ஃப்ளக்ஸ் (Flux) விலைக் கணிப்பு: ஃப்ளக்ஸ் (FLUX) என்பது என்ன?
2021 கடைசியில் ஃப்ளக்ஸ் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஆனால் ஃப்ளக்ஸ் கிரிப்டோகரன்சி என்பது என்ன?

உள்ளடக்கம்
- ஃப்ளக்ஸ் விளக்கம்
- FLUX விலை வரலாறு
- ஃப்ளக்ஸ் விலைக் கணிப்பு
- இறுதியாக சில சிந்தனைகள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஃப்ளக்ஸ் என்பது செயலி மேம்பாட்டு அமைப்புக்கு ஆற்றலளிக்கும் ஒரு கிரிப்டோகரன்சி. இதன் சொந்த நாணயம் 2021 இறுதியில் வந்தது. சில கவனிக்கத்தக்க ஆதாயங்களை உருவாக்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஆனால் ஃப்ளக்ஸ் (FLUX) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? ஃப்ளக்ஸ் விலைக் கணிப்பு எப்படி இருக்கிறது? தொடர்ந்து பார்க்கலாம்.
ஃப்ளக்ஸ் விளக்கம்
ஃப்ளக்ஸ் சூழல் மண்டலத்துக்கும் ஃப்ளக்ஸ் (FLUX) கிரிப்டோகரன்சிக்கும் பின்னால் உள்ள சிந்தனை Web3-யின் மிக முக்கிய பகுதியாக இருக்கும் பிளாக்செயின் தொழில்நுட்பம் தான். Web3 இணையப் பதிப்பானது நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அது ஏற்கெனவே எங்களிடம் உள்ளதாகவோ அல்லது கையகப்படுத்தப் போவதாகவோ இருக்கும். பிளாக்செயின்கள் மையமில்லாமையைச் சார்ந்தும் அதை ஊக்குவிக்கவும் செய்வதால், மக்கள் தங்கள் சொந்த மையமில்லா செயலிகளை (DApps) வடிவமைப்பதற்கு பயனுள்ளதாக இந்த அமைப்புகள் இருக்க முடியும். இதைச் செய்வதற்கான அத்தகைய வலைத்தொடர்புகளில் ஒன்றாக ஃப்ளக்ஸ் உள்ளது.
ஃப்ளக்ஸ் சொந்தமாக FluxOS என்றழைக்கப்படும் இயக்க முறைமையைக் கொண்டுள்ளது. இது லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது. கணினி ஆற்றலைச் சரிபார்ப்பதன் மூலம், வலைத்தொடர்பிலுள்ள DAppsஐ பயன்படுத்தியும் நிர்வகித்தும் வலைத்தொடர்பை இது கையாள்கிறது. ஃப்ளக்ஸின் வெள்ளையறிக்கையின்படி, வலைத்தொடர்பைக் கையாள்வதற்காகக் கணினிகளைப் பயன்படுத்தும் அமைப்பு ஃப்ளக்ஸ் முனையங்கள் என்றழைக்கப்படுகிறது. ஃப்ளக்ஸ் முனையங்களின் உரிமையாளர்களுக்கு FLUX வெகுமதியாக அளிக்கப்படுகிறது. ஃப்ளக்ஸுக்கும் சொந்தமாக Zelcore எனப்படும் வாலெட்டும் FluxLabs எனப்படும் உருவாக்க நிரலும் உள்ளது. FLUX-க்குப் பின்னால் இருப்போரும் பிற பிளாக்செயின்களில் ஃப்ளக்ஸ் அடிப்படையிலான ஏர்டிராப்களில் பங்கெடுக்கின்றனர். இதை Zelcore-ன் இணைப்புச் செயலியைப் பயன்படுத்திப் பெற முடியும். இந்த வகை ஏர் டிராப்களை பெறுவதற்கு அவர்கள் FLUX வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக ஃப்ளக்ஸ் தனக்கென சொந்த பிளாக்செயினை வைத்துள்ளது. இதன் அர்த்தம் FLUX-ஐ ஒரு டோக்கன் என்பதைவிட அதிகம் ஒரு நாணயமாகவே பார்க்கப்படுகிறது.
FLUX நாணயம் பணிச்சான்று நெறிமுறைப்படி மைன் செய்யப்படுகிறது. அதாவது அதிகரித்துவரும் சிக்கலான கணிதச் சமன்பாடுகளைக் கணினிகள் மூலம் தீர்வு கண்டு கூடுதல் தொகுதிகளை பிளாக்செயினில் சேர்க்கவும் அதன் மூலம் புதிய நாணயங்களைப் புழக்கத்துக்குக் கொண்டு வரும் செயல்முறை. நாணயத்தை ஸ்டேக் இடலாம்; வாங்கலாம்; விற்கலாம்; வர்த்தகம் செய்யலாம். ஃப்ளக்ஸை வைத்திருப்பதால் வலைத்தொடர்பில் உங்கள் சொந்த ஃப்ளக்ஸ் முனையத்தை இயக்கவும் முடியும். இதன் மூலம் நீங்கள் மேலும் நாணயங்களை ஈட்ட முடியும்.
2018ல் ஃப்ளக்ஸ் அமைப்பை நிறுவியவர்கள் பிராக் (Prague) நாட்டைச் சேர்ந்த டாடியஸ் கமேண்டா, ஓரிகனைச் சேர்ந்த பார்க்கர் ஹனிமேன், பென்சில்வேனியாவில் உள்ள டேனியல் கெல்லர் ஆகியோர் ஆவர். இந்த அமைப்பு துவக்கத்தில் ZelCash என்று அறியப்பட்டது. முதலில் இதன் டோக்கன் ZEL என்று இருந்தது. பின்னர் 2021 மார்ச்சில் FLUX என்று பெயர் மாற்றப்பட்டது.
இதில் முக்கியமானது என்னவென்றால் ஃப்ளக்ஸ் கிரிப்டோவை Datamine FLUX அல்லது ஃப்ளக்ஸ் நெறிமுறையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இவ்விரண்டும் நிறுவனக் குறியீட்டுப் பெயர்களில் FLUX என்ற வார்த்தையைக் கொண்டுள்ளன. Datamine FLUX ஒரு DeFi நெறிமுறை நாணயம். இது 2020ல் துவக்கப்பட்டது. ஃப்ளக்ஸ் நெறிமுறை (Flux Protocol) 2021ல் வெளியானது. இதன் நோக்கம் பிளாக்செயின் அடிப்படையில் அடமானக் கடனளிக்கும் தீர்வுகளை வழங்குவதாகும்.
FLUX விலை வரலாறு
இது ஃப்ளெக்ஸ் விலை வரலாற்றைப் பார்க்கும் நேரம். முந்தைய செயல்திறன்கள் எதிர்கால முடிவுகளைச் சுட்டிக் காட்டுவதில்லை என்ற போதிலும் கடந்த காலத்தில் நாணயத்தின் நடத்தையைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஃப்ளக்ஸ் விலைக் கணிப்பு செய்வதிலும் ஆராய்வதிலும் மிகத் தேவையான சில சூழல்களை நாம் பெற முடியும்.
முதன்முதலாக 2018 ஆகஸ்டில் ஃப்ளக்ஸ் வெளிச் சந்தைக்கு வந்தது. சரியாகச் சொல்வதானால், 2017 கடைசியிலும் 2018 துவக்கத்திலும் ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சி சந்தையும் அதன் மலர்ச்சி காலத்துக்குப் பின் ஒரு வழியாக நிலைகொண்ட நேரம். அப்போது சந்தை இருந்த நிலவரப்படி, ஃப்ளக்ஸ் எந்த அலையையும் எழுப்பவில்லை. $0.02வுக்கும் $0.03க்கும் இடையில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. எனினும் அக்டோபரில் $0.07 வரை சென்று சிறிது ஏற்றம் கண்டது. ஆனால் திரும்பவும் முந்தைய விலை மட்டங்களுக்குத் திரும்பியது. 2019 ஏப்ரலில், Zelcore+ வாலெட் துவக்கப்படுவது குறித்த உற்சாகம் இருந்தது. அதனால் நாணயம் $0.10வுக்கு ஏறியதுடன் 20 சென்ட் தடையையும் உடைத்தது. இந்த வளர்ச்சி குறுகிய காலத்துக்குத்தான். விரைவிலேயே FLU திரும்பவும் இலையுதிர்க் காலத்தில் $0.10 குறியீட்டுக்குக் கீழே வந்துவிட்டது. ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த நிலையிலேயே இருந்தது.
2021ல் கிரிப்டோகரன்சி சந்தைக்கு செழிப்பான காலகட்டமாக அமைந்தது. உயர எழுந்த அலைகளில் மேலே சென்ற படகுகளில் ஃப்ளக்ஸ் நாணயமும் ஒன்று. மார்ச்சில் அது $0.10 தடையை உடைத்து ஏப்ரலில் $0.20வையும் தாண்டியது. மே 15ல் $0.3744 என்ற அந்த மாத உச்சத்தை எட்டியது. இந்த ஆதாயங்கள் FLUX நல்ல இடத்தில் இருப்பதான தோற்றத்தைத் தந்தது. காரணம் மே 19ல் மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினத்தின் போது நாணயத்தின் விலையில் தாக்கம் இருந்தாலும் சரிவுக்குப் பிந்தைய விலை மட்டம் $0.20 அளவில் இருந்தது. சந்தையின் ஒட்டுமொத்த வீழ்ச்சி இந்த நாணயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஜூலை 16க்கும் 20க்கும் இடையில் நாணயம் $0.10க்கும் கீழ் வர்த்தகமானது. இந்தச் சரிவு குறுகிய காலமே நீடித்தது. ஆகஸ்ட் இறுதியில் நாணயம் $0.1655 விலைக்குச் சென்றது.

கோவிட்-19 ஒமிக்ரான் மாற்றுரு குறித்த கவலையினால் கிரிப்டோ சந்தை மந்தமாக இருந்தது என்பது உடனடியான பிரச்சினை என்றாலும் FLUX நிலைமை அப்படியொன்றும் மோசமாயில்லை. அது $2க்குக் கீழே முடிவடைந்திருந்த போதிலும், ஏதோ புதிய விலை மட்டத்தை அடைந்ததுபோல் தோன்றியது. புதிய உச்சத்தைப் பிடிக்க அப்போதும் நேரமிருந்தது. பினான்ஸ் சந்தையில் பட்டியலிடப்படுவதான செய்தி அறிவிக்கப்பட்டதும் டிசம்பர் 10ல் $4.17 விலைக்கு ஏறியது. இதற்குப் பின் விலை உடனடியாக இறங்கி $1.84க்கு வந்தது. பின் சற்றே மீண்டெழுந்து ஆண்டு முடிவில் $2.39 ஆக இருந்தது.
ஜனவரியில் சில துவக்ககட்ட வளர்ச்சியைப் பார்க்கமுடிந்தது. ஜனவரி 3ல் அந்த மாத உச்ச விலை $3.31ஐ அடைந்தது. பின்னர் சந்தை சரிவு ஏற்பட்டு மாத இறுதியில் $1.55 விலையில் முடிவடைந்தது. பிப்ரவரியில் சிறிய அளவில் மேடு பள்ளம் காணப்பட்டாலும் கடைசியில் 2022 பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து சந்தை மீதான நம்பிக்கைக் குறைவை அதிகப்படுத்தியது. அப்போது நாணயத்தின் விலை $1.17 ஆக இருந்தது. இந்தச் சமயத்தில் FLUX நாணயத்தின் மொத்த வழங்கலான 440 மில்லியனில் 222,306,404.75 நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அதாவது $267 மில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்துடன் 154வது பெரிய கிரிப்டோவாக உள்ளது.
ஃப்ளக்ஸ் விலைக் கணிப்பு
ஃப்ளக்ஸ் விலைக் கணிப்புகளை நாம் பார்க்கும் முன், நாம் புரிந்துகொள்ள வேண்டியது: கிரிப்டோகரன்சி விலை முன்னறிவிப்புகள் பெரும்பாலும் தவறானவை; நீண்டகால கிரிப்டோ விலைக் கணிப்புகள் பலநேரங்களில் சூத்திரங்கள் மூலம் கணக்கிடப்படுகின்றன; இதனால் எந்த நேரத்தில் அவை மாறக்கூடும்.
முதலில், gov.capital. இதன் FLUX நாணய விலைக் கணிப்பு 2022 இறுதிக்குள் நாணயம் $3ஐத் தொடும் என்கிறது. 2023 பிப்ரவரி 24ல் $3.23ஐத் தொட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. பின்னர் நாணயம் மேலே செல்லுமென்றும் அதிலிருந்து ஓராண்டில் $5.15ஐ எட்டுமென்றும் சொல்கிறது. இதன் 2025க்கான கணிப்புப்படி ஆண்டு துவக்கத்தில் $5.09 ஆகவும், அந்த ஆண்டு பிப்ரவரி 24ல் $5.99 ஆகவும் ஆண்டு இறுதியில் $6.60 ஆகவும் இருக்குமென்கிறது. 2026ல் நாணய விலை சரிந்து $5.80க்கு வரும்; ஆண்டு முடிவில் $8.11 ஆக இருக்கும். 2027 பிப்ரவரி 24ல் FLUX நாணயம் $6.13 மதிப்பில் இருக்குமென்று gov.capital கருதுகிறது.
UpToBrain தனது 2022க்கான Flux விலைக் கணிப்பில் இந்த ஆண்டில் நாணயம் $2.63ஐ எட்டுமென்கிறது. 2023ல் $2.89ஐயும் 2024ல் $3.53 விலையையும் அடையுமென்கிறது. இந்த வளர்ச்சி 2025ல் தொடர்ந்து நாணயம் $4.40க்கு வருமென்றும் 2026ல் $5 என்ற தடையைக் கடந்து $5.54 விலையை FLUX எட்டுமென்றும் சொல்கிறது. இந்த விலைக் கணிப்பு ஏறுமுகமாக இருந்தாலும் gov.capitalஐப் போலன்றி, ஒரே மாதிரியான கால அளவுகளில் இல்லாவிட்டாலும் நிலையான வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது.
PricePrediction.net விலைக் கணிப்புப்படி, ஃப்ளக்ஸ் நாணயம் குறைவான விலையில் தொடங்கி பெரிதாக ஆகுமென்கிறது. 2022 ஆம் ஆண்டில் வளர்ச்சி இருக்குமென்று இது கருதுகிறது. இந்த ஆண்டும் $2.03ஐயும், 2023ல் $2.87ஐயும், 2024ல் $4.42ஐயும் எட்டுமென்கிறது. 2025ல் ஃப்ளக்ஸ் $6.73 விலையை எட்டக்கூடுமென்றும், அடுத்த ஆண்டில் இது $9.78 ஆக உயருமென்றும் சொல்கிறது. 2027ல் $10 என்ற தடையை உடைத்து $13.68 என்ற சராசரி விலையில் இருக்குமாம். 2028ல் $19.30 ஆகவும் 2029ல் $28.32 ஆகவும் உயரக் கூடும். இந்தத் தளத்தின் 2030க்கான ஃப்ளக்ஸ் விலைக் கணிப்புப்படி அது $40.75 ஆகவும் 2031ல் இது $60.37 ஆகவும் உயரலாம் என்கிறது.
இறுதியாக, DigitalCoinPrice. இதுவும் ஏற்றத்தைச் சுட்டிக் காட்டினாலும் பிற கணிப்புகளைக் காட்டிலும் எச்சரிக்கையாக உள்ளது. இது இந்த ஆண்டில் நாணயம் $1.65ஐத் தொடுமென்கிறது. அடுத்த ஆண்டில் $1.93ஐயும், அதற்கடுத்த ஆண்டில் $2.08ஐயும் தொடும் என்கிறது. 2025ல் தொடர்ந்து காளையின் காலம் தொடர்ந்து $2.60 விலைக்கு வருமென்றும் பின்னர் சந்தைக்குள் கரடி நுழைந்து 2026ல் FLUX $2.38 விலைக்கு இறங்குமென்கிறது. இது நடந்ததும், நாணயம் பெரியளவில் மீண்டெழுந்து $3.35ஐ 2027ல் எட்டி, 2028ல் $3.93க்கு உயரும். 2029ல் $5.13ஐத் தொடும் என்று சொல்கிறது. 2030ல் $5.71 விலைக்கும் 2031ல் $6.70 விலையையும் தொடுமென்று DigitalCoinPrice எண்ணுகிறது.
இறுதியாக சில சிந்தனைகள்
முழுமையான நிலையற்ற தன்மை நிலவும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதாவது தொடர்ந்து கிரிப்டோவின் விலைகள் குறைவான நிலையிலும் இருக்க வாய்ப்புள்ளது. இது FLUXக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லவில்லை. சில தருணங்களில் ஒட்டுமொத்த சந்தையும் சரிவடையும்போது அதனால் இலாபகரமாக செயல்பட முடிந்ததால், மோசமான சந்தை விசைகளுக்கு எதிரான தடுப்பு சக்தி இதற்கு மட்டும் இருக்குமென்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
இரண்டாவதாக, ஃப்ளக்ஸ் சூழல்மண்டலத்தில் சில நேர்மறையான அம்சங்கள் உள்ளன. இவற்றை இந்த ஒரு செயற்தளம் மட்டும் வழங்கவில்லை. இது ஒரு பயனர் தளத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் அதை விரிவாக்க வேண்டும்.. அவ்வாறு நடக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய செயற்தளங்களும் பிளாக்செயின்களும் எல்லா நேரங்களிலும் வந்தபடி உள்ளன. வலைத்தொடர்பின் நல்லகாலங்கள் ஒரேநாளில் மாறக்கூடும். இன்று வெற்றிகரமாக இருப்பது நாளையும் அவ்வாறே தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை ஃப்ளக்ஸ் நாணயங்கள் உள்ளன?
பிப்ரவரி 24ன்படி, மொத்த வழங்கலான 440 மில்லியனில் 227,306,404.75 FLUX புழக்கத்தில் உள்ளன.
ஃப்ளக்ஸ் ஒரு நல்ல முதலீடு தானா?
இருக்கலாம். கடந்த 12 மாதங்களில் இது குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. இவ்வாறு சொல்கையில், நாம் கவனமாகவும் இருக்க வேண்டும். சமீபகாலமாக நாணயம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உலகளவில் பதட்டம் அதிகரிக்கும்போது சந்தைகள் அதற்கேற்ப எதிர்வினையாற்றும். நிலைமை சீரடையாது என்ற அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும் மற்றும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஃப்ளக்ஸ் மேலே செல்லுமா?
செல்லக்கூடும். அதே நேரத்தில், அது இறங்கவும் கூடும். குறைந்தது குறுகிய காலத்துக்காவது. இந்த நாணயம் இப்போது எங்கே இருக்கிறது, முன்பு எந்த உயரங்களைத் தொட்டது என்பதற்கிடையில் சில இடைவெளிகள் உள்ளன. ஆனால் எல்லாம் ஒரேநாளில் மாறிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். முன்கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நான் ஃப்ளக்ஸில் முதலீடு செய்ய வேண்டுமா?
இந்தக் கேள்விக்கு நீங்கள்தான் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் முன், உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மறக்காதீர்கள். விலை இறங்குவதைப் போல் ஏறவும் கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மிக முக்கியமாக, நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.