Nasdaq 100 மற்றும் S&P 500: எது சிறந்தது?

By Currency.com Research Team

Nasdaq 100 பெரும்பாலான ஆண்டுகளில் நல்ல பலன்களைத் தந்துள்ளது. ஆனால் அது மட்டுமே முழுக் கதையையும் சொல்வதில்லை

ஒரு கிலுகிலுப்பையைக் காட்டிலும் வேகமாக பங்குகள் மேலும் கீழும் செல்லும்போது, முதலீட்டாளர்கள் சிறந்த செயல்திறனைக் காட்டக்கூடிய பங்குச்சந்தைக் குறியீட்டெண்ணைப் பார்க்கிறார்கள். இங்குதான் Nasdaq 100க்கும் S&P 500க்கும் இடையிலான போர் வருகிறது. இங்கு ஒவ்வொரு குறியீட்டெண்ணும் வழங்குவது குறித்தும், ஒப்பீட்டளவில் அவற்றின் செயல்திறன் மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பவை குறித்து அறிந்துகொள்வோம்.

Nasdaq 100 மற்றும் S&P 500: வேறுபாடு

தொடங்குவதற்கு,  Nasdaq 100 மற்றும் S&P 500 -ஐ வேறுபடுத்திக் காட்டும் முக்கிய விசயங்களைப் பார்ப்போம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், Nasdaq 100 என்பது Nasdaq பங்குச்சந்தையில் மிகப்பெரியதும் அதிகம் செயலூக்கத்துடன் வர்த்தகமாகும் 100 அமெரிக்க நிறுவனங்களின் செயல்திறனைத் தொடர்ந்து கவனிக்கும் பொறுப்பு கொண்டது. இதில் ஒரு எதிர்பாராத் திருப்பம் வருகிறது. காரணம் நிதிசார் பங்குகள் இந்தக் குறியீட்டெண்ணில் சேரத் தகுதியில்லை. சந்தை செய்திகளை நீங்கள் பின்தொடர்ந்து வருகிறீர்கள் எனில், உங்களுக்கு Nasdaq 100 என்பது பொதுவாக அதிகமும் தொழில்நுட்பம் சார் குறியீட்டெண்ணைக் குறிக்கிறது என்று தெரிந்திருக்கும். இதற்குக் காரணம் இந்தக் குறியீட்டெண்ணின் 56.4% நிறையானது தொழில்நுட்பப் பங்குகளையே சாரும். அத்துடன் உணவு விடுதி நடத்துவோர், சில்லறை வணிகங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களும் இதில் இருக்கின்றன. Nasdaq 100ல் உள்ள முக்கிய பிராண்டுகளில் Alphabet, Amazon, Netflix, Apple, Facebook, PepsiCo மற்றும் PayPal போன்றவை அடங்கும்.

Nasdaq 100 மற்றும் S&P 500 இடையிலான போரில் அடுத்ததாக நமது கவனத்தை S&P 500-யில் செலுத்துவோம். இந்தக் குறியீட்டெண் அடிக்கடி செய்தித்தாள்களிலும் செய்தியறிக்கைகளிலும் அமெரிக்கப் பங்குச்சந்தை எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கணிக்கும் முயற்சியாக அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது. Nasdaq 100-ஐப் போன்ற முன்னணி கூறுகள் பல இருப்பினும் – Microsoft, Apple, Amazon, Facebook மற்றும் Alphabet போன்றவை முதல் ஐந்து பிடிமானங்களாக உள்ளன – Johnson & Johnson போன்ற பெரிய சுகாதார நிறுவனங்கள், Berkshire Hathaway போன்ற நிதிசார் நிறுவனங்கள் மற்றும் Visa, அத்துடன் நுகர்வோர் பொருட்களின் அசுர நிறுவனம் Procter & Gamble போன்றவையும் முதல் 10ல் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, Nasdaq 100ஐ நாடுவதா அல்லது S&P 500-ஐப் பார்ப்பதா என்று நீங்கள் எடைபோடுகிறீர்கள் எனில், பன்முகத்தன்மை குறித்து யோசிப்பது முக்கியம். Nasdaq ஒப்பீட்டளவில் ஒரு சிறிய, தேர்ந்தெடுத்த சில பங்குச் சந்தைக் காரணிகள் மீது அதிகளவு அழுத்தத்தை வைத்துள்ளது. அதேநேரம் S&P 500 விரிவான சந்தையைக் கண்காணிக்க முயல்கிறது. ஒரு பொதுவிதியாக, S&P 500 US பங்குகளின் செயல்பாட்டில் 80%ஐ பரப்பினைக் காட்டக்கூடியது.

Nasdaq மற்றும் S&P 500 செயல்திறன்

S&P 500 மற்றும் Nasdaq 100 உடனான நமது ஒப்பீட்டில் அடுத்தபடியாக அவை எப்படிச் செயல்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

பிப்ரவரி 2020ல், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முழுவதுமாகப் பரவும் முன்பாக, S&P 500 3,338 புள்ளிகளுடன் அதுவரையில்லாத உச்சத்தில் Dow Jones போன்ற பிற குறியீட்டெண்களுடன் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. பின்னர் கொரோனா வைரஸ் நெருக்கடி தெளிவாகவே முழு வீச்சில் பரவியபோது அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை இழந்து 2,237 புள்ளிகளாகச் சரிந்தது. எனினும் அதன் பிறகிலிருந்து, S&P 500 புதிய சாதனை உச்சங்களைத் தொட்டுள்ளது. மார்ச் 2021 இறுதிவாக்கில், குறியீட்டெண் 4,000 மட்டத்தைத் தாண்டி 4,535 புள்ளிகள் வரை அதிகரித்தது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நாளான அக்டோபர் 25ம் தேதிப்படி, அது 4,544.9 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

முதலில் Nasdaq 100-ன் கதையும் பெருமளவில் ஒன்றாகத்தான் இருக்கிறது: அதுவரையில்லாத உச்சங்களில் வர்த்தகமாகி, பின் மார்ச் 2020ல் மூன்றில் ஒரு பங்கு விழுந்தது. எனினும், S&P 100-ஐப் போலன்றி Nasdaq பெருந்தொற்றிலிருந்து மிக வேகமாகவே குதித்தெழுந்தது. ஜூன் 2020 நடுவில், குறியீட்டெண் முதல்முறையாக 10,000 புள்ளிகளை உடைத்தது – கொரோனா வைரஸுக்கு முன்பாக அத்தகைய மட்டங்களைப் பார்த்திருக்கவில்லை. இந்தக் குறியீட்டெண் மூன்றே மாதங்களில் தனது இழப்புகளை மீட்பதில் சமாளித்துக் கொண்டு அதற்கும் மேலான ஒன்றுக்கு அடித்தளமிட்டது. அதன் பிறகிலிருந்து அது தொடர்ந்து அதிகரித்து ஜூலை 2021 துவக்கத்தில் 15,000 புள்ளிகளைத் தொட்டது. ஆகஸ்ட் 2021 முழுவதும் சீராக அதிகரித்து 15,675க்கு வந்தது. இதை எழுதிக் கொண்டிருந்த 25 அக்டோபர் 2021ல் 15,355 புள்ளிகளில் குறியீட்டெண் தற்போது நிற்கிறது.

கடந்த ஆண்டில், Nasdaq 100-ன் கவனிக்கத்தக்க மீண்டெழுதலுக்கு பெரும்பாலும் உலகம் முழுவதிலும் தொழில்நுட்பத்தை மேலும் அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கியது ஒரு காரணம். உண்மையில், நம்மில் மில்லியன் கணக்கினர் ஊரடங்கின்போது Zoom முதன் முறையாகப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் தொடர்பில் இருக்க Facebook -ஐச் சார்ந்திருந்தோம். அந்தப் பங்குகள் பிய்த்துக்கொண்டு பறந்ததில் ஆச்சரியமில்லைதான்.

எனினும், இந்த இரு குறியீட்டெண்களின் தற்போதைய செயல்திறனை விளக்குகின்றனவா?

மேலும் தொடரும் முன், செயல்திறன் வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

S&P 500 குறியீட்டெண் மற்றும் Nasdaq 100 குறியீட்டெண்: செயல்திறன் வரலாறு

2021 முதல் காலாண்டில் Nasdaq 100 441 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைவான செயல்திறனைக் காட்டின. S&P அடைந்த 6.17% உடன் ஒப்பிடுகையில் 1.76% மட்டுமே அது ஈட்டியது. எனினும் 2020ல், பெருந்தொற்றின்போது தொழில்நுட்பப் பங்குகளை அதிகம் சார்ந்திருந்த காரணத்தினால் S&P-யைக் காட்டிலும் Nasdaq 3,000bps அதிக செயல்திறனைக் காட்டியது.

வரலாற்று ரீதியாக, வருடாந்திர மொத்த பலன்களின் அடிப்படையில் கடந்த 13க்கு 11 ஆண்டுகள் S&P 500ஐக் காட்டிலும் Nasdaq 100 சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. இந்த விதிக்கு இரண்டு விதிவிலக்குகள் 2008 மற்றும் 2016. கூடுதல் தரவுகள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் 31 டிசம்பர் 2017க்கும் 31 மார்ச் 2020க்கும் இடையில் Nasdaq 100 அளித்த ஒட்டுமொத்த வருவாய் 327% ஆக உள்ளது – இது S&P 500-ன் 128%-ஐக் காட்டிலும் மிக அதிகம்.

முந்தைய செயல்பாடுகள் Nasdaq 100 குறியீட்டெண்ணை வெற்றியாளராகச் சுட்டிக்காட்டும்போது இத்தகைய ஒப்பீட்டில் விரிவான சித்திரத்தைக் காணத் தவறுகிறோமா? பல உச்சங்களை இரண்டு குறியீட்டெண்களும் அடைந்திருந்தாலும், நிச்சயம் தொடர்ந்து வரக்கூடிய கேள்வியாக இந்த ஏறுமுகம் தொடருமா அல்லது ஒரு திருத்தம் காத்திருக்கிறதா என்பது உள்ளது.

Nasdaq 100 மற்றும் S&P 500: பஃபெட் சுட்டிக்காட்டி

பஃபெட் சுட்டிக்காட்டி, இதன் பெயர் முதலீட்டு இராட்சசரான வாரன் பஃபெட்டின் பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது. பங்குச்சந்தையின் மொத்தமதிப்பின் விகிதமானது US பொருளாதார வெளியீட்டுடன் ஒப்பிட்டு அளவிடப்படுகிறது. 

சுட்டிக்காட்டியை விளக்கும் விதமாக Fortune இதழுக்கு பஃபெட் கூறியது: ”நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதைச் சொல்வதில் இந்த விகிதாச்சாரம் குறிப்பிட்ட வரம்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் கொடுக்கப்பட்ட ஒரு தருணத்தில் மதிப்பீடுகள் எங்கு நிற்கின்றன என்பதை அளவிடுவதற்கான சிறந்த ஒற்றை அளவீடாக ஒருவேளை இது இருக்கக்கூடும்.”

What is your sentiment on US500?

3828.9
Bullish
or
Bearish
Vote to see community's results!

ஒமாஹா அறிஞரின் கூற்றுப்படி, மிக அதிகளவு மதிப்புள்ளவைகள் மட்டுமே நீண்ட காலத்துக்கு திருத்தமின்றி தொடர்ந்து இருக்கமுடியும். இரண்டு குறியீட்டெண்களும் சாதனை உச்சங்களைத் தொட்டதில் இருந்து, பங்குகள் தேவைக்கதிகமான மதிப்பை எட்டிவிட்டனவோ என ஆய்வாளர்கள் சற்று பயத்துடன் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், 2021க்கான CBOவின் GDP கணிப்புடன் ஒப்பிட S&P 156%-ல் நின்றது. இஉது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டின் கூட்டுசராசரியான 86%-ன் இருமடங்கு. தற்போதைய விகிதாச்சாரம் கூட 1999ல் டாட்காம் குமிழியின் போது ஏற்பட்ட விகிதாச்சாரத்தைக் காட்டிலும் ஐந்தாவது அதிகளவாக உள்ளது.

இன்னும் எந்தத் திருத்தமும் ஏற்படாத நிலையில், பழைய சொலவடையான மேலே போன எதுவும் கீழே வந்தே தீரும் என்ற கூற்று சந்தேகத்துக்கிடமில்லாமல் ஒரு புள்ளியில் நடந்தே தீரும்.

இன்னொரு மதிப்பீட்டு அளவுமானியன CAPE யேல் பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷில்லெரால் உருவாக்கப்பட்டது. இது மேலும் அச்சுறுத்தும் உண்மைகளை வெளிக்காட்டுகிறது. Fortune தொகுத்த தரவுகளின்படி கடந்த 141 வருடங்களின் அனைத்து காலாண்டுகளைக் காட்டிலும் ஜூலையில் இருந்து S&P 500 96% அதிக விலை கொண்டதாக ஆகியிருக்கிறது. எளிமையாகச் சொல்வதெனில், அதிக சந்தை முதலீடு கொண்ட பங்குகளின் இந்த விலை, ஒட்டுமொத்த பங்குச்சந்தை வரலாற்றிலேயே 4% தடவை மட்டுமே நிகழ்ந்துள்ளது.

Nasdaq 100 மற்றும் S&P 500: எப்போது திருத்தம் நிகழும்?

பங்குகளின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறுவதற்கு குறைவான வட்டி விகிதங்கள் ஒரு குறிப்பிடத்தக்க காரணம். வாங்கும் பணத்துக்குக் குறைவாகவே திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் நிறுவனங்கள் கடனை மலிவான வீதத்தில் பெறமுடியும் என்பதை இது குறிக்கிறது. தொழில் வளர்ச்சியானது வலுவான அடிப்படைகளுக்கு இட்டுச் செல்லும். அதன் விளைவாக பங்கு விலை அதிகரிக்கும்.

கூடுதலாக, குறைவான வட்டி வீதங்கள் எளிதில் பணம் கடன்பெறச் செய்கின்றன. இதன் அர்த்தம் பொருளாதாரத்தில் கூடுதல் பணம் சுழற்சியில் இருக்கிறது என்பதாகும். உபரி பணத்துடன், முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதைத் தேர்ந்தெடுக்கக்கூடும்.

இரண்டு குறியீட்டெண்களும் பங்குகளின் கலவை என்ற உண்மையின் அடிப்படையில், இவை இரண்டின் மதிப்பும் எழுச்சி கண்டுள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.

வட்டி வீத அதிகரிப்பு

பண வீக்கம் அதிகரித்தால், US ஃபெடரல் ரிசர்வ் அடுத்த ஆண்டில் அதன் துவக்கத்திலேயே வட்டி வீதங்களை அதிகரிக்கக் கூடும். இது சந்தேகத்துக்கு இடமின்றி பங்கு நுரைகளின் முடிவைத் தொடங்கி வைக்கும் மந்திரமாகக் கருதலாம்.

எனினும், பண வீக்கம் 2%க்கும் கீழே இருந்து, வேலையின்மை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியும் மந்தமாக இருந்தால், 2024 வரையிலும் வட்டி வீதங்களை அதிகரிப்பதை நிறுத்திவைக்க ஃபெடரல் முடிவெடுக்கக் கூடும்.

கடைசியாகச் சொன்ன சூழலுக்கு அர்த்தம் சாதகமான பொருளாதாரச் சூழல்கள் தொடர்ந்து இருக்கையில் மேலும் குறுகியகால வளர்ச்சியை நாம் பார்க்க முடியும். அதற்கு முன் சொன்ன சூழலைப் பொறுத்தவரை இரண்டு குறியீட்டெண்களிலும் மேலும் உடனடியான தாக்கத்தைப் பார்க்க முடியும்.

S&P 500 குறியீட்டெண் மற்றும் Nasdaq 100 குறியீட்டெண்: எதிர்காலச் செயல்திறன்

வட்டி வீதங்கள் ஏறும்போது, S&P 500-யில் Allstate Corporation, American Express மற்றும் Aon உள்ளிட்ட நிதிசார் பங்குகளின் கலவை இருப்பதால் அது விளிம்பைத் தொடக்கூடும். நிதி நிறுவனங்கள் வட்டி வீத அதிகரிப்பில் குறிப்பிடத்தக்க இலாபங்களை அடைய முனையும். காரணம் பணத்தை அளிப்பதற்கு அவை கூடுதல் தொகையைப் பெற முடியும்.

எனினும், கடந்த பத்தாண்டுகளில் பிற துறைகள் மற்றும் பிரிவுகளைக் காட்டிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. Apple மற்றும் Google போன்ற பங்குகள் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தி தயாரிப்புகளை வெளியிட்டு வந்தால், Nasdaq 100-ன் செயல்திறனில் அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

S&P 500 அல்லது Nasdaq 100 இவற்றில் எதில் முதலீடு செய்வது என்ற கேள்வியெழுந்தால், நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது, உங்கள் சொந்த ஆராய்ச்சியை முதலில் செய்யுங்கள். அனைத்து சமீபத்திய போக்குகளையும் மேம்பாடுகளையும் அதில் காரணிகளாக வையுங்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image