மெட்டாவெர்ஸில் பணம் சம்பாதிப்பது எப்படி: இது உண்மையில் அவ்வளவு எளிதானதா?

By Currency.com Research Team

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல் முதல் ரியல் எஸ்டேட் தரகு வரை, மெய்நிகர் யதார்த்தத்திலிருந்து உண்மையான பணத்தை உருவாக்க முடியும்

மெட்டாவெர்ஸில் பணம் சம்பாதிப்பது எப்படி                                 
CoinMarketCap படி மெட்டாவேர்ஸ் தொழில்துறை $30 பில்லியன் மதிப்புடையது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

2021 ஆம் ஆண்டில் Decentraland மெய்நிகர் ரியல் எஸ்டேட் $2.4 மில்லியனுக்கு சாதனை படைத்தது முதல் Sotheby தொகுத்து வழங்கும் தனித்துவமான மெய்நிகர் டோக்கன்களின் (NFTகள்) ஏலங்கள் வரை, முகநூல் தன்னை மெட்டா என்று மறுபெயரிடுவது வரை, கடந்த ஆண்டில் மெட்டாவெர்ஸ் கணிசமான பரபரப்பை ஈர்த்துள்ளது. ப்ளூம்பெர்க் முன்னறிவிப்பின்படி ஆன்லைன் உலகங்கள் $80 பில்லியன் மதிப்புள்ள தொழில்துறைக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து வகையான வணிகங்களும் இதற்குள் நுழைவதை வைத்துப் பார்க்கும்போது, ​​மெட்டா மலர்ச்சி இப்போதுதான் தொடங்குகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால் இது வெறும் பரபரப்புக்கு மேலானதா? மெட்டாவெர்ஸில் நீண்ட கால இலாபம் ஈட்ட முடியுமா? Wired பத்திரிக்கையில் எழுதும் கிடியோன் லிச்ஃபீல்ட் குறிப்பிட்டது போல், இது "மொழியில் நிலம் வாங்குதல்" என்பதை விட மேலான ஒன்றா? மக்கள் திரண்டு வரச்செய்யும் மெட்டாவெர்ஸை நிறுவனங்கள் உருவாக்குகின்றனவா? அல்லது நிறுவனங்களும் முதலீட்டாளர்களும், தொலைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், எங்கும் செல்லாத இரயிலில் ஏறி சலசலப்பை உயிர்ப்புடன் வைத்திருப்பார்களா?

மெட்டாவெர்ஸ் என்பது ஒரு புதிய கருத்து அல்ல. மாய யதார்த்தத்தில் ஆழ்த்தும் (VR) வாழ்க்கை என்ற கலைச்சொல்லாக, இது 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் நீல் ஸ்டீபன்சனின் ஸ்னோ க்ராஷ் நாவலில் அறிமுகமானது. அதற்கு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1979 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி “வெளித்தோற்றத்தில் உண்மையாக அல்லது பௌதீக வழியில் தொடர்புகொள்ளக்கூடிய உயிருள்ள சூழலைப் போன்ற கணினியால் உருவாக்கப்படும் ஓர் உருவகம்” என்று வரையறுத்ததை விளக்குவதற்கு IBM புரோகிராமர்கள் “மாய யதார்த்தம்/ மெய்நிகர் யதார்த்தம் (virtual reality)" என்ற பதத்தை உபயோகித்தனர். செகண்ட் லைஃப், அடிப்படையில் கிரிப்டோ இல்லாத ஒரு மெட்டாவெர்ஸ். இது 2003 இல் அதன் தொடக்கத்திலிருந்து 2013 வரை மிகவும் பிரபலமாக இருந்தது. பல தசாப்தங்களாக பிரபலமான கணினி விளையாட்டுகளின் மெய்நிகர் உலகில் விளையாட்டாளர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை வாழ்ந்து வருகின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோய் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளுக்குள் கட்டுப்படுத்தி நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வேலையுடன் தொடர்பு கொள்வதற்கு தொழில்நுட்பத்தை நாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதால், Decentraland, Axie Infinity, The Sandbox, Fortnite போன்ற இளங்குழுமங்களால் 2021ல் மெட்டாவெர்ஸில் ஆர்வம் மீண்டும் வெடித்ததில் ஆச்சரியமில்லை. உலகளாவிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதோடு, வைரஸ் தனது பிடியை தளர்த்தியுள்ளதற்கான அறிகுறிகளுடன், உலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்தின் பரந்த பகுதிகள் தங்கள் மதிப்புமிக்க நேரத்தை அவதாரமாக மெய்நிகர் உலகங்களைச் சுற்றி நடப்பதைக் குறைத்துக் கொள்வார்கள். இருப்பினும், விளையாட்டாளர்கள் நிச்சயம் அப்படி இருக்கப் போவதில்லை.

மெட்டாவெர்ஸில் பணம் சம்பாதிப்பது எப்படி

மெட்டாவெர்ஸில் இலாபம் ஈட்ட முடியுமா, அது ஒரு நல்ல நீண்ட கால முதலீடா, தவிர்க்கமுடியாத முதலீட்டு உத்தேசமாகத் தொடர்ந்து மெட்டாவெர்ஸ் இருப்பதற்கு மாய உலகிலுள் நாமும் காலடி வைக்க வேண்டியது அவசியமா என்பதை அளவிட முயலும்போது, ​​ ஒரு மெய்நிகர் உலகத்திலிருந்து மதிப்பைப் பிரித்தெடுப்பதில் உள்ள பல்வேறு வகையான வழிகளை வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம்.

உதாரணமாக, மெட்டாவெர்ஸில் இணையவழி நிகழ்ச்சிகள் அல்லது கல்விசார் வகுப்புகள் நேரலையில் நடத்தப்படும்போது அவை மட்டுமே மெய்நிகர் உலகில் நேரம் செலவிடுவதற்கான ஆர்வமூட்டும் விசயங்களாக இருந்தால், மெய்நிகர் வீட்டுமனையும் போதிய மக்களால் மதிப்புடையதாகக் கருதப்பட்டால், இந்த உலகங்கள் என்னதான் பெருகினாலும் அதுவும் மதிப்பைச் சேமித்துவைப்பதற்கு நல்லதொரு வழியாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, NFTகள், மக்கள் அரிதாகவே பார்க்கும் டிஜிட்டல் சொத்துக்கள், பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இதேபோல், சில நிஜ-உலக கலை சேகரிப்புகள் சேமிப்பக வீடுகளில் வைக்கப்படுகின்றன. அவை பகல் வெளிச்சத்தைக் கூட பார்க்காமல் முற்றிலும் மதிப்பின் கடையாக பார்க்கப்படுகின்றன. அப்படியானால், மாய உலகுக்குள் காலடி எடுத்துவைப்பது மெட்டாவெர்ஸில் இலாபம் பார்ப்பதற்கு ஒரு முன்நிபந்தனையா?

இலாபம் ஈட்டும் வழிகளை இப்போது பார்க்கலாம்.

மெய்நிகர் வீட்டுமனை (real estate)

"அன்ரியல் எஸ்டேட்", அதாவது குறைந்த விலைக்கு மெய்நிகர் வீட்டுமனை வாங்குவது மற்றும் அதிக விலைக்கு விற்பது, விளம்பரதாரர்கள் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு வாடகைக்கு மெய்நிகர் சொத்தை வழங்குவது வரை, மெட்டாவெர்ஸில் "நிலத்தில்" இலாபம் ஈட்ட எண்ணற்ற வழிகள் உள்ளன.

ஒன்று, முதலீட்டாளர்களுக்கு மெட்டாவெர்ஸில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உதவும் தரகராக மாறுவது அல்லது இந்தச் சொத்துக்களை உயிர்ப்பிக்க 3D வடிவமைப்பாளராக மாறுவது.

மதிப்பின் ஒரு அங்காடியாக, போதுமான அளவு தாராளமாகப் பணம் சுழற்சியில் இருந்து, அதிக பலனைத் தேடும் போதுமான முதலீட்டாளர்களும் கிரிப்டோவில் தொடர்ந்து ஆர்வமும் இருப்பதாகக் கொண்டால், மெய்நிகர் வீட்டுமனை போன்றவை தொடர்ந்து இலாபகரமாக இருக்கும். மெய்நிகர் வீட்டுமனை மூலம், முதலீட்டாளர்கள் மெட்டாவெர்ஸில் துணை (கூடுதல்) வருமானம் பெறலாம். இதையொட்டி, வீட்டுமனையில் தொடர்ந்து ஆர்வம் இருந்தால், மெய்நிகர் வீட்டுமனை தரகர்களின் தேவை என்ன என்பது நாம் அறியாததல்ல.

நிஜ உலகில் பெருநிலைப் பொருளாதாரச் சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பார்க்கும் போது, அங்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு அதிக அபாயம் கொண்ட முதலீடுகளில் ஈடுபாட்டைக் குறைக்கின்றன. எனவே மெய்நிகர் வீட்டுமனை போன்ற ஆபத்தான சொத்து அதிக ஆர்வத்தை ஈர்க்கும் என்பது சந்தேகத்திற்குரியது.

மற்ற வகை மெய்நிகர் வீட்டுமனை தொடர்பான இலாபம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அந்தளவு உறுதியாகச் சொல்வதற்கில்லை. எடுத்துக்காட்டாக, நான் ஒரு மெய்நிகர் வீட்டுமனை மேலாளராக பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறேன் என்றால், நிகழ்வைத் தொகுத்து வழங்குதல் மூலம் அல்லது விளம்பரம் மூலம் அதைச் செயல்படுத்த நான் மெய்நிகர் உலகில் காலடி எடுத்து வைக்க வேண்டும். விளம்பரப் பலகையை வைப்பதற்காக உங்கள் சொத்தின் முகப்பை விளம்பரதாரருக்கு வாடகைக்கு விட விரும்பினால், விளம்பரதாரர் தனது பிரச்சாரம் எந்த வகையிலும் இலாபகரமாக இருக்க மெய்நிகர் காலடியை நம்பியிருக்கிறார்.

ஆனால் விளம்பரம் என்பது முக்கிய மெட்டாவெர்ஸ் வாய்ப்புகளில் ஒன்றா? மெட்டாவெர்ஸில் பணம் சம்பாதிக்க விளம்பரம் ஒரு நல்ல வழியா?

மெட்டாவெர்ஸில் விளம்பரம்

விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகள் ஒரே மாதிரியாக, ஆச்சரியப்படத்தக்க வகையில், மெட்டாவெர்ஸில் குறிப்பிடத்தக்க பயன்படுத்தப்படாத திறனைக் கண்டறிந்துள்ளனர். இந்த மெய்நிகர் உலகங்களில், சமூக ஊடகங்களில் இருப்பதைப் போலவே, குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டு மக்களை இலக்காகக் கொள்ளலாம். மெட்டாவெர்ஸில், ஆழமான அனுபவங்கள் மற்றும் பிரச்சாரங்களை வழங்கும் பிராண்டுகள் மூலம் விளம்பரங்களை மேம்படுத்தலாம்.

எவ்வாறாயினும், இந்த இடம் இலாபகரமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதியாக இல்லை.

செகண்ட் லைஃப்பில், ஆரம்பத்தில் பிராண்டுகள் மெய்நிகர் யதார்த்தத்திற்கு எவ்வாறு குவிந்தன என்பதை நினைவில் கொள்வது நல்லது. கடை முன்பக்கங்களை வாங்குவதற்கு நிறைய பணம் செலவழித்தன. இருப்பினும், வருகையின் பற்றாக்குறையால் (பெரும்பாலான மக்கள் ஒரு முறை சென்ற பிறகு திரும்ப வரவில்லை), விளம்பரம் அர்த்தமற்றதாகிவிட்டது. மேலும் விளம்பரதாரர்களும் கடையைச் சாத்திவிட்டனர்.

Coca Cola முதல் Gucci வரை பல பிராண்டுகள் மெட்டாவெர்ஸில் கால் பதித்துள்ளன. எனினும், காணாமல் போய்விடுவோமோ என்ற பயம் குறித்து இந்த விளம்பரங்கள் செய்ய வேண்டியது நிறைய உள்ள நிலையில் தங்களைக் காட்டிக்கொள்ள விரும்பும் பிராண்டுகள், மெய்நிகர் உலகில் தங்கள் இருப்பை நம்புமா அல்லது அர்த்தமுள்ள வழியில் வெளிப்படுத்திக் கொள்வதை அதிகரிக்கும் வண்ணம் வளைவைத் தாண்டி புதிய எல்லைக்குள் செல்லுமா என்று கேட்டுக்கொள்வது சுவாரசியமான கேள்வி.

நீண்ட காலமாக VR தொடர்பான ஆழமான அனுபவங்கள் விளம்பரத்திற்கான அடுத்த எல்லையாகக் கூறப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தனிநபர்கள் தொழில்நுட்பத்திற்கு அதிக விலை கொடுக்க விரும்பாததோடு, VR ஒருபோதும் பிரதான ஓட்டத்திலிருந்து முழுமையாக வெளியேறவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டால், மெட்டாவெர்ஸ் திடீரென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எண்ணம் சந்தேகத்திற்குரியது.

கடந்த ஆண்டு தரவுகளின்படி, கால்வாசிக்கும் குறைவான (23%) அமெரிக்கர்கள் VR ஹெட்செட்டை முயற்சித்துள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் (31%) ஹெட்செட் வைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, மார்னிங் ப்ரூவால் (Morning Brew) நேர்காணல் செய்யப்பட்ட அமெரிக்கர்களில், 10% மட்டுமே தொழில்நுட்பத்தால் மிகவும் உற்சாகமாக இருந்தனர். மேலும் 18% ஓரளவு உற்சாகமாக இருந்தனர்.

நேரலை நிகழ்வுகள்

கல்வி முதல் விளையாட்டுகள், பேஷன் ஷோக்கள் வரை, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு மெட்டாவெர்ஸ் ஒரு முக்கிய இடமாக மாறும் என்ற கருத்து நன்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களின் போது மெய்நிகர் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் வருகை அதிகரித்தது. மெட்டாவெர்ஸின் உருவாக்கம் மெய்நிகர் நிகழ்விற்குச் செல்வோருக்கு நிஜ உலக சாத்தியங்களை விட கூடுதலாக நிகழ்ச்சியில் மூழ்கச் செய்யும் கூறுககளுடன் மேம்பட்ட அனுபவத்தை உறுதியளிக்கிறது. VR ஹெட்செட்கள், ஹாப்டிக் கையுறைகள் மற்றும் கேம் கன்ட்ரோலர்கள் போன்ற கூடுதல் தொழில்நுட்பம் மேம்பட்ட அனுபவத்தை மக்கள் பெறுவதற்கு அடிக்கடி தேவைப்படுகிறது.

இதன் விளைவாக, மெட்டாவெர்ஸில் எவ்வாறு இலாபம் ஈட்டுவது என்பதைப் பற்றி சிந்திக்கும்போது, ​​நிகழ்வு ஏற்பாடு மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவை இலாபகரமான முயற்சியாகத் தெரிகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு யதார்த்த உலகில் சாத்தியமே இல்லாத வரம்பில்லா வருகைகள் மற்றும் கற்பனாப்பூர்வ வழிகளில் வெளிகளைக் காப்பது ஆகியவை மெட்டாவெர்ஸ் அளிக்கும் முக்கிய பலன்களில் அடங்கும்.

சாம்சங் தனது புதுப்புது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை இந்த வாரம் Decentraland-ல் அறிமுகப்படுத்தியது. மெட்டா இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்கக் கறுப்பினத்தவர் வரலாற்றைக் கொண்டாடும் மெய்நிகர் நிகழ்வுகளின் வரிசையை வழங்கியது. இவற்றின் மூலம் ஆர்வம் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், பல நிகழ்வுகள் நேரில் நடத்தப்படும் நிலையில், குறிப்பாக கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் அடிப்படையில், உலகம் கொரோனாவுக்கு முன் இருந்த நிலைக்குத் திரும்பிச் செல்வது மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டிய ஒரு சராசரி நபர், தங்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான விலையுயர்ந்த உபகரணங்களில் முதலீடு செய்வாரா என்பது கேள்விக்குரியது. விலையுயர்ந்த உபகரணங்கள் இல்லாமல், மெட்டாவெர்ஸ் அனுபவம் எவ்வளவு ஆழமாக அல்லது மேம்பட்டதாக இருக்கும் என்பதும் கேள்விக்குரியது. மேலும், ஒரு வேலை கருத்தரங்குக்குச் செல்லும் வயதுவந்த பெரும்பாலானோர், எடுத்துக்காட்டாக, அவர்களின் அவதாரம் எவ்வளவு உயிரோட்டமானது என்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

விளம்பரச் சிக்கலைப் பொறுத்தவரை, மெட்டாவெர்ஸ் வெளிச்சத்துக்கான சண்டையில் பெரிய பிராண்டுகளால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், மெட்டாவெர்ஸ் தனது சலசலப்பை இழக்கும்போது வறண்டுபோகுமா அல்லது தொடர்ந்து நடைபெறுமா? மெய்நிகர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் உள்ள இலாபமானது எத்தனை நிறுவனங்கள், மக்கள் அதை ஈர்க்கக்கூடியதாக, மதிப்புடையதாகக் காண்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இது மேக்ரோ தீம்களையும் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் மக்கள் சுதந்திரமாக பயணிப்பது நிறுத்தப்பட்டால் அல்லது வேறு வைரஸ் தோன்றினால் அல்லது கோவிட் மீண்டும் தோன்றினால், மெட்டாவெர்ஸ் நிகழ்வுகள் பரவலாகப் பயன்படுத்தப்படலாம்.

இருப்பினும், பெரும்பாலான உள்ளார்ந்த சமூக மனிதர்களாக கருதப்படும் மக்களுக்கு, நேரடி இசை, ஃபேஷன் அல்லது விளையாட்டு நிகழ்வுகளுக்குச் செல்வது எப்போதும் மெய்நிகராக கலந்துகொள்வதைவிட முற்றிலும் விரும்பத்தக்கதாக இருக்கும் என்ற உணர்வு இருக்கும். பரப்புரை தணிந்தால், எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்து இலாபம் ஈட்டுவது சவாலாக இருக்கக் கூடும்.

மெட்டாவெர்ஸில் முதலீடு செய்வது எப்படி: கேமிங்

கேமிங் தொடர்பான முயற்சிகள் மெட்டாவெர்ஸில் இலாபம் ஈட்டுவதற்கு மிகவும் வளமானதும் மிகவும் உறுதியான வழிமுறையுமாகும். விளையாட்டைப் பொறுத்தவரை, தனிநபர்கள் ஏற்கெனவே தங்கள் திரைகளிலும் பிற உலகங்களிலும் அதிக நேரம் செலவழிக்கப் பழகியிருப்பதாக மெட்டாவெர்ஸ் எடுத்துக் கொள்கிறது. தங்கள் அனுபவத்தை மேம்படுத்த விலையுயர்ந்த தொழில்நுட்பத்தில் செலவழிக்க விருப்பம் மற்றும் அதிக ஊக்கத்துடன், மெட்டாவெர்ஸில் தங்கள் அவதாரங்களை அலங்கரிக்க விலையுயர்ந்த டிசைனர் ஆடைகள் போன்றவை நிச்சயமாக விளையாட்டாளர்கள் மத்தியில் மேலோங்கக்கூடும்.

கேம் ஆடுவோரை இலக்காகக் கொண்ட பிராண்டுகள் எதிலாவது நிச்சயம் இருக்கும். இணையவழியில் உறுதியாகப் பங்கேற்கும் மக்களாக கேம் ஆடுவோர் அறியப்பட்டுள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மெட்டாவெர்ஸுக்கு ஓர் உண்மையான ஈர்ப்பு உள்ளது. நிஜ உலகில் கேமிங் செய்ய முடியாது. Burberry, Blankos Block Party ஒன்றிணைப்பு மற்றும் Valentino, Animal Crossing கூட்டாண்மை உட்பட பல்வேறு பிராண்டுகள் இந்தப் பகுதியைப் பயன்படுத்தியுள்ளன.

3Dinsider ஆல் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, கிட்டத்தட்ட 60% VR தொடர்பான வல்லுநர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் VR இடத்தில் கேமிங் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் 64% பேர் VR மேம்பாடுகளில் இருந்து கேமிங்கிற்கு அதிக பலன் கிடைக்க இருப்பதாகக் கருதுகின்றனர்.

இறுதி எண்ணங்கள்

மேலோட்டமாகப் பார்த்தால், மெட்டாவெர்ஸில் பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. எவ்வாறாயினும், மெட்டாவெர்ஸின் சாத்தியக்கூறுகளுக்கும் இந்த வளர்ந்து வரும் துறையின் தற்போதைய யதார்த்தத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பது நல்லது. மதிப்பை நன்கு சேமித்து வைக்கக் கூடியவைகளாக உள்ள டிஜிட்டல் சொத்துக்கள், நீண்டகால நோக்கில் மெட்டாவெர்ஸ் நிறுவனங்களை மேலே உயர்த்தக் கூடும். மெட்டாவெர்ஸில் இலாபம் சம்பாதிப்பதற்கான பல வழிகளும் அந்த மாய உலகினுள் காலடி எடுத்து வைப்பதைச் சார்ந்தே உள்ளன. விளையாட்டாளர்களைத் தவிர, ஒரு வேலைக்கான கருத்தரங்கு அல்லது சந்திப்பில் கலந்துகொள்ள அழுத்தம் கொடுத்தால் தவிர கலந்துகொள்ள விரும்பாத பெரும்பாலான மக்கள், நிஜ வாழ்க்கையில் செலவழிக்கும் விருப்பம் இருக்கும்போது, ​​மெய்நிகர் உலகங்களில் நேரத்தைச் செலவிட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மெட்டாவெர்ஸில் எப்படி நுழைவது?

மெட்டாவெர்ஸில் நுழைய பல வழிகள் உள்ளன. நீங்கள் பெரிய மெட்டாவெர்ஸ் நிறுவனங்களில் ஒன்றின் டோக்கன்களை வாங்கலாம் அல்லது மெய்நிகர் வீட்டுமனையின் ஒரு பகுதியை வாங்கலாம். மாறாக நீங்கள் மெட்டாவெர்ஸில் விற்க NFTகளை உருவாக்கலாம்.

மெட்டாவெர்ஸில் நான் எப்படி முதலீடு செய்யலாம்?

மெட்டாவெர்ஸில் விற்பனையில் உள்ள டிஜிட்டல் சொத்துக்களை வாங்குவதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யலாம் அல்லது சந்தை மூலம் ஒரு மெட்டாவெர்ஸ் நிறுவனத்திற்கான டோக்கன்களில் முதலீடு செய்யலாம்.

நான் மெட்டாவெர்ஸில் முதலீடு செய்யலாமா?

முதலீடு என்பது மிகவும் தனிப்பட்ட முயற்சி. உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்து, பல்வேறு மெட்டாவெர்ஸ்களைப் பற்றி புதிய தகவல்களை அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.

முதலீடு செய்வது ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாமல் இருப்பது முக்கியம்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image