LUNA நாணய விலைக் கணிப்பு: LUNA மேலே செல்லுமா?
ஒரு புதிய உச்சத்தை அடைந்தபின், LUNA நாணயம் தொடர்ந்து ஏறுமா?

உள்ளடக்கம்
- LUNA நாணயத்தின் விலை வரலாறு
- Mainnet தர மேம்பாடு
- LUNA நாணய விலைக் கணிப்பு
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
LUNA நாணயம் கொரிய நிறுவனமான Terraform Labsஆல் உருவாக்கப்பட்டது. இது கிரிப்டோகரன்சி சந்தைகளில் 2019 ஜூலையில் தொடங்கப்பட்டது.
2019 ஏப்ரலில் வெளியிடப்பட்ட Terraformன் வெள்ளையறிக்கப்படி: “பலரும் ரொக்கப்பணத்தையும் பிட்காயினையும் இணைப்பதால் நிலையான விலை கொண்ட கிரிப்டோகரன்சி என்ற பலனைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பலருக்கும் அத்தகைய ஒரு கரன்சியை ஏற்றுக்கொள்வதற்கான தெளிவான திட்டம் இல்லை”.
“பரிமாற்ற ஊடகமாக கரன்சியின் மதிப்பு முக்கியமாக அதன் வலைத்தொடர்பு விளைவுகளால் ஏற்படுகிறது. ஒரு வெற்றிகரமான புதிய டிஜிட்டல் கரன்சி பயனுள்ளதாக மாறுவதற்கு அதிகளவில் சுவீகரிக்கப்பட வேண்டும். Terra என்னும் கிரிப்டோகரன்சியை நாங்கள் முன்மொழிகிறோம். இது நிலையான விலையையும் வளர்ச்சிக்கான தேடலையும் கொண்டது.”
இந்த நாணயம் Terra பிளாக்செயினில் இரட்டை டோக்கன் அமைப்பின் ஒரு பகுதியாக stablecoin TerraUSD (UST) உடன் உருவாக்கப்பட்டது. LUNAவை மீட்டெடுக்க முடியாத கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் (burning) UST உருவாக்கப்படுகிறது. இது LUNAவுக்கு அதற்கான மதிப்பைத் தருவதுடன் USTயில் நிலைத்தன்மையையும் பராமரிக்கிறது.
LUNA நாணயத்தின் விலை வரலாறு
2019ல் LUNA $1.31 என்ற விலையில் தோற்றுவிக்கப்பட்டாலும் முதல் 18 மாதங்களுக்கு தொடர்ந்து சரிவுப்பாதையில் சென்றது. இது மாறியல்பு கொண்ட கரன்சி இல்லையென்றாலும், இந்தப் புதிய டோக்கனுக்கு அதிக நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.
2019 செப்டம்பருக்குப்பின், LUNA புதிய அடிவிலைகளைப் பதிவுசெய்தபடி இருந்தது. 2019 டிசம்பர் 18ல் $0.21க்கு விழுந்து 2020 மார்ச் 18ல் $0.12க்கும் கீழெ சென்றது.
2020 ஆகஸ்ட் 19ல் LUNA நாணயம் பினான்ஸ் சந்தை செயற்தளத்தில் பட்டியலிடப்படும் என்று Terra அறிவித்தது. ஆகஸ்ட் 28 முதல் பயனர்கள் தங்கள் LUNA நாணயங்களை ஸ்டேக் செய்ய முடியும் என்றதும் ஜூலையில் விலை $0.33யில் இருந்து $0.56க்கு உயர்ந்தது.
எனினும், விரைவிலேயே திரும்பவும் விலை விழுந்தது. அந்த ஆண்டு செப்டம்பரில் UST தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், LUNA திரும்பவும் $0.32வுக்கு இறங்கியது.
2021 தொடக்கத்தில் கிர்ப்டோ மலர்ச்சி ஏற்படும்வரை இந்த ஸ்டேக்கிங் சொத்தின் எதிர்காலத் தோற்றம் தெளிவற்றதாக இருந்தது. அதன்பின் LUNA ஏற்றம் காணத் தொடங்கியது.
பிப்ரவரி 9ல் அது $6.44 விலையை எட்டி அடுத்த ஆறு மாதங்களில் மேலும் உயரத்தை அடைந்து ஆகஸ்ட் 28ல் $34.96ஐ எட்டியது. செப்டம்பர் 7ல் கிரிப்டோ சந்தை நிலைகுலைவின்போது $25.30க்கு வந்தது.
Mainnet தர மேம்பாடு
எனினும் Terra பிளாக்செயினின் கொலம்பஸ்-5 mainnet தர மேம்பாடு 2021 செப்டம்பர் 30ல் தொடங்கப்பட்டது. அப்போது LUNA தனது ஏற்றத்தைத் தொடர ஆரம்பித்தது.
தர மேம்பாட்டில் பிற பிளாக்செயின் மீது சொத்துக்களின் சங்கிலி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மீட்டெடுக்க முடியாத ஒரு முகவரிக்கு/கணக்குக்கு அனுப்பப்படும்போது, சமூகத் தொகுதிக்கு அனுப்பப்படுவதற்கு மாறாக LUNA நிரந்தரமாக அழிக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது.
தர மேம்பாட்டுக்குப்பின், அக்டோபர் 4ம் தேதி இந்நாணயம் $49.45 உச்சத்தை எட்டி தொடர்ந்து மேலேறி ஒரு புதிய உச்சமான $54.77ஐ 2021 நவம்பர் 8ல் தொட்டது. இந்த நாணயத்துக்கு டிசம்பர் மாதமும் உற்சாகமளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. ஏனெனில் இன்னொரு புதிய உச்சமான $99.72வை 2021 டிசம்பர் 26ல் தொட்டது.
தற்போது சந்தை மதிப்புப்படி முன்னணியிலுள்ள கிரிப்டோகரன்சிகளிடையே ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சமீபத்தில் LUNA இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. தற்போது $79.82 விலையில் வர்த்தகமாகி வருகிறது. 2021ல் LUNA $1க்கும் கீழான விலையில் தொடங்கியது.
LUNA/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
May 12, 2022 | 0.0157 | -1.0306 | -98.50% | 1.0463 | 1.3251 | 0.0129 |
May 11, 2022 | 1.0440 | -15.9061 | -93.84% | 16.9501 | 19.0796 | 0.9686 |
May 10, 2022 | 16.9502 | -12.6101 | -42.66% | 29.5603 | 38.9671 | 13.2501 |
May 9, 2022 | 29.5605 | -33.0073 | -52.75% | 62.5678 | 63.5362 | 29.1937 |
May 8, 2022 | 62.5678 | -3.7933 | -5.72% | 66.3611 | 66.7029 | 57.8716 |
May 7, 2022 | 66.3610 | -8.9541 | -11.89% | 75.3151 | 75.4673 | 61.6985 |
May 6, 2022 | 75.3100 | -4.9092 | -6.12% | 80.2192 | 80.8529 | 75.2323 |
May 5, 2022 | 80.2169 | -3.7242 | -4.44% | 83.9411 | 85.5641 | 76.3994 |
May 4, 2022 | 83.9400 | 3.5619 | 4.43% | 80.3781 | 85.9398 | 79.9657 |
May 3, 2022 | 80.3634 | -1.7103 | -2.08% | 82.0737 | 83.6425 | 79.1217 |
May 2, 2022 | 82.0764 | 1.9578 | 2.44% | 80.1186 | 82.9880 | 78.4455 |
May 1, 2022 | 80.1165 | 4.0121 | 5.27% | 76.1044 | 80.5350 | 74.8889 |
Apr 30, 2022 | 76.0970 | -6.7961 | -8.20% | 82.8931 | 84.0996 | 74.6513 |
Apr 29, 2022 | 82.8830 | -3.9755 | -4.58% | 86.8585 | 87.3817 | 81.9642 |
Apr 28, 2022 | 86.8584 | 0.0827 | 0.10% | 86.7757 | 90.0213 | 84.9279 |
Apr 27, 2022 | 86.7747 | 0.6229 | 0.72% | 86.1518 | 88.3194 | 85.3161 |
Apr 26, 2022 | 86.1518 | -8.3076 | -8.79% | 94.4594 | 94.8423 | 84.5084 |
Apr 25, 2022 | 94.4592 | 6.2409 | 7.07% | 88.2183 | 94.8688 | 85.0795 |
Apr 24, 2022 | 88.2183 | 1.2502 | 1.44% | 86.9681 | 89.9251 | 86.2496 |
Apr 23, 2022 | 86.9681 | -4.1514 | -4.56% | 91.1195 | 91.6171 | 86.5515 |
LUNA நாணய விலைக் கணிப்பு
சரி, வரவிருக்கும் மாதங்களில், வருடங்களில் என்ன நடக்கக்கூடும்? 2022க்கான LUNA நாணய விலைக் கணிப்பாக ஆய்வாளர்கள் சொல்வதைப் பார்க்கலாம்.
WalletInvestor கணிப்புப்படி தொடர்ச்சியான ஏறுமுக வளர்ச்சி இருக்கும். ஒருவருடத்தில் $210.96 விலையை எட்டுமென்றும் ஐந்து ஆண்டுகளில் அதன் மதிப்பு $176.82 இருக்குமென்றும் கணிக்கிறது.
DigitalCoinPrice கணிப்புப்படி, 2022ல் தனது ஏற்றத்தை LUNA தொடருமென்றும், ஆண்டில் அதன் சராசரி விலை $113.61 இருக்குமென்றும் கூறுகிறது. நீண்டகால கணிப்புப்படி 2023லும் இதேபோன்ற நேர்மறையான கணிப்பாக $128.36 விலையைக் குறிப்பிடுகிறது. இதன் 2027க்கான Terra LUNA நாணய விலைக் கணிப்பு $202.64 ஆக உள்ளது.
EconomyWatch-ன் விலைக் கணிப்புகூட இதே வரிசையில்தான் வருகிறது. இதுவும் LUNA தொடர்ந்து ஏற்றம் காணும் என்றும் 2025ல் $100 மதிப்பை எட்டும் என்றும் கணிக்கிறது. 2030ல் பெரும்பாலான சமூகங்கள் பிளாக்செயின் அடிப்படையிலானதாக இருக்குமென்று இந்தத் தளம் வாதிக்கிறது. இதன் விளைவாக LUNAவின் மதிப்பு $150 ஆக இருக்கும் என்கிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
LUNA ஒரு நல்ல முதலீடு தானா?
இருக்கலாம். LUNA நாணயம் ஏறுமுகமான போக்கினை கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஆய்வாளர்கள் இந்தப் போக்கு தொடருமென்று கணிக்கிறார்கள். இந்த டோக்கன் மாறியல்புடையதாக நிரூபித்துள்ளது. ஆனால் அத்தகைய மேடுகளும் பள்ளங்களும் கிரிப்டோ சந்தை சரிவு போன்ற வெளிப்புறக் காரணிகளின் குண இயல்புகளால் ஏற்பட்டதாக இருக்கலாம்.
நினைவிருக்கட்டும், இந்த மாறியல்பு தொடரவும் கூடும். ஏனெனில் கிரிப்டோகரன்சிகள் நிலையானவை அல்ல. நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
LUNA நாணய விலை மேலே செல்லுமா?
2022க்கான LUNA நாணய விலைக்கணிப்பு குறித்து ஆய்வாளர்களின் கருத்து பொதுவாக மிகவும் நேர்மறையாக உள்ளது. WalletInvestor இது காளை ஓட்டத்தைத் தொடரும் என்று கணிக்கிறது. அதுபோலவே DigitalCoinPrice-ம் கணிக்கிறது. இரு தளங்களும் 2022ல் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை இது எட்டுமென்று நம்புகின்றன.
DigitalCoinPrice-ன் 2025க்கான LUNA நாணய விலைக் கணிப்பு $172.41. எனினும், ஆய்வாளர்கள் பெரும்பாலும் தவறாக இருக்கலாம் மற்றும் முதலீடு செய்யும்முன் எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்யவேண்டும்.
LUNA நாணயத்தை எங்கு வாங்குவது?
LUNA நாணயத்தை வாங்க உங்களுக்கு ஆர்வமிருந்தால் Currency.com தளத்தில் வாங்கலாம். உங்கள் ஆராய்ச்சியை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.