முதன்மையான மெட்டாவெர்ஸ் நாணயங்கள்: எது சிறந்தது?

By Currency.com Research Team

ஆன்லைன் கேமிங் வெளியில் சிறந்த மெட்டாவெர்ஸ் நாணயங்களைத் தெரிந்துகொள்ள உதவும் உங்கள் வழிகாட்டி

முதன்மையான மெட்டாவெர்ஸ் நாணயங்கள்                                 
மெட்டாவெர்ஸ் நாணயங்கள் மதிப்பு மற்றும் பயன்பாட்டில் கணிசமாக வேறுபடுகின்றன - புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்
                                

ஆன்லைன் கேமிங்கின் வளர்ச்சியுடன், ஒரு வகையான மெய்நிகர் உலகங்களுக்கு உதவும் டோக்கன்களை முன்னோக்கிக் கொண்டுவர மெட்டாவெர்ஸ் உதவியது இயற்கையானது.

ஆர்வம் அதிகரிக்கும் போது, விளையாட்டாளர்களும் முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய மிகப் பெரிய, மிகவும் சுவாரஸ்யமான சிறந்த மெட்டாவெர்ஸ் நாணயங்களைத் தேடுகின்றனர். டஜன் கணக்கானவை இருப்பதால், எந்த மெட்டாவெர்ஸ் நாணயங்களைத் தேர்ந்தெடுப்பது எளிதானது அல்ல.

மெட்டாவெர்ஸ் என்றால் என்ன?

மெட்டாவெர்ஸ் என்பது மிகவும் நேரடியான யோசனையாகும். இது பல தசாப்தங்களாக உள்ளது. இதன் முதன்மையான கருத்தாக்கம் என்னவென்றால், எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், அனைத்து மனிதர்களும் தங்கள் சொந்த அவதாரங்கள் மூலம் ஒரு மெய்நிகர் உலகில் தொடர்புகொள்வார்கள்.

1990 களின் முற்பகுதியில் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஏற்றத்தை ஒரு முக்கிய இயக்கியாகக் கொண்டு சிறிது காலமாக இந்தக் கருத்து உள்ளது. இருப்பினும், மனிதகுலத்தை ஒன்றாக இணைக்கும் ஒரு ஆன்லைன் இருப்பு கூட இதுவரை இல்லை. சிறிய மெய்நிகர் உலகங்கள் உள்ளன. அங்கு மக்கள் உள்நுழைந்து இடத்தை ஆராயலாம் மற்றும் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இவை மெட்டாவெர்ஸ் எனப்படும்.

அதற்கும் கிரிப்டோகரன்சிக்கும் என்ன சம்பந்தம்? தற்போது பல மெய்நிகர் உலகங்கள் பிளாக்செயினால் இயக்கப்படுகின்றன. மெட்டாவெர்ஸுடன் தொடர்புடைய கிரிப்டோ டோக்கனை வைத்திருப்பது, மெட்டாவெர்ஸில் பங்கேற்பவர்களுக்கு இடத்தை நிர்வகிக்க உதவும் சக்தியை அளிக்கும். மேலும், பல மெட்டாவெர்ஸ்களில், மெட்டாவெர்ஸ் டோக்கன்களைப் பயன்படுத்தி, பரிமாற்றம் செய்ய இயலாத டோக்கன்கள் (NFTகள்) போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

சந்தை மூலதனத்தில் முன்னணியில் உள்ள மெட்டாவெர்ஸ் நாணயங்களுக்கும் சம்பாதிக்க விளையாடு மற்றும் NFT வெளிகளில் உள்ள மிகப்பெரிய கிரிப்டோக்களுக்கு இடையிலும் அதிகளவில் இடையீடுகள் நடக்கின்றன. ஜனவரி 24, 2022 நிலவரப்படி, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் சிறந்த மெட்டாவெர்ஸ் நாணயங்கள் MANA, AXS, SAND மற்றும் GALA ஆகும். இவையும் முதல் நான்கு சம்பாதிக்க-விளையாடு நாணயங்களாகும். பல மெட்டாவெர்ஸ்கள் NFTகளை வழங்குகின்றன, இதன் விளைவாக, இவை சம்பாதிக்க-விளையாடு கேம்களை வழங்குகின்றன. 

மிகப்பெரியதும் மிகவும் சுவாரஸ்யமானதுமான மெட்டாவெர்ஸ் டோக்கன்களில் இருந்து எங்களின் ஐந்து தேர்வுகள் இதோ.

சாண்ட்பாக்ஸ் (SAND)

சாண்ட்பாக்ஸ் என்பது ஆன்லைன் உலகமாகும், இது ஆட்டக்காரர்கள் தங்கள் சொந்த NFTகளை உருவாக்கி வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது – புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்
சாண்ட்பாக்ஸ் என்பது ஆன்லைன் உலகமாகும், இது ஆட்டக்காரர்கள் தங்கள் சொந்த NFTகளை உருவாக்கி வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது – புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்

SAND என்பது சாண்ட்பாக்ஸின் சொந்த மெட்டாவெர்ஸ் டோக்கன். இது ஒரு ஆன்லைன் உலகமாகும். இது ஆட்டக்காரர்கள் தங்கள் சொந்த NFTகளை விளையாட்டில் உருவாக்கி வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. SAND, எதேரியம் பிளாக்செயினில் செயல்படும் ERC-20 டோக்கன் ஆகும். இது ஆன்லைனில் நிலத்தின் பார்சல்களை வாங்கவும் NFTகளுடன் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்படலாம். சாண்ட்பாக்ஸ் அமைப்பில் உள்ள சில சலுகைகளுக்காகவும் இது பணயம் வைக்கப்படலாம்.

உள்ளடக்கத்துக்கும், கேம் படைப்பாளர்களுக்கும், செயற்தள சாலை வரைபடத்தில் பல்வேறு அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றுக்கு பண்புக்கூறுகளை வழங்கும் ஸ்தாபனம் போன்ற முக்கிய கூறுகளில் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க முடியும் என்று SAND வெள்ளையறிக்கை கூறுகிறது.

SANDன் உரிமையாளர்கள் தாங்களாகவே வாக்களிக்கலாம் அல்லது அவர்கள் விரும்பும் மற்ற ஆட்டக்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கலாம். SANDஐயும் பணயம் வைக்கலாம். இப்படிப் பணயம் வைத்த நாணயங்கள் மூலம் பங்குதாரர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பையும், ASSETS என்றழைக்கப்படும் உள்-விளையாட்டு NFTகளை உருவாக்குவதுடன் தொடர்புடைய உருப்படிகளைப் பெறவும் அனுமதிக்கிறது.

ஒரு சிறிய துண்டு – 5% – கேம் முழுவதும் செலவழித்த மொத்த SANDல், பாதி ஸ்டேக்கிங் தொகுதிக்கும் மற்ற பாதி விளையாட்டை நடத்தும் ஸ்தாபனத்துக்கும் செல்லும். 24 ஜனவரி 2022 நிலவரப்படி, SANDன் சந்தை மூலதனம் $2.5 பில்லியனுக்கு (£1.9 பில்லியன்) மேல் இருந்தது. இது மூன்றாவது பெரிய மெட்டாவெர்ஸ் கிரிப்டோகரன்சியாகவும் மூன்றாவது பெரிய மெட்டாவெர்ஸ் சம்பாதிக்க-விளையாடு வகை நாணயமும் ஆகும்.

Immutable x (IMX)

immutable x நாணயம் NFT வர்த்தகத்தை ஆதரிக்கிறது - புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்
immutable x நாணயம் NFT வர்த்தகத்தை ஆதரிக்கிறது - புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்

மெட்டாவர்ஸின் சூழலில் பார்க்க வேண்டிய மற்றொரு நாணயம் Immutable x (IMX) ஆகும். இந்த மெட்டாவெர்ஸ் டோக்கன் SAND போன்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், இது குறிப்பிட்ட மெட்டாவெர்ஸை ஆதரிக்காது. உள்ளே சென்று ஆராய்வதற்கு Immutable உலகம் இல்லை. மாறாக, அதன் நெறிமுறையைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் சொந்த NFTகளை உருவாக்கி வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் ஒரு அமைப்பை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.

ஆஸ்திரேலிய சகோதரர்கள் ஜேம்ஸ், ராபி பெர்குசன் ஆகியோரால் அமைக்கப்பட்ட வலைத்தொடர்பு இது. எதேரியம் பிளாக்செயினில் NFT வர்த்தகர்களுக்கு மாறத்தக்க அளவுள்ள தீர்வை அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, NFT வர்த்தகம் மிகவும் மந்தமாக இருக்கலாம். ஆனால் மக்கள் Immutable நெறிமுறையைப் பயன்படுத்தினால், அது விஷயங்களை விரைவுபடுத்தும்.

டோக்கன் நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே டோக்கன் வைத்திருப்பவர்கள் ஸ்டேக்கிங்குடன் அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான முன்மொழிவுகளில் வாக்களிக்கலாம். வெகுமதிகளைப் பெற மக்கள் தங்கள் டோக்கன்களைப் பணயம் வைக்கலாம் - Immutable வலைத்தொடர்பில் உள்ள அனைத்து பரிவர்த்தனை கட்டணங்களும் 20% IMX மெட்டாவெர்ஸ் நாணயத்தில் செலுத்தப்படுகிறது.

Immutable X அமைப்பு OpenSea NFT சந்தையுடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த டோக்கன் தற்போது நன்கு அறியப்பட்ட ஒன்றாக இல்லாவிட்டாலும் கூட, இது சாதகமான செய்தியாகும். 24 ஜனவரி 2022 அன்று, IMX இன் சந்தை மதிப்பு சுமார் $387 மில்லியன்.

அல்ட்ரா (UOS)

அல்ட்ரா (UOS) கேம் விநியோக அமைப்பில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது - புகழ்: அல்ட்ரா
அல்ட்ரா (UOS) கேம் விநியோக அமைப்பில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது - புகழ்: அல்ட்ரா

அல்ட்ரா (UOS) கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் அடிப்படையில் கேம்கள் விநியோக அமைப்பில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள வித்தியாசம் என்னவென்றால், மக்களுக்கு டெவலப்பர்களிடமிருந்து கேம்களை வாங்குவதற்கும் விளையாடுவதற்கும் உண்டான வாய்ப்பு மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் கேம்களை மறுவிற்பனையும் செய்யலாம்.

அமைப்பின் இணையதளம் இவ்வாறு கூறுகிறது: “அல்ட்ரா என்பது பல்வேறு விளையாட்டுத்துறைச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் முதல் பொழுதுபோக்கு தளமாகும். இவற்றை ஒரே உள்நுழைவு மூலம் அணுகலாம்: கேம்களைக் கண்டறியவும், வாங்கவும், விளையாடவும், நேரலை நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், உங்களுக்குப் பிடித்த பிரபலங்களுடன் தொடர்பு கொள்ளவும், போட்டிகளில் பங்கேற்பது, போட்டிகளில் கலந்துகொள்வது மற்றும் பல.”

”சுவர் வைத்த தோட்டம் (walled garden)” என்றழைக்கப்படுவதை உடைக்கும் முயற்சியாகவே அல்ட்ரா உருவாக்கப்பட்டது. கேமிங் உள்ளடக்கத்தின் கட்டுப்பாடு கேமிங் செயற்தளங்களில் இருக்கும். இதனால் மையமற்ற தன்மையை உருவாக்கி மக்களுக்கு விருப்பத்தேர்வுகளையும் நெகிழ்வுதன்மையையும் வழங்கமுடியும்.

UOS மெட்டாவெர்ஸ் டோக்கன் விளம்பரத்திற்காக பணம் செலுத்தவும், வர்த்தகம் செய்யவும், பீட்டா சோதனை மற்றும் பிழை அறிக்கையிடலில் பங்கேற்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சிஸ்டத்தின் லாயல்டி திட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது. UOSல் பரிவர்த்தனைகள் நடந்தாலும், சாத்தியமான பணவீக்கப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் முயற்சியில் Ultra அனைத்து விலைகளையும் அமெரிக்க டாலர்களில் வழங்கும். ஜனவரி 24, 2022 அன்று நாணயத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட $230 மில்லியன் ஆகும்.

இல்லுவியம் (ILV)

இல்லுவியம் (ILV) ஒரு உன்னதமான மெட்டாவெர்ஸ் கிரிப்டோ - நன்றி: Illuvium.io
இல்லுவியம் (ILV) ஒரு உன்னதமான மெட்டாவெர்ஸ் கிரிப்டோ - நன்றி: Illuvium.io

ஆய்வு செய்ய வேண்டிய மற்றொரு டோக்கன் இல்லுவியம் (ILV). இந்த மெட்டாவெர்ஸ் டோக்கனை கிளாசிக் மெட்டாவெர்ஸ் கிரிப்டோ என்று விவரிக்கலாம். நாணயமே இல்லுவியத்தை இயக்க உதவுகிறது. இது ஃபேன்டஸி தீம் கொண்ட ஆன்லைனில் பாத்திரமேற்று நடிக்கும் கேம் ஆகும்.

இந்த கேம் எதேரியம் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு திறந்த உலக அனுபவத்திற்கும் ஒற்றைக்கு ஒற்றை போர் விளையாட்டுக்கும் இடையே குறுக்குவழியாகச் செயல்படுகிறது. இல்லுவியல்ஸ் எனப்படும் உயிரினங்களை மக்கள் கண்டுபிடித்து, தோற்கடித்து, அவற்றைச் சேகரிக்கலாம். இந்த மிருகங்கள் மற்ற வீரர்களின் படைகளை எதிர்த்துப் போராடும் ஒரு இராணுவத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டை வேறுபடுத்துவது என்னவென்றால், இல்லுவியல்ஸ் NFTகளாக கருதப்படுவதால், விளையாட்டில் கிரிப்டோவை உருவாக்க மக்களுக்கு வேறு வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஈல்டு பார்ம் மற்றும் பரவலாக்கப்பட்ட கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றை உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட செயலிகளின் (DApps) வரிசையைப் பயன்படுத்தி ஒரு வீரர் ILV ஐப் பெறலாம்.

கிரிப்டோவில் குறைவாக கவனம் செலுத்துவதாகவும், விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துவதாகவும் கூரினாலும், மக்கள் தங்கள் இல்லுவியல்களை விளையாட்டின் சந்தையில் விற்கலாம். கேம்களில் அதிக விருப்பம் கொண்டு கிரிப்டோ வெளியில் முழுமையான ஈடுபாடு இல்லாதவர்களுக்கு இது சிறந்ததாக அமையும். 24 ஜனவரி 2022 அன்று, ILV சந்தை மதிப்பு $331 மில்லியனுக்கு மேல் இருந்தது.

Vulcan Forged  (PYR)

Forged செயற்பாட்டுத்தளம் மக்கள் விளையாடுவதற்கு பலவிதமான கேம்களைக் கொண்டுள்ளது - நன்றி: Vulcanforged.com
Forged செயற்பாட்டுத்தளம் மக்கள் விளையாடுவதற்கு பலவிதமான கேம்களைக் கொண்டுள்ளது - நன்றி: Vulcanforged.com

இறுதியாக, Vulcan Forged (PYR) மெட்டாவெர்ஸ் நாணயம் என்பது GALA க்கு மிகவும் ஒத்ததாக இல்லாத ஒரு அமைப்பாகும். இங்கு மக்கள் விளையாடுவதற்கான பலவிதமான கேம்களை தளத்தில் கொண்டுள்ளது. வலைத்தொடர்பின் முக்கிய வேறுபாடு என்னவென்றால், விளையாட்டுகள் அனைத்தும் கிரேக்க புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை.

VulcanVerse எனப்படுவது மக்களுக்கு நிலங்களை வாங்கவும், விற்கவும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பளிக்கிறது. Anvil எனப்படுவது மக்கள் இலவசமாக NFTகளை வைக்க அனுமதிக்கிறது. Bezerk என்பது சேகரிக்கக்கூடிய அட்டை விளையாட்டு ஆகும். இது Anvil, VulcanVerse இரண்டிலிருந்தும் NFTகளைப் பயன்படுத்துகிறது. Frenzy எனப்படுவது வீரர்கள் தங்கள் சொந்த போர் போட்டிகளை உருவாக்க உதவுகிறது.

PYR மெட்டாவெர்ஸ் டோக்கன் Frenzy போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது. இது கணினியின் நிர்வாகத்திற்கும், Volcan Forged வலைத்தொடர்பில் உள்ள பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.  

இந்த நாணயங்கள் குறித்த நமது பார்வை இதுதான். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் முதலீடு செய்வதற்கு முன், உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் - விலைகள் குறையவும் கூடவும் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இழக்கத் தயாராக இருக்கும் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை மெட்டாவெர்ஸ் நாணயங்கள் உள்ளன?

அது நீங்கள் ஒரு மெட்டாவெர்ஸ் நாணயத்தை எவ்வாறு வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால் CoinGecko அறிக்கைப்படி 71 நாணயங்கள் உள்ளன.

மெட்டாவெர்ஸ் நாணயங்களில் முதலீடு செய்வது மதிப்புள்ளதா?

இருக்கலாம். நீங்கள் முதலீடு செய்வதாயிருந்தால், உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். விலைகள் குறையவும் கூடவும் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இழக்கத் தயாராக இருக்கும் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

மெட்டாவெர்ஸ் நாணயங்களை நான் எங்கே வாங்குவது?

எல்லா சந்தைகளும் மெட்டாவெர்ஸ் கிரிப்டோவை வர்த்தகத்துக்கு அளிக்கவில்லை என்றாலும், நீங்கள் அவற்றை பல சந்தைகளில் வாங்க முடியும். உதாரணமாக, நீங்கள் decentraland-ன் MANA டோக்கனை Currency.comயில் வாங்கலாம்.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image