இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டியை படித்துப் பயன்படுத்துவது எப்படி

By Currency.com Research Team

இசிமோகு என்பது ஒரு டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்க்காட்டி. இது பல்வேறு வர்த்தக சமிக்ஞைகளை ஒரேநேரத்தில் அளிக்கிறது.

இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டி                                 

இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டி அல்லது இசிமோகு கின்கோ ஹியோ என்பது பல்திறன் கொண்ட ‘அனைத்தும் ஒன்றாக இணைந்த’ டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டி. இது வெவ்வேறு சுட்டிக்காட்டிகள் காட்டக்கூடிய பல கூறுகளை உள்ளடக்கியது. ஜப்பானிய பத்திரிகையாளர் கொய்சி ஹொசோடாவால் 1930களில் இது உருவாக்கப்பட்டு பின் பல பத்தாண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் 1969ல் முதன்முதலாகப் பிரசுரமானது.

எளிதாகச் சொல்வதென்றால், ஒரே நேரத்தில் அதிகளவு சுட்டிக்காட்டிகளைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக பல சமிக்ஞைகளை இசிமோகு சுட்டிக்காட்டி மொத்தமாக வழங்குகிறது. போக்கின் திசை, ஆதரவு மற்றும் தடை மட்டங்களையும் அதேபோல் மொமண்டம் குறித்த தகவல்களையும் உங்களுக்கு அளிக்கும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுட்டிக்காட்டியில் பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளதால் இசிமோகு வரைபடமானது பல்வேறு தரவுப் புள்ளிகள் வாயிலாக விலை அம்சங்கள் குறித்த ஆழமான பார்வையை வழங்குகிறது. எனவே, நீங்கள் வரைபடத்தில் வரையப்பட்ட இசிமோகு சுட்டிக்காட்டியைப் பார்க்கும்போது, அது குழப்பமூட்டுவதாகவோ அல்லது அலங்கோலமாகத் தெரியலாம். காரணம் பல்வேறு கோடுகளும் பாகங்களும் காட்டப்பட்டிருக்கும். இருப்பினும் அது பார்ப்பதற்குத் தான் கடினமே தவிர, இசிமோகோ கிளவுட் சுட்டிக்காட்டியின் ஒவ்வொரு கூறுகளும் எதைக் குறிக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால் புரிந்துகொள்வது எளிதானது.

இசிமோகோ கிளவுட் என்றால் என்ன?

இசிமோகோ வரைபடத்தில் ஐந்து வெவ்வேறு கோடுகள் மேலோட்டமான விலை நடவடிக்கையை வழங்குகின்றன. இவற்றில் இரண்டு கோடுகள் இசிமோகு கிளவுட் எனப்படும் நிழலடிக்கப்பட்ட பகுதியாகக் காட்டப்பட்டிருக்கும். அவ்வாறே, இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டிக்குப் பின்னால் உள்ள கோட்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், ஒவ்வொரு கோட்டின் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல இசிமோகு அமைப்பில் கோடுகளின் பங்கினையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டியை எப்படிப் புரிந்துகொள்வது

ஒவ்வொரு இசிமோகு சுட்டிக்காட்டியின் அங்கங்களும் (சுட்டிக்காட்டி) விலைச் செயல்பாட்டின் ஒரு குறிப்பிட்ட கோணத்தைக் காட்டுவதுடன் அதற்கேற்ப கணக்கிடப்படுகிறது. அடுத்த வரைபடத்தில் ஒரு வர்த்தக செயற்தளத்தில் உள்ள உட்கூறுகளின் மாதிரி தரப்பட்டுள்ளது.

இசிமோகு கிளவுட்: சுட்டிக்காட்டி கோடுகள்
இசிமோகு கிளவுட்: சுட்டிக்காட்டி கோடுகள் – நன்றி: Currency.com

வரைபடத்தில் நிறமிட்ட பகுதிகளுடன் ஐந்து கோடுகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இவை கிளவுடைக் குறிப்பன. ஒவ்வொரு கோடும் குறிப்பிட்ட வ்கையில் கணக்கிடப்பட்டு சுட்டிக்காட்டியின் குறிப்பிட்ட பார்வைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. கோடுகள் பின்வருமாறு:

 • மாற்றுகைக் கோடு ( டென்கன்-சென்) – இதை குறுகியகாலக் கோடாகப் புரிந்துகொல்ளலாம். இது 9-பருவங்களின் (9 பருவ உயரங்கள் + 9 பருவ அடிமட்டங்கள் / 2)உயரங்கள் மற்றும் அடிமட்டங்களின் சராசரியைக் காட்டுகிறது.
 • அடித்தளக் கோடு ( கிஜூன்-சென்) – இதை நீண்டகாலக் கோடாகப் புரிந்துகொல்ளலாம். இது 26-பருவங்களின் (26 பருவ உயரங்கள் + 26 பருவ அடிமட்டங்கள் / 2)உயரங்கள் மற்றும் அடிமட்டங்களின் சராசரியாகக் கணக்கிடப்படுகிறது.
 • பின்தங்கும் விரிவளவு (சிகௌ விரிவளவு) – இது முந்தைய 26 பருவங்களுக்கான இறுதி விலையைக் காட்டும் பின் தங்கிய கோடு ஆகும். இந்தக் கோடு நீங்கள் தற்போதைய விலை நகர்வுகளை 26 பருவங்களுக்கு முந்தைய நகர்வுகளுடன் எளிதில் ஒப்பிடச் செய்கிறது.
 • முன்னணி விரிவளவு A (சென்கௌ விரிவளவு A) – எதிர்கால 26 பருவங்களை விளக்கும் முன்னணி சுட்டிக்காட்டியாகப் பயன்படுகிறது. இந்த சுட்டிக்காட்டிக்கான மதிப்புகள் டென்கன்-சென் மற்றும் கிஜூன்-சென் நடுப்புள்ளியிலிருந்து கடந்த 26 பருவங்களின் அடிப்படையில் (மாற்றுகைக் கோடு + அடித்தளக் கோடு / 2) பெறப்படுகின்றன.
 • முன்னணி விரிவளவு B (சென்கௌ விரிவளவு B) – இது வரவிருக்கும் 26 பருவங்களைக் கணக்கிடுவதாலும் 52 பருவங்களின் உயரங்கள் மற்றும் 52 பருவத் தாழ்வுகளின் சராசரியை (52 பருவங்களின் உயரம் - 52 பருவங்களின் தாழ்வு / 2) அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இதுவும் ஒரு முன்னணி சுட்டிக்காட்டியாகப் பயன்படுகிறது.

இசிமோகு கிளவுட் (குமோ) இது வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியமானதொரு அம்சங்களில் ஒன்றாகும். இது முன்னணி விரிவளவு A  மற்றும் முன்னணி விரிவளவு B ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பகுதியாகும். இசிமோகு கிளவுட் உத்தியை வடிவமைப்பது நீங்கள் நினைப்பதுபோலக் கடினமானதொன்றும் இல்லை. இசிமோகு கிளவுடுடன் ஒப்பிட விலை எங்கு அமைந்துள்ளது என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் சாத்தியமான சமிக்ஞையை நீங்கள் கண்டறியலாம்.

 • விலையானது இசிமோகு கிளவுடுக்கு மேலே இருந்தால், பின் ஒரு நேர்மறையான போக்கினை எதிர்பார்க்கலாம்
 • கிளவுடுக்குக் கீழே விலை விழுந்தால் ஓர் எதிர்மறைப் போக்கினை நீங்கள் எதிர்பார்க்கலாம்
 • கிளவுடுக்குள் விலை மட்டம் இருந்தால் அதுவொரு தட்டையான போக்கினைக் குறிக்கிறது

முன்னணி விரிவளவுக் கோட்டின் நகர்வு அடிப்படையில் கிளவுட் நிறத்தில் மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக, முன்னணி விரிவளவு A முன்னணி விரிவளவு Bயைத் தாண்டினால், அந்தப் பகுதி பச்சையாக இருக்கும் (வர்த்தகத் தளத்தைப் பொறுத்து கிளவுடுக்குப் பயன்படுத்தும் நிறம் வேறானதாக இருக்கலாம்). இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பருவங்கள் இந்த சுட்டிக்காட்டியின் இயல்பான பருவங்கள் ஆகும். சுட்டிக்காட்டியின் இந்த அமைப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றவும் உங்கள் வர்த்தக யுக்திக்கும் இசிமோகு கிளவுட் சூத்திரத்துக்கும் ஏற்ப சரிசெய்யவும் முடியும். 

இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டியைப் பயன்படுத்துவது எப்படி?

போக்கின் திசையையும் மொமண்டத்தையும் இதனால் அடையாளம் காண முடிவதால் இசிமோகு வர்த்தக உத்தியினால் வாங்கவும் விற்கவும் சாத்தியமுள்ள சமிக்ஞைகளுக்கான விழிப்பூட்டல்களைத் தரமுடியும். நீங்கள் ஸ்டாப்-லாஸ் புள்ளிகளை அதன் ஆதரவு மட்டங்களில் இருக்குமாறு வரையறுக்க விரும்பினால் இசிமோகு சுட்டிக்காட்டியானது பலனளிப்பதாக இருக்கும். மேலும் இசிமோகு கிளவுடை வர்த்தகர்கள் பயன்படுத்தக் காரணம் எதிர்கால விலை மட்டங்கள் குறித்த ஒரு குறிப்பிடத்தக்க கணிப்பை இது வழங்குவதுதான். பொதுவாக, இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டியை உங்கள் வர்த்தக யுக்தியில் பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்:

போக்கின் திசையை வரையறுப்பதற்கு – மாற்றுகை மற்றும் அடித்தளக் கோட்டின் சமிக்ஞைகள் வழியாகப் போக்கின் திசையைக் கண்டறிவது ஒருவழியாகும். அடித்தளக் கோட்டுக்கு மேல் மாற்றுகைக் கோடு செல்லும்போது, ஒரு நேர்மறையான போக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அடித்தளக் கோடானது மாற்றுகைக் கோட்டுக்கு மேலே செல்லும்போது (குறுகிய காலக் கோடு) எதிர்மாறான அல்லது எதிர்மறைப் போக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தாங்குநிலை மற்றும் தடை நிலைகள் – இவை முன்னணி விரிவளவு A மற்றும் முன்னணி விரிவளவு B மூலம் அடையாளம் காணப்படுகின்றன. இது இசிமோகு கிளவுடின் விளிம்புகளாகப் பணியாற்றுகின்றன. இசிமோகு கிளவுட் சுட்டிக்காட்டியானது விலைக் கணிப்பை வழங்குவதால், கிளவுட் விளிம்புகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தாங்குநிலை மற்றும் தடை நிலை குறித்த கண்ணோட்டத்தையும் கூடுதலாக வழங்குகின்றன.

தாண்டும் புள்ளிகளைத் தீர்மானித்தல் – மாற்றுகைக் கோட்டுக்கும் அடித்தளக் கோட்டுக்கும் இடையில் நீங்கள் தாண்டும் புள்ளிகளைத் தேடுகிறீர்கள். தாண்டுமிடங்களைக் கவனத்துடன் பார்ப்பதன் மூலம் அதன் வலிமையைத் தீர்மானிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாண்டும் வகையைப் பொறுத்தும் அது கிளவுடுக்குக் கீழே இருக்கிறதா, உட்புறமா அல்லது மேலேயா என்பதைப் பொறுத்தும் சமிக்ஞை பலவீனமானதாக, வலுவானதாக அல்லது இரண்டுமற்றதாக இருக்கக்கூடும்.

இசிமோகு கிளவுட் – இது ஏறுமுகமாகவோ அல்லது இறங்குமுகமாகவோ இருக்கக்கூடும். முன்னணி விரிவளவு Aவையும் முன்னணி விரிவளவு Bயையும் பாருங்கள் அல்லது சுருக்கமாக, வரைபடத்திலும் கிளவுடிலும் இந்தக் கோடுகளின் நிலையைப் பாருங்கள். முன்னணி விரிவளவு A முன்னணி விரிவளவு Bயைவிட அதிகரிக்கும்போது (ஏறுமுக குமோ) ஏறுமுகப் போக்குக்கான சுட்டிக்காட்டுதல் தோன்றும். முன்னணி விரிவளவு A முன்னணி விரிவளவு Bயைவிடக் குறையும்போது (இறங்குமுக கிளவுட்) இறங்குமுகப் போக்கினை அறியலாம். முன்னணி விரிவளவு A  மற்றும் முன்னணி விரிவளவு B தங்கள் நிலைகளை மாற்றும்போது ஒரு போக்கு தலைகீழாக மாறுவதற்கான சான்றாக அது இருக்கும். இசிமோகு கிளவுடின் கோணத்தைப் பார்ப்பதன் மூலம் போக்கின் வலிமையை நீங்கள் தீர்மானிக்க முடியும். கோணமானது நேராக மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருப்பது வலுவான போக்கினைச் சுட்டிக்காட்டும்.

இசிமோகு சமிக்ஞைகள்

சமிக்ஞை வகையானது நாம் பார்க்கும் உட்கூறினைப் பொறுத்தது. இசிமோகு வரைபடத்தில் பல்வேறு சமிக்ஞைகள் உள்ளன:

 • மாற்றுகை/அடித்தளக் கோடு தாண்டுதல்
 • கிளவுட் முறிவு
 • முன்னணி விரிவளவு A மற்றும் B தாண்டுதல்
 • பின்தங்கும் விரிவளவு தாண்டுதல்

இந்த சுட்டிக்காட்டியைப் பயன்படுத்துவதன் அர்த்தம், உங்கள் வரைபடத்திலும் பிற சமிக்ஞைகளிலும் தோன்றக்கூடிய வெவ்வேறு வாங்குதல் மற்றும் விற்றலுக்கான இசிமோகு சமிக்ஞைகளுடன் நீங்கள் பரிட்சயப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்பதுதான். எனவே, இசிமோகு உத்தியை இசிமோகு சமிக்ஞைகளைச் சுற்றிலும் உருவாக்க முடியும்:

 • ஏறுமுகப் போக்கு – விலையானது கிளவுடுக்கு மேலே இருப்பது
 • இறங்குமுகப் போக்கு – விலையானது கிளவுடுக்குக் கீழே இருப்பது
 • வரம்புக்குட்பட்ட போக்கு – விலையானது கிளவுடுக்கு உள்ளே இருப்பது
 • வாங்கும் சமிக்ஞை – மாற்றுகைக் கோடு அடித்தளக் கோட்டுக்கு மேலாகக் கடக்கும்போதும் இரண்டு கோடுகளும் விலையோடு சேர்த்து கிளவுடுக்கு மேலே இருப்பதும்
 • விற்பனை சமிக்ஞை – விலையும் இரு கோடுகளும் கிளவுடுக்குக் கீழே காணப்படும்போது மாற்றுகைக் கோடு அடித்தளக் கோட்டினைக் கீழாகக் கடந்தால் தோன்றுகிறது.

இசிமோகு கிளவுட் சமிக்ஞைகள் உதாரணங்கள்

இசிமோகு கிளவுடை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மேலும் புரிந்துகொள்வதற்கு, வேறொரு வரைபடத்தைப் பார்க்கலாம். இதில் சுட்டிக்காட்டியிலிருந்து தோன்றும் சில சமிக்ஞைகளை அடையாளம் காண முடியும்.

இசிமோகு கிளவுட் சமிக்ஞைகள் உதாரணங்கள்
இசிமோகு கிளவுட் சமிக்ஞைகள் உதாரணங்கள் – நன்றி: Currency.com

இரண்டு வகையான சமிக்ஞைகளின் சாத்தியத்தை நீங்கள் பார்க்க முடியும். வரைபடத்தின் நடுவிலிருந்து இடதுபுறத்தில், மாற்றுகை/அடித்தளக் கோடு தாண்டுதல் இசிமோகு கிளவுடுக்கு மேலாக உள்ளது. வலதுபுறத்தில், எதிர்மறையான நகர்வுக்கான சமிக்ஞையைத் தரும் முன்னணி விரிவளவு A மற்றும் B தாண்டுகையை நீங்கள் பார்க்கலாம்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

RECOMMENDED READING

iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image