MATIC விலைக் கணிப்பு: பாலிகான் தொடர்ந்து வளருமா?
MATIC மென்மேலும் வெற்றியடைந்து வருகிறது. இந்தக் கிரிப்டோகரன்சி பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

இந்த முன்னறிவிப்பில்
- Matic நெட்வொர்க் தொடங்கப்பட்டது
- குறிப்பிடத்தக்க உயர்வு
- வியத்தகு ஏற்ற இறக்கங்கள்
- அடுத்து என்ன நடக்கும்?
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாலிகான் MATIC கிரிப்டோகரன்சி 2021ன் மிகப்பெரிய வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். ஆனால் இந்த நாணயத்திற்கு என்ன நடந்துள்ளது, அது எங்கிருந்து வந்தது, 2022ல் MATIC நாணயத்தின் விலை எங்கே செல்லும்?
முதலில், பாலிகான் என்றால் என்ன என்பதை விளக்குவோம். இது 2017ல் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 2021 வரை Matic நெட்வொர்க் என்று அழைக்கப்பட்டது. Matic நெட்வொர்க் என்ற வார்த்தையை நீங்கள் அவ்வப்போது கேட்டிருக்கலாம். இது பாலிகானைக் குறிக்கும்.
பாலிகான் என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிளாக்செயின் வலைத்தொடர்புகளை உருவாக்கும் ஒரு கட்டமைப்பாகும். சில கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் பிளாக்செயினால் தானாகவே செயலாக்கப்படும். இரண்டு தரப்பினருக்கு இடையிலான ஸ்மார்ட் ஒப்பந்தங்களை அமைக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான தளம் எதேரியம் ஆகும். இருப்பினும், எதேரியமின் சிக்கல் என்னவென்றால், கணினியைப் பயன்படுத்தும் மையமில்லாச் செயலிகள் - அல்லது dApps - பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில dApps பிரபலமடைந்தன. ஆனால் அது மற்றொரு சிக்கலை உருவாக்கியது. நிறையபேர் அவற்றைப் பயன்படுத்த முயன்றனர். அதனால் அது எதேரியம் வலைத்தொடர்பின் வேகம் கணிசமாகக் குறைந்தது.
இதையொட்டி மக்கள் dAppsஐப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். இதன் விளைவாக dApps தன்னால் முடிந்த அல்லது பெற்றிருக்க வேண்டிய வெகுஜன ஏற்பை ஒருபோதும் அடையவில்லை.

எந்தவொரு பிரச்சனையிலும், எப்போதும் சாத்தியமான தீர்வு இருக்கும். நினைத்ததைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் dApps ஐப் பயன்படுத்தியதால் எதேரியம் வேகம் குறைந்து, பரிவர்த்தனைகளைத் தாமதப்படுவதால், சில டெவலப்பர்கள் தங்கள் அமைப்புகளை பரவலாக்குவதன் மூலம் விஷயங்களை விரைவுபடுத்தினர். ஒருபுறம், இது நன்றாக இருந்தது. ஏனென்றால் செயல்முறை விரைவாகவும், பணம் செலுத்துதல் வேகமாகவும் இருந்தது. ஆனால் இதில் சில குறைபாடுகள் இருந்தன.
முதலாவதாக, இது குறைவான பாதுகாப்புடன் இருந்தது. இரண்டாவதாக, அமைப்புகள் அவற்றின் சொந்த பிளாக்செயின்களைப் பயன்படுத்தின. இது எதேரியம் போன்றவை செய்த மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மூன்றாவதாக, மற்றும் மிக முக்கியமாக, அவர்கள் எதேரியம் போன்றவற்றுடன் இணைக்கப்பட்ட கணிசமான டெவலப்பர் சமூகத்தைப் புறக்கணித்தனர்.
Matic நெட்வொர்க் தொடங்கப்பட்டது
Matic நெட்வொர்க், அக்டோபர் 2017ல் தொடங்கப்பட்டது. இது இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கவும், 'இரு உலகிலும் சிறந்த' தீர்வை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டது. Matic, பிளாஸ்மா எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது பரிவர்த்தனைகளை எதேரியத்தின் பிரதான சங்கிலியில் நகர்த்துவதற்கு முன் அவற்றைச் செயல்படுத்தியது.
இதன் பொருள், அதிக dApp பயனராலும் டெவலப்பர் தளத்தினாலும் வேகம் குறையாமல் விரைவாக நகர முடியும். ஆனால் இது பரந்த சந்தையைப் பெற dApps மற்றும் பொதுவான எதேரியம் தொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்பைப் பயன்படுத்த முடியும். இது தன்னை Level 2 தொழில்நுட்பம் என்று அழைத்தது. அதாவது அடிப்படை பிளாக்செயின் லேயரை இது மாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் மக்கள் அதற்கு வெளியே வேலை செய்ய முடியும்.
இதன் பொருள், பாதுகாப்பைப் பராமரித்து அணுகல்தன்மையை அதிகரிக்கும் அதே வேளையில், இதனால் விஷயங்களை, குறிப்பாகத் தொடர்புகளை எளிமையாக்க முடிந்தது. குறைந்தபட்சம், அது கோட்பாடாக இருந்தது.

2021ல், பாலிகான் அமைக்கப்பட்டபோது விஷயங்கள் கொஞ்சம் மாறியது. இது அடிப்படையில் Matic போலவே இருந்தாலும், Matic விஷயங்களின் அளவைச் சிறியதாக்க உருவாக்கப்பட்டது. பாலிகான் ஒன்றுக்கொன்று செயல்படக்கூடிய பிளாக்செயின்களை அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பிளாக்செயின் நெட்வொர்க்குகளைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பதே இதன் யோசனை. இவை பலவிதமான தொகுதிக்கூறுகளுடன் தனிப்பயனாக்கப்படலாம். இதன் மூலம் டெவலப்பர்களை மிகவும் குறிப்பிட்ட செயல்பாட்டுடன் பிளாக்செயின்களை அமைக்க அனுமதிக்கும்.
கணினி அதன் சொந்த கிரிப்டோகரன்சியைக் கொண்டுள்ளது. மேலும் பாலிகான், Matic-ன் நடைமுறை வாரிசு அல்லது மேம்பாடு என்பதால், அதன் பெயரைப் பெறுகிறது: MATIC.
Matic நெட்வொர்க், பாலிகான் பற்றிய விளக்கங்களைப் பார்த்தோம். இதன் கிரிப்டோகரன்சி எப்படி இருக்கிறது? அங்கு என்ன நடக்கிறது, 2022க்கான சமீபத்திய MATIC விலைக் கணிப்பு என்ன?
குறிப்பிடத்தக்க உயர்வு
MATIC கிரிப்டோகரன்சி ஒப்பீட்டளவில் புதியது. நெட்வொர்க் 2017ல் தொடங்கப்பட்டது. அதன் நாணயம் 18 மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 2019ல் வர்த்தகத்திற்குச் சென்றது. இது ஆரம்பத்தில் ஒரு டோக்கன் $0.00263 என்ற விலைக்கு விற்கப்பட்டது. மேலும் சிறிது காலத்திற்கு அது அந்த விலையைச் சுற்றியே இருந்தது. 2019 டிசம்பரில் $0.04168 ஆகச் சிறிது உயர்ந்தாலும், அது மீண்டும் சரிந்து $0.01781ல் 2021-ஐ தொடங்கியது.
பாலிகான் தொடங்கப்பட்டபோது, அதன் மதிப்பு உயர்ந்தது. மார்ச் 13ல் $0.4251 ஆக இருந்தது. வெறும் 10 வாரங்களில் 2,286% உயர்ந்தது. மார்ச் 25 அன்று சந்தை தன்னைத்தானே சரிசெய்து, $0.3019க்குச் சரிந்தாலும், அதன் பிரபலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏப்ரல் இறுதியில் $0.792ஐ எட்டியது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்த இடத்தில் இருந்து மேலும் 86% அதிகரித்தது.
வியத்தகு ஏற்ற இறக்கங்கள்
மே மாதத்தின் முதல் பாதியில் சில அழகான வியத்தகு ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. மே 9 ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் நாணயம் டாலர் தடையை உடைத்தது - ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு சென்ட்களுக்கும் குறைவான மதிப்புள்ள ஒன்றுக்கு இது ஒன்றும் மிகவும் மோசமான விஷயம் அல்ல - ஆனால் மே 11ன் அதிகாலையில் $0.8158 ஆகக் குறைந்தது. இருப்பினும், அது அன்று இரவு தாமதமாக $1.0302 விலைக்குத் திரும்பியது. மேலும் மே 18 அன்று $2 தடையை உடைத்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2020 ஆம் ஆண்டின் இறுதிப்படி MATIC நாணயத்தின் விலை சுமார் 9,320% உயர்ந்துள்ளது. பின்னர் அது மே 24 அன்று $1.10 ஆகக் குறைந்து, ஜூலை 21 அன்று $0.69 ஆகச் சரிந்தது.
MATIC நாணயத்தின் விலை சீராக மீண்டும் ஏறியது. 7 டிசம்பர் 2021 அன்று, விலை 24 மணிநேரத்தில் $1.79ல் இருந்து $2.50 ஆக உயர்ந்தது - கிட்டத்தட்ட 40% லாபம். பாலிகோனின் 'zk நாள்' காரணமாக ஆர்வம் அதிகரித்தது, மேலும் புதிய எதேரியம் மாறத்தக்க அளவுள்ள தீர்வின் டெமோவுடன் முன்னோடியான ZK ஸ்டார்ட்அப் Mir உடன் பாலிகான் $400 மில்லியன் ஒப்பந்தத்தை டிசம்பர் 9 அன்று அறிவித்தது.
Sequoia Capital India மற்றும் Steadview Capital உள்ளிட்ட குறிப்பிடத்தக்க துணிகர மூலதன முதலீட்டாளர்கள் பாலிகானில் $50 மில்லியன் முதல் $150 மில்லியன் வரை முதலீடு செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இது நிறுவனங்கள் அதிக அளவு MATIC நாணயங்களைச் சிறிது தள்ளுபடியில் வாங்க உதவும்.
பாலிகான் (MATIC) தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட EIP-1559 மேம்படுத்தலையும் ஜனவரி 2022ல் திட்டமிட்டுள்ளது. இது டோக்கன்களை கணக்குகளுக்கு மாற்றுவதைத் தொடங்கும். ஜனவரி 13 அன்று இதை எழுதும் நேரத்தில், நாணயம் தோராயமாக $2.42ல் வர்த்தகம் ஆனது.
—
MATIC/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
Mar 23, 2022 | 1.49199 | -0.00973 | -0.65% | 1.50172 | 1.51541 | 1.48985 |
Mar 22, 2022 | 1.50149 | 0.04049 | 2.77% | 1.46100 | 1.52879 | 1.45561 |
Mar 21, 2022 | 1.46100 | 0.00094 | 0.06% | 1.46006 | 1.49346 | 1.43982 |
Mar 20, 2022 | 1.46011 | -0.06491 | -4.26% | 1.52502 | 1.53197 | 1.45572 |
Mar 19, 2022 | 1.52497 | 0.03115 | 2.09% | 1.49382 | 1.53642 | 1.49382 |
Mar 18, 2022 | 1.49355 | 0.05076 | 3.52% | 1.44279 | 1.50516 | 1.41486 |
Mar 17, 2022 | 1.44279 | -0.02074 | -1.42% | 1.46353 | 1.49375 | 1.43395 |
Mar 16, 2022 | 1.46353 | 0.08887 | 6.46% | 1.37466 | 1.46584 | 1.35237 |
Mar 15, 2022 | 1.37506 | 0.00069 | 0.05% | 1.37437 | 1.40471 | 1.32883 |
Mar 14, 2022 | 1.37432 | 0.01820 | 1.34% | 1.35612 | 1.38848 | 1.32742 |
Mar 13, 2022 | 1.35636 | -0.03564 | -2.56% | 1.39200 | 1.41468 | 1.34977 |
Mar 12, 2022 | 1.39195 | -0.00941 | -0.67% | 1.40136 | 1.42881 | 1.38920 |
Mar 11, 2022 | 1.40136 | -0.03214 | -2.24% | 1.43350 | 1.46735 | 1.40048 |
Mar 10, 2022 | 1.43378 | -0.06749 | -4.50% | 1.50127 | 1.50623 | 1.39839 |
Mar 9, 2022 | 1.50127 | 0.05985 | 4.15% | 1.44142 | 1.53939 | 1.44086 |
Mar 8, 2022 | 1.44142 | 0.03344 | 2.38% | 1.40798 | 1.46910 | 1.39999 |
Mar 7, 2022 | 1.40788 | -0.02300 | -1.61% | 1.43088 | 1.49046 | 1.36861 |
Mar 6, 2022 | 1.43088 | -0.07268 | -4.83% | 1.50356 | 1.51312 | 1.42787 |
Mar 5, 2022 | 1.50356 | 0.03130 | 2.13% | 1.47226 | 1.51034 | 1.44517 |
Mar 4, 2022 | 1.47207 | -0.10536 | -6.68% | 1.57743 | 1.58168 | 1.44970 |
MATIC நாணய விலையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? MATIC நெட்வொர்க் விலைக் கணிப்புக்கான சிறந்த முன்கணிப்பு என்ன? இந்த ஆண்டின் பிற்பகுதியோடு ஒப்பிட, 2022 ஆம் ஆண்டின் MATIC விலைக் கணிப்பு எப்படி இருக்கும்?
அடுத்து என்ன நடக்கும்?
பாலிகான் விலையைக் கணிப்பது சற்று சிரமமானது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் இது எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது. இருப்பினும், பெரும்பாலான ஆய்வாளர்கள் அது உயரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெரிய அளவுக்கு இருக்காது. மேலும் நிலையானதாக இருக்கும் என்கிறார்கள். FXStreet ஆய்வாளர் ஆகாஷ் கிரிமத், பாலிகான் 13% வரை மட்டுமே மேலேறும் சாத்தியமுள்ளது என்றும் வரவிருக்கும் மாதங்களில் சிறிதளவுக்குக் கீழிறங்க அது தயாராக இருக்கிறது என்கிறார்.
DigitalCoinPrice-ன் மற்றொரு MATIC நாணய விலைக் கணிப்பு 2025, மூன்று ஆண்டுகளில் சராசரியாக $4.64ஐ எட்டக்கூடும் என்று கூறுகிறது. அதே நேரத்தில் WalletInvestor ஒரு வருடத்தில் $4.20ஐ எட்டும் என்றும் ஐந்து ஆண்டுகளில் $12.45ஐ எட்டும் என்றும் நம்புகிறது. MATIC நாணயத்தின் விலைக் கணிப்பை மிகவும் கவனமாகப் பார்த்தாலும், அது இன்னும் உற்சாகமாக இருக்கிறது. 2030 ஆம் ஆண்டிற்கான MATIC நாணயத்தின் விலைக் கணிப்புக்கான ஆய்வாளரின் நீண்ட காலக் கணிப்பை PricePrediction.net-யில் காணலாம். அங்கு அந்த நாணயத்தின் மதிப்பு சராசரியாக $66.30 ஆக இருக்கும் என்று தளம் நம்புகிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம், பாலிகான் (MATIC) விலைக்கணிப்பின்போது இதேபோலக் கடந்த ஆண்டில் செயல்பட்ட மற்ற கிரிப்டோக்களைப் பார்க்க வேண்டும். இதற்கு நல்ல உதாரணமாக டோஜ்காயினை எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு மே மாதத்தின் நடுப்பகுதியில் DOGE சுமார் $0.0025 ஆக இருந்தது. இப்போது $0.17 மதிப்பில் வர்த்தகம் ஆகிறது.
இரண்டு நாணயங்களுக்கிடையில் வெளிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும், அவை இரண்டும் மேல்நோக்கிய பாதையைக் கொண்டுள்ளன. வித்தியாசம் என்னவென்றால், MATIC விலைக் கணிப்பு மிகவும் சாதகமானதாக இருக்கும் அதே வேளையில், DOGE இப்போது இந்த விலைக்கு அருகில் நிலைகொண்டிருக்கிறது. இருப்பினும், சந்தை எவ்வாறு தொடர்ந்து நடந்து கொள்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Matic நெட்வொர்க் என்றால் என்ன?
Matic நெட்வொர்க் என்பது பாலிகானுக்கு முன்னோடியாகும். இது பிரதான எதேரியம் பிளாக்செயினுக்குச் செல்வதற்கு முன் வணிகத்தை நடத்த மக்களை அனுமதிக்கும் ஓர் அமைப்பாகும். இது MATIC நாணயத்தை டோக்கன் பயன்பாட்டுக்கென உருவாக்கியது. அது இப்போது தனி உயிராக உருவாகியுள்ளது.
Matic நெட்வொர்க் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் பெயரை பாலிகானாக மாற்றியது. ஆனால் சொந்த நாணயம் இன்னும் MATIC என்றே அழைக்கப்படுகிறது.
MATIC நாணயம் நல்ல முதலீடுதானா?
இந்த நாணயம் இந்த ஆண்டில் இதுவரையிலும் மிகவும் ஈர்க்கத்தக்க வருவாயை முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் வழங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து ஏறுமா என்றால், அது ஊகத்துக்குரியது. WalletInvestor நாணயத்தை "ஓர் அற்புதமான நீண்ட கால (ஒரு வருட) முதலீடு" என்று குறிப்பிடுகிறது.
எப்போதும் போல, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். மோசமான நிலையற்ற கிரிப்டோ சந்தையில் அளவுக்கு மீறி முதலீடு செய்யாதீர்கள். MATIC விலைக் கணிப்பு, வெறும் கணிப்பு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
MATIC $5 ஐ அடைய முடியுமா?
ஒரு வருடத்திற்கு முன்பு இது $1ஐ எட்டும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மே 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் $2 தடையை உடைத்தது. PricePrediction.net இந்த நாணயத்தின் மதிப்பு 2023ல் $5.24 ஆகவும், 2025ல் $10.85 ஆகவும் இருக்கும் என நம்புகிறது. WalletInvestor ஜூன் 2023ல் நாணயத்தின் மதிப்பு $5 ஆக இருக்கும் என்கிறது. DigitalCoinPrice $5 குறியை நவம்பர் 2025 இல் அடையும் என்று நம்புகிறது.
அனைத்து முன்னறிவிப்புகளும் வரலாற்றுத் தரவு மற்றும் சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை எதிர்காலச் சந்தை நிலைமைகளைக் கணக்கில் கொள்வதில்லை.
MATIC நாணயத்தை எங்கே வாங்குவது
MATIC, Currency.com உட்பட பெரும்பாலான கிரிப்டோ சந்தைகளில் கிடைக்கிறது. எங்கு சிறந்த விலையில் கிடைக்கிறது என்று பாருங்கள்.
நீங்கள் எவ்வளவு இழக்கத் தயாரோ அதை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலைகள் குறையவும், கூடவும் செய்யும் என்பதையும் மனதில் வையுங்கள்.