குவாண்ட் விலைக் கணிப்பு: QNT விலை உயருமா?
கடந்த ஆண்டில் குவாண்ட் மதிப்பு 260%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து மேலே செல்லுமா?

உள்ளடக்கம்
- குவாண்ட் (QNT) என்றால் என்ன?
- QNT நாணயம்
- நிறுவனர்
- குவாண்ட் நாணயச் செயல்திறன்
- QNT நாணய விலைக் கணிப்பு: நிபுணர்கள் கருத்து
- இறுதி எண்ணங்கள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கடந்த சில ஆண்டுகளாக, பிளாக்செயின் திட்டங்கள் திரளாக வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் கிரிப்டோவை பிரதான ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கும் அளவிடுதல் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்கின்றன.
மெதுவான பரிவர்த்தனைகள் முதல் அதிகக் கட்டணங்கள் வரை, பிளாக்செயினின் அளவிடுதல் தொடர்பான சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான பிளாக்செயின் தொழில்நுட்பங்களை விடாப்பிடியாகப் பிடித்திருக்கும் முக்கிய கவலைகளில் ஒன்று மரபுவழி தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்க முடியாமல் திணறுவது தான்.
இந்த இடைவெளியைக் குறைக்கும் கருவிகளை உருவாக்க விரும்பும் பல திட்டங்களில் ஒன்றாக குவாண்ட் உள்ளது. குவாண்ட் ஆண்டு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டதால் நாணய முதலீட்டாளர்களுக்கு அது உருவாக்கும் தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் இது ஒரு குவாண்ட் விலைக் கணிப்பை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?
முன்னறிவிப்புகளைப் பார்ப்பதற்கு முன், நிறுவனத்தின் விரைவான மதிப்பாய்வை மேற்கொள்வோம்.
குவாண்ட் (QNT) என்றால் என்ன?
குவாண்ட் நிறுவனம் உருவாக்கிய ஓவர்லெட்ஜர் (Overledger) எனப்படும் இயக்க முறைமையின் மூலம் குவாண்ட் பல பிளாக்செயின் தீர்வுகளை வழங்குகிறது. நிறுவன மென்பொருள் மற்றும் பிளாக்செயின் இயங்குதளங்களை இணைக்க, பயன்படுத்த எளிதானதும் அணுகக்கூடியதுமான செருகி உபயோகிக்கத்தக்க (plug and play) தீர்வுகளை வழங்குவதாக இத்திட்டம் கூறுகிறது.
குவாண்டின் ஓவர்லெட்ஜர் API நுழைவாயில் மூலம் வெவ்வேறு பிளாக்செயின்களை இணைக்கவும் தொடர்பு கொள்ளவும் செய்யலாம். தொழில்நுட்பம் சிக்கலானதாகத் தோன்றினாலும், API நுழைவாயில் அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் இணைக்க வழிகளை உருவாக்குவதாகக் கூறுகிறது. எனவே வணிகங்கள் பிளாக்செயினை இணைக்க தங்கள் முழுத் தொழில்நுட்பச் சூழலையும் மாற்ற வேண்டியதில்லை.
நிறுவனம் தனது இணையதளத்தில் "வேகமான, திறமையான வளர்ச்சிக்காக உலகின் அனைத்து விநியோகிக்கப்பட்ட பேரேடுகளையும் இணைக்கிறது" என்று தன்னை விவரிக்கிறது. அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அதன் இடையில் செயல்படத்தக்க தீர்வுகளை வழங்க விரும்புவதாகக் கூறுகிறது.
QNT நாணயம்
QNT என்பது குவாண்டின் சொந்த டோக்கன். இது ஒரு பயன்பாட்டு டோக்கன் ஆகும். இது குவாண்ட் சுற்றுச்சூழல் அமைப்பில் பலவிதமான செயல்பாடுகளை ஆதரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, தளத்தைப் பயன்படுத்த டெவலப்பர்களும் நிறுவனங்களும் ரொக்கப் பணத்தில் உரிமங்களை வாங்க வேண்டும். ரொக்கத்தில் தொகையைச் செலுத்தி QNT நானயங்களை வாங்கலாம். அவை 12 மாதங்களுக்கு நெறிமுறை அமைப்புக்குள் பூட்டி வைக்கப்படும்.
நிறுவனர்
கில்பர்ட் வெர்டியன், குவாண்டின் முக்கிய நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். லண்டனைச் சேர்ந்த வெர்டியன், சிட்னியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் BA முடித்தார். பின் அதே நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் MA படிப்பை முடித்தார். குவாண்ட்டை நிறுவுவதற்கு முன்பு, வெர்டியன் சொத்து மேலாண்மை, இணையப் பாதுகாப்பு மற்றும் விநியோகிக்கப்பட்ட பேரேடு தொடர்பான பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இந்தத் தகவல்கள் 2022க்கான குவாண்ட் விலைக் கணிப்பை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அல்லது 2030க்கான குவாண்ட் விலைக் கணிப்பை எவ்வாறு பாதிக்கிறது?
கணிப்புகளுக்குச் செல்வதற்கு முன், நாணயத்தின் சமீபத்திய செயல்திறனைப் பார்ப்போம்.
குவாண்ட் நாணயச் செயல்திறன்
குவாண்ட் நாணய வெளியீட்டுக்குப் பின் அதன் விலை மெதுவாக ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. 30 ஆகஸ்ட் 2018 அன்று $0.3941லிருந்து 9 பிப்ரவரி 2019 அன்று $4.2372 ஆக உயர்ந்தது. கிட்டத்தட்ட 11 மடங்கு உயர்வு. 2020ல் குவாண்ட் விலை குறைவதற்கு முன், 2019 முழுவதும் விலை அதிகரித்து ஜூலை 7 அன்று அதிகபட்சமாக $11.58 ஆக உயர்ந்தது.
19 மார்ச் 2020 அன்று, குவாண்ட் விலை $2.3731 ஆகக் குறைந்தது. 15 நவம்பர் 2020 அன்று $15.46 ஆக உயர்ந்தது. 2021 ஆம் ஆண்டில், குவாண்ட் நாணயத்தின் விலை உயர்ந்து, 25 ஜூன் 2021 அன்று $92.64 ஆக உயர்ந்து, பின்னர் ஜூலை 19ல் $66.27 ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் 4, 2021 அன்று $178.44 ஆக உயர்ந்து பின் ஆகஸ்ட் 10, 2021 அன்று $153.20 ஆக நேர்செய்து கொண்டது. செப்டம்பர் 10, 2021 அன்று, குவாண்ட் நாணயத்தின் விலை அதிகபட்சமாக $393.54ஐ எட்டியது.
நாணயத்தின் விலை 14 டிசம்பர் 2021 அன்று $166.37 ஆகக் குறைந்து பின் 29 ஜனவரி 2022 அன்று $98.10 ஆகக் குறைந்தது. அதன்பின் விலை உயர்ந்து, 5 பிப்ரவரி 2022 அன்று $133.63 ஆக இருந்தது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 30 நாட்களில் அதன் மதிப்பில் 20%க்கு அதிகமாக இழந்தாலும், கடந்த ஆண்டில் நாணயம் 260% க்கும் அதிகமான மதிப்பைப் பெற்றுள்ளது. தற்போது 13.41 மில்லியன் குவாண்ட் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதிகபட்சமாக 14.6 மில்லியன் நாணயங்கள் வழங்கலைக் கொண்டுள்ளது. குவாண்டின் தற்போதைய சந்தை மதிப்பு $1.8 பில்லியன்.
இவை அனைத்தும் ஒரு குவாண்ட் விலைக் கணிப்பில் என்ன தெரிவிக்கின்றன? அதைப் பற்றிப் பார்ப்போம்…
QNT நாணய விலைக் கணிப்பு: நிபுணர்கள் கருத்து
கணிப்புகளைப் பார்க்கும்போது, விலை எந்தத் திசையில் நகரக்கூடும் என்பதற்கான ஒரு குறிகாட்டியாக அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, அவற்றை முழுமையானதாகப் பார்ப்பதைக் காட்டிலும் சாத்தியக்கூறுகளாகப் பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.
இதைக் கருத்தில் கொண்டு, WalletInvestor விலைக் கணிப்பைப் பார்ப்போம். ஒரு நம்பிக்கையான நாணய விலைக் கணிப்பாக - QNT ஒரு வருடத்தில் $336.55 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் $1,111.08 ஆகவும் இருக்கும் என்று இது கருதுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான குவாண்ட் விலைக் கணிப்பாக Gov.capital சுமார் $308.44ஐக் குறிப்பிடுகிறது. அதே சமயம் 2027 க்கான அதன் முன்னறிவிப்பு $1,551.50 ஆகும்.
DigitalCoinPrice, QNT 2023ல் $230.80 ஆக அதிகரிக்கும் முன், 2022ல் அதன் மதிப்பு $197.87 ஆக இருக்குமென்று கருதுகிறது. இணையதளத்தின் 2025க்கான குவாண்ட் விலைக் கணிப்பு $314.12 ஆக உள்ளது.
இறுதி எண்ணங்கள்
இந் நாணயத்தின் சந்தை மூலதனம் முதல், பகுப்பாய்வாளர்களின் விலைக் கணிப்புகள், தயாரிப்புகளின் வரம்பு மற்றும் நோக்கம் வரை பார்க்கையில் குவாண்ட் ஒரு சிறந்த திட்டமாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், இப்போது நாணயத்தின் விலை ஊகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
வணிகங்கள் அல்லது நிறுவனங்கள் உண்மையில் பிளாக்செயினுடன் பாரம்பரிய தொழில்நுட்பங்களை இணைக்க வேண்டுமா அல்லது இது தேவையா அல்லது உண்மையில் இந்த இடைவெளிகளைக் குறைப்பது சாத்தியமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கேட்க வேண்டிய மற்றொரு முக்கியமான கேள்வி என்னவென்றால், மையவோட்டத்தில் இது கலப்பதைத் தடுப்பது உண்மையில் அளவு மாறுதிறன் (scalability) போதாமையா அல்லது தேவையின் பற்றாக்குறையா. தற்போதைய தொழில்நுட்பம் வழங்க முடியாததை பிளாக்செயின் திறமையாகச் சிறந்த முறையில் வழங்குமா?
பிளாக்செயின் தொழில்நுட்பம் மிகவும் பரவலான பயன்பாட்டிற்கு வரும் வரை, இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடையாது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை குவாண்ட் நாணயங்கள் உள்ளன?
தற்போது 13.41 மில்லியன் குவாண்ட் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதிகபட்சமாக 14.6 மில்லியன் நாணயங்கள் வழங்கலைக் கொண்டுள்ளது.
குவாண்ட் ஒரு நல்ல முதலீடு தானா?
ஆய்வாளர்கள் நிச்சயமாக இந்நாணயம் ஒரு நல்ல முதலீடு என்று நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், கிரிப்டோ சந்தை மிகவும் நிலையற்றது என்பதையும், அனைத்து டோக்கன்கள், நாணயங்களின் விலை குறையவும் அதேபோல மேலே செல்லவும் கூடும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்வது நல்லது.
குவாண்ட் மேலே செல்லுமா?
சில வல்லுநர்கள் நாணயம் உயரும் என்று கணித்துள்ளனர். இருப்பினும் அது மிக எளிதாகக் கீழேயும் போகலாம். முன்னறிவிப்புகள், குறிப்பாக நீண்டகாலக் கணிப்புகளை முழுமையானவைகளாகப் பார்ப்பதைக் காட்டிலும் குறிகாட்டிகளாகப் பார்க்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
நான் குவாண்டில் முதலீடு செய்யலாமா?
முதலீடு என்பது மிகவும் தனிப்பட்ட முயற்சி. உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். குவாண்ட் சூழல் அமைப்புக்குள் அதன் எதிர்கால வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய ஏதேனும் மேம்பாடுகள் ஏற்படுகின்றனவா என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முயலுங்கள்.
முதலீடு செய்வதில் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பது முக்கியம்.