GALA நாணய விலைக் கணிப்பு: அது $1ஐ எட்டுமா?

By Currency.com Research Team

2021 டிசம்பரிலிருந்து இந்த நாணயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. 2022ல் GALA விலையில் எழுச்சி இருக்குமா?

GALA நாணய விலைக் கணிப்பு                                 
GALA நவம்பர் மாதத்தில் புதிய உச்சத்துக்குச் சென்றது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

கேம்ஸ் விநியோகிப்பாளரான Gala Gamesக்கு நவம்பர் மாதம் ஒரு வெற்றிகரமான மாதமாக இருந்தது. புதிய தனித்துவமான டோக்கன் (NFT) அவதாரங்களையும், தனது பண்ணை விளையாட்டான Town Star புதுப்பித்தல்களையும் வெளியிட்டு ஒரு புதிய உச்சத்தை எட்டியது. ஆனால் 2022ல் இந்த உச்சத்தைத் தாண்டுமா?

Gala Games, எரிக் ஷியர்மேயர் என்பவரால் நிறுவப்பட்டது. இவர்தான் Famville என்ற இணையவழி விளையாட்டையும் உருவாக்கியவர் (இதன் gPotato கரன்சியுடன் ஜப்பானிய கேம் வெளியீட்டாளர் Gala Groupஐக் குழப்பிக்கொள்ளக் கூடாது). இது ஆட்டக்காரர்களுக்கு அவர்கள் வீடியோ கேமில் செலவிடும் நேரத்துக்கும் பணத்துக்கும் உரிமையாளராக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இதுவரை இரண்டு கேம்களை இது வெளியிட்டுள்ளது. இதில் ஆட்டக்காரர்கள் NFTகளை சந்தையிலிருந்து கொள்முதல் செய்து விளையாட்டில் பயன்படுத்த முடியும். மையமின்மையைப் போலவே, Gala Games-ன் இன்னொரு முக்கியக் கொள்கையாக அது சொல்வது, விளையாட்டுக்கு முன்னுரிமை அளித்து “நீங்கள் உண்மையிலேயே விளையாட விரும்பும் ஆட்டத்தை” உருவாக்குவதை உறுதிசெய்வது ஆகும். 

Gala Games-ன் சொந்த டோக்கனான GALA, 2020ல்தான் தோற்றுவிக்கப்பட்டது. இது 2021ல் விலையில் நல்ல ஏற்றத்தைக் கண்டது. நவம்பரில் $0.001லிருந்து $0.83க்கு ஏறியது. எனினும், பொதுவாக கிரிப்டோவில் நிலவிய கடினமான டிசம்பர் மற்றும் ஜனவரி 2022க்குப்பின், ஜனவரி 22ல் நாணய மதிப்பு சரிவைச் சந்தித்து $0.18க்கு வந்தது. இதுவே நவம்பருக்குப் பிறகான மிகக் குறைந்த விலையும் ஆகும். ஜனவரி 26ல், நாணயத்தின் மதிப்பு ஏறத்தாழ $0.22 ஆக இருந்தது.

GALAவின் விலை வரலாறு

GALA டோக்கன் 2020 செப்டம்பர் 18ல் $0.0014 என்ற விலையில் தோற்றுவிக்கப்பட்டது. ஆண்டின் எஞ்சிய பகுதி முழுக்கவே துவக்க விலையைத் தாண்டுவதற்குத் தடுமாறியது. 2020 டிசம்பர் 28ல் நாணயம் அதுவரை காணாத மிகக் குறைந்த விலையான $0.0001ஐத் தொட்டது.

GALA இந்தச் சரிவுப் போக்கினை ஒருவழியாக இந்த ஆண்டில் உடைத்து பிப்ரவரி 2021ல் ஏறத் தொடங்கியது. பிப்ரவரி 27ல் நாணயம் $0.032 என்ற விலையை எட்டியது. இது GalaCon என்ற இணையவழி விளையாட்டு நிகழ்ச்சி, Gala Games குழுவினால் நடத்தப்பட்டபோது நிகழ்ந்தது. இந்நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளும் அதேபோல நிறுவுனர் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இது இரு தினங்களுக்கு GamerJibe செயற்தளத்தில் வழங்கப்பட்டது. 1,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த மாதத்திலும் விலை உந்துதல் தொடர்ந்து மார்ச் 10ல் $0.033 விலையை எட்டியது. மார்ச்சில் Gala பாலிகன் நெட்வொர்க்குடன் கூட்டாண்மையை அறிவித்தது. ஆட்டக்காரர்கள் செலுத்த வேண்டியிருந்த எரிவாயுக் கட்டணங்களைக் குறைப்பதற்காக Gala பாலிகனுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. பாலிகனுடன் இணைந்து ஒரு புதிய விளையாட்டை உருவாக்குவதாகவும் அது அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பில் குறைவான விபரங்களே இருந்தன.

அடுத்த மாதங்களில், GALA விலை விழத் தொடங்கி ஜூன் 22ல் $0.006க்கு வந்தது. திரும்பவும் ஜூலை, ஆகஸ்டில் ஏற ஆரம்பித்தாலும் சமீபத்தில்தான் குறிப்பிடத்தக்க ஆதாயங்களைத் தந்துள்ளது.

செப்டம்பரில் GALAவின் மிகப்பெரிய விலை எழுச்சிகளில் ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதற்குக் காரணம் முக்கியச் சந்தைகளில் நாணயம் பட்டியலிடப்பட்ட செய்தி. செப்டம்பர் 13ல், பினான்ஸ் தனது பயனர்கள் GALA உடன் வர்த்தகம் செய்யலாம் என்று அறிவித்தது. அது இந்த நாணயத்துக்கு பிட்காயின், பினான்ஸ் காயின், பினான்ஸ் USD, டெதர் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு இணைகளை அறிவித்தது. பட்டியலிடப்பட்ட அன்று புதிய உச்சமான $0.04 விலையை GALA எட்டியது. 

மூன்று நாட்களுக்குப்பின், Bibox சந்தையும் GALA-வைப் பட்டியலிடுவதாக அறிவித்தது. பினான்ஸைப் போலின்றி இது டெதருடன் மட்டுமான ஒரேயொரு இணையை பட்டியலிட்டது. திரும்பவும் விலை எழுச்சிகண்டு $0.10வைத் தொட்டது.

The Town Star ரீங்காரம்

Gala Gamesக்கு செப்டம்பர் மாதம் பரபரப்பானதாக இருந்தது. இந்த மாதத்தில்தான் தனது பண்ணை விளையாட்டுக்கு Town Star என்ற புதிய வெகுமதியை அது அறிமுகப்படுத்தியது. TownCoin என்பது பண்ணை விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வ பிளாக்செயின் அடிப்படையிலான வெகுமதி ஆகும். ஒரு Gala Games வலைப்பதிவு இவ்வாறு கூறியது: “வருங்கால Gala Games விருதுகளைக் கட்டமைப்பதில்  சம்பாதிக்க-விளையாடு வெகுமதி மாதிரிகளுக்கான பொருளாதார அடிப்படையை இது உருவாக்கும்”.

செப்டம்பர் 17ல் TownCoin அறிவிப்பு வெளியான தேதியில் GALA விலை மேலும் கூடுதலாக உயர்ந்து $0.11 என்ற உச்சத்தைத் தொட்டது.

நவம்பரில் மேலும் பல Town Star புதுப்பித்தல்கள் வெளியாயின. இந்த மாதம் GALA டோக்கன் விலையில் மேலும் சாதனைகளைக் கண்ட ஒன்றாக அமைந்தது. நவம்பர் 25ல் Gala Games பண்ணை விளையாட்டில் புதிய கதாபாத்திரமான, Lolliஐ அறிமுகப்படுத்தியது. இது கேண்டி குயின் (Candy Queen) என்றும் அறியப்படுகிறது. பின்னர் இந்தக் கதாபாத்திரம் புத்தம் புதிய கட்டிடமான கேண்டி ஷாப் மூலம் விளையாட்டில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆட்டக்காரர்கள் இனிப்புகளைச் செய்து விற்க, ஒருவேளை அதிக விலைக்குக்கூட விற்க அனுமதிக்கிறது.

Gala Games, VOX என்றழைக்கப்படும் NFT செயல்திட்டத்தையும் கொண்டுள்ளது. இதில் பயனர்கள் வெவ்வேறு அவதாரங்களை வெவ்வேறு பண்புகளுக்கு ஏற்ப வாங்கமுடியும். புதிய VOX அவதாரங்கள் நவம்பர் 27ல் வெளியிடப்பட்டது. இது அடுத்து வரவிருந்த விளையாட்டான Mirandus மூலம் உத்வேகம் பெற்று வெளியானது. இந்தப் புதிய அவதாரங்களில் ஒன்றை வைத்திருப்பதன் மூலம், ஆட்டக்காரர்கள் Town Star-ல் தினசரி வெகுமதிக்குத் தகுதி பெறுகிறார்கள். 

இது Gala Gamesஐச் சுற்றிலும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியது மற்றும்  அதன் டோக்கன் அதிகபட்ச விலையேற்றத்தைக் கண்டது. நவம்பர் 16ல் $0.11ல் இருந்த GALA, நவம்பர் 26ல் $0.83க்கு உயர்ந்தது. இது அதுவரை காணாத உச்சமாகும். அதன் பின்பு விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் GALA கிரிப்டோ விலைக் கணிப்பு இப்போதும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. எனினும், முன்னறிவிப்புகள் பெரும்பாலும் தவறானவை. உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் எப்போதும் செய்துகொள்ள வேண்டும்.

GALA நாணய விலைக் கணிப்பு

பகுப்பாய்வாளர்களின் GALA விலைக் கணிப்பும் சூத்திர அடிப்படையிலான முன்னறிவிப்புகளும் படிப்படியான ஏறுமுகப் போக்கினைக் குறிப்பிடுகின்றன. இதை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், PricePrediction இது அதிகபட்ச சராசரி வர்த்தக விலையாக $0.35ஐ 2022ல் அடையும் என்கிறது. மேலும் 2022க்கான அதன் சராசரி GALA நாணய விலைக் கணிப்பு $0.31. 2025ல் GALAவின் விலை குறைந்தபட்ச அளவான $0.90ஐ எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலத்துக்கான அதிகபட்ச விலை $1.10 மற்றும் சராசரி விலை $1.62.

WalletInvestor GALAவை ஓர் “அருமையான” நீண்டகால முதலீடாகச் கூறுகிறது. இதன் கணிப்பு PricePredictionஐக் காட்டிலும் நீண்டகால நோக்கில் கூடுதல் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இதை எழுதிக் கொண்டிருந்த நேரப்படி, அதன் GALA விலைக்கணிப்பு ஒருவருடத்தில் $1.74க்கு அருகில் வருமென்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ $2.45 வரையிலும் வரக்கூடுமாம். 2025க்கான அதன் அதிகபட்ச GALA நாணய விலைக் கணிப்புப்படி நாணயம் $2 மதிப்பை மே மாதம் தாண்டும் என்கிறது. தளத்தின் 2022க்கான அதிகபட்ச சராசரி விலைக் கணிப்பாக, டிசம்பருக்குள் $0.70க்கு வரும் என்கிறது.

DigitalCoin-ன் GALA விலைக்கணிப்பு இன்றைய தேதிப்படி அது WalletInvestor-ஐக் காட்டிலும் குறைவான நம்பிக்கையுடையதாக உள்ளது. இது 2022ல் GALAவின் சராசரி விலை $0.30; 2025ல் $0.46; 2029ல் $0.92 என்கிறது. 

PricePrediction.net வெளியிட்ட தரவுப்படி 2030க்கான GALA நாணய விலைக் கணிப்பு $5.49 ஆக உள்ளது. 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

GALA ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். 2021ல் GALAவில் ஏற்றமான போக்கு இருந்தது. நவம்பர் 26ல் புதிய உச்சமாக $0.83ஐ எட்டியது. எல்லாக் கணிப்புகளிலும் பொதுவாகக் காணும் அம்சம், படிப்படியான வளர்ச்சி தொடரும் என்பதுதான். எனினும், கணிப்புகள் எப்போதுமே சரியானவையாக இருப்பதில்லை. எனவே முதலீடு செய்யும்முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.

GALA மேலே செல்லுமா?

செல்லக்கூடும். முன்னறிவிப்பு தளங்களிடையே ஏற்றப் பாதையில் செல்லும் என்ற பரிந்துரை பொதுவானதாக உள்ளது. எனினும் விலைக் கணிப்புகள் தவறாக இருக்கக்கூடும். எனவே நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

GALAவில் நான் முதலீடு செய்ய வேண்டுமா?

அது உங்களைப் பொறுத்த ஒன்று. GALA நாணயம் சமீபத்தில் தனது பண்ணை விளையாட்டான Town Star-ல் செய்த புதுப்பித்தல்களுக்குப்பின் வெற்றியைக் கண்டுள்ளது. தற்போது மேலும் மூன்று விளையாட்டுக்களை உருவாக்கி வருகிறது. வெளியீட்டு தேதிகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. எனினும், அனைத்து பிளாக்செயின் செயல்திட்டங்களும் வெற்றியடைவதில்லை. தோல்வியுற்ற நாணயங்களின் பட்டியல் மிகப்பெரியது. முதலீட்டாளர்கள் எப்போதும் கிரிப்டோகரன்சிகளில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்யவேண்டும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image