மெட்டாவெர்ஸில் சொத்து வாங்குவது எப்படி: ஓர் எளிய வழிகாட்டி

By Currency.com Research Team

மெட்டாவெர்ஸில் சொத்து வர்த்தகத்தில் பங்கெடுப்பது எப்படி?

உள்ளடக்கம்

2021ல், குறைந்தது வருடத்தின் பின்பகுதியில் கிரிப்டோகரன்சி வெடிப்பு ஏற்பட்டபோது, அதன் முக்கிய ஊக்க சக்தியாக இருந்தது மெட்டாவெர்ஸ். அந்த மெய்நிகர் யதார்த்த உலகில் எப்படி சொத்து வாங்குவது என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், நாங்கள் உதவ முடியும்.

மெட்டாவெர்ஸ்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரிப்டோகரன்சி உலகில் மிகப் பரபரப்பாகப் பேசப்படுபவைகளில் ஒன்றாக மெட்டாவெர்ஸ் உள்ளது. மெட்டாவெர்ஸ் நியாயப்படி ஒரு நேரடியான யோசனை தான். இது 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த யோசனை என்னவென்றால், எதிர்காலத்தில் ஒரு நிலையில், அனைத்து மனிதர்களும் மெய்நிகர் உலகில் அவதாரங்களாக ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளுவர். இதுவரையிலும் மானுடத்தை ஒன்றாக இணைக்கும் அல்லது இணைக்கும் வாய்ப்புள்ள ஒரேயொரு இணையவழி இருப்பு கூட இல்லை. எனினும், சிறிய மெய்நிகர் உலகங்கள் உள்ளன. இதில் ஆட்கள் உள்நுழைந்து அதன் வெளியைத் தேடியறிந்து பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இவை மெட்டாவெர்ஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மெட்டாவெர்ஸ் சொத்து வாங்குதல்

மெட்டாவெர்ஸில் நீங்கள் “நிலம்” வாங்கி அதை தனித்துவமான டோக்கன்களைப் (NFTகள்) பயன்படுத்தி விரும்பும் வகையில் அலங்காரம் செய்யலாம். மெட்டவெர்ஸ் சொத்து வர்த்தகம் இப்போது மிகப் பெரிய விசயமாக மாறியுள்ளது. உதாரணமாக 2021 நவம்பரில், டிஜிட்டல் முதலீட்டு நிறுவனம் Republic Realm சில சொத்துக்களை $4.2 மில்லியனுக்கு Sandbox-ல் வாங்கியது. Sandbox என்பது பிளாக்செயின் அடிப்படையிலான 3D திறந்த உலக மெட்டாவெர்ஸ் ஆகும். அதன் உரிமையாளர் ஹாங்காங்கிலுள்ள Animoca Brands.

நீங்கள் இந்தளவு செலவழிக்க வேண்டியிராது என்று நம்பினாலும், மெட்டாவெர்ஸ் சொத்து மலிவானதல்ல. 2022 பிப்ரவரி 14ல், Sandboxல் மிக மலிவான துண்டுநிலம் 0.4498 ETHக்குக் கிடைத்தது. இதன் மதிப்பு $1,290.33. 3D மெய்நிகர் உலக உலாவி அடிப்படையாகக் கொண்ட தளமான Decentraland-ல் மிக மலிவான மெய்நிகர் சொத்தின் மதிப்பு 4.5 ETH ($12,909.06) விலையில் இருந்தது. மெய்நிகர்ச் சொத்து மலிவாகக் கிடைக்காது.

மெட்டாவெர்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் எல்லாவற்றிலும் நிலம் வாங்கும் திறனைக் கொண்டிருக்காது. சொத்துக்களைப் பொறுத்தவரை அதில் பெரு நிறுவனங்கள் Decentraland மற்றும் Sandbox. Decentraland MANA கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துகிறது. Sandbox-ன் சொந்த டோக்கன் பெயர் SAND. அதிர்ஷ்டவசமாக, இந்த இரு அமைப்புகளிலும் சொத்துக்களை வாங்கும் நடைமுறை ஒன்றுதான். ஒன்றில் சரியாக இருந்தால் அது மற்றொன்றுக்கும் பொருந்தும். 

முதல் படி

மெட்டாவெர்ஸில் நிலம் வாங்குவதற்கு முதல்படி உங்கள் மெய்நிகர் நிலத்தை எந்த வலைத்தொடர்பில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று தேர்ந்தெடுப்பதுதான்.

மெட்டாவெர்ஸில் நிலம் வாங்குவது அபாயகரமானதாக இருக்கலாம்
மெட்டாவெர்ஸில் நிலம் வாங்குவது அபாயகரமானதாக இருக்கலாம் – புகைப்படம்: Shutterstock

இரண்டாம் படி

இதில் இரண்டாம் படி, உங்கள் கிரிப்டோ வாலெட்டை அமைத்துக் கொள்வது. எல்லா வாலெட்டும் நீங்கள் பயன்படுத்தும் கிரிப்டோவை ஆதரிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். எனவே அதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் ஏற்கெனவே ஒரு கிரிப்டோ வாலெட் இருந்து ஆனால் நீங்கள் பயன்படுத்த விரும்பும் நாணயத்துக்கு அது பொருந்தாததாக இருக்கலாம். உங்கள் கிரிப்டோ வாலெட் தயாரானதும் உங்கள் குறிச் சொற்களைக் குறித்துக் கொள்வதை உறுதிப்படுத்துங்கள். பின்னர் நீங்கள் சில SAND, MANA அல்லது ETHஐ சந்தையிலிருந்து வாங்க வேண்டும். இப்போது நீங்கள் அடுத்த அடியை எடுத்துவைக்கத் தயாராகி விட்டீர்கள்.

What is your sentiment on MANA/USD?

0.78650
Bullish
or
Bearish
Vote to see community's results!

மூன்றாம் படி

மூன்றாவது படி நீங்கள் Sandbox-ல் நிலம் வாங்குகிறீர்களா அல்லது Decentraland-லா என்பதைப் பொறுத்தது. நீங்கள் Sandbox பயன்படுத்துகிறீர்கள் எனில் நீங்கள் வலைத்தொடர்பினுள் நுழைய வேண்டும். உங்கள் வாலெட் எதேரியம் பிளாக்செயினில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் உங்கள் வாலெட்டை வலைத்தொடர்புடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் Decentraland பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்கள் சந்தையிடத்துக்குச் சென்று எந்த நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பார்க்க வேண்டும். சந்தையிடத்தில் இடங்கள், நீங்கள் வாங்கக்கூடிய நிலத் தொகுதிகளுடன் சேர்த்து பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த செயற்தளத்தில் மொத்தம் 90,601 நிலத் தொகுப்புகள் உள்ளன. ஆனாலும் இவை எல்லாமே விற்பனைக்கு வரவில்லை. நீங்கள் தேர்வுசெய்த நிலத்தைச் சொடுக்கி அதை நீங்கள் வாங்க விரும்புவதாகச் சொல்ல வேண்டும். இது நம்மை எங்கு கொண்டு சேர்க்குமென்றால்…

நான்காம் படி

Decentraland-க்கு, நான்காம் படியானது உங்கள் வாலெட்டை வலைத்தொடர்புடன் இணைத்து உங்கள் கொள்முதலைச் செய்வதற்கு உங்களிடம் போதிய MANA உள்ளதா என்று உறுதிப்படுத்தும். அது முடிந்ததும், நீங்கள் தொடரத் தயாராகி விடுவீர்கள். Sandboxக்கு ஒருவேளை உங்களுக்கு ஏற்கெனவே சந்தையிடத்துக்குச் செல்வது குறித்துத் தெரிந்திருக்குமென்பதால், SAND மூலம் உங்கள் நிலத்தை நீங்கள் வாங்க முடியும். நிலம் என்பது அமைப்புக்குள் உள்ள ஒரு துண்டு பகுதி. இந்த விளையாட்டில் 166,464 நிலங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 96 மீ. நீள அகலத்துடன் 128 மீ. உயரத்துடன் உள்ளன. பக்கத்து இடத்தை வாங்கும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கலாம். எல்லா துண்டு நிலமும் விற்பனைக்கு இருக்காது. ஏற்கெனவே ஏகப்பட்ட நிலங்கள் வாங்கப்பட்டு விட்டன. இருந்தாலும், OpenSea செயற்தளம் மூலம் எந்த நிலங்கள் மறு விற்பனைக்கு உள்ளன என்று நீங்கள் பார்க்கலாம். OpenSea-யில் சொத்து வாங்குவதால் நீங்கள் சொத்து வைத்திருக்கும் மெட்டாவெர்ஸை உங்களால் அணுகமுடியும்.

ஐந்தாம் படி

இருந்தாலும் எச்சரிக்கிறோம். நியாயமாகப் பார்த்தால் மெட்டாவெர்ஸ் ஒரு புதிய சமாச்சாரம். தற்போது வளர்ந்துவரும் மெட்டாவெர்ஸ் சொத்து விலைகள் அப்படியே இருக்குமா அல்லது பலூன் மாதிரி வெடிக்குமா என்று நமக்குத் தெரியாது. எப்போதும் போல, உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். விலைகள் இறங்கவும் ஏறவும் கூடும் என்ற விழிப்புடன் இருங்கள்.மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மெட்டாவெர்ஸில் சொத்து விலை எவ்வளவு இருக்கும்?

அது இடத்தைப் பொறுத்தது. சமீபத்தில் $1,000க்குச் சமமான பிளாட்டுகள் விற்பனையானதைப் பார்த்துள்ளோம். ஆனால் மில்லியன் கணக்கில் பேரங்கள் முடிக்கப்பட்டதையும் பார்த்துள்ளோம். 2022 பிப்ரவரி நடுவில் உள்ள நிலவரப்பட மெய்நிகர் நிலம் மலிவான முதலீடு இல்லை என்று மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

மெட்டாவெர்ஸ் ஒரு நல்ல முதலீடு தானா?

எங்களுக்குத் தெரியாது. இது இப்படியே தொடர்ந்து இருந்து Web3 தூணாகச் செயல்படலாம். ஆனால் அதேபோல பலூனைப் போல வெடித்து நிறையபேரின் பாக்கெட்டுகளைக் காலி செய்யலாம். எச்சரிக்கையாக இருங்கள். 

மெட்டாவெர்ஸில் நான் முதலீடு செய்வது எப்படி?

மேலே நாங்கள் கோடிட்டுக் காட்டியுள்ள படிநிலைகளைப் பின்பற்றி நீங்கள் மெட்டாவெர்ஸில் முதலீடு செய்யலாம். எப்போதும் போல, எச்சரிக்கையோடு இருங்கள் – நீண்டகால ஓட்டத்தில் மெட்டாவெர்ஸும் மெய்நிகர்ச் சொத்துகளுக்கான சந்தையும் இலாபகரமாக இருக்குமா என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். ஏனெனில், விலைகள் இறங்கவும் ஏறவும் செய்யும். அத்துடன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மறக்காமல் செய்யுங்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image