யாரிடம் மிக அதிகமான டோஜ்காயின் உள்ளது?
இப்போது யாரிடம் மிக அதிக டோஜ்காயின் உள்ளது? இதற்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்

உள்ளடக்கம்
- அநாமதேயத்தின் கொள்கை
- சாதனை உடைமையாளர்
- முன்னாள் தலைவர்
- பிற குறிப்பிடத்தக்க கணக்குகள்
- புள்ளி விபரங்கள், எண்கள், தகவல்கள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தனது சொந்த வழியில், DOGE தற்போது உலகின் மிக முக்கியமான செல்வாக்குள்ள கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நாணயம் 2010களில் கிரிப்டோ மலர்ச்சி ஏற்பட்டபோது ஒரு நையாண்டியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ச்சியான டாக் காயின்களின் அலைக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் தனக்கேற்ற வகையில் கிரிப்டோ வட்டத்துக்குள் முக்கிய இடத்தில் போய் நிற்பதாக முடிந்துவிட்டது. டோஜ்காயின் இந்தளவு பெரியதாக வளர்ந்துள்ள நிலையில், மிக அதிகமான டோஜ்காயின் யாரிடம் உள்ளது என்று வியந்திருக்கிறீர்களா? நம்மால் என்ன கண்டறிய முடியும் என்று பார்க்கலாம், வாருங்கள்.
அநாமதேயத்தின் கொள்கை
கிரிப்டோகரன்சி உலகிலும் பிளாக்செயின் தொழில்நுட்பத்திலும் அநாமதேயத்துக்கென குறிப்பிட்டளவு இடமுள்ளது. யாரிடம் அதிகளவு டோஜ்காயின் இருக்கிறது என்று பேசும்போது அதிகளவு டோஜ்காயின் வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது நிறுவனத்தையோ நாம் குறிப்பாக அடையாளம் காண முடியாது. எனினும் நம்மால் மற்றவர்களைக் காட்டிலும் அதிகளவு DOGE வைத்திருக்கும் வாலெட் குறித்துப் பேச முடியும்.
சாதனை உடைமையாளர்
DBs4WcRE7eysKwRxHNX88XZVCQ9M6QSUSz என்ற எண்ணைக் கொண்ட இந்த வாலெட்டில் 30.78 பில்லியன் DOGEக்கும் அதிகமாக உள்ளது. இது இந்த டோக்கனின் நடப்பு வழங்கலின் 23.08%க்குச் சமம். இதை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இதன் ரொக்க மதிப்பு $4 பில்லியனுக்குச் சமம். இந்த வாலெட்டை வைத்திருக்கும் நபர், மக்கள் அல்லது நிறுவனம் உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் டோஜ்காயின் வைத்திருப்பதாகும். அது யார் என்பதை எங்களால் சொல்ல இயலாது.
எனினும், சில தடயங்கள் இருக்கக்கூடும். 2013ல் இருந்தே DOGE இயங்கிவருகையில், இந்த வாலெட் 2021 பிப்ரவரி 6ல் தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வாலெட் செய்த முதல் கொள்முதலானது கடந்த ஆண்டு துவக்கத்தில் காளையோட்டத்தை இந்த கிரிப்டோகரன்சி அனுபவித்தபோது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அந்த நேரத்தில் டோஜ்காயினை எந்தக் குறிப்பிடத்தக்க சந்தைகளும் கையாளத் தொடங்கியதாகத் தெரியவில்லை. எனவே அத்தகையவற்றை நாம் விலக்கிவிட முடியும். இந்த நபர் அல்லது நபர்கள் யாராக இருந்தாலும், கிரிப்டோ திமிங்கலம் என்ற பட்டம் பெறத் தகுதியானவர். ஒருவர் மிகப்பெரிய அளவில் நாணயங்களையும் டோக்கன்களையும் வாங்க முடிகிறதெனில், குறைந்தது கருத்தியல் அளவில், கிரிப்டோகரன்சி விலையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
முன்னாள் தலைவர்
தற்போதைய சாதனை உடைமையாளர் DOGE நாணயத்தை வாங்குவதில் இறங்குவதற்கு முன்பாக, இன்னொரு வாலெட் முதலிடத்தில் இருந்தது. 2021 ஜூனில் DH5yaieqoZN36fDVciNyRueRGvGLR3mr7L என்ற எண்ணைக் கொண்ட வாலெட்டில் உலகின் மொத்த டோஜ்காயின் வழங்கலில் 28% இருந்தது. அதாவது 36.71 பில்லியன் DOGE. எனினும் 2021 அக்டோபர் 29ல் இந்த வாலெட்டின் உரிமையாளர் 32 பில்லியன் டோஜ்காயினுக்கும் மேல் விற்றுவிட்டார். இப்போது சாதனை உச்சத்தைக் கொண்டிருக்கும் வாலெட்டுக்கு இதில் பெரும்பகுதி சென்றிருக்கிறது. அதிகளவு DOGE வைத்திருக்கும் கணக்குகள் என்ற அளவில் இந்த முன்னாள் சாதனை உடைமையாளர் குறிப்பிடத்தக்கவரில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. இப்போதும் இந்தக் கணக்கில் 4.1 பில்லியன் டோஜ்காயின் அல்லது மொத்த வழங்கலில் 3%க்குச் சற்று அதிகமாக உள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட $462 மில்லியன். இந்த நாணயத்தை வைத்திருக்கும் உலகின் நான்காவது பெரிய உரிமையாளராக உள்ளார்.
பிற குறிப்பிடத்தக்க கணக்குகள்
இந்த ஆண்டு குறுகிய காலத்துக்கு எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய டோஜ்காயினை ஒரு வாலெட் வைத்திருந்தது. அது 2022 பிப்ரவரி 19ல் அமைக்கப்பட்டது – ரஷியா உக்ரைனுக்குள் ஊடுருவதற்கு நான்கு நாட்களுக்கு முன் – 5.8 பில்லியன் DOGEக்கும் மேல் $822 மில்லியன் மதிப்பை இந்த முகவரிக்கு அனுப்பி தனது கணக்கைத் தொடங்கியது. ஆயினும் இதை மேற்கொண்டது யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களால் அதிகளவு கொள்முதல் செய்ய முடிந்தது; அதாவது புழக்கத்தில் உள்ள நாணயங்களில் 4.37%, அதுவும் ஒரே நேரத்தில் மற்றும் மிகச் சமீபத்தில். வாலெட் திறந்த ஐந்து நாட்களில், அதாவது பிப்ரவரி 24ல், முழு கையிருப்பும் வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றின் மதிப்பு $145 மில்லியனுக்கு மேல் சரிந்திருந்தது.
What is your sentiment on DOGE/USD?
2019 செப்டம்பரில் முதலில் தொடங்கப்பட்ட ஒரு வாலெட் அதேநாளில் இரண்டாவது மிகப்பெரிய உடைமையாளர் இடத்துக்கு வந்தது. 2021 நவம்பர் 25ல் அதில் 370.6 மில்லியன் DOGE இருந்தது. அந்த நாளில் அது 70.6 மில்லியனை விற்றது. அதிலிருந்து நாணயங்களை மொத்தமாக,குறிப்பாக பிப்ரவரி 22ல் 42 மில்லியன் வரை ஒரே நேரத்தில் வாங்கி வருகிறது. பிப்ரவரி 24 காலையில் இதில் 6.3 பில்லியனுக்கு சற்று அதிகமான DOGE, அதாவது £713 மில்லியன் மதிப்பைக் கொண்டிருந்தது.
தற்போது மூன்றாவது பெரிய DOGE நாணய உடைமையைக் கொண்டுள்ள வாலெட் நீண்டகாலம் DOGE வாலெட்டை வைத்திருப்பவற்றில் ஒன்றாகும். இது நாணயம் தோற்றுவிக்கப்பட்ட குறைவான காலத்துக்குள் அதாவது 2014 ஜனவரியிலிருந்தே இயங்கி வருகிறது. தற்போது ஐந்து பில்லியனுக்கும் சற்று அதிகமான டோஜ்காயினை அல்லது மொத்தத்தில் 3.77%ஐக் கொண்டுள்ளது. அது வைத்திருக்கும் DOGE அளவின் மதிப்பு சுமார் $669 மில்லியன்.
புள்ளி விபரங்கள், எண்கள், தகவல்கள்
Bitinfocharts.com அறிக்கைப்படி, 2022 பிப்ரவரி 23ம் தேதிப்படி கிட்டத்தட்ட 4.85 மில்லியன் வாலெட்டுகள் டோஜ்காயின்களை வைத்திருந்தன. இதில் $10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள டோஜ்காயினை வைத்திருக்கும் 946 DOGE மில்லியனர்களும் 148 கணக்குகளும் உள்ளன. இன்னொரு 335,000 கணக்குகள் $1,000 டோஜ்க்கும் அதிகம் வைத்துள்ளன. 1.5 மில்லியனுக்கு அதிகமானோர் ஒரு டாலருக்கும் குறைவான மதிப்பில் வைத்திருக்கின்றனர்.
வேறு பிற கிரிப்டோகரன்சிகளைப் போலன்றி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை டோஜ்காயின்கள் இருக்க முடியும் என்பதற்கு வரம்பு இல்லை. 2022 பிப்ரவரி 23படி, புழக்கத்தில் 132.67 பில்லியனுக்குச் சற்று அதிகமான DOGE மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கையே மொத்த DOGE எண்ணிக்கையுமாகும். அதாவது இருக்கக்கூடிய எல்லா டோஜ்காயினும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அதற்காக எப்போதும் இருக்கக்கூடிய டோஜ்காயின் அனைத்தும் புழக்கத்துக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை.
முதலில் 100 பில்லியன் நாணயங்கள் என்ற வரம்பை வைக்கும் திட்டமிருந்தது. அது மாற்றப்பட்டது. முதல் இலக்கு அடையப்பட்டதும், எப்போதெல்லாம் ஒரு புதிய தொகுதி மைன் செய்யப்படுகிறதோ அப்போது இன்னொரு 10,000 புதிய DOGE சந்தைக்குள் நுழையுமென்று ஆனது. ஒவ்வொரு நிமிடமும் இது நடக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 14.4 மில்லியன் புதிய DOGE அதாவது தற்போதைய மதிப்பில் $1.63 மில்லியன் ஒவ்வொரு நாளும் சேர்க்கப்பட்டு, வருடத்துக்கு 5.256 பில்லியன் டோஜ்காயின்கள் புழக்கத்துக்கு வருகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை டோஜ்காயின்கள் உள்ளன?
2022 பிப்ரவரி 23ம் தேதிப்படி, 132.67 பில்லியனுக்கும் சற்றே அதிகமான DOGE புழக்கத்தில் இருந்தன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து மாறக்கூடியது. ஒவ்வொரு நாளும் 14 மில்லியனுக்கும் அதிகமான புதிய டோஜ்காயின்கள் சந்தைக்கு வந்தபடி உள்ளன.
டோஜ்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?
இருக்கலாம். கடந்த 12 மாதங்களில் அதன் ஒட்டுமொத்த உச்ச விலையைக் காட்டிலும் கணிசமான அளவு சரிந்திருந்தாலும் டோஜ்காயின் அதன் மதிப்பில் இருமடங்குக்கும் அதிகமாகக் கூடி நிச்சயம் மிக நன்றாகச் செயல்பட்டுள்ளது. இதைச் சொல்லும் அதே வேளையில் நீங்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை. விலைகள் நிச்சயம் இறங்கவும் அதேபோல ஏறவும் செய்யும். உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும். மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
டோஜ்காயினைப் பெறுவது எப்படி?
Currency.com உட்பட பெரும்பாலான சந்தைகளில் நீங்கள் டோஜ்காயினை வாங்கலாம். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதையும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாமலிருப்பதையும் உறுதிசெய்யுங்கள்.