லைட்காயின் விலைக் கணிப்பு: சமீபத்திய இழப்புகளில் இருந்து LTC மீண்டெழுமா?

By Currency.com Research Team

இது சமீபத்தில் அடி வாங்கியிருக்கிறது. ஆனால் லைட்காயின் மீண்டெழுந்து புதிய உச்சங்களைத் தொடுமா?

உள்ளடக்கம்

சமீபத்திய 2022க்கான லைட்காயின் விலைக் கணிப்பைப் பார்க்கலாம் – அத்துடன் நாணயத்தின் முந்தைய கணிப்புகள் சரியானதாக மாறியிருக்கிறதா என்றும் ஆராய்வோம்.

LTC விலைக் கணிப்புகள்

2022க்கான லைட்காயினின் சமீபத்திய விலைக் கணிப்பை நாம் ஆராயுமுன், 2019 டிசம்பரிலும், 2020 ஜூனிலும் 2020 டிசம்பரிலும் நாங்கள் கொடுத்த லைட்காயின் கணிப்புகள் ஒவ்வொன்றையும் பார்ப்பதில் இருந்து தொடங்குவோம்.

2019ல் Cryptoground-ன் லைட்காயின் கணிப்புகளின்படி LTC 2020க்குள் $136.52 உச்சத்தைத் தொடுமென்றும், 2025 இறுதிக்குள் $398.72க்கு மேலெழும் என்றும் கூறியது. CryptoInfoBase மேலும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது: அது 2020 புதுவருடப் பிறப்பு சமயத்தில் $320 இருக்குமென்றும், ஐந்து வருடங்களுக்குப்பின் திகைப்பூட்டும்படி $950 விலையைத் தொடுமென்றும் எதிர்பார்த்தது. அதிக உயரத்தை எட்டுவதில், இருப்பவற்றிலேயே பெரிய எதிர்பார்ப்புகளைத் தராத DigitalCoinPrice – தனது பார்வையில் LTC இந்த ஆண்டு இறுதிக்குள் $103.44ஐத் தொடும் என்று எதிர்பார்த்தது.

2020 ஜூனில், LTC விலைக் கணிப்புகளின் மையப் பிரச்சினையாக இருந்தது உலகின் ஐந்தாவது பெரிய கிரிப்டோகரன்சிக்கு என்ன ஆகும் என்பதுதான் – தற்போது இதற்கு CoinMarketCap 24வது தரமதிப்பை அளித்துள்ளது – எல்லா வகையிலும் $50 என்ற தடையைத் தாண்ட முடியாமல் தடுமாறி வந்தது. 2019 ஜூனில் கண்ட $142 என்ற உச்சத்திலிருந்து வெகுதூரத்தில் இருந்தது.

2020 அக்டோபர் கடைசியில் நிலவரம் மாறத் தொடங்கியது. மற்ற கிரிப்டோகரன்சிகளுடன் சேர்ந்து லைட்காயினும் திடீரென மாபெரும் எழுச்சியைக் காணத் தொடங்கி $50 குறியீட்டைத் தகர்த்து மேலேறியது. வர்த்தகர்களுக்கு இது நீண்டகாலத்துக்கு உளவியல் தடையாக இருந்துவந்தது. ஆனால் அதைத் தாண்டியும் விலை மேலே தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்தது. நவம்பரில், LTC $55லிருந்து $88க்கு எழுந்து – 60% இலாபத்தைத் தந்தது. 52 வார உச்சமாக $123.76 என்ற விலையை LTC அடைந்தது.

பிட்காயினின் பயணம் $20,000க்கும் மேலாக ஏறியபின், அதைத் தொடர்ந்து பல நாட்களுக்கு சதவீத அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியைக் காட்டிலும் லைட்காயின் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது – தொடர்ந்து இரட்டை இலக்க இலாபத்தை XRP போன்றவற்றுடன் இணைந்து கொடுத்து வந்தது.

லைட்காயின் விலை 2020
லைட்காயின் விலை 2020 – நன்றி: Currency.com

2021ன் முதல் சில மாதங்கள் LTCக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருந்தன. அது தொடர்ந்து மேலேறி பிப்ரவரி 19ல் $236ஐத் தொட்டது. ஆனால் பிப்ரவரி 28ல் $165க்கு இறங்கிவிட்டது.

எனினும் இப்போதும் லைட்காயின் வளர்வதற்கான நேரமும் இடமும் உள்ளது. மார்ச் 30ம் தேதி, PayPal லைட்காயினை ஏற்கத் தொடங்கியது. இது உண்மையில் கிரிப்டோகரன்சிக்கு எதிர்பாரா விருந்து. இதனால் விலை ஏறத் தொடங்கியது. மார்ச் 30ல் $195.73ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த நாணயம் ஏப்ரல் 16ல் $311.95க்கு உயர்ந்தது – மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்தில் கிட்டத்தட்ட 63% ஏற்றம்.

இதற்குப் பிறகு விரைவிலேயே ஒரு வீழ்ச்சி இருந்தது. ஏப்ரல் 25ல் லைட்காயின் $233.75க்கு இறங்கியது. ஆனால் விரைவிலேயே நிலைமை சீரடைந்தது. மே 10ம் தேதி $400 என்ற தடையை லைட்காயின் உடைத்தது. மே 12ல் $385க்கு அருகில் இறங்கினாலும், நிலையாக இருந்ததாகவே தோன்றியது. இது எல்லாமே 2021 மே 19ல் மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினம் வரைதான். அன்று இரண்டே மணி நேரங்களில் லைட்காயின் விலை 40%க்கும் மேல் சரிந்து $156.96க்கு வந்தது.

லைட்காயின் விலை 2021
லைட்காயின் விலை 2021 – நன்றி: Currency.com

வீழ்ச்சிக்கு முன்பாக மே 10ல் அதுவரையில்லாத உச்ச விலையான $412.96ஐத் தொட்டது. அது திரும்ப எட்டப்படவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது. 2022 ஜனவரிப்படி நியாயமாகச் சொல்வதென்றால் LTCக்கு அந்த உயரங்களை இன்னும் எட்டவில்லை. மோசமான பாதிப்புக்கு உள்ளான ஒரே நாணயம் என்ற இடத்திலிருந்து வெகுதூரத்தில் இப்போது உள்ளது. பிட்காயின் போன்ற மற்ற பெரிய கிரிப்டோக்கள் அதன் பிறகு புதிய உயரங்களுக்கு சென்றது என்பது கவனிக்கத் தக்கது.

கடந்த மே மாதத்துக்குப்பின் லைட்காயின் அடைந்த சிறந்த விலையாக 2021 நவம்பர் 10ல் அது தொட்ட $294.56 விலையைச் சொல்லலாம். இது அதன் உச்ச விலையில் கிட்டத்தட்ட பாதிதான். அதன்பின் நிலைமை மேலும் மோசமடைந்தது. டிசம்பர் 16ல் லைட்காயின் விலை $153க்கு அருகில் இருந்தது – ஒரு மாதம் முன்பு இருந்ததில் கிட்டத்தட்ட பாதியை இழந்திருந்தது.

2022 ஜனவரி 17ல், கிரிப்டோ நுண்ணறிவு செயற்தளமான Santiment அறிக்கைப்படி பிளாக்செயின் அளவீடுகளின் ஏற்றத்தில் திமிங்கலங்கள் சத்தமின்றி லைட்காயினை 2017ல் இருந்தே சேர்த்து வருகின்றன என்று கூறுகிறது. நிறுவனத்தைப் பொறுத்தவரை: “திமிங்கல முகவரிகள் 10,000 முதல் 1,000,000 வரையில் LTCயை வைத்திருக்கின்றன. இது 15 வாரச் சேகரிப்பு முறையில் உள்ளது. இந்த முறைமையானது 2017ல் இருந்ததைக் காட்டிலும் மிக நீண்டது. பதினைந்தே வாரங்களில் LTCயின் வழங்கலில் 5%ஐ அவர்கள் சேர்த்துள்ளார்கள்.”

இதற்கு மாறாக LTC கிரிப்டோ திமிங்கலங்களின் திட்டங்கள் என்னவாக இருந்தாலும், இதை எழுதிக் கொண்டிருந்த 2022 ஜனவரி 21ல், லைட்காயின் விலை $123.18 ஆக இருந்தது.

What is your sentiment on LTC/USD?

99.06
Bullish
or
Bearish
Vote to see community's results!

LTC விலைக் கணிப்புகள் – லைட்காயின் விலை மீளுமா?

2022 மற்றும் அதைத் தாண்டிய காலத்திற்கான சில லைட்காயின் விலைக் கணிப்புகள் அனைத்துமே நம்பிக்கையளிப்பதாக உள்ளன. எனினும், முன்னறிவிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். சில கணிப்புகள் என்ன சொல்கின்றனவென்றால் 2021 மே வாக்கில் இருந்த விலையையும் அதைத் தாண்டியும் லைட்காயின் விலை செல்லுமென்றும் ஆனால் நீண்டகாலத்துக்கு அவ்வாறு இருக்காதென்றும் சொல்கின்றன.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், முந்தைய கணிப்புகளில் LTC ஆர்வலர்கள் PayPal நாணயத்தை ஏற்றுக்கொண்டதால் எதிர்பார்ப்புடன் இருந்ததைப் போல இப்போது அப்படியொன்றும் பல நல்ல விஷயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை – நாணயத்தின் அண்மை எதிர்காலத்தில் குறைந்தது பெரிய விசயங்கள் ஏதும் இல்லை.

இப்போதைக்கு லைட்காயினின் விலை எப்போதும்போல சற்று மந்தமாகத்தான் உள்ளது.

BTCஐ விடச் சிறந்ததா?

இன்னொருவகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் LTC நாணயம் BTCயைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டதை மறக்கக்கூடாது – உண்மையிலேயே கணிசமான ஆதாயத்தைக் கொடுத்தது. 2022ல் மேலும் விலையின் போக்கு மேல் நோக்கியே இருந்தால் அளவு மீறிய ஆதாயங்களை நாம் பார்க்கமுடியும் என்பதை இது காட்டுகிறது.

இந்த சிறப்பான இலாபத்தை லைட்காயின் 2019 ஆகஸ்டில் நிறைவேற்றிய தொகுதி வெகுமதி பாதியாக்கத்தோடு தொடர்புடையதாகவும் பார்க்கலாம். இந்தத் தாக்கம் வெளித்தெரிய 12 முதல் 18 மாதங்கள் வரை எடுக்கக்கூடும். இதன் அர்த்தம் காளை சந்தைக்கான காலத்துக்கு வாய்ப்பு உள்ளது என்பதுதான்.

இருந்தாலும், 2022க்கும் அதற்குப் பின்னும் லைட்காயின் விலைக் கணிப்பாக சில தளங்கள் என்ன பரிந்துரைக்கின்றன என்று பார்க்கலாம் – எப்போதும்போல் நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது நீண்டகால கிரிப்டோ கணிப்புகள் ஒரு சூத்திரத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இது எந்த நேரத்திலும் மாறக்கூடும்.

2022க்கான லைட்காயின் விலைக் கணிப்பு: ஆய்வாளர்களின் கணிப்பு என்னவாக உள்ளது?

DigitalCoinPrice 2019 டிசம்பரில் சரியாகக் கணித்ததை வைத்துப் பார்க்கும்போது, 2022க்கான அதன் LTC விலைக் கணிப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இந்த இனையதளம் ஏப்ரல் மாதத்தில் அந்த வருட உச்சமாக $179.09 என்ற விலையை எட்டும் என்கிறது. 2022 இறுதிவிலை $158.53க்கு அருகில் இருக்கும். இதிலிருந்து 12 மாதத்தில் $190.11 ஆகவும், அதற்குப் பின் இரண்டு ஆண்டுகளில் $227.06 விலைக்குப் போகும் என்றும் கணிக்கிறது. இந்தத் தளம் குறிப்பிடும் அதிகபட்ச விலை $542.62. இதை 2029 நவம்பரில் எட்டும் என்கிறது. அந்த ஆண்டு இறுதிவிலையாக $498.93 ஆக இருக்கும் என்கிறது.

அதற்குப்பின் WalletInvestor என்ன சொல்கிறதென்றால் 2022 முடிவில் லைட்காயினின் சராசரி விலை $225.82க்கு அருகில் இருக்கும் எனவும் 2026 இறுதியில் இது $519.39 ஆக இருக்கும் என்கிறது.

இதற்கிடையில், Cryptoground 2022 ஜூனில் நாணய மதிப்பு $166.23 ஆக இருக்குமென்றும் 2025ல் $358.81க்கு அருகில் இருக்குமென்றும் கணிக்கிரது. 2027ல் நாணயத்தின் விலை கிட்டத்தட்ட $529.77 மதிப்பை எட்டும் என்கிறது.

இறுதியாக, Priceprediction.net 2022ல் லைட்காயினின் சராசரி மதிப்பு $196.33 என்றும் அதற்கடுத்த ஆண்டில் சராசரி விலையாக $274.36 இருக்குமென்றும் கூறுகிறது. 2025க்கான இதன் லைட்காயின் கணிப்பாக $568.07 உள்ளது. அதிலிருந்து 12 மாதங்களில் அதன் சராசரி விலை $841.61 இருக்குமென்று கணிக்கிறது. இந்தத் தளம் தைரியமாகக் கழுத்தை எக்கி 2030க்கான கணிப்பையும் தந்துள்ளது. 2030ல் லைட்காயின் $3,572.98ஐ எட்டும் என்கிறது.

லைட்காயின் - US டாலர் வர்த்தகம்

Litecoin / USD
தினசரி மாற்றம்
99.14
குறைவு: 98.28
அதிகம்: 101.78

லைட்காயின் விலைக் கணிப்பு என்பது உங்கள் சொந்த ஆராய்ச்சிக்கு மாற்று இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கிரிப்டோகரன்சிகள் அதீத மாறியல்பு கொண்டவையாக இருக்கக்கூடும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம் -  டிஜிட்டல் சொத்துக்களை, உச்சவிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும்போது வாங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும்.

LTC/USD முந்தைய விலை

தேதி முடிவு மாற்றம் மாற்றம்(%) ஆரம்பம் அதிகம் குறைவு
Feb 3, 2023 98.99 0.32 0.32% 98.67 100.47 98.17
Feb 2, 2023 98.67 -1.62 -1.62% 100.29 102.23 97.93
Feb 1, 2023 100.29 6.21 6.60% 94.08 102.22 93.68
Jan 31, 2023 94.07 2.71 2.97% 91.36 96.20 91.32
Jan 30, 2023 91.36 -3.47 -3.66% 94.83 95.96 88.24
Jan 29, 2023 94.82 5.17 5.77% 89.65 97.75 89.65
Jan 28, 2023 89.65 0.78 0.88% 88.87 89.92 86.97
Jan 27, 2023 88.87 1.34 1.53% 87.53 89.20 85.78
Jan 26, 2023 87.54 -1.86 -2.08% 89.40 89.94 86.82
Jan 25, 2023 89.39 2.21 2.53% 87.18 91.94 85.53
Jan 24, 2023 87.19 -2.73 -3.04% 89.92 91.42 85.92
Jan 23, 2023 89.92 2.34 2.67% 87.58 93.12 87.49
Jan 22, 2023 87.57 -0.29 -0.33% 87.86 90.01 86.54
Jan 21, 2023 87.90 -2.34 -2.59% 90.24 92.00 87.53
Jan 20, 2023 90.22 6.03 7.16% 84.19 91.24 82.97
Jan 19, 2023 84.18 1.61 1.95% 82.57 84.54 81.65
Jan 18, 2023 82.57 -4.44 -5.10% 87.01 88.35 81.96
Jan 17, 2023 87.00 1.08 1.26% 85.92 89.32 84.36
Jan 16, 2023 85.90 -1.49 -1.71% 87.39 89.17 83.75
Jan 15, 2023 87.37 -0.48 -0.55% 87.85 88.72 85.17

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

லைட்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். LTC சமீபத்தில் கொஞ்சம் கீழ்நோக்கி பல்டியடித்துக் கொண்டிருந்தாலும், இப்போதுகூட 12 மாதங்களுக்கு முன் இருந்ததைவிட அதிக மதிப்பில்தான் உள்ளது. லைட்காயின் கணிப்புகள் எச்சரிக்கையுடன் நம்பிக்கையளிக்கும் விதத்தில் தொடர்கின்றன. இருப்பினும், உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் இழக்கத் தயாராக இருக்கும் அளவுக்கு மேல் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். 

லைட்காயின் மேலே செல்லுமா?

வாய்ப்புள்ளது. கிரிப்டோகரன்சி சந்தை சமீபத்தில் சற்று இறங்குமுகமாக உள்ளது. ஆனால் ஏன் இது மாறக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நேர்மறையான கணிப்புகளோடு இதுவரை காணாத உச்சத்தை எட்டுவதற்குமுன் அது செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதால், வளர்ச்சிக்கு நிறைய சாத்தியம் இருப்பதை அது சுட்டிக் காட்டுகிறது.

எனினும், தேக்கநிலைக்கும், மோசமடையவும் அல்லது சரிவைச் சந்திக்கவும் சாத்தியமுள்ளது. கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புக்கு உட்பட்டவை என்பதையும் விலைகள் ஏறவும் இறங்கவும் செய்யுமென்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

லைட்காயினில் நான் முதலீடு செய்ய வேண்டுமா?

இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். எந்த திடமான முடிவுகளையும் நீங்கள் அடைவதற்கு முன், லைட்காயின் கணிப்புகளையும் பிற கிரிப்டோக்களையும் நீங்கள் ஆராய வேண்டும். அத்துடன் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

லைட்காயினை வாங்குவது எப்படி

லைட்காயினை கிரிப்டோசந்தைகளில் வாங்கலாம். Currency.com தளத்திலும் கிடைக்கிறது. எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதுடன் அபாயம் மீதான உங்கள் மனப்போக்கிற்கு ஏற்பவும், இந்தச் சந்தையில் உங்கள் அனுபவத்துக்கு ஏற்பவும், உங்கள் முதலீட்டுத் தொகுப்புப் பரவல் (portfolio spread) மற்றும் பணத்தை இழப்பதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்கள் வர்த்தகம் குறித்த முடிவு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

லைட்காயின் $10,000 விலையைத் தொடுமா?

இதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. ஆனால் லைட்காயின் எப்போதாவது $10,000ஐ எட்டுகிறதென்றால், அது நிச்சயம் இப்போது இல்லை. DigitalCoinPrice 2029ல் $519.46 என்ற விலையை எட்டுமென்ற்கிறது. Coin Price Forecast இது $650ஐ 2033ல் எட்டும் என்கிறது. லைட்காயின் $10,000ஐ எட்டாது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ஆனால் இப்போதைக்கு அது நடக்காது என்று உணர்ந்துகொள்வது பாதுகாப்பானது.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image