On-balance volume வர்த்தகச் சுட்டிக்காட்டியை எப்படிப் படித்துப் பயன்படுத்துவது

By Currency.com Research Team

OBV என்பது சொத்துக்களின் வர்த்தக அளவுகளின் அடிப்படையில் விலை நகர்வுகளைக் கணிப்பதில் ஒரு முன்னணி சுட்டிக்காட்டி.

On-Balance Volume                                 

OBV சுட்டிக்காட்டி ஒரு முக்கியமான டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டி. இது 1963ல் ஜோ கிரான்வில்லா என்பவர் எழுதிய ‘Granville's New Key to Stock Market Profits' என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

OBV சுட்டிக்காட்டியானது விலை நகர்வுகளில் வர்த்தக அளவு முக்கியப் பங்கினை வகிக்கிறது என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சாத்தியமுள்ள விலை நகர்வுகளை எதிர்பார்ப்பதற்கு இதைப் பயன்படுத்த முடியும்:

  • ஒரு பங்கின் அல்லது ஒரு சொத்தின் வர்த்தக அளவு குறையும்போது விலை குறையாமல் இருந்தால், விலை குறைவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
  • வர்த்தக அளவு அதிகரிக்கும்போதுபோது விலை அதிகரிக்காமல் இருந்தால், விலை மேல்நோக்கி நகர்வதை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

OBV சுட்டிக்காட்டி கணக்கீடு

On-balance volume என்பது திரண்ட சுட்டிக்காட்டியாக அறியப்படுகிறது – விலை அதிகரிக்கும்போது, அது வர்த்தக அளவைக் கூட்டுகிறது. விலை கீழிறங்கும்போது இது வர்த்தக அளவைக் கழிக்கிறது. இதற்கேற்ப, OBV பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:

  • இன்றைய விலையானது நேற்றைய விலையைக் காட்டிலும் அதிகமிருக்கும்போது

OBV = OBV (நேற்று) + இன்றைய வர்த்தக அளவு

  • இரண்டு விலைகளும் சமமாக இருக்கையில் (நேற்றைய இறுதிவிலையும் இன்றைய இறுதிவிலையும்)

OBV = OBV (நேற்று)

  • இன்றைய விலையானது நேற்றைய விலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும்போது

OBV = OBV (நேற்று) – இன்றைய வர்த்தக அளவு

On-balance volume என்றால் என்ன? 

பூஜ்ஜிய மதிப்புக் கோட்டைச் சுற்றிலும் நேர்மறைக்கும் எதிர்மறை மதிப்புகளுக்குமிடையில் நகரும் ஊசலாட்டத்துக்கு ஏற்ப சுட்டிக்காட்டியானது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். உங்கள் வ்ரைபடத்தில் பூஜ்ஜியக் கோட்டைப் பார்க்கமுடியவில்லை என்றால் குழப்பமடையாதீர்கள். OBV மதிப்புகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்து கோட்டிலிருந்து தூரமாகச் செல்லக்கூடும். ஆனால் ஒரு சமயத்தில் அவை பூஜ்ஜியக் கோட்டுக்கு மேலோ அல்லது கீழோ தாண்டக்கூடும்.

முந்தைய தின விலையைக் காட்டிலும் இன்றைய விலை அதிகமிருக்கும்போது On-balance volume நேர்மறையாக இருக்கும். முந்தைய இறுதி விலையைக் காட்டிலும் இன்றைய விலை குறைவாக இருந்தால் எதிர்மறை மதிப்பு தோன்றும்.

On-balance volume சுட்டிக்காட்டியை எப்படிப் புரிந்துகொள்வது

OBV சுட்டிக்காட்டியானது ஒரு பெட்டிக்குள் வரையப்பட்ட ஒரு கோடு போல உங்கள் வரைபடத்தின் கீழ்ப்புறத்தில் இருக்கும். இதோ ஓர் உதாரணம்:

Apple பங்கின் விலை OBV சுட்டிக்காட்டியுடன்
Apple பங்கின் விலை OBV சுட்டிக்காட்டியுடன் - நன்றி: Currency.com

இதில் ஊதா நிறக் கோடு on-balance volume கோடாகும். இதில் எப்படி இந்தச் சுட்டிக்காட்டி நேர்மறை எதிர்மறை மதிப்புகளை எடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

இதுவொரு திரண்ட சுட்டிக்காட்டி. எனவே கடைசி இறுதி விலை அதற்கும் முந்தைய இறுதிவிலையை விட அதிகமிருந்தால், அந்த நாளின் வர்த்தக அளவு ஏற்ற-அளவு (up-volume) என்றழைக்கப்படுகிறது. சொத்தின் இறுதி விலை முந்தைய தின இறுதிவிலையைக் காட்டிலும் கீழே இருந்தால், அது இறக்க-அளவு (down-volume) எனப்படுகிறது.

OBV சுட்டிக்காட்டிக்கான குறிப்பிட்ட மதிப்பை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் உங்கள் முதன்மையான கவனம் அதன் திசையில் இருக்க வேண்டும். அது உங்களுக்கு சந்தையில் வாங்குபவர் அல்லது விற்பவரின் அழுத்தம் இருக்கிறதா என்பதைச் சொல்லக்கூடும். On-balance volume சுட்டிக்காட்டியானது சந்தை பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட சொத்தினைச் சேர்ப்பதற்காக நீண்ட பொசிசன்களுக்குள் நுழைகிறார்களா அல்லது அந்தச் சொத்து விற்கப்படுகிறதா என்பதைக் காட்ட வாய்ப்புள்ளது.

On-balance volume சுட்டிக்காட்டியை எப்படிப் பயன்படுத்துவது

வர்த்தகர்கள் விலை நகர்வுகளைக் கணிக்க அல்லது விலையின் போக்கினை உறுதிப்படுத்த விரும்பும்போது on-balance volume வர்த்தக உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். விலைக்கும் வர்த்தக அளவுக்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது.

ஏறுமுக விலகல் – விலை இறங்கும்போது OBV அதிகரித்தால், மேல்நோக்கிய நகர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒரு ஏறுமுக விலகலுக்கு விலையானது அடிமட்டங்களுக்கும் கீழே இருப்பதைக் காட்டும். அதேவேளையில் சுட்டிக்காட்டியானது அடிமட்டங்களில் உயர்வானதைக் காட்டும்.

இறங்குமுக விலகல் – விலை தொடர்ந்து அதிகரிக்கும் வேளையில் OBV சுட்டிக்காட்டி இறங்கும்போது இது கண்டறியப்படுகிறது. விலை உச்சங்களில் உயரமானதைக் காட்டும்போது on-balance volume உயரங்களில் குறைவானதைக் காட்டும். இது இறங்குமுக விலகலின் அடையாளம்.

போக்கினை உறுதிப்படுத்துதல் – போக்கின் திசையை உறுதிப்படுத்த, OBV கோடு விலையோடு சேர்ந்து ஒரே திசையில் நகர்கிறதா என்பதைப் பாருங்கள். விலை அதிகரிக்கும்போது On-balance volume அதிகரித்தால், மேல்நோக்கிய போக்கினை நீங்கள் உறுதிப்படுத்த முடியும். அதாவது வர்த்தக அளவு விலை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நோக்கி நகர்கிறது.

வரம்புக்குட்பட்ட சந்தையில் முறிவு அல்லது வீழ்ச்சிக்கான சாத்தியம் – வரம்புக்குட்பட்ட சந்தை நிகழ்கையில், on-balance volume சுட்டிக்காட்டி மதிப்பில் ஏற்றம் அல்லது இறக்கத்தை நீங்கள் தேட வேண்டும். அது ஒரு முறிவுக்கு அல்லது விலை வீழ்ச்சிக்கான சமிக்ஞையாக இருக்கக்கூடும். அதிகரிக்கும் OBV கோடு சாத்தியமான மேல்நோக்கிய முறிவை உங்களுக்கு உணர்த்தக்கூடும். ஏனெனில் திரட்சி நடைபெறுகிறது.

On-balance volume கோடு இறங்கிவந்தால் அதன் விநியோகம் காரணமாக சாத்தியமான விலை வீழ்ச்சிகளை அடையாளம் காணலாம். எப்படி OBV உறுதிப்பாடு வேலை செய்கிறது, எப்படி ஒரு விலகல் வரைபடங்களில் காணப்படும் என்பதற்கான மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

Prada பங்கின் விலை OBV சுட்டிக்காட்டி திசையுடன்
Prada பங்கின் விலை OBV சுட்டிக்காட்டி திசையுடன் - நன்றி: Currency.com

விலை மேல்நோக்கி நகர்வதை, மேலதிக உயரங்களாக வடிவெடுப்பதை நீங்கள் பார்க்கமுடியும். இது கண்ணாரக் காணக்கூடிய மேல்நோக்கிய போக்கினைச் சுட்டிக்காட்டக்கூடியது. OBV சுட்டிக்காட்டி திசையைப் பார்த்து வர்த்தகர்கள் இந்தப் போக்கின் திசையை உறுதிப்படுத்துகிறார்கள். சுட்டிக்காட்டியின் கோடு விலை நகர்வின் அதே திசையில் நகர்ந்து உயர்கிறது என்பதை வெளிப்படையாகக் காணலாம்.

பின்வரும் வரைபடமானது on-balance volume வர்த்தக சுட்டிக்காட்டியை நீங்கள் பயன்படுத்தும்போது ஒரு சாத்தியமான விலகலுக்கான விழிப்பூட்டல் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

விலகலைக் காட்டும் USD/CHF சந்தை வீதம்
விலகலைக் காட்டும் USD/CHF சந்தை வீதம் – நன்றி: Currency.com

விலையும் சுட்டிக்காட்டியும் ஒரே திசையில் நகராதபோது விலகல் விழிப்பூட்டல் நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து, ஓர் ஏறுமுக விலகல் சமிக்ஞையை வரைபடத்தில் பார்க்க முடியும் – OBV சுட்டிக்காட்டி தாழ்நிலைகளுக்கு மேலே இருக்கும்போது தாழ்நிலைக்கும் கீழே விலை இருப்பது.

வர்த்தகர்கள் பொதுவாக தங்களது on-balance volume வர்த்தக சமிக்ஞைகளை கூடுதல் சுட்டிக்காட்டிகளுடன் உறுதிப்படுத்துகிறார்கள். இதை நீங்கள் நகரும் சராசரிகள், Ichimoku Cloud, Bollinger Bands இன்ன பிறவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். இறுதியில், உங்கள் பல்முனை-சுட்டிக்காட்டி வர்த்தக உத்திக்காக சரியான சுட்டிக்காட்டிகளின் இணைப்பு தொடர்பான முடிவும் உங்கள் on-balance volume சூத்திரமும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளைப் பொறுத்தது.

On-balance volume வர்த்தக சுட்டிக்காட்டியின் நன்மைகள்

  • புரிந்துகொள்ள எளிதான கணக்கீடு.
  • ஒரு முன்னணி சுட்டிக்காட்டியாக, விலை பக்கவாட்டில் நகரும்போது OBV சாத்தியமுள்ள முறிவு அல்லது வீழ்ச்சிக்கான சமிக்ஞையைத் தரமுடியும்.
  • ஒரு திரண்ட சுட்டிக்காட்டியாக, OBVயை போக்கின் திசையை உறுதிப்படுத்தப் பயன்படுத்த முடியும்.
  • இது வர்த்தகர்களுக்கு விலகல்களைக் கண்டறியும் ஒரு முறையாகப் பயன்படுகிறது.

OBV வர்த்தக சுட்டிக்காட்டியின் குறைபாடுகள்

  • ஒரு வர்த்தக நாளில் அதிகளவு திடீர் ஏற்றம் இருந்தால், வர்த்தக அளவில் உயர்வினால் அந்தக் குறிப்பிடத்தக்க ஏற்றம் உருவாகாவிட்டாலும், OBVயும் திடீர் ஏற்றம் காணும். நிறுவன அறிவிப்புகள் போன்ற பல்வேறு காரணங்கள் குறிப்பிடத்தக்க விலை அதிகரிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.
  • விலையானது இரண்டு சென்டுகள் உயர்ந்தாலும் இரண்டு டாலர்கள் உயர்ந்தாலும் அதே வர்த்தக அளவு சேர்க்கவோ அல்லது கழிக்கவோ படுகிறது. எனவே, OBV விலை நகர்வின் படித்தரத்துக்கான ஒன்று அல்ல.
  • விலை மாற்றப் பகுப்பாய்வுக்குத் தேவையான தொடர்புடைய அனைத்து தகவல்களையும் OBV கொண்டிருப்பதில்லை.
  • சிறிய கால வரம்புக்குள் நீங்கள் On-balance volume-ஐ அமைத்தால் தவறான வர்த்தக விழிப்பூட்டல்களை அது வழங்கக்கூடும். இதற்குக் காரணம் குறுகிய கால வரம்புகளில், அதிக விலை மாறியல்பினால் விலையில் கூச்சல் அதிகமிருக்கும். குறுகிய கால வரம்புகளில் OBV-யை முழுவதுமாக நம்பி வர்த்தகம் செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதை பிற சுட்டிக்காட்டிகளுடன் இணைத்துப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
RECOMMENDED READING
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image