மடங்குகளின் நகரும் சராசரி (EMA) சுட்டிக்காட்டியை எப்படிப் படித்துப் பயன்படுத்துவது

By Currency.com Research Team

மடங்குகளின் நகரும் சராசரி (exponential moving average) (EMA), மிகவும் சமீபத்திய விலைகளுக்கு அதிகளவு முக்கியத்துவத்தைத் தருவதன் மூலம் விலை மாற்றத்தின் விளைவை மிருதுவாக்குகிறது.

மடங்குகளின் நகரும் சராசரி                                 

மடங்குகளின் நகரும் சராசரி என்றால் என்ன?

மடங்குகளின் நகரும் சராசரி (EMA) என்பது ஒரு டெக்னிகல் அனலிசிஸ். மிக சமீபத்திய விலை விபரங்களுக்கு அதிக நிறையைத் தருவதன் மூலம் இது மற்ற நகரும் சராசரிகளிலிருந்து மாறுபட்டது. எனவே மிக சமீபத்திய வர்த்தகர்களின் நடத்தைக்கு இது அதிக முக்கியத்துவம் தருகிறது. 

இதன் அர்த்தம் மடங்குகளின் நகரும் சராசரி சுட்டிக்காட்டியானது ஒரு சொத்தின் விலை மாற்றத்துக்கு விரைவாக எதிர்வினையாற்றக் கூடியது. உங்கள் வர்த்தக உத்தியின் ஒரு பகுதியாக EMAயைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட முறையாவணத்துடன் மட்டும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. பல்வேறு வர்த்தக முறையாவணங்களுக்கும் நீங்கள் EMA கோட்டினை அமைக்க முடியும்.

மடங்குகளின் நகரும் சராசரியை எப்படிப் புரிந்துகொள்வது

மடங்குகளின் நகரும் சராசரி உத்தியைப் பொறுத்தவரை, EMA கால வரம்பை அமைப்பதில் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் மிகப் பொதுவான பருவங்களாக 50-, 100- மற்றும் நீண்டகாலக் கோட்டுக்கு 200 நாட்கள் உள்ளன. வர்த்தகர்கள் குறுகிய கால வரம்புக்கு வழக்கமாக 12 நாள் மற்றும் 26 நாள் EMAகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய முறையாவணங்களில் நீங்கள் வர்த்த்கம் செய்யும்போது EMA அமைப்பை மாற்றுவதற்கு மறக்காதீர்கள். ஏனெனில் EMA சுட்டிக்காட்டியைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான அளவு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்துவதில்லை. 

மடங்குகளின் நகரும் சராசரி உதாரணம்

EMA தரவுகளின் நேரப் பின்தங்கலைத் துண்டாக்குவதன் மூலம் இரைச்சலின் தாக்கத்தைக் குறைக்கிறது. இதற்குக் காரணம் தாக்கத்தைச் செலுத்தாத முந்தைய விலைகளை EMA விலக்குகிறது. புதிய விலைகளுக்குக் கூடுதல் நிறையைத் தருவதன் மூலம், EMA கோடானது எளிய நகரும் சராசரியைக் (SMA) காட்டிலும் விலை நடவடிக்கைக்கு அருகில் அமர்கிறது. இப்போது வரைபடத்தைப் பார்க்கலாம். இதில் ஊதா கோடுகள் EMAவையும் சிவப்புக் கோடுகள் SMAவையும் குறிக்கின்றன.

மடங்குகளின் நகரும் சராசரி
மடங்குகளின் நகரும் சராசரி – நன்றி: Currency.com

குறிப்பு: திசையில் மாற்றங்களுக்கான சமிக்ஞையைத் தரும் மூன்று புள்ளிகள் உள்ளன. இடதுபுறமும் வலதுபுறமும் நாம் இறங்குமுகப் போக்கினைப் பார்க்கிறோம். வரைபடத்தின் நடுவில் விலை நகர்வு மேல்நோக்கி உள்ளது. அனைத்து மூன்று நிலைகளிலும் EMA சமிக்ஞைகள் SMAவைக் காட்டிலும் ஆரம்பத்திலேயே திசை மாற்றங்களைக் காட்டுவதைத் தெளிவாகப் பார்க்கலாம். இதற்குக் காரணம் விலை மாற்றங்களுக்கேற்ப SMA கோட்டினைக் காட்டிலும் EMA விரைவில் தகவமைத்துக் கொள்கிறது. எனவே ஆரம்பத்திலேயே சமிக்ஞைகள் தெரிகின்றன.

மடங்குகளின் நகரும் சராசரியை எப்படிப் பயன்படுத்துவது

தங்கள் வர்த்தகங்களை விரைந்து நிறைவேற்ற நினைக்கும் தினசரி வர்த்தகர்கள் பெரும்பாலும் விரும்பக்கூடிய நகரும் சராசரி சுட்டிக்காட்டியாக EMA உள்ளது. ஒரு மடங்குகளின் நகரும் சராசரி சூத்திரத்தை உருவாக்குவதற்கு, உங்கள் வர்த்தக உத்திக்கான தனித்த சுட்டிக்காட்டியாக EMAவைப் பயன்படுத்தலாம். ஆனால் அடையாளம் கண்ட சமிக்ஞைகளை உறுதிப்படுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட ஓர் அமைப்பு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெவ்வேறு கால வரம்புகளைக் கொண்ட இரண்டு EMAகளையும் அல்லது பிற டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டிகளுடன் இணைத்தும் நீங்கள் அமைக்க முடியும்.

உங்கள் வர்த்தக உத்திகளில் பிற நகரும் சராசரிகளை நீங்கள் பயன்படுத்துவதைப் போலவே EMAவைப் பயன்படுத்த முடியும். இதற்கிணங்க, வெவ்வேறு கால வரம்புகளுடன் கூடிய இரண்டு மடங்குகளின் ந்கரும் சராசரிகளைப் பயன்படுத்தி போக்கின் திசையை நீங்கள் அடையாளம் காண வேண்டும் அல்லது வாங்குதல் அல்லது விற்பதற்கான சமிக்ஞையை நீங்கள் தேட வேண்டும். 

ஒரு குறுகிய கால EMA நீண்டகால EMA-வுக்கு மேல் நகரும்போது அது தங்கச்சிலுவை சமிக்ஞையாக அறியப்படும் வாங்குதல் சமிக்ஞையானது நிகழும். ஒரு விற்பனை சமிக்ஞையானது (இறப்புச் சிலுவை என்று அறியப்படுகிறது) குறுகிய கால EMA கோடு நீண்டகால EMA கோட்டுக்குக் கீழே நகரும்போது அடையாளம் காணப்படுகிறது. EMA நகரும் சராசரி சுட்டிக்காட்டிகளில் ஒன்றாக இருப்பதால், சாத்தியமுள்ள ஆதரவு மற்றும் தடை நிலைகளைத் தீர்மானிக்கும் வாய்ப்பையும் இதனால் வழங்க முடியும்.

தேர்ந்தெடுத்த முறையாவணத்துக்கு ஒரு மடங்குகளின் நகரும் சராசரியை வரையறுப்பதற்கும் வரைவதற்கும் முன்பாக நீங்கள் EMAவை எப்படிப் புரிந்துகொள்வது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். வர்த்தகங்களை நிறைவேற்றுவதில் EMAவைப் பயன்படுத்தும்போது நகரும் சராசரி சுட்டிக்காட்டிகளுக்கான பொது விதிகளைப் பின்பற்றவேண்டும். இதை சுருக்கமாகச் சொல்வதெனில்:

  • நீண்டகால வரம்புள்ள EMA ஒரு பங்கின் அல்லது சந்தையின் பொதுவான போக்கினை அடையாளம் காண உதவுகிறது. விலையானது 200 நாள் கோடு போன்ற நீண்டகால EMAவைத் தாண்டினால், அது தலைகீழ் மாற்றத்துக்கான சாத்தியத்தைக் குறிக்கும்.
  • ஒரு குறிகிய கால வரம்புடன் ஒரு EMAவையும் நீண்டகால வரம்புடன் மற்றொன்றையும் வரைவது தாண்டுதல்களை அடையாளம் காண உதவும்.
  • ஒரு தங்கச் சிலுவை சமிக்ஞையானது வாங்கும் வாய்ப்பினைக் குறிக்கிறது. 
  • ஒரு இறப்புச் சிலுவை சமிக்ஞையானது விற்கும் வாய்ப்பினைக் குறிக்கிறது.
  • தாங்குநிலைகளை அடையாளம் காணுதல் – விலையானது மேலிருந்து EMA கோட்டினை இடைவெட்டினால், அந்தக் கோடு தாங்குநிலையாக இருக்கும்.
  • தடை நிலைகளை அடையாளம் காணுதல் – விலையானது கீழிருந்து கோட்டைத் தொட்டால், EMA சாத்தியமுள்ள தடை நிலையாக இருப்பதைக் காட்டும்.

நீங்கள் வெவ்வேறு கால அளவுள்ள பல EMAகளை இணைத்து ஒரு மடங்குகளின் நகர்வு சராசரி வர்த்தக உத்தியை உருவாக்கலாம். அத்துடன் நீங்கள் தொடர்புடைய விலைக் குறியீட்டெண் (relative price index), நியம விலகல் அல்லது மாற்றத்தின் வர்த்தக அளவு வீதம் போன்றவற்றை ஒரு சொத்தின் விலையை அதன் மொமண்டம், வர்த்தக அளவு மட்டங்கள் அல்லது விலை மாறியல்பு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய வேறு வகையான சுட்டிக்காட்டிகளைப் பயன்படுத்தி போக்குகளை அடையாளம் காணவும், அடையாளம் கண்ட சமிக்ஞைகளை உறுதிப்படுத்தவும் செய்யலாம்.  

அதற்காக துல்லியத்தை அதிகரிக்கும் என்று நினைத்துக்கொண்டு வய்ப்புள்ள ஒவ்வொரு வகை சுட்டிக்காட்டியையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மாறாக அது மிகச் சிக்கலான வர்த்தக உத்தியாக அமைந்துவிடும். 

வெவ்வேறு சுட்டிக்காட்டிகளை இணைத்து நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். அவற்றில் எது உங்களுக்கு சிறப்பாகப் பொருந்துகிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் உத்தியை எளிமையானதாக வைத்திருக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் அதிக எண்ணிக்கையிலான சுட்டிக்காட்டிகளிலிருந்து கிடைக்கும் பல சமிக்ஞைகளில் நீங்கள் அமிழ்ந்து விடாமல் இருக்கலாம். ஒரே சமிக்ஞைகளைத் தரும் பல சுட்டிக்காட்டிகளைச் சேர்ப்பதைத் தவிருங்கள். இதன் மூலம் மிகைப்படுத்தலைத் தவிர்க்கலாம்.

கீழேயுள்ள வரைபடத்தில் 200 நாள் EMA விலையேற்றத்துக்கான சாத்தியத்தை அடையாளம் காண எப்படி உதவுகிறது பாருங்கள்.

S&P 500 குறியீட்டெண்
S&P 500 குறியீட்டெண் – நன்றி: Currency.com

சுட்டிக்காட்டப்பட்ட புள்ளிகளில், ஒரு மேல்நோக்கிய போக்கின்போது, விலை கோட்டினைத் தொடுகையில், EMA ஒரு தாங்குநிலை சமிக்ஞைகளைத் தருவதையும் விலை திரும்பவும் மேலேறுவதையும் பார்க்கலாம். இந்த சமிக்ஞையானது வாய்ப்புள்ள வாங்கும் புள்ளிகளைக் காட்டுகிறது. அதேபோல, 200 நாள் EMAவைப் பயன்படுத்தி விற்பனை சமிக்ஞைகளையும் அடையாளம் காணலாம். கீழிருந்து விலை கோட்டைத் தொடும்போது, அது EMA தடை நிலையாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

மடங்குகளின் நகரும் சராசரியின் பலன்கள்

  • சமமான நிறையை அனைத்து விலை மாற்றங்களுக்கும் தருவதிலுள்ள குறைபாட்டை நீக்குகிறது
  • எளிய நகரும் சராசரி சுட்டிக்காட்டியைவிட விரைவாக சமீபத்திய விலை மாற்றத்தைச் சேர்க்கிறது
  • ஏற்ற இறக்கமுள்ள சந்தைகளில் எளிய நகரும் சராசரியைவிட EMA விரும்பக்கூடியதாக இருக்கும். காரணம் விலை மாற்றங்களை இது உடனடியாகப் பொருத்துகிறது

மடங்குகளின் நகரும் சராசரியின் குறைபாடுகள்

  • நிலையற்ற தன்மையினால் (அல்லது தவறான சமிக்ஞைகள்) EMA பாதிக்கப்படக்கூடும். காரணம் அதன் விரைவாக விலை மாற்றங்களைப் பொருத்தும் திறன்.

EMA மட்டுமே உகந்த நுழைவையும் வெளியேறும் புள்ளிகளையும் தீர்மானிக்க முடியாது. இதுவொரு பின் தங்கிய சுட்டிக்காட்டி’ மாறாக, இது ஒத்திவைக்கப்பட்ட புள்ளிகளையே வழங்குகிறது. எனினும், போக்கின் திசையை நீங்கள் தீர்மானிக்க விரும்பும்போது EMA சுட்டிக்காட்டி மதிப்பு மிக்க ஒன்று.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எளிமையான நகர்வு சராசரிக்கும் மடங்குகளின் நகர்வு சராசரிக்குமுள்ள வேறுபாடு என்ன?

மடங்குகளின் நகர்வு சராசரி (EMA) சமீபத்திய விலை மாற்றங்களுக்கு எளிய நகர்வு சராசரியைக் காட்டிலும் தனது கணக்கீடுகளில் அதிக நிறையைத் தருகிறது. இதன் அர்த்தம் EMA சுட்டிக்காட்டியானது ஒரு சொத்தின் விலை மாற்றத்துக்கு விரைவாக எதிர்வினையாற்றக் கூடியது. ஏற்ற இறக்கமுள்ள சந்தைகளில் எளிய நகரும் சராசரியைவிட EMA விரும்பக்கூடியதாக இருக்கும். காரணம் விலை மாற்றங்களை இது உடனடியாகப் பொருத்துகிறது. 

எந்த சுட்டிக்காட்டி EMA உடன் சிறப்பாகச் செயல்படும்?

மடங்குகளின் நகரும் சராசரி உத்தியைப் பொறுத்தவரை, EMA கால வரம்பை அமைப்பதில் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் மிகப் பொதுவான பருவங்களாக 50-, 100- மற்றும் நீண்டகாலக் கோட்டுக்கு 200 நாட்கள் உள்ளன. வர்த்தகர்கள் குறுகிய கால வரம்புக்கு வழக்கமாக 12 நாள் மற்றும் 26 நாள் EMAகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய முறையாவணங்களில் நீங்கள் வர்த்த்கம் செய்யும்போது EMA அமைப்பை மாற்றுவதற்கு மறக்காதீர்கள். ஏனெனில் EMA சுட்டிக்காட்டியைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான அளவு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்துவதில்லை. 

தினசரி வர்த்தகத்துக்கு எந்த EMAவைப் பயன்படுத்த வேண்டும்?

தங்கள் வர்த்தகங்களை விரைந்து நிறைவேற்ற நினைக்கும் தினசரி வர்த்தகர்கள் பெரும்பாலும் விரும்பக்கூடிய நகரும் சராசரி சுட்டிக்காட்டியாக EMA உள்ளது. தினசரி வர்த்தகர்கள் குறுகிய கால வரம்புக்கு வழக்கமாக 12 நாள் மற்றும் 26 நாள் EMAகளைப் பயன்படுத்துகின்றனர். வெவ்வேறு கால வரம்புகளைக் கொண்ட இரண்டு EMAகளையும் அல்லது பிற டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டிகளுடன் இணைத்தும் நீங்கள் அமைக்க முடியும்.

தூய்மையான வாசிப்பு

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image