HNT விலைக் கணிப்பு: இது எழுமா அல்லது வீழுமா?

By Currency.com Research Team
• புதுப்பிக்கப்பட்டது

2021ஆம் ஆண்டு HNTக்கு ஆர்வமூட்டக்கூடியதாக அமைந்திருந்தது. 2022ல் என்ன நடக்கும்?

HNT விலைக் கணிப்பு                                 
2022ல் $100 விலையை ஹீலியம் எட்டுமா? – படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

5G சேவையை இந்த பிளாக்செயின் தொடங்கியதும் HNT விலை புதிய உச்சத்தை நவம்பர் மாதம் எட்டியதுடன் 2021ஆம் வருடம் ஒரு வெற்றிகரமான ஆண்டாக ஹீலியத்துக்கு அமைந்தது. ஹீலியம் விலையில் அடுத்து என்ன நடக்கும்?

இதன் நிறுவனர்கள் ‘மக்களின் வலைத்தொடர்பு’ என்பதைப் போன்ற மையமில்லா இணையத்தொடர்பை உருவாக்கும் நோக்கத்தோடு களமிறங்கிய 2013ஆம் ஆண்டில் ஹீலியத்துக்கான யோசனை உதித்தது. 2019ல் ஹீலியம் தோற்றுவிக்கப்பட்டது. ஒரு ஹீலியம் ஹாட்ஸ்பாட்டை வழங்குவதால் பயனர்களுக்கு தொகை அளிக்கிறது. தொகையானது இதன் சொந்த கிரிப்டோகரன்சியான HNT ஆக வழங்கப்படுகிறது.

2021 அக்டோபரில் மிகப்பெரிய இணையச் சேவையளிப்பு நிறுவனம் டிஷ் (Dish) உடன் புதிய கூட்டாண்மைக்குள் ஹீலியம் நுழைந்தது வெளிப்படுத்தப்பட்டபின், முந்தைய சாதனையை HNT நாணயம் உடைத்தது. இந்த முனைப்பை வலைத்தொடர்பு அடிப்படையிலான கிரிப்டோகரன்சி தக்கவைத்துக் கொண்டதா?

ஹீலியம் வெள்ளையறிக்கையிலிருந்து

`ஹீலியம்: ஒரு மையமற்ற வடமில்லா வலைத்தொடர்பு` 2018 நவம்பர் 14ல் வெளியிடப்பட்டது. அது 20 பக்க நீளமுடையது.

இந்த வெள்ளையறிக்கை “செல்லுலார், வைஃபை, புளூடூத் போன்ற தற்போதைய வலைத்தொடர்பு தீர்வுகளுக்கு” ஒரு நவீன மாற்று வழியை வழங்குகிறது. முந்தைய தீர்வுகள் “உகந்ததாக இல்லை: அவை அதிக செலவு பிடிப்பவை, அதிக ஆற்றலைச் செலவிடக்கூடியதாக அல்லது மிகக் குறுகிய வரம்புடையதாக உள்ளன.” என்கிறது.

மேலும் அது கூறுவதாவது: ”ஹீலியம் வலைத்தொடர்பு என்பது ஒரு மையமற்ற வடமில்லா வலைத்தொடர்பு. இது உலகெங்கிலுமுள்ள சாதனங்கள் வடமின்றி இணையத்தோடு இணையவும் அதிக ஆற்றல் செலவாகக்கூடிய செயற்கைக்கோள் இடமறியும் வன்பொருளின் தேவையின்றி அல்லது செலவுமிக்க செல்லுலார் திட்டங்கள் இன்றி தங்கள் இடத்தை அடையாளம் காணவும் முடியும்.”

இந்த ஆவணம் ஹீலியத்தின் கருத்தொற்றுமை நெறிமுறை குறித்தும் சொல்கிறது: “இந்த வடிவமைப்பின் தேவைகளான அனுமதி தேவையில்லாத, மையமில்லாத, எதிர்பாரா செயலிழப்புகளைத் தாங்கக்கூடிய தன்மை போன்றவற்றை பூர்த்திசெய்யக்கூடிய பயனுள்ள உழைப்பின் அடிப்படையிலும் மிக உயர்தரமான சென்சார் கொண்ட பரிவர்த்தனை இயங்குமுறையையும் கொண்டது.”

ஹீலியத்தின் விலைக் கணிப்பு

2019 ஜூலையில் ஹீலியத்தின் முதல் தொகுதி மைன் செய்யப்பட்டது. ஆனால் இதன் விலை $1 என்ற தடையைக் கடக்க ஓராண்டுக்குமேல் ஆனது. 2020 ஆகஸ்டில், ஹீலியம் பிளாக்செயின் அடிப்படையில் அமைந்த மற்றொரு டோக்கனான டேட்டா கிரெடிட்ஸ் ஏற்படுத்தியபோது HNT விலையில் எழுச்சியைப் பார்க்க முடிந்தது. டேட்டா கிரெடிட்ஸ் என்பது இரட்டை டோக்கன் முறையின் ஒரு பகுதி. அதாவது இதை HNTயை ஒரு கணக்குக்கு அனுப்புவதன் மூலமாக (எரிப்பது மூலமாக) மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். டேட்டா கிரெடிட்ஸின் முக்கிய பயன் ஹீலியம் வலைத்தொடர்பைப் பயபடுத்துவதற்கான தொகையைச் செலுத்துவதாகும்.

டேட்டா கிரெடிட்ஸ் ஏற்படுத்தப்பட்டதால் ஹீலியம் தன்னை மதிப்புக்குரிய ஒன்றாக நிரூபித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11ல் இருந்த $0.67 விலையிலிருந்து ஆகஸ்ட் 15ல் $1.77க்கு ஏறியது. இந்த முனைப்பு செப்டம்பர்வரை தொடர்ந்து நாணயம் $2 என்ற குறியீட்டைக் கடந்தது. இதே சமயத்தில் HIP என்றழைக்கப்படும் ஹீலியம் மேம்பாட்டு முன்மொழிவில் HNTக்கான டேட்டா கிரெடிட்ஸ் விகிதமும் புதுப்பிக்கப்பட்டது.

2020 நவம்பரில் சமூகம் கரன்சியின் பற்றாக்குறையை உறுதிப்படுத்துவதற்காக HNTயின் அதிகபட்ச வழங்கலை 223 மில்லியன் என்று அமைப்பதற்காக இன்னொரு HIPக்கு ஒப்புதலளித்தது. இந்த புதுப்பிப்பில் பாதியாக்கம் என்ற கருத்தாக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹீலியம் பாதியாக்கம் நடைபெறும். இது ஒரு மாதத்தில் மைன் செய்யக்கூடிய ஹீலியத்தின் எண்ணிக்கையைப் பாதியாக மாற்றும்.

HNT விலை அக்டோபர் 31ல் $1க்கும் கீழாகக் குறைந்தது. ஆனால் இந்த வழங்கல் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டபின் இன்னொரு எழுச்சியைக் கண்டது. நவம்பர் 21ல், செய்தி அறிவிக்கப்பட்ட இருதினங்களுக்குப்பின் விலை $1.80ஐத் தொட்டது. இது வரவிருக்கும் விசயங்களுக்கான ருசியைக் காட்டுவதாக இருந்தது.

மேல்நோக்கிய நடை 

கடந்த ஆண்டு ஹீலியத்துக்கு மேல்நோக்கிய பயணமாகவே இருந்தது. ஜனவரியில் ஏறத்தொடங்கிய விலை மார்ச்சில் $5 குறியீட்டைக் கடந்தது. ஏப்ரல் 14ல் ஹீலியம் இன்னொரு HIPயை வெளியிட்டது. அதன்படி 5G சேவையை வழங்க அனுமதி பெற்று உலகின் முதல் நுகர்வோருக்கு உரிமையான 5G வலைத்தொடர்பாக ஆனது.

அந்த மாதத்தின் பின்பகுதியில் ஹீலியம் FreedomFi உடன் இணைந்து 5G சேவையை வழங்கத் தொடங்குவதாக அறிவித்தது. HNT மைன் செய்வதற்கான வன்பொருள் வடிவமைப்பிலும் ஹாட்ஸ்பாட் 5G சேவையளிப்பிலும் கேட்வேகளை உருவாக்குவதிலும் FreedomFi ஈடுபட்டது. இந்தச் செய்தி குறித்துக் கூறுகையில், அமெரிக்க மத்திய தகவல்தொடர்பு ஆணைய முன்னாள் தலைவர் மைக்கேல் ஓ’ரைலி கூறியதாவது: “நுகர்வோர் கேட்வேக்களை வலைத்தொடர்பு விநியோகக் கருவிகளாக மாற்றி அதை மிகப் பரபரப்பான கிரிப்டோகரன்சியாக ஒருங்கிணைப்பது – நிறுவனங்களின் மாறிவரும் திட்டங்களுடன் நிலையாக இருப்பது – இவையெல்லாம் தனிப்பட்ட 5G பயன்பாட்டில் அதீதக் கட்டணங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை. இதைச் சந்தை ஒப்புக்கொள்கிறதா என்று இப்போது நாம் பார்க்கலாம்!”

சந்தை ஒப்புக்கொள்ளத்தான் செய்தது. 5G அறிவிப்புக்குப்பின், HNT விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஏப்ரல் 6ல் $18.66க்கு உயர்ந்து மே 28ல் $19.51ஐத் தொட்டது. அடுத்த இரு மாதங்களுக்கு $15 அடையாளத்துக்குக் கீழேயே இருந்தது. பின்னர் ஆகஸ்டில் $20 என்ற மனரீதியான தடையை உடைத்தது.

முதல் பாதியாக்கலும் டிஷ் (Dish) இணைதலும்

பிளாக்செயின் அடிப்படையிலான வலைத்தொடர்புக்கு ஆகஸ்ட் மாதம் பரபரப்பானதாக அமைந்தது. முதல் பாதியாக்கம் ஆகஸ்ட் 1ல் இடம்பெற்றது. இது மைனிங் செய்யக்கூடிய HNT எண்ணிக்கையை வருடத்துக்கு 60 மில்லியன் என்பதிலிருந்து 30 மில்லியனாகக் குறைத்தது. பத்து நாட்களுக்குப்பின் ஹீலியம் அமெரிக்க தொழில் முனைவு மூலதன நிறுவனமான Andreessen Horowitz தலைமையில் டோக்கன் விற்பனை மூலம் $111 மில்லியன் ((£80.23 மில்லியன்) திரட்டியதாகச் செய்தி வெளியிட்டது. இந்தப் புதிய மூலதனம் 5G வலைத்தொடர்பைச் செயல்படுத்துவதற்கு நிதியளிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் ஹீலியம் விலைக்கு ஊக்கமளித்து ஆகஸ்ட் 31ல் விலை $24.81ஐத் தொட்டது.

ஹீலியத்தின் ஏற்றம் பின்வரும் மாதங்களிலும் தொடர்ந்தது. காரணம் இது வலைத்தொடர்பு நிறுவனமான டிஷ் உடன் கூட்டாண்மையை அறிவித்ததுதான். இந்தக் கூட்டியக்கம் அக்டோபர் கடைசியில் வெளியிடப்பட்டது. டிஷ் சந்தாதாரர்கள் ஹீலியம் முனையங்களை இயக்கவும் அவ்வாறு தங்கள் 5G வலைத்தொடர்பைப் பகிர்ந்து கொள்வதால் HNTயை ஈட்டவும் அனுமதித்தது. இந்த நகர்வு பிளாக்செயினுக்கு மிகப்பெரிய எட்டுவைப்பாக இருந்தது. இந்த இயக்கத்தில் இணைந்த முதல் பெரிய இணையச் சேவை நிறுவனமாகவும் டிஷ் உள்ளது.

HNT விலையில் நவம்பர் ஒரு மிகச்சிறந்த ஏற்றத்தைத் தந்தது. நவம்பர் 1ல் நாணயத்தின் விலை $28.26 ஆக இருந்தது. அங்கிருந்து மேலேறி அதுவரையில்லாத உச்சவிலையான $55.22ஐ நவம்பர் 12ல் தொட்டது. எனினும் நவம்பர் 24ல் HNT விலை $43ஐச் சுற்றி இருந்தது.

டிசம்பரில் மேலும் விலை இறங்கி $26.03 என்ற இறக்கத்தைத் தொட்டது. இந்தளவு குறைந்ததற்கு முக்கியக் காரணம் கிரிப்டோ சந்தையெங்கும் காணப்பட்ட மாறியல்பு தன்மைதான். பிட்காயின் விலையும் 19% இறங்கியது. ஜனவரி 24ல் நாணயத்தின் மதிப்பு 14 வாரங்களிலேயே மிகக் குறைந்த விலையான $19.96 ஆக இருந்தது.

எனினும் விலை சற்று மீண்டு வந்து 2022 பிப்ரவரி 8ல் $27.99 ஆக வர்த்தகமானது.

புதிய ஆண்டினைப் பார்க்கும்போது, மக்களால் வலிமைபெற்ற வலைத்தொடர்பு 2022ல் ஏற்றம் பெறுமா?

HNT விலைக் கணிப்பு

சொல்லக்கூடிய நபரைப் பொறுத்து ஹீலியத்தின் விலைக் கணிப்பு மாறுபட்டதாக இருக்கிறது.  கிரிப்டோகரன்சி சந்தை தொகுப்பாளர் SwapSpace நீண்டகால விலை அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடுகிறது. அதேபோல இதுவொரு இலாபகரமான முதலீடு என்றும் சொல்கிறது. அதன் ஹீலியம் விலைக் கணிப்புப்படி, “ஒட்டுமொத்தமாக, ஹீலியம் கிரிப்டோகரன்சிக்கு நம்பிக்கையான எதிர்காலம் உள்ளது. வருங்காலத்தில் தொடர்ந்து வளரும் சாத்தியம் உள்ளது.” என்கிறது.

DigitalCoinPrice அளிக்கும் HNT விலைக் கணிப்பைப் பார்த்தால் அது இந்த ஆண்டு இறுதியில் ஹீலியம் $39.91 விலையைத் தொடுமென்றும் 2022 அக்டோபரில் அதன் விலை $40.97க்கு வருமென்றும் கணிக்கிறது. 2025 விலைக் கணிப்பின்படி, அதன் சராசரி விலை $58.76ஐ எட்டுமென்றும் தெரிவிக்கிறது.

Gov Capital மேலும் நம்பிக்கையூட்டக்கூடிய நீண்டகாலக் கண்ணோட்டத்தைத் தருகிறது. இதன் 2022க்கான HNT விலைக்கணிப்புப்படி ஏப்ரல் துவக்கத்தில் $50 அடையாளத்தை நாணயம் உடைக்கும் என்கிறது. பின் விலை செங்குத்தாக உயர்ந்து ஐந்து ஆண்டுகளில் தலை சுற்ற வைக்கும் $935.27 விலையைத் தொடும் என்று கணிக்கிறது.

PricePrediction.net கூட நேர்மறையான முன்னறிவிப்பைத் தருகிறது. இது 2022ல் $46.42 அதிகபட்ச விலையாக இருக்குமென்றும், இதுவே 2025ல் $147.49 என்றும் 2030ன் அதிகபட்ச விலை $1,034.86 ஆக இருக்குமென்றும் கணிக்கிறது.

ஹீலியம் கிரிப்டோ ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். HNT விலைக் கணிப்பு கலவையானதாக இருந்தாலும், நீண்டகால நோக்கில் நாணயத்தின் விலை அதிகரிக்கும் என்பது ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. எனினும் கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை. கிரிப்டோகரன்சியை வாங்குமுன் நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். உங்களால் இழக்க முடிந்த தொகைக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். கணிப்புகள் என்ன கூறினாலும் சரி, விலையானது ஏறவும் இறங்கவும் சாத்தியமுடையவை.

HNTக்கு மதிப்பைத் தருவது எது?

HNTயின் மதிப்பு ஹீலியம் வலைத்தொடர்பிலிருந்து கிடைக்கிறது. டேட்டா கிரெடிட்ஸ் ஹீலியம் வலைத்தொடர்பைப் பயன்படுத்துவதற்காகச் செலுத்தப்படுகிறது. இவை ஹீலியத்தை கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் மைனிங் செய்யப்படுகின்றன. இதன் அர்த்தம் வலைத்தொடர்புப் பயன்பாடு அதிகரித்து வரவர ஹீலியம் அரிதானதாகவும், மேலும் மதிப்பு மிக்கதாகவும் ஆகிவரும்.

ஹீலியத்தில் (HNT) நான் முதலீடு செய்ய வேண்டுமா?

HNT விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்னறிவிப்பாளர்கள் பெருமளவில் நேர்மறையான மனப்பாங்கையே கொண்டுள்ளனர்.

நீங்கள் HNTயில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், தயவுசெய்து அதற்குத் தேவையான சுய ஆய்வினைச் செய்யுங்கள். உங்களால் இழக்க முடியும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

கூடுதல் வாசிப்புக்கு

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image