ஃபோரக்ஸ் வர்த்தகம்: UK-யில் வரிவிதிப்பு குறித்த விளக்கம்

By Currency.com Research Team

ஃபோரக்ஸ் வர்த்தகர்களுக்கு UK வருமான வரிக்கான எங்களது ஆகச் சிறந்த வழிகாட்டி

UK-யில் ஒரு ஃபோரக்ஸ் வர்த்தகராக ஆக நீங்கள் விரும்பினால், ஃபோரக்ஸ் வரி குறித்தும் UK வருமானவரிச் சட்டத்தின்படி உங்கள் ஃபோரக்ஸ் வர்த்தக வரிப் பொறுப்புகள் என்ன என்பது குறித்தும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது வருமான வரியில்லாத ஒரு வகையா அல்லது உங்கள் ஆதாயங்களைத் தெரிவித்து ஏதேனும் தொடர்புடைய வரியைக் கட்டவேண்டுமா? எப்போது இந்தவகை வருமானத்தில் வரி விதிக்கப்படாது மற்றும் எப்போது வரி விதிக்கப்படும் என்று பார்க்கலாம்.

ஃபோரக்ஸ் வர்த்தக வரிகளைப் புரிந்துகொள்ளுதல்

நீங்கள் எப்போதும் ஒரு வரி கணக்காளரின் ஆலோசனையை அல்லது HMRC-யை நாடவேண்டும். ஏனெனில் வரிச்சட்டம் குழப்பமானதாகவும் மாறக்கூடியதாகவும் இருக்கும். UK வரி ஆண்டு ஏப்ரல் 6 முதல் அடுத்த ஏப்ரல் 5 வரை இருக்கும். வழக்கமான தனிநபர் வருமான வரி வரம்பு £12,570 ஆகும். இந்தத் தொகை வரையிலும் நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

UK-யில் ஃபோரக்ஸ் வர்த்தக வரியானது வர்த்தகர்களுக்கு உகந்த வரியமைப்பு முறைகளில் ஒன்று. இது மூன்று கோணங்களைக் கணக்கில் கொள்கிறது: எப்படி ஃபோரக்ஸ் வர்த்தகச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன, வர்த்தகமாகும் முறையாவண வகை மற்றும் உங்கள் வரி நிலையை எப்படி HMRC பதிவுசெய்கிறது.

HMRCக்கு இணங்க உங்கள் ஃபோரக்ஸ் வர்த்தக வரிநிலையைத் தெரிந்துகொள்ளுங்கள்

HMRC எப்படி உங்கள் வர்த்தக நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறது என்பது உங்கள் வரி பொறுப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்துகிறது. வர்த்தகர்களையும் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளையும் பின்வரும் வகைகளில் ஒன்றாக HMRC வகுக்கிறது:

ஊக வர்த்தகம் - சூதாட்ட நடவடிக்கைகளைப் போன்றே கருதப்படுகிறது. இந்த வகையின் கீழ் நீங்கள் வகைப்படுத்தப்பட்டால், ஃபோரக்ஸ் வர்த்தகத்திலிருந்து ஈட்டும் வருவாய் வருமான வரியாகவோ, வணிக வரியாகவோ அல்லது முதலின வருவாய் வரியாகவோ எடுக்கப்படாது. இருப்பினும், வருமானத்துக்கு வரியில்லை என்பதால், சாத்தியமுள்ள இழப்புகளுக்கு உங்களால் உரிமைகோர முடியாது.

சுயதொழில் வர்த்தகம் - பொதுவான சுயதொழில் செய்பவர்களாக இந்த வகை வர்த்தகர்கள் வகைப்படுத்தப்படுவதால் இவர்களுக்கு வணிக வரி கட்டவேண்டிய பொறுப்பு உண்டு.  சுயதொழில்புரிபவராக உங்களுக்கு வரிவிதிக்கப்பட்டால் உரிமைகோரத்தக்க இழப்புகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

தனியார் முதலீட்டாளர் - ஒருவரது இலாப நட்டங்கள் முதலின வருவாய் வரிக்கு உட்பட்டிருப்பது (CGT).

UK வரிச்சட்டத்தின்படி ஃபோரக்ஸ் வர்த்தக வருவாய்: முறையாவண வகைகள்

UK-யில் ஃபோரக்ஸ் வர்த்தகம் மீதான வரியானது எந்தவகையான கரன்சி இணைகளில் நீங்கள் வர்த்தகம் செய்கிறீர்கள் என்ற முறையாவணத்தைப் பொறுத்தது: நீங்கள் பரவல் பந்தயம் கட்டுதலின் கீழோ அல்லது வேறுபாடுகளுக்காக ஒப்பந்தத்தை வர்த்தகம் செய்பவராகவோ வரக்கூடும் (CFDs).

வர்த்தக நடவடிக்கை பரவல் பந்தயம் கட்டுதலில் மேற்கொள்ளப்பட்டால், UK வரிச்சட்டப்படி வருவாய்க்கு வரிவிலக்கு உண்டு.  ஃபோரக்ஸ் வர்த்தகர் பார்வையிலிருந்து பரவல் பந்தயம் கட்டுதல் என்பது இடைத்தரகரின் விலைகளின் அடிப்படையில், ஒரு சொத்துக்கு அதை உண்மையில் சொந்தமாக வைத்திருக்காதபோது, எப்போது ஒரு வர்த்தகர் விலை நகர்வுகளை ஊகிக்கிறாரோ அதனைக் குறிக்கும். இதன் பாதகமான அம்சம் என்னவென்றால் வர்த்தக நடவடிக்கைகள் பரவல் பந்தயம் கட்டுதல் என்று வகைப்படுத்தப்படும்போது உங்கள் மற்ற தனிப்பட்ட வருவாய்க்கு எதிராக இழப்புகளுக்கு உரிமைகோர முடியாது.

எனினும், ஒரு ஃபோரக்ஸ் வர்த்தகராக உங்களுக்கு ஒரு பலன் உள்ளது: நீங்கள் முத்திரைக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. ஏனெனில், பரவல் பந்தயம் கட்டுதலில் சொத்துக்கு நீங்கள் உடைமையாளராக இருப்பதில்லை. மாறாக ஒருவகையான பெறுதி (derivative) முறையாவணத்தில் நீங்கள் வர்த்தகம் செய்கிறீர்கள். முத்திரை வரியானது பரவல் பந்தயம் வழங்குநர்கள் (தரகர்கள்) மீது விதிக்கப்படுகிறது.

What is your sentiment on GBP/USD?

1.24016
Bullish
or
Bearish
Vote to see community's results!

நீங்கள் CFDகளில் வர்த்தகம் செய்தால், உங்கள் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து பெறும் வருவாயில் முதலின வருவாய் வரி (CGT) விதிக்கப்படும். வரிசெலுத்துவோருக்கு அடிப்படை வீதத்தில் 10% என CGT இருக்கும். மொத்த வருவானம் £12,571 முதல் £50,270 வரை இருக்கும்போது (அடிப்படை வரி வீதம் அடைப்புக்குறி)

அதிக வரி அலைவரிசைக்குள் நீங்கள் இருந்தால் (உங்கள் மொத்த வருமானம் £50,271 மற்றும் அதற்குமேல்) உங்கள் இலாபம் 20% CGTக்கு உட்பட்டது. ஆனால் CFDகளில் வர்த்தகம் செய்வதிலிருந்து உடனடியாக விலக வேண்டாம். காரணம் முதல் £12,300 மீது CGT வரி தள்ளுபடி உள்ளது. இந்தத் துவக்க வரம்பினைப் புறக்கணிக்கக் கூடாது.

உங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய, உங்கள் பரிவர்த்தனைகளின் பதிவேட்டைத் தயாரிக்கலாம் அல்லது உங்கள் தரகரிடமிருந்து இலாபநட்டக் கணக்கைக் கேட்கலாம். மனதில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம், உங்கள் வர்த்தக நடவடிக்கையில் நட்டம் ஏற்பட்டால் நீங்கள் வரி நிவாரணம் கோரமுடியும்.

முழுநேர வர்த்தகரும் கூடுதல் வருவாய்க்காக வர்த்தகம் செய்பவரும்

பகுதிநேர வர்த்தகம் செய்பவருக்கும் ‘வாழ்க்கைத் தொழிலாக’ வர்த்தகம் செய்பவருக்கும் வேறுபாடு உள்ளது.

  • நீங்கள் ஒரு பகுதிநேர வர்த்தகரெனில், பரவல் பந்தயம் கட்டுதல் நடவடிக்கைகளிலிருந்து பெறும் உங்கள் வருவாய்கள் உங்கள் துணைநிலை வருவாய் மூலமாக எடுக்கப்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படும்.
  • நீங்கள் ஒரு முழுநேர வர்த்தகரெனில், ஃபோரக்ஸ் வர்த்தகத்திலிருந்து வரும் இலாபங்கள் உங்கள் முதன்மை மூல வருவாயெனில், நீங்கள் வருமான வரி செலுத்தும் பொறுப்புடையவர்.

UK-யில் கிரிப்டோகரன்சி வரிவிதிப்பு

கிரிப்டோகரன்சிகள் மிக முக்கியமான வர்த்தக நடவடிக்கைகளின் பகுதியாக ஆகியிருப்பதால், UKயில் கிரிப்டோகரன்சி வரிவிதிப்பு அடிப்படைகள் குறித்தும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

UK வரிச்சட்டத்தின்படி, தனிநபர்கள் கிரிப்டோகரன்சிகளைப் பணத்துக்கு விற்கும்போதும், ஒரு கிரிப்டோகரன்சியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும்போதும், கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி பிறவகை சொத்துக்களையும் சேவைகளையும் வாங்கும்போதும் அவர்கள் CGT செலுத்த வேண்டும்.

இது CGTயின் கீழ் வரிவிதிக்கப்படும் பிறவகை சொத்துக்களைப் போல என்பதால், கிரிப்டோகரன்சிகளிலிருந்து ஈட்டப்பட்ட வரிவிதிக்கத்தக்க பலன்கள் கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கிறது. இது மேலே CFD பிரிவில் குறிப்பிடப்பட்ட CGTக்காக உள்ள வரி விகிதமாகும். கிரிப்டோகரன்சிகளைக் கையாளும் தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் HMRC ஒரு வரிச் சட்டகத்தை அமல்படுத்தியுள்ளது. எந்தச் சட்டகத்தின்கீழ் உங்களுக்கு வரிவிதிக்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

£1,000க்கு மேல் மதிப்புள்ள நாணயங்களை நீங்கள் மைனிங் செய்யும்போது பிட்காயின் மைனிங்கும் வரிவிதிக்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் மின்சாரத்துக்கும், இயந்திரங்கள் போன்ற மைனிங் உபகரணத்துக்கும் செலவுகளுக்கு நீங்கள் உரிமைகோரலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

UKவில் ஃபோரக்ஸ் வர்த்தகத்தின் மீது நீங்கள் வரி செலுத்துகிறீர்களா?

UK-யில் ஃபோரக்ஸ் வர்த்தகம் மீதான வரியானது எந்தவகையான கரன்சி இணைகளில் நீங்கள் வர்த்தகம் செய்கிறீர்கள் என்ற முறையாவணத்தைப் பொறுத்தது: நீங்கள் பரவல் பந்தயம் கட்டுதலின் கீழோ அல்லது வேறுபாடுகளுக்காக ஒப்பந்தத்தை வர்த்தகம் செய்பவராகவோ வரக்கூடும் (CFDs). வர்த்தக நடவடிக்கை பரவல் பந்தயம் கட்டுதலில் மேற்கொள்ளப்பட்டால், UK வரிச்சட்டப்படி வருவாய்க்கு வரிவிலக்கு உண்டு. நீங்கள் CFDகளில் வர்த்தகம் செய்தால், உங்கள் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து பெறும் வருவாயில் முதலின வருவாய் வரி (CGT) விதிக்கப்படும்.

நீங்கள் எப்போதும் ஒரு வரி கணக்காளரின் ஆலோசனையை அல்லது HMRC-யை நாடவேண்டும். ஏனெனில் வரிச்சட்டம் சிலநேரம் குழப்பமானதாகவும் எதிர்காலத்தில் மாறக்கூடியதாகவும் இருக்கும்.

UKயில் ஃபோரக்ஸ் வர்த்தகத்துக்கு வரிவிலக்கு உண்டா?

UK ஃபோரக்ஸ் வர்த்தக வரி அமைப்பு வர்த்தகருக்கு மிகவும் உகந்த ஒன்று. பரவல் பந்தயம் கட்டுதலில் நீங்கள் வர்த்தகம் செய்தால், UK வரிச்சட்டப்படி வருவாய்க்கு வரிவிலக்கு உண்டு. அத்துடன், நீங்கள் முத்திரக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் பரவல் பந்தயம் கட்டுதல் கணக்கில் சொத்து உங்கள் உடைமையின்கீழ் இருப்பதில்லை.

UKயில் ஃபோரக்ஸ் வர்த்தகர்கள் எப்படி வரி செலுத்துகிறார்கள்?

நீங்கள் CFDகளில் வர்த்தகம் செய்தால் உங்கள் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து பெறும் வருவாயில் முதலின வருவாய் வரி (CGT) விதிக்கப்படும். UKயில் தனிநபர்களுக்கான CGT வீதமானது அவர்களது மொத்த வருவாய் மற்றும் முதலின வருவாய் £50,270க்கு மேலே இல்லாதபோது,  வரிசெலுத்துவோரின் அடிப்படை வீதத்தில் 10%. உங்கள் மொத்த வருமானம் £50,271 மற்றும் அதற்குமேல் உங்கள் இலாபம் 20% CGTக்கு உட்பட்டது. எனினும் முதல்  £12,300 வரையிலும் CGT வரி விலக்கு உண்டு.

உங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய, உங்கள் பரிவர்த்தனைகளின் பதிவேட்டைத் தயாரிக்கலாம் அல்லது உங்கள் தரகரிடமிருந்து இலாபநட்டக் கணக்கைக் கேட்கலாம். மனதில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம், உங்கள் வர்த்தக நடவடிக்கையில் நட்டம் ஏற்பட்டால் நீங்கள் வரி நிவாரணம் கோரமுடியும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image