 அன்று $4.8444 என்ற குறைந்த விலையைப் பதிவு செய்யும் முன் அக்டோபர் 27 அன்று, FLOW $11.95 ஆகக் குறைந்திருந்தது. 1 பிப்ரவரி 2022 நிலவரப்படி, ஃப்ளோ காயின் விலை $6.80 ஆக இருந்தது.

கடந்த ஆண்டில் ஃப்ளோ கிட்டத்தட்ட 30% மற்றும் 2022 இன் முதல் 30 நாட்களில் 25% க்கும் அதிகமாக இழந்துள்ளது. இருப்பினும், ஜனவரி கடைசி வாரத்தில் நாணயம் 40% அதிகரித்தது. இது மேல்நோக்கிய போக்கின் தொடக்கமாக இருக்கலாம்.

ஃப்ளோ 318.08 மில்லியன் நாணயங்களை புழக்கத்தில் கொண்டுள்ளது. இதன் மொத்த விநியோகம் 1.4 பில்லியன் ஆகும். $2.18 பில்லியன் சந்தை மூலதனத்துடன், ஃப்ளோ CoinMarketCap-ல் 60வது இடத்தில் உள்ளது.

ஆனால் இது ஃப்ளோ காயின் விலைக் கணிப்பை எவ்வாறு பாதிக்கிறது? நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஃப்ளோ விலைக் கணிப்பு

கணிப்புகள் விலை எந்தத் திசையில் நகரக்கூடும் என்று சுட்டிக்காட்டுபவையாக நமக்கு உதவக்கூடும். ஆனால் கிரிப்டோ சந்தையின் இயல்பான மாறியல்பும் அறியப்படாத பல காரணிகளும் எதிர்கால விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்பதால் எல்லாக் கணிப்புகளையும் அவை இயல்பாகவே நம்பத்தகாதவையாக ஆக்குகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு பார்ப்போம். ஒரு அவநம்பிக்கையான ஃப்ளோ விலைக் கணிப்பை WalletInvestor கொண்டுள்ளது. ஒரு வருடத்தில் ஃப்ளோ $0.448க்குச் செல்லக்கூடும் என்று இது கருதுகிறது. இதனால் நாணயத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்கவில்லை.

Gov.capital, இதேபோன்ற அவநம்பிக்கையான ஃப்ளோ விலைக் கணிப்புடன், ஒரு வருட காலத்தில் நாணயம் பூஜ்ஜியத்திற்குச் செல்லக்கூடும் என்று அஞ்சுகிறது.

DigitalCoinPrice 2023ல் $10.8 ஆக அதிகரிப்பதற்கு முன் 2022ல் $9.14 மதிப்புடையதாக இருக்கலாம் என்று கருதுகிறது. இணையதளத்தின் 2025க்கான ஃப்ளோ விலைக் கணிப்பு $13.90 ஆக உள்ளது.

எத்தனை ஃப்ளோ நாணயங்கள் உள்ளன?

ஃப்ளோ 318.08 மில்லியன் நாணயங்களை புழக்கத்தில் கொண்டுள்ளது. மொத்த விநியோகம் 1.4 பில்லியன் ஆகும்.

ஃப்ளோ ஒரு நல்ல முதலீடு தானா?

ஒருவேளை இருக்கலாம். எனினும், அதற்கு சாத்தியம் இல்லாமலும் போகலாம். கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து நாணயம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

கிரிப்டோ சந்தை மிகவும் நிலையற்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது. அனைத்து டோக்கன்கள், நாணயங்களின் விலை குறையவும் கூடவும் செய்யலாம்.

ஃப்ளோ மேலே செல்லுமா?

சில வல்லுநர்கள் நாணயம் கீழே போகும் என்று நினைக்கிறார்கள்; மற்றவர்கள் அது உயரக்கூடும் என்று நினைக்கிறார்கள். பரவலாகப் பேசினால், எதிர்காலத்தில் நாணயம் பூஜ்ஜியத்திற்குச் செல்லக்கூடும் என்ற சில கணிப்புகளுடன், மற்ற கணிப்புகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. முன்னறிவிப்புகள், குறிப்பாக நீண்டகாலத்திற்கானவை, முழுமையானவைகளாகப் பார்ப்பதைக் காட்டிலும் குறிகாட்டிகளாகப் பார்க்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது.

நான் ஃப்ளோவில் முதலீடு செய்யலாமா?

முதலீடு என்பது மிகவும் தனிப்பட்ட முயற்சி. உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். ஃப்ளோ சூழல் அமைப்புக்குள் அதன் எதிர்கால வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய ஏதேனும் மேம்பாடுகள் ஏற்படுகின்றனவா என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முயலுங்கள்.

முதலீடு செய்வதில் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பது முக்கியம்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image