அங்கீகரிக்கப்பட்டது
14.11.2018ம் தேதிப்படி Currency Com Bel Limited Liability Company எண் 10 O ஆணைப்படிД
/A.P. Shevchenko/
Currency Com Bel Limited Liability Company நடவடிக்கைகளில் எழும் நலன் முரண்பாட்டைக் கையாளும் நடைமுறைக்கான ஒழுங்குமுறைகள்
அத்தியாயம் 1
பொது ஏற்பாடுகள்
1. Currency Com Bel Limited Liability Company (இனி நிறுவனம் என்று குறிப்பிடப்படும்) நடவடிக்கைகளில் எழும் நலன் முரண்பாட்டைக் கையாளும் நடைமுறைகளை இந்த ஒழுங்குமுறைகள் தீர்மானிக்கின்றன.
சட்டமும் நிறுவனத்தின் சாசனமும் தீர்மானிக்கக்கூடிய நிறுவனத்தின் துணை அமைப்புகளுக்கு பரிவர்த்தனைகளில் உள்ள பலனில் முடிவெடுப்பதற்கான நிறுவன நடைமுறைகள்.
நிறுவனம் கிரிப்டோ தள இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நியாயமற்ற (சட்டத்துக்குப் புறம்பான) உள் தகவல்களைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் தவிர்ப்பது போன்றவற்றுக்கான விதிகள் நிறுவனத்தின் ஒரு தனிப்பட்ட உள்ளக ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த ஒழுங்குமுறைகள் இணையத்தில், உலகளாவிய கணினி வலையமைப்பிலுள்ள நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளது (வெளிப்படுத்தப்பட்டுள்ளது).
2. இந்த ஒழுங்குமுறைகள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதன் அங்கத்தினர்களுக்கு, அவர்கள் பதவிநிலையும் அதேபோல நிறுவனதுடனான பணிக்காலமும் நிலையும் என்னவாயிருப்பினும் அவர்களால் பயன்படுத்தப்படுவது (இணங்குவது) கட்டாயமாகும்.
தனிநபர்கள் வேலையை (சேவைகள்) நிறுவனத்துக்காகச் செய்வதற்கு கவரும்போது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் உரிமையியல் சட்ட ஒப்பந்தங்களில் இந்த ஒழுங்குமுறைகளின் தேவைகளை நிறைவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கடப்பாடுடையவர்களாக ஆகும்படி சேர்க்கப்பட வேண்டும்.
இந்த உட்பிரிவின் முதலாவது மற்றும் இரண்டாம் பாகங்களில் கொடுக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, நலன் முரண்பாடுகளைக் கையாள்வதற்குப் பொறுப்பான நபரினால் கையொப்பத்துடன் பரிட்சயம் ஏற்படுவதற்காக இந்த ஒழுங்குமுறைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்காட்டி ஆண்டில் நலன் முரண்பாடு மேலாண்மைப் பகுதியில் உருவாகும் சூழ்நிலையைப் பொறுத்து, நிறுவனத் தலைமை மேற்சொன்ன நபர்களை இந்த ஒழுங்குமுறைகளிலிருந்து விடுவிக்க முடிவெடுக்கலாம் மற்றும்/அல்லது இந்த ஒழுங்குமுறைகளின் கொடுக்கப்பட்ட பிரச்சினைகளில் சமூகத்தின் அனைத்து அல்லது சில ஊழியர்களுக்கும் அதன் அங்கத்தினர்களுக்கும் பயிற்சி நிகழ்வுகளை நடத்தவும் தீர்மானிக்கலாம்.
இந்த உட்பிரிவின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களின் நிபந்தனைக்குட்பட்ட நபர்கள் நலன் முரண்பாடு குறித்த இந்த ஒழுங்குமுறை மீறல்களில் தகவல்களை வைத்திருக்கவோ அல்லது தவறான நேரத்தில் வெளிப்படுத்தவோ அல்லது வேறு வகையில் செயல்படவோ உரிமையில்லை.
இந்த ஒழுங்குமுறைகளின்படி செயல்படும் நோக்கத்துக்காக மின்னஞ்சல் மூலமும் தேவையெனில் வேறுவகையிலும் தொடர்புகொள்ளப்படும்.
3. இந்த ஒழுங்குமுறைகளின் நோக்கங்களுக்காக பின்வரும் அர்த்தங்களில் கீழ்க்கண்ட பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
- இரகசியத் தகவல் என்றால் தகவலின் விநியோகம் மற்றும்/அல்லது வழங்கல் வரம்புக்குட்பட்டது என்றும் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்காத பட்சத்தில், ஒரு கட்சிக்காரரிடமுள்ள வேறு தகவலை, அத்தகைய தகவலை வழங்கிய கட்சிக்காரரின் ஒப்புதலின்றி மூன்றாம் தரப்பினருக்குத் தெரியப்படுத்த உரிமையில்லாத நிலையைக் குறிக்கிறது;
நலன் முரண்பாடு என்றால் சொத்துக்கும் நிறுவனத்தின் பிற நலன்களுக்கும் அதன் நிறுவுனர்களுக்கும் (உறுப்பினர்கள்), பலனாளர்கள், நிறுவன அங்கத்தினர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள், வணிகப் பிரிவுகள், ஊழியர்கள், நிறுவன வாடிக்கையாளர்கள் ஆகியோருக்குமிடையில் நிறுவனத்துக்கும் மற்றும்/அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முரண்பாட்டைக் குறிக்கிறது;
- தனிநலன் என்றால் நிறுவன ஊழியர் அல்லது அவரது அங்கத்தினர் தனது கடமைகளைச் செய்வதில், ரொக்கமாகவோ அல்லது அதுபோன்ற வருவாயை (நிறுவனத்திடமிருந்து சட்டபூர்வமாகப் பெறும் வருவாய் தவிர்த்து), நேரடியாக தனக்காகவோ அல்லது தனது உறவினர் அல்லது நிதிசார்ந்து அல்லது வேறு கடப்பாடுகளுக்காக (நலன்கள், உறவுகள்) அத்தகைய ஓர் ஊழியருடன் (உறுப்பினர்) தொடர்புடையவருக்காகவோ பிற பலன்கள் (செலவுகளைத் தவிர்ப்பதற்காக, கட்புலனாகா பலன்களையும் சேர்த்து) பெறுவதைக் குறிக்கிறது. இந்த பதமானது மேற்குறிப்பிட்ட உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நலன்களைப் பெறும் பிற நபர்களின் நேரடி பலன்களையும் குறிக்கிறது;
- அபாயங்களை ஏற்படுத்தும் நிறுவனத்தின் வணிகப்பிரிவுகள் மற்றும் ஊழியர்கள் என்றால் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவனத்தின் வணிகப்பிரிவுகள் மற்றும் நிறுவன வணிக அலகுகளைச் சாராத நிறுவன ஊழியர்களைக் குறிக்கும்;
- நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல் என்றால் நிறுவனத்தால், அதன் ஊழியர்களால், அங்கத்தினர்களால் மற்றும் உறுப்பினர்களால் நிறுவனத்தின் வணிகப் பிரிவுகளில் நலன் முரண்பாடுகள் நிகழ்வதைத் தடுப்பதையும் (தவிர்ப்பது) அந்நிகழ்வை (இருத்தலை) நீக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது;
"சீனப் பெருஞ்சுவர்” கொள்கை என்றால் ஒரு வணிக நடைமுறையை அல்லது நிறுவனத்தில் பல்வேறு வணிக நடைமுறைகளின் தொடர்புகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு விதியாகும். இதில் தகவல்கள் வணிகச் செயல்பாட்டின் அல்லது பல வணிகச் செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு நிலையிலும் தகவல்கள் வரம்பற்றதாகவும் தகவல் பரிமாற்றமானது இந்தக் கொள்கையை ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலின்போதும் அமல்படுத்தும்போது தீர்மானிக்கப்பட்ட நிறுவப்பட்ட விதிகளுக்கு இணங்கி மட்டும் நடப்பதாகவும் இருக்கும்;
- ”நான்கு கண்கள்” கொள்கை என்றால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் (நிறுவனத்தின் சார்பாக ஒரு பரிவர்த்தனையைச் செய்தல், டிஜிட்டல் கையொப்பங்களை (டோக்கன்கள்) (இனி டோக்கன்கள் என்று குறிப்பிடப்படும்) டோக்கன்களை வர்த்தகம் செய்வதில் அனுமதித்தல் போன்றவை) முடிவுகளை எடுப்பதற்காக உள்ள விதியாகும். பல ஊழியர்கள் அல்லது நிறுவன அங்கத்தினரின் ஒன்றுக்கு மேற்பட்ட வெளிப்படுத்தல் (எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கான வரைவை ஒருங்கிணைப்பது வழியாக வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை) தேவைப்படுகிறது;
- உறவினர் என்றால் நிறுவனத்தின் ஓர் ஊழியர் அல்லது நிறுவன அங்கத்தின் ஓர் உறுப்பினருடன் நெருங்கிய உறவு அல்லது பெலாரஸ் குடியரசின் திருமணம் மற்றும் குடும்பம் மீதான சட்டநெறி ஷரத்து 60 மற்றும் 61ன்படி திருமண பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவுள்ள ஒரு நபரைக் குறிக்கிறது.;
- நலன் முரண்பாடு மீதான தகவல் என்றால் நலன் முரண்பாட்டில் (நலன் முரண்பாட்டை அடையாளம் காணுதல்) அல்லது அது நிகழ்வதற்கான சாத்தியத்தில் காணப்படும் தகவல்;
- உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் நிறுவனத்தின் சில கட்டமைப்புகள், அதன் ஊழியர்களின் அதிகாரங்களும் பொறுப்புகளும், நிறுவனத்துக்காகச் செயல்படும் உள்ளக ஒழுங்குமுறை, அதேபோல் பெலாரஸ் குடியரசின் சட்டத்துக்கு இணங்க நிறுவனம் செயல்படுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உள்ளகக் கட்டுப்பாட்டுச் செயல்முறை, உயர் தொழில்நுட்பங்களின் பூங்காவுக்கான மேற்பார்வைக் குழுவின் (இனி ”HTP" என்று குறிப்பிடப்படும்) முடிவுகள், நிறுவனத்தின் உள்ளக ஒழுங்குமுறைச் சட்டங்கள் மற்றும் நிறுவனம் ஒரு கட்சிக்காரராக இருக்கும் ஒப்பந்தங்கள்;
- அபாய மேலாண்மை அமைப்பு என்றால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு, அதன் ஊழியர்களின் அதிகாரங்களும் பொறுப்புகளும், நிறுவனத்தின் உள்ளக ஒழுங்குமுறைச் சட்டங்கள், அதேபோல நிறுவனத்தின் நிதிசார் நம்பகத்தன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்ட அபாய மேலாண்மைச் செயல்பாட்டைக் குறிக்கிறது.
பிற பதங்கள் ”டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் மீது”-ல் எண் 8, டிசம்பர் 21, 2017ன்படி பெலாரஸ் குடியரசின் குடியரசுத் தலைவரின் ஆணைப்படியும் பிற சட்டங்களின்படியும், HTP மேற்பார்வைக் குழுவின் ஆவணங்களின்படியும் உள்ள அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்தியாயம் 2
நோக்கங்கள், வேலைகள் மற்றும் நிறுவனத்தில் நலன் முரண்பாட்டு மேலாண்மைக் கொள்கைகள்.
நலன் முரண்பாட்டு வகைகள்
4. நிறுவனத்தின் நலன் முரண்பாட்டு மேலாண்மையின் பிரதான நோக்கங்கள்:
- சொத்துக்கும் நிறுவனத்தின், அதன் நிறுவுனர்கள் (உறுப்பினர்கள்), பயனாளிகள், நிறுவன அங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள், வணிகப் பிரிவுகள், ஊழியர்கள், நிறுவன வாடிக்கையாளர்களின் பிற நலன்கள் இவற்றுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதன் காரணமாக (நிகழும் சாத்தியம்) நிறுவனத்திற்கு மற்றும்/அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கு எதிர்மறை விளைவுகள் (நட்டம் ஏற்படுவது, வணிக நற்பெயர் சீர்குலைதல் போன்ற விளைவுகள் உள்ளிட்டவை) ஏற்படுவதைத் தடுப்பது;
- வாடிக்கையாளர் சார்ந்த நடவடிக்கைகளில், பிற ஒப்பந்ததாரர்கள், நிர்வாகம் மற்றும் HTP மேற்பார்வைக் குழு மற்றும் பிறரிடத்தில் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பது;
- நலன் முரண்பாடு இருப்பதன் காரணமாக நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதன் அங்க உறுப்பினர்களால் செய்யப்படும் தீங்குகளைத் தடுப்பது.
5. நிறுவனத்தில் நலன் முரண்பாடுகளைக் கையாள்வதில் பின்வரும் பணிகளைச் செய்வதன் மூலம் இந்த ஒழுங்குமுறைகளின் உட்கூறு 4ல் வரையறுத்துக் கூறப்பட்ட நோக்கங்களை அமல்படுத்துவது உறுதிசெய்யப்படுகிறது:
- அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் சேவையில் சமமான (ஒரே மாதிரியான) அணுகுமுறையை உறுதிசெய்வதும் திறந்த, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கைகளின் அடிப்படையிலான உயர்தர நிறுவன ஆளுகையைப் பின்பற்றுவதும்;
- நலன் முரண்பாடுகளைக் கையாள்வதற்கு சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கும் இது சம்பந்தமான பெலாரஸ் குடியரசின் மற்றும் வெளிநாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கும் இணங்க நிறுவனம் நடந்துகொள்வதை உறுதிப்படுத்தி சர்வதேச அரங்கம் உள்ளிட்ட நிறுவனத்தின் வணிக நற்பெயரின் நேர்மறையான இயல்பைப் பராமரிப்பதும் வலுப்படுத்துவதும்;
- நலன் முரண்பாடு குறித்த தகவலை வெளிப்படுத்துவதை உறுதிசெய்தல்;
- நிறுவனத்தின் நலன் முரண்பாட்டைக் கையாளும் நடைமுறையில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் அதன் அங்க உறுப்பினர்களும் ஈடுபடுவதை உறுதிசெய்தல்.
6. பின்வரும் கொள்கைகளை நிறுவனத்தின் நலன் முரண்பாட்டு மேலாண்மை அடிப்படையாகக் கொண்டுள்ளது:
- நிறுவன உறுப்பினர்கள் மற்றும் அங்க உறுப்பினர்களின் தனிநலன்களுக்கும் மேலாக நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை;
- நலன் முரண்பாடு நிகழ்வதற்கான சூழல்களையும் இருக்கக்கூடிய மற்றும் சாத்தியமுள்ள பகுதிகளை நேரத்திற்குக் கண்டறிதல் மற்றும் தடுத்தல் (தவிர்த்தல்);
நலன் முரண்பாடு தொடர்பான தகவல்களை நிறுவன ஊழியர்கள் மற்றும் அங்க உறுப்பினர்கள் கட்டாயமாக வெளிப்படுத்துவது;
- எழுந்துள்ள ஒவ்வொரு நலன் முரண்பாட்டுக்கும் அதைத் தீர்ப்பதில் நிறுவனத்துக்கு உள்ள பௌதீக அபாயங்களை மதிப்பிடுவதற்கு தனிப்பட்ட அணுகுமுறையைக் கவனத்தில் கொள்ளுதல்;
- நலன் முரண்பாட்டில் தகவலை வெளிப்படுத்தும் நடைமுறையில் இரகசியத்தன்மையைப் பேணுதல்;
- இரகசியத் தகவல்களைக் கையாளும்போது அத்தகு தகவலை நிறுவன ஊழியர்களுக்கும் அங்க உறுப்பினர்களுக்கும் அவர்களது கடமைகளைச் செய்வதற்கு அந்தத் தகவலை அணுகுவது அவசியமில்லாததாக இருக்கும்போது அதை வழங்குவதைத் தடுத்து வணிகத்தின் நெருக்கடிநிலைக் கொள்கையைக் கடைபிடிப்பது.
இந்த உட்பிரிவின் பகுதி ஒன்றுக்கு வழங்கப்பட்ட கொள்கைகளை நிறுவன நலன்முரண்பாடுகளைக் கையாளும்போது கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நலன் முரண்பாட்டு மேலாண்மை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளைச் செய்வதில், இந்த உட்பிரிவு பகுதி ஒன்றில் வழங்கப்பட்ட கொள்கைகளுடன் முரண்படக்கூடிய வடிவம் மற்றும்/அல்லது உள்ளடக்கம் அனுமதிக்கப்பட மாட்டாது.
7. நலன் முரண்பாடுகள் பின்வரும் வகைகளில் இருக்கலாம்:
- நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையில்;
- நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் நிறுவன ஊழியர்கள் அல்லது அதன் அங்க உறுப்பினர்களுக்குமிடையில்;
- நிறுவன ஊழியர்களுக்கும் மற்றும்/அல்லது அங்க உறுப்பினர்களுக்கும் இடையில்;
- நிறுவன பயனாளிகளுக்கும் நிறுவனத்துக்கும் இடையில்;
- நிறுவுனர்களுக்கும் (உறுப்பினர்கள்) நிறுவனத்துக்கும் இடையில்;
- வணிகப் பிரிவுகளுக்கும் மற்றும்/அல்லது நிறுவன அங்கங்களுக்கும் இடையில்;
- நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இடையில்;
- நலன் முரண்பாட்டின் பிற வகைகள்
அத்தியாயம் 3
நிறுவனத்தின் நலன் முரண்பாட்டு மேலாண்மையில்
ஈடுபடும் நபர்கள்
8. நிறுவன நலன் முரண்பாட்டு மேலாண்மையில் ஈடுபடும் நபர்கள்:
- நிறுவன உறுப்பினர்களின் பொதுக்கூட்டம்;
- நிறுவனத் தலைமை;
- நலன் முரண்பாட்டு மேலாண்மைக்கு பொறுப்புள்ள நபர்;
- பிற நிறுவன ஊழியர்கள் மற்றும் அங்க உறுப்பினர்கள்.
9. நிறுவன உறுப்பினர்களின் பொதுக்கூட்டம்:
- இந்த ஒழுங்குமுறைகளையும், இவற்றின் திருத்தங்கள் மற்றும்/அல்லது சேர்க்கைகளை அங்கீகரித்தல்;
- இந்த ஒழுங்குமுறைகளில் கூறப்பட்டபடி நலன் முரண்பாட்டைத் தீர்த்தல்;
- சட்டம், HTP மேற்பார்வைக் குழுவின் முடிவுகள் மற்றும் நிறுவன சாசனத்தின்படி கொடுக்கப்பட்ட நலன் முரண்பாட்டு மேலாண்மை சார்ந்த பிற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
10. நிறுவனத் தலைமை:
- நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்குப் பொறுப்பான நபரைத் தீர்மானிப்பதும் இந்த ஒழுங்குமுறைகளின் இரண்டாம் பாகத்தின் உட்பிரிவு 12ல் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்கி கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதும்;
- நிறுவனத்தில் நலன் முரண்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒழுங்குமுறைகளில் தரப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கைக்கொள்வதை உறுதிப்படுத்துதல்;
- இந்த ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் நலன் முரண்பாட்டுத் தீர்வுகளில் பங்கேற்றல் அல்லது அதைத் தீர்த்து வைத்தல்;
- ஒரு குறிப்பிட்ட சூழலில் “சீனப் பெருஞ்சுவர்” கொள்கையைப் பிரயோகிப்பது பற்றி தீர்மானிப்பது. இதில் அத்தகு ஒரு சூழலில் அதை அமல்படுத்தத் தேவையான விதிகளைத் தீர்மானிப்பதும் (நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்குப் பொறுப்பான நபரின் பரிந்துரைப்படி) அடங்கும்;
- நிறுவன உறுப்பினர்களின் பொதுக்கூட்டத்தில் இந்த ஒழுங்குமுறைகளில் திருத்தங்கள் மற்றும்/அல்லது சேர்த்தல்களைச் செய்வதற்கான முன்மொழிவுகளைச் (நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்குப் பொறுப்பான நபரின் பரிந்துரைப்படி) சமர்ப்பித்தல்;
- ஆறுமாத காலத்தில் நலன் முரண்பாட்டு மேலாண்மையில் உருவாகும் சூழல்கள் மீது நலன் முரண்பாட்டைக் கையாளும் பொறுப்பானவரின் அறிக்கைகளை கருத்தில் கொள்ளுதல்;
- பிற கடமைகளை ஆற்றுதல் மற்றும் நலன் முரண்பாட்டு மேலாண்மைப் பகுதியில் இந்த ஒழுங்குமுறைகளிலும், அவரது பணி விபரம் மற்றும் அவரால் அல்லது உரிமையியல் சட்ட உடன்படிக்கைப்படி முடிவுசெய்யப்பட்ட பணி உடன்படிக்கைப்படி (ஒப்பந்தம்) உரிமை கொண்டிருத்தல்.
11. நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்குப் பொறுப்பாகும் நபர் நிறுவனத்தின் ஊழியராகவோ அல்லது உரிமையியல் சட்ட ஒப்பந்தப்படி ஈடுபடக்கூடிய நபராகவோ இருக்கலாம். நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்கு பொறுப்பேற்பதற்காக ஒரு நபரை வேலைக்கு அமர்த்தும்போது (பணிமாற்றப்படுதல்) அல்லது நலன் முரண்பாட்டு மேலாண்மையில் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது அல்லது அத்தகைய ஒரு உரிமையியல் ஒப்பந்தப்படி அவர் ஈடுபடும்போது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் இந்த ஏற்பாடுகளின் பாகம் இரண்டு உட்பிரிவு 12ல் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சரிபார்த்தலுக்காக வழங்க வேண்டும். நலன் முரண்பாட்டைக் கையாளப் பொறுப்பாகும் நபரோடு தொடர்புடைய இந்த ஆவணங்களின் நகல்கள் நிறுவனத்தின் அலுவலர் துறையில் சொல்லப்பட்ட ஆவனங்கள் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை பாதுகாக்கப்பட வேண்டும்.
நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்கு ஒரு நபர் பொறுப்பேற்கும்போது, நிறுவனத்தின் ஓர் ஊழியர், பகுதி மூன்றின் இந்த உட்பிரிவில் வேறுவகையில் சொல்லப்படாதவரை அத்தகைய ஊழியர் நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்கு மட்டுமாகவோ அல்லது பிற பணி கடப்பாடுகளுடன் சேர்த்தோ நியமிக்கப்படலாம்.
பின்வரும் செயல்பாடுகளைச் செய்ய நலன் முரண்பாட்டைக் கையாள்பவருக்கு அனுமதியில்லை:
- நிறுவனத் தலைமை;
- கணக்காளர், நிறுவனத் தலைமைக் கணக்காளர்;
- அபாய மேலாண்மைக்கான செயலதிகாரி அதேபோல அபாய மேலாண்மைப் பிரிவின் ஓர் ஊழியர்;
- குற்றவியல் சட்டநடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக்குதல், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவுக்கான ஆயுதங்களுக்கு நிதியளித்தல் போன்றவற்றைத் தடுக்கத் தேவையானவற்றை பூர்த்திசெய்தல் தொடர்பாகப் பொறுப்பேற்கும் செயலதிகாரி, அவ்வாறே இந்த நபரின் தலைமையிலான வணிகப் பிரிவில் ஓர் ஊழியர்;
- கணினி அமைப்பு நிர்வாகம் மற்றும் தகவல் பாதுகாப்புக்குப் பொறுப்பான செயலதிகாரி, அவ்வாறே இந்த நபரின் தலைமையிலான வணிகப்பிரிவில் ஓர் ஊழியர்;
- நிறுவனத்தின் வணிகச் செயல்திட்டங்களில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பொறுப்பான துறைத் தலைவர், அவ்வாறே இந்த நபரின் தலைமையிலான வணிகப்பிரிவில் ஓர் ஊழியர்;
- நிறுவனத் தணிக்கையாளர்;
- இது நலன் முரண்பாட்டை ஏற்படுத்துமானால் வேறு செயல்பாடுகள்.
நிறுவனத்தின் எந்தத் துணையமைப்பும் நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்குப் பொறுப்பான நபராகத் தீர்மானிக்கப்படக் கூடாது.
HTP ஆட்சிக்கு இணங்கி நடக்கக்கூடிய செயலதிகாரி நலன் முரண்பாட்டைக் கையாள்வதற்குப் பொறுப்பான நபராகத் தீர்மானிக்கப்படக் கூடாது.
12. நலன் முரண்பாடுகளைக் கையாளும் நபர் அது தொடர்பான சிக்கல்களை நிர்வாகத் தலைமைக்கு நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். இந்த நபர் உரிமையியல் ஒப்பந்தத்தின் கீழ் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், அவர் யாருக்குக் கீழ் இருக்கிறாரோ அந்த நிறுவனத் தலைமை அத்தகைய ஒப்பந்தத்தில் உறுதிசெய்யப்படுவது ஒப்பந்தத்தின் ஓர் அத்தியாவசிய நிபந்தனையாக இருக்க வேண்டும்.
நலன் முரண்பாட்டைக் கையாள்பவர் பல்கலைக் கழகப் பட்டமும் பொருளாதார அல்லது சட்டத் துறையில் குறைந்தது ஆறுமாத பணியனுபவம் உடையவராக இருக்க வேண்டும். நலன் முரண்பாட்டைக் கையாள்பவர் பெலாரஸ் குடியரசின் குற்றவியல் சட்டநெறி ஷரத்துகள் 252 - 255, 424, 429 - 433 குற்றங்கள் ஏதும் நிலுவையிலோ அல்லது வெளிப்படுத்தப்படாமலோ இல்லாமல் இருக்க வேண்டும்.
நலன் முரண்களைக் கையாளும் நபரின் ஊதியத் தொகை (ஊக்கத்தொகைகள் அடங்கியவை) நிறுவனத்தின் நிதிச் செயல்பாட்டைச் சார்ந்து இருக்கக்கூடாது.
13. நலன் முரண்பாட்டைக் கையாள்பவர்:
- நிறுவனச் செயல்பாடுகளில் இந்த ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதை உறுதிசெய்தல்;
- நிறுவன ஊழியர்களாலும் நிறுவன அங்கத்தினர்களாலும் வெளிப்படுத்தப்படும் நலன் முரண்பாடு குறித்த தகவல்களை ஏற்றுக் கொண்டு, அவற்றை பகுப்பாய்வு செய்து எதிர்காலத்தில் நலன் முரண்பாட்டின் அபாயத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நிறுவனத் தலைமைக்கு முன்மொழிவை சமர்ப்பித்தல்;
- நிறுவனத்துக்கும் மற்றும்/அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கும் நலன் முரண்பாட்டின் காரணமாக ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்த உண்மையை எழுத்தில் வைப்பதும், இந்த உண்மைகளை பகுப்பாய்வு செய்து எதிர்காலத்தில் நலன் முரண்பாட்டின் அபாயத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நிறுவனத் தலைமைக்கு முன்மொழிவை சமர்ப்பிப்பது;
- நலன் முரண்பாடுகளைக் கையாளும் நடைமுறையின் தொகுப்பினை நிறைவேற்றுதல்;
- சர்வதேச சிறப்பு நடைமுறைகளையும் பெலாரஸ் குடியரசு மற்றும் வெளிநாடுகளிலுள்ள நலன் முரண்பாட்டு மேலாண்மை தளத்தின் சிறந்த நடைமுறைகளையும் படித்து தொகுத்துக் கொள்ளுதல்;
- நலன் முரண்பாட்டு மேலாண்மை முறைமைகளை நடத்துவதும், தேவையெனில், இந்த ஒழுங்குமுறைகளில் திருத்தங்கள் மற்றும்/அல்லது சேர்மானங்களுக்கான முன்மொழிவை தயாரித்து நிறுவனத் தலைமையிடம் சமர்ப்பித்தல்;
- குறைந்தது ஆறு மதங்களுக்கொருமுறை, சம்பந்தப்பட்ட ஆறுமாதங்களில் நலன் முரண்பாட்டு மேலாண்மையில் உள்ள சூழலை அறிக்கையாக நிறுவனத் தலைமையிடம் அளித்தல்;
- இந்த ஒழுங்குமுறைகளால் வரைமுறைப்படுத்தப்பட்டவை வாடிக்கையாளரிடம் வெளிப்படுத்தப்பட்டால், நலன் முரண்பாட்டின் உண்மை, அதைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அத்தகைய வெளிப்படுத்தல் மீதான அவரது பார்வை உறுதிப்பாட்டைப் பெறுவது மற்றும் இந்த உறுதிப்படுத்தலை அதைப் பெற்றதிலிருந்து ஐந்து வருடங்களுக்கு மறு உருவாக்கத்துக்காக சேமித்து வைத்திருப்பது;
- HTP மேற்பார்வைக் குழுவின் முடிவுகளின்படி, இந்த ஒழுங்குமுறைகள், அவரோடு முடிவுசெய்யப்பட்ட பணி விபரம் மற்றும் பணி உடன்படிக்கை (ஒப்பந்தம்) அல்லது உரிமையியல் சட்ட ஒப்பந்தப்படி நலன் முரண்பாடுகளைக் கையாளும் இடத்திலுள்ள பிற கடமைகளையும் உரிமைகளையும் மேற்கொள்ளுதல்.
14. நிறுவனத்தின் பிற ஊழியர்களும் அதன் அங்க உறுப்பினர்களும்:
- இந்த ஏற்பாடுகளுக்கு பரிட்சயப்படுத்திக் கொள்ளுதலும் அதை நிறைவேற்றுதலும் (ஒழுகுதல்);
- அவர்கள் பங்கேற்பாளர்களாக இருப்பதில் நலன் முரண்பாட்டைக் கண்டறிதல்;
- இந்த ஒழுங்குமுறைகளில் வழங்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும் அத்தகு சூழல்களிலும் நலன் முரண்பாடு குறித்த தகவலை வெளிப்படுத்துதல்;
- அவர்கள் பங்கேற்பாளர்களாக உள்ள நலன் முரண்பாட்டைத் தீர்ப்பதில் பங்கெடுத்தல்;
- இந்த ஒழுங்குமுறைகளில் வழங்கப்பட்ட நலன் முரண்பாடுகளைக் கையாளும் இடத்திலுள்ள பிற கடமைகளையும் உரிமைகளையும் மேற்கொள்ளுதல்.
அத்தியாயம் 4
நிறுவனத்தில் ஒரு நலன் முரண்பாடு
நிகழும் பகுதிகளும் சூழல்களும்
15. நிறுவனத்தில் நலன் முரண்பாடு நிகழும் பகுதிகளில் பின்வரும் முரண்பாடுகள் அடங்கும்:
- நிறுவனத்தின் யுக்திசார் நலன்கள் (இலாபமீட்டுதல், நிதிசார் நம்பகத்தன்மையை உறுதிசெய்தல், இலாபகரமான வணிக அமைப்பாக நிறுவனத்தின் நீடித்த இருப்புக்கான திறன், நிறுவனத்தின் திறன்மிக்க மேலாண்மையை உறுதிசெய்தல், நேர்மறையான வணிக நற்பெயரைப் பராமரிப்பதும் பிற யுக்திசார் நலன்களும்);
- நிறுவன அங்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் ஓர் அமைப்பாக அந்த நிறுவனத்தின் நலன்கள்;
- நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள், நிறுவுனர்கள் (உறுப்பினர்கள்) மற்றும் பயனாளிகளின் சொத்து மற்றும் பிற நலன்கள்;
- அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய நிறுவனத்தின் வணிகப் பிரிவுகள் மற்றும் ஊழியர்கள், அபாய மேலாண்மைப் பிரிவு அல்லது உயர் தொழில்நுட்பப் பூங்காவின் அதிகாரத்துக்கு இணங்கி நடப்பதை உறுதிப்படுத்தும் பிரிவு (இனி "HTP" என்று குறிப்பிடப்படும்) அல்லது நிறுவனத் தணிக்கையாளரின் நலன்கள்;
- நிறுவனப் பணியாளர் ஒருவரின் கடமைகள் (நிறுவன வணிகப்பிரிவின் செயல்பாடுகள்) (நிறுவனத்தின் உள்ளக ஒழுங்குமுறைச் சட்ட மேம்பாடுகள் மற்றும் அவற்றின் திறனைக் கண்காணித்தல், அபாய நிகழ்வு தொடர்பான வணிக விசயங்களை மேற்கொள்ளுதல் மற்றும் இந்த அபாயத்தைக் கையாளுதல், இத்தகைய வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவற்றை சரியாக அமல்படுத்துவதையும் பிற கடமைகளையும் கண்காணித்தல்.
16. நிறுவன நலன் முரண்பாட்டுக்கான நிபந்தனைகளில் அடங்கியவை:
- நிறுவன அங்கத்தினர்கள், அவற்றின் உறுப்பினர்கள், நிறுவன ஊழியர்கள் சட்டத் தேவைகளுக்கும், HTP மேற்பார்வைக் குழுவின் முடிவுகளுக்கும், நிறுவனத்தின் உள்ளக ஒழுங்குமுறைச் சட்டங்களுக்கும், நிறுவனம் ஒரு கட்சிக்காரராக இருக்கும் உடன்படிக்கைகளுக்கும் அதேபோல வணிகத் தொடர்புகளின் தரநிலைகளுக்கும் தொழில்முறை நெறிசார் கொள்கைகளுக்கும் இணங்கி நடக்கத் தவறும்போது;
- திறனற்ற நிறுவனக் கட்டமைப்பு;
- நிறுவனப் பிரிவுகள் மற்றும் பிரதானச் செயல்பாடுகளோடு தொடர்புடையவைகள் அல்லாதவை உட்பட நிறுவன வணிகப் பிரிவுகள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள்;
- தகுதிவாய்ந்த நிறுவன அலுவலர்களின் போதாமை அல்லது பற்றாக்குறை;
- நிறுவன நலன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமைக் கொள்கையை கருதாது அலுவல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது உட்பட தனிநலனை அதற்கு மேலாக வைப்பது;
- நிறுவனத் தலைமை, அவரது பிரதிநிதி, நிறுவனத் தலைமையின் வணிகப் பிரிவு, ஒரு வணிக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டில் அவர்களது உறவினர் அதாவது வாடிக்கையாளர் அல்லது பிற நிறுவனத்தின் எதிர்க்கட்சியினர் இருப்பதில் பங்கெடுப்பதும் அத்தகைய பங்கெடுப்பின் பங்களவு அதேபோல் அத்தகைய வணிக அமைப்பின் உரிமையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்தில் இருந்தால்;
- வாடிக்கையாளர்கள் அல்லது நிறுவனத்தின் எதிர் தரப்பினராக உள்ள நிறுவனங்களில் இந்த உட்பிரிவின் பத்தி ஏழில் சுட்டிக்காட்டப்பட்டவை தவிர நிறுவன அங்க உறுப்பினர்களின் பிற நலன்கள்;
- நிறுவனத் தலைமை, அவரது உதவியாளர் தலைமையில் இருக்கும், வேறொரு நிறுவனத்தின் வணிகப் பிரிவின் தலைமையாக அல்லது அதன் மேலாண்மை அங்கத்தில் அவர்கள் பங்கேற்பது;
- நிறுவுனரின் (உறுப்பினர்), வாடிக்கையாளர் அல்லது வேறொரு நபரின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்கு நிறுவனத்தின் நிதி நம்பகத்தன்மை பலன்களை கணக்கில் எடுக்காமல் நிறுவன அங்க உறுப்பினர் ஒருவரின், நிறுவன வணிகப் பிரிவின் தலைமையின் நிறுவனப் பணி தொடர்பான அதிகாரங்களைப் பயன்படுத்துவது;
- நிறுவனத்துடன் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு உள்ள வணிக வாய்ப்புகளுக்காக, தனிநலன் இருப்பதில் நேர்மையின் பேரில் செய்யப்படும் ஏற்பாடுகள் நிறுவன நலனுக்குக் கேடு விளைவிப்பதாக இருப்பது;
- நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்படும் டோக்கன்களுக்கான வர்த்தகத்தில் கிரிப்டோ தளத்தின் செயல்பாட்டை அமல்படுத்துவதில் நிறுவனத்தின் பங்களிப்பு;
- கிரிப்டோ தள நடவடிக்கைகளை அமல்படுத்துவதில், வாடிக்கையாளர் நலனின் பேரில் நிறுவனத்தால் பிற கிரிப்டோ தளங்களின் வர்த்தக அமைப்புகளின் பரிவர்த்தனைகள் அல்லது அந்நிய வர்த்தகத் தளங்களைத் தவிர்த்து அதன் வர்த்தக அமைப்பில் அல்லது அதற்கு வெளியில் செய்யப்படும் டோக்கன் பரிவர்த்தனைகள்;
- நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனத்துக்கு, அதன் ஊழியர்களுக்கு, நிறுவுனர் (உறுப்பினர்) அல்லது ஒரு பயனாளியால் அல்லது டோக்கன்கள் நிறுவனத்தின் கைவசம் இருக்கும்போது நிறுவனத்துக்குச் சொந்தமான டோக்கன்களில் டோக்கன் வ்ர்த்தகத்துக்கு கிரிப்டோ தள நடவடிக்கையை மேற்கொள்ள நிறுவனத்தின் அனுமதிப்படி வாடிக்கையாளர் நலனுக்காக டோக்கன் பரிவர்த்தனைகளைச் செய்வது.
அத்தியாயம் 5
நிறுவன நலனில்
முரண்பாட்டைத் தவிர்த்தல்
17. நிறுவனம், அதன் அங்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள், நிறுவன வணிகப் பிரிவுகள், நிறுவன ஊழியர்கள் நலன் முரண்பாடு எழச் செய்யும் சூழல்களை அடையாளம் காணவும் அதைத் தடுக்கவும் கடமைப்பட்டவர்கள்.
18. பின்வரும் நடவடிக்கைகள் மூலம் நலன் முரண்பாடு தவிர்ப்பு மேற்கொ