மெட்டாஹீரோ விலைக் கணிப்பு: HERO நிலவுக்குப் பறக்குமா?

By Currency.com Research Team

அச்சுறுத்துவதாகவும் அதே சமமான அளவில் புத்திசாலியான மெட்டாஹீரோ, நம் அனைவருக்கும் அழியாப் புகழை வழங்குமா?

மெட்டாஹீரோ விலைக் கணிப்பு                                 
தைரியமாகச் செல்கிறது: கடந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்த பிறகு, மெட்டாவெர்ஸால் ஈர்க்கப்பட்ட மெட்டாஹீரோ(HERO) நாணயத்தின் மதிப்பு உயருமா? – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

ஒவ்வொரு தலைமுறையும் புதிய பிரதேசங்களைக் கண்டறியவும், கொடியை நாட்டவும், தெரியாதவற்றைக் காலனித்துவப்படுத்தவும் முயற்சிக்கிறது. இன்னும் பல நிஜ உலக எல்லைகள் ஏற்கெனவே ஆராயப்பட்ட நிலையில், அடுத்தபடி நிச்சயமாக டிஜிட்டல் ஆகும். மேலும் வெடித்து எழுந்த புதிய உலகங்களின் டிஜிட்டல் முன்னிலையில், சமீபத்திய அறியப்படாத எல்லை மெட்டாவெர்ஸ் ஆகும்.

மெட்டாவெர்ஸ் வளாகம் நமக்குச் சுமையாக உள்ள யதார்த்த உலகின் கட்டுப்பாடுகளை அகற்றிவிட்டு மாற்று பிரபஞ்சத்துக்குள் செல்ல அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயதுவந்தோர் சராசரியாக தங்கள் வாழ்நாளின் 34 வருடங்களை ஒரு திரையின் முன் செலவழிப்பதாகக் கூறப்படும் நிலையில், மனிதர்கள் மொத்தமாக மெட்டாவெர்ஸில் இறங்கலாம் என்ற எண்ணம் முற்றிலும் அன்னியமான கருத்து அல்ல.

மெட்டாவெர்ஸின் நிதி மதிப்பு 2028 ஆம் ஆண்டளவில் $800 பில்லியன் ஆக உயரும் என்று சிலர் கணித்துள்ளனர். மேலும் இவ்வளவு பெரிய திறனுடன், மெட்டாவெர்ஸ் நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோ நிறுவனங்கள் அனைத்தும் அதிலிருந்து இலாபம் ஈட்டுவதற்கான போட்டியில் குவிந்து வருகின்றன.

மெட்டாஹீரோ வருகை - ஒரு கிரிப்டோகரன்சி, அதன் பிராண்டின் பெயரைக் கொண்டு மதிப்பிட்டு, மெட்டாவில் நம் அனைவருக்கும் அழியாப் புகழை வழங்கும் என்று நம்புகிறது. மெட்டாஹீரோ (HERO) முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராக மாறலாம். ஆனால் மெட்டாஹீரோ என்றால் என்ன? சமீபத்திய மெட்டாஹீரோ(HERO) விலைக் கணிப்பு என்ன?

முன்னறிவிப்புகளுக்குச் செல்வதற்கு முன், நிறுவனத்தின் விரைவான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

மெட்டாஹீரோ(HERO) என்றால் என்ன?

பெரும்பாலான மெட்டாவெர்ஸ்களில், பயனர்கள் தங்கள் முடி மற்றும் கண்களின் நிறத்துடன் பொருந்தக்கூடிய அவதாரத்தை உருவாக்க முடியும். இருப்பினும், யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒன்றை இலக்காகக் கொண்டாலும், அவதாரங்கள் பொதுவாகத் துல்லியமாக இல்லை. இங்குதான் முப்பரிமாண உடல் ஸ்கேனிங் மூலம் அதிக உயிர்-வாழ்க்கை அவதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மெட்டாஹீரோ நுழைகிறது.

மெட்டாஹீரோ முப்பரிமாண பிரிண்டிங் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் நிறுவனமான Wolf Digital World (WDW) உடன் இணைந்துள்ளது, இது "அல்ட்ரா-HD போட்டோகிராமெடிக் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப்" பயன்படுத்தி நிஜ உலகில் உள்ள நபர்களையும் பொருட்களையும் ஸ்கேன் செய்து, பின்னர் அவற்றை மெட்டாவெர்ஸில் சேர்க்கும்.

"அடுத்த 10 மில்லியன் புதிய பயனர்களைக் கிரிப்டோகரன்சிக்குக் கொண்டுவருவது" என்று கூறப்பட்ட பணியுடன், உலகம் முழுவதும் உள்ள இடங்களில் அமைக்கப்படும் கோள வடிவ அறையில் மக்களை ஸ்கேன் செய்ய மெட்டாஹீரோ திட்டமிட்டுள்ளது.

WDW தளம் பெருமையுடன் பின்வருமாறு அறிவிக்கிறது, "நாங்கள் உண்மையான உலகத்திற்கும் மெட்டாவெர்ஸுக்கும் இடையிலான பாலம். அனைத்து பரிவர்த்தனைகளும் HERO டோக்கன் மூலம் பிரத்தியேகமாக செய்யப்படுகின்றன”. எனவே உங்கள் உடலை அல்லது உங்கள் செல்லப் பிராணியை ஸ்கேன் செய்வதற்கு ஈடாக மெட்டாஹீரோவின் (HERO) சொந்த டோக்கன் பயன்படுத்தப்படும் வகையில் இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஸ்கேன்களில் தனித்துவமான டோக்கன்களை (NFTகள்) உருவாக்கி விற்கலாம்.

எவர்டோம் என்பது மக்கள், செல்லப்பிராணிகள் மற்றும் பொருள்களின் அனைத்து ஸ்கேன்களும் செல்லும் மெட்டாவெர்ஸ் இலக்கு ஆகும். எவர்டோம் பயனர்களும், நிலத்தை வாங்கலாம்; வணிகங்கள் விளம்பரம் செய்யலாம்; மேலும் பயனர்களுக்கு NFTகளை விற்க அல்லது வாங்குவதற்கான சந்தையையும் இந்தத் தளம் வழங்குகிறது. எவர்டோம் மெட்டாஹீரோவின் ஒரு பகுதியாக இல்லாமல், மெட்டாஹீரோவுடன் கூட்டாண்மையில் இருப்பதால், அதற்கு அதன் சொந்த நாணயம் உள்ளது.

மெட்டாவெர்ஸில் மிகவும் உயிர்ப்பான அவதாரங்களை வைத்திருப்பது போன்ற தனித்துவ அம்சங்கள் மூலம் புதிய "வாய்ப்புகள் மற்றும் அனுபவங்களை" உருவாக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. அதன் இணையதளத்தின்படி, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டில் "ஹீரோவாக" முடியும், மெய்நிகர் டேட்டிங்கில் தாங்களாகவே இருக்க முடியும் அல்லது வடிவமைப்பாளர் ஆடைகளை முயற்சிப்பதன் மூலம் வெவ்வேறு தோற்றங்களை ஆராய முடியும்.

எழுந்துள்ள கவலைகள்

கதாநாயகனைப் போலத் தோன்றினாலும், நிறுவனத்தின் மற்றும் நாணயத்தின் ஆரம்ப முன்மொழிவை அவற்றின் நிஜ உலகத் தாக்கங்களின் அடிப்படையில் மெட்டாவெர்ஸுக்கு அப்பால் நீங்கள் ஆராயும்போது சில உடனடி கவலைகள் வெளிப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, கிரிப்டோவுக்கு ஈடாக கண் இமைகளை ஸ்கேன் செய்ய விரும்பும் வேர்ல்ட்காயின் (worldcoin) மீது எழுப்பப்பட்ட கவலைகளைப் போலவே, இந்த ஸ்கேன்களின் தரவுகளின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. எடுத்துக்காட்டாக, மெட்டாஹீரோ உங்கள் தகவலை விற்க முடியுமா அல்லது உங்கள் டிஜிட்டல் உடலைத் துண்டித்து அதிக விலை வழங்கும் பெரிய தொழில் நுட்ப ஏலதாரருக்கு விற்க முடியுமா?

மேலும், சரியாக எவை ஸ்கேன் செய்யப்படுகின்றன, இந்தத் தகவல்கள் எங்கே வைக்கப்படும்? மக்கள் இறக்கும் போது என்ன நடக்கும்? நிஜ உலகில் இறந்த நபர்கள் எவர்டோமில் நித்தியமாக அலைவார்களா?

தகவல்கள் பொறுப்புடன் பயன்படுத்தப்படுகிறதா, அது தனிநபரின் பிரத்யேக உரிமையா என்பது பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பொறுப்புள்ள தகவல் பொருளாதாரத்தைச் சுற்றி ஆக்கப்பூர்வ உரையாடலை நிகழ்த்துவதற்கான சாத்தியம் உட்பட சுவாரசியமான யோசனைகள் எழுகின்றன.

இந்த நேரத்தில், ஒரு தனிநபரின் டிஜிட்டல் தடம், அதைக் கையகப்படுத்தும் புத்திசாலித்தனமான நிறுவனத்தின் சொத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையைப் போன்ற அவதாரத்தின் வளர்ச்சி, யாருக்கு எது சொந்தம் என்பது பற்றிய உரையாடலை ஆழப்படுத்தலாம்.

ஆனால் 2022க்கான மெட்டாஹீரோ விலைக் கணிப்புக்கும் இந்தச் சிக்கல்களுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது 2030க்கான மெட்டாஹீரோ விலைக் கணிப்புக்கும் கூட என்ன சம்பந்தம்? முன்னறிவிப்புகளைப் பார்ப்பதற்கு முன், நிறுவனர்களைப் பற்றிப் பார்ப்போம்.

மெட்டாஹீரோவின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

மெட்டாஹீரோ, போலந்து தொழிலதிபர் ராபர்ட் கிரின் என்பவரால் நிறுவப்பட்டது. "போலாந்தில் ஃபோர்ப்ஸ் 100 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த இளைய தொழிலதிபர்" என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் துறையில் MA படிப்பதற்கு முன்பு கிரின் சர்ரே பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப தொழில்முனைவோரில் BSc முடித்தார் என்று தளம் கூறுகிறது.

2012ல், இப்போது துபாயில் வசிக்கும் கிரின், போலந்தில் உள்ள ஒரு IT நிறுவனமான codewise.com-ன் தலைமைச் செயல் அதிகாரி ஆனார். இந்நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான Voluum (சந்தைப்படுத்துபவர்கள் செயல்திறனுக்கான முழுமையான மென்பொருள் தீர்வு - SaaS) மற்றும் Zeropark (இணைய ஊடகத்தில் வாங்குபவர்களுக்கான விளம்பர தளம்; குறிப்பாக, செயல்திறன் சந்தைப்படுத்துதலில் கவனம் செலுத்துபவர்களுக்கு) , "ஐரோப்பாவில் இரண்டாவது வேகமாக வளரும் நிறுவனம்" என்று விவரிக்கப்படுகிறது.

கிரிப்டோவில் கவனம் செலுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் Codewise-ஐ விற்ற பிறகு, அவர் எவர்டோம் மற்றும் மெட்டாஹீரோவின் தலைமைச் செயல் அதிகாரி ஆனார். மெட்டாஹீரோ வலைத்தளத்தின்படி, கிரின் "பிளாக்செயின், உலகத்தை சிறந்த, சமமான இடமாக மாற்றும் என்று நம்புவதால்" இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கிறது.

நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் விரிவான பட்டியல் - அனைத்தும் ஆண்கள், பெரும்பாலும் வெள்ளையினத்தவர் - கடுமையான போலி எதிர்கால உணர்வுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் தங்கள் முகத்தை, உடலை ஏன் அவர்கள் நாயைக் கூட ஸ்கேன் செய்ய அனுமதிக்கும் போதிய நம்பிக்கையுடன் யாருக்கு வேண்டுமானாலும் சாயம் பூசிவிடுவது வரி நிறுவனத்தின் அழகியல் உணர்வு வெளிப்படுகிறது.

ஆனால் HERO விலைக் கணிப்பு பற்றி என்ன? நாணயம் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

HERO நாணயத்தின் செயல்திறன்

HERO நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே உயர்ந்தது. 12 ஜூலை 2021 அன்று $0.005532ல் இருந்து 10 செப்டம்பர் 2021 அன்று $0.1347 ஆக உயர்ந்தது. 21 செப்டம்பர் 2021 அன்று $0.08205லிருந்த விலை மாத இறுதியில் விலை குறைந்து பின் 13 அக்டோபர் 2021 அன்று அதிகபட்சமாக $0.179ஐ எட்டியது.

இது $0.09ல் நிலையாக இருப்பதற்கு முன், அக்டோபர் 22 அன்று $0.08 ஆக குறைந்தது. மீண்டும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டதால் நவம்பர் 19, 2021 அன்று நாணயத்தின் விலை $0.0951 ஆகக் குறைந்தது.

2 டிசம்பர் 2021 அன்று HERO விலை மீண்டும் உயர்ந்து $0.252021 ஆக உயர்ந்தது. இருப்பினும், விரைவில் விலை குறைந்தது. டிசம்பர் 16, 2021 அன்று $0.1696ல் இருந்த பிறகு, நாணயத்தின் விலை 8 ஜனவரி 2022 அன்று $0.09506 ஆகக் குறைந்து ஜனவரி 24, 2022 அன்று $0.05154 ஆக மேலும் குறைந்தது.

2022 ஆம் ஆண்டின் தொடக்க மாதத்தில் நாணயம் அதன் மதிப்பில் 55%ஐயும் ஜனவரியின் கடைசி ஏழு நாட்களில் 30%க்கு அதிகமாகவும் இழந்தது. HERO விலை 1 பிப்ரவரி 2022 அன்று $0.055210 ஆக இருந்தது.

அதிகபட்ச விநியோகமாக 10 பில்லியன் ஹீரோ நாணயங்களும், தற்போதைய புழக்கத்தில் 5.2 பில்லியன் நாணயங்களும் உள்ளன. மெட்டாஹீரோ, $283,177,559 சந்தை மூலதனத்துடன், தற்போது Coin Gecko தளத்தின் தரவரிசையில் #213 இடத்தில் உள்ளது.

மெட்டாஹீரோ நிச்சயமாக சமீபத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை, ஆனால் சமீபத்திய மெட்டாஹீரோ கிரிப்டோ விலைக் கணிப்பு என்ன?

மெட்டாஹீரோ நாணயத்தின் விலைக் கணிப்புகள்

கணிப்புகளை சாத்தியக்கூறுகளாகவ் பார்க்கவேண்டும். நிச்சயமானவைகளாக அல்ல. அதிலும் நீண்டகால முன்னறிவிப்புகளைப் பார்க்கும்போது, சமயங்களில் அவை முழுக்கவே மாறுபட்ட ஒன்றாக நடக்கும் வாய்ப்பு உள்ளது.

WalletInvestor, ஒரு நம்பிக்கையான நாணய விலைக் கணிப்பாக, HERO ஒரு வருடத்தில் $0.260 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் $1.071 ஆகவும் உயரும் என்று கருதுகிறது.

Gov.capital, 2023 ஆம் ஆண்டிற்கான மெட்டாஹீரோ விலைக் கணிப்பு சுமார் $0.416 ஆகவும், 2027 ஆம் ஆண்டில் $1.181 ஆகவும் இருக்கும் என மதிப்பிடுகிறது.

DigitalCoinPrice, HERO 2023-ல் $0.08696 ஆக உயர்வதற்கு முன் 2022-ல் $0.0737 மதிப்புடையதாக இருக்கும் என்று கருதுகிறது. இதன் 2025 ஆம் ஆண்டிற்கான HERO விலைக் கணிப்பு $0.1196 ஆக உள்ளது.

இறுதி டோக்ட்ஸ்

தற்போது அதன் இணையதளத்தில் எந்தத் தனியுரிமைக் கொள்கையும் இல்லாமல், திட்டத்திற்குப் பின்னால் உள்ள பொருளாதாரம் பற்றிய முழுமையான விளக்கங்களும் இல்லாமல், மெட்டாஹீரோ தனது நேர்மையை சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாக நிரூபிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாணயத்தின் விலை சிறப்பாக செயல்படாததால், நாணயம் சுவாரஸ்யமாகவும் மற்றும் நிச்சயமாகக் கவனிக்கத்தக்க ஒன்றாகவும் இருந்தாலும், நிச்சயமான இலாபம் என்பதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை மெட்டாஹீரோ நாணயங்கள் உள்ளன?

அதிகபட்ச விநியோகமாக 10 பில்லியன் HERO நாணயங்களும், தற்போதைய புழக்கத்தில் 5.12 பில்லியன் நாணயங்களும் உள்ளன.

மெட்டாஹீரோ ஒரு நல்ல முதலீடு தானா?

ஆய்வாளர்கள் நிச்சயமாக நாணயம் ஒரு நல்ல முதலீடு என்று நினைக்கிறார்கள் - இருப்பினும், கிரிப்டோ சந்தை மிகவும் நிலையற்றது என்பதை நினைவில் கொள்வது நல்லது. மேலும் அனைத்து டோக்கன்கள், நாணயங்களின் விலை குறையலாம்; கூடவும் செய்யலாம்.

மெட்டாஹீரோ மேலே செல்லுமா?

சில வல்லுநர்கள் நாணயம் உயரும் என்று கணித்துள்ளனர். இருப்பினும் அது மிக எளிதாகக் கீழே போகக்கூடும். முன்னறிவிப்புகள், குறிப்பாக நீண்டகாலத்திற்கானவற்றை முழுமையானவைகளாகப் பார்ப்பதைக் காட்டிலும் குறிகாட்டிகளாகப் பார்க்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது.

நான் மெட்டாஹீரோவில் முதலீடு செய்யலாமா?

முதலீடு என்பது மிகவும் தனிப்பட்ட முயற்சி. உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். மெட்டாஹீரோ சூழல் அமைப்புக்குள் அதன் எதிர்கால வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய ஏதேனும் மேம்பாடுகள் ஏற்படுகின்றனவா என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முயலுங்கள்.

முதலீடு செய்வதில் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பது முக்கியம்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image