பழமையான கிரிப்டோகரன்சிகள் எவை?
கடந்த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில நீண்ட காலம் உயிர் பிழைத்து வந்துள்ளன

உள்ளடக்கம்
- பிட்காயின்
- கிரிப்டோ BTCக்கு முந்தையது
- பி-மணி, பிட் கோல்டு & ஹாஷ்கேஷ் (B-Money, Bit Gold & Hashcash)
- பழமையான கிரிப்டோகரன்சி
CoinMarketCap அறிக்கைப்படி, 8,000 க்கும் மேற்பட்ட கிரிப்டோ நாணயங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவை. எனினும் இவற்றில் சில, கிரிப்டோ வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் புராதானமானவை. இது நமக்கொரு கேள்வியை எழுப்புகிறது: மிகப் பழமையான கிரிப்டோகரன்சிகள் எவை?
கிரிப்டோவின் 'தந்தை' என்று அழைக்கப்படும் பிட்காயின், பொதுவாக பழமையான கிரிப்டோவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது சரியானதா?
பிட்காயின்
2009ல் நிறுவப்பட்ட பிட்காயின் பல முதலீட்டாளர்களால் முதல் கிரிப்டோகரன்சியாக கருதப்படுகிறது. இந்நாணயம் சடோஷி நகமோட்டோ என்ற புனைப்பெயரைக் கொண்டவரால் உருவாக்கப்பட்டது. அவருடைய/அவர்களின் வெள்ளைத் தாளின் மூலம் முன்னர் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கிய பெருமைக்குரியவர்: உலகளாவிய நிதி செலுத்துகை அமைப்புக்கான மையமில்லாத பாதுகாப்பான அமைப்பை உருவாக்குதல்.
எனவே BTC பழமையான கிரிப்டோவா? அதற்கு அவசியமில்லை: கிரிப்டோகரன்ஸிகளின் முந்தைய உதாரணங்கள், 20 ஆம் நூற்றாண்டில் உள்ளன.
கிரிப்டோ BTCக்கு முந்தையது
பிட்காயின் இதழின் அறிக்கையின்படி, நெதர்லாந்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், BTC தோன்றுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே, மின்னணு பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் இரவு நேர திருட்டுகளால் பாதிக்கப்பட்டனர். எனவே டெவலப்பர்கள் ஸ்மார்ட் கார்டுகளுடன் பணத்தை இணைக்கும் தீர்வைக் கொண்டு வந்தனர். பெட்ரோல் வாங்க விரும்பும் ஓட்டுநர்கள் பணத்திற்குப் பதிலாக இந்த அட்டைகளை எடுத்துச் செல்லலாம்.
1990களின் நடுப்பகுதியில், ஓர் அமெரிக்கக் கணினி விஞ்ஞானி மற்றும் குறியாக்கவியலாளரான டேவிட் சாம், ஒரு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கு இடையேயான தகவல்களை மறைகுறியாக்க ஒரு 'கண்கட்டு சூத்திரத்தை' உருவாக்கி, மின்னணு பணத்தைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்தார். 1998ல் DigiCash திவாலான போதிலும், BTC தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சாமினுடைய பணி முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் அது சில முக்கியமான கொள்கைகளை நிறுவியது. பின்னர் அவை கிரிப்டோ நிகழ்வில் கைக்கொள்ளப்பட்டன.
பி-மணி, பிட் கோல்டு & ஹாஷ்கேஷ் (B-Money, Bit Gold & Hashcash)
1990களின் பிற்பகுதியில் மற்றொரு அமெரிக்கக் கணினிப் பொறியாளர் வெய் டாய், விநியோகிக்கப்பட்ட டிஜிட்டல் பண அமைப்பான பி-மணியை உருவாக்கினார். அவர் முன்மொழிந்த அமைப்பில், வலைத்தொடர்பு மூலம் நாணயத்தை மாற்ற டிஜிட்டல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தத் திட்டம் ஒருபோதும் சரியாக செயல்படவில்லை. எனவே இது பழமையான கிரிப்டோக்களில் ஒன்றாகப் போட்டியிட முடியுமா என்பது விவாதத்திற்குரியது. இருப்பினும், சடோஷி நகமோட்டோ 2008ல் தனது பிட்காயின் வெள்ளைத் தாளில் பி-மணியைக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் உருவாக்கப்பட்ட பிட் கோல்டு, டிஜிட்டல் நாணயத்தின் மற்றொரு மறு தொடக்கமாகும். இது இன்னொரு அமெரிக்கக் கணினி விஞ்ஞானியும் குறியாக்கவியலாளருமான நிக் சாபோவால் உருவாக்கப்பட்டது. பிட் கோல்டு அமைப்பு அதன் ஆரம்பப் பதிப்பில் பணிச்சான்று (PoW) வழிமுறையில் வேலை செய்தது. அது தோல்வியுற்ற போதிலும், இன்று நாம் அறிந்த கிரிப்டோக்களின் தோற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவியது.
(அப்போதைய) இளம் பிரிட்டிஷ் குறியாக்கவியலாளரான ஆடம் பேக் வடிவமைத்த ஹாஷ்கேஷ், 1990களின் நடுப்பகுதியில் வெளிவந்தது. இது டிஜிட்டல் நாணயத்தில் மிகவும் வெற்றிகரமான பிட்காயினின் முந்தைய உதாரணங்களில் ஒன்றாகும். சைபர் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் மின்னஞ்சல் ஸ்பேமைக் குறைப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட ஹேஷ்கேஷ், அமைப்பைப் பாதுகாக்க ஒரு பணிச் சான்று அல்காரிதத்தைப் பயன்படுத்தியது. 1990களின் இறுதியில், ஹாஷ்கேஷ் நீடிக்க முடியாத மின் தேவைகள் உட்பட, பலவிதமான சிக்கல்களை எதிர்கொண்டது. இருப்பினும், அதன் அமைப்பு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு பிட்காயினில் காணப்பட்ட முக்கிய கொள்கைகளை வகுத்தது.
எனவே, ஹாஷ்கேஷ் பழமையான கிரிப்டோகரன்சியா? ஹாஷ்கேஷ் ஆழ்ந்த செல்வாக்கு பெற்றிருந்தாலும், பிட்காயின் கிரிப்டோவின் தந்தையாகவே உள்ளது என்று பலர் வாதிடுவார்கள்.
பிட்காயினைத் தவிர, பிற பழமையான கிரிப்டோகரன்சிகள் யாவை?
பழமையான கிரிப்டோகரன்சி
பிட்காயினிலிருந்து பிரிந்த லைட்காயின் இவற்றில் ஒன்றாகும். 2011ன் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட லைட்காயின், தொழில்நுட்ப ரீதியாக பிட்காயினுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இது லைட்காயினை இரண்டாவது மிகப் பழமையான கிரிப்டோகரன்சியாக மாற்றுகிறது.
மற்றொரு பிட்காயினிலிருந்து பிரிந்த மற்றொன்று பீர்காயின் (Peercoin) ஆகும். இது ஆகஸ்ட் 2012ல் புனைப்பெயர்களைக் கொண்ட இரண்டு டெவலப்பர்கள், மென்பொருள் உருவாக்குநர்களான சன்னி கிங் மற்றும் ஸ்காட் நடால் ஆகியோரால் தொடங்கப்பட்டது. மேலும் இது பணிச்சான்று மற்றும் பங்குச்சான்று ஆகிய அல்காரிதம்களின் கலவையைப் பயன்படுத்திய முதல் டிஜிட்டல் நாணயம். இதன் சந்தை மூலதனம் $17 மில்லியன் (£12.6m) மட்டுமே இருப்பதோடு தினசரி வர்த்தக அளவு $20,000 அல்லது அதற்கும் சற்று அதிகமாக மட்டுமே இருந்தாலும், இது இன்றும் இயங்கி வருகிறது. இது இயங்கிவரும் மிகச்சிறிய கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாகும்.
ரிப்பிள் இன்கார்பரேஷனின் XRP கிரிப்டோகரன்சியும் 2012ல் தொடங்கப்பட்டது. இது வங்கிகளுக்கு இடையேயான செலுத்துகை முறைக்கு மாற்றாக ஒரு முறையை உருவாக்குவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாகும். மேலும் XRP மிகப்பெரிய கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாகவும், பழமையான ஒன்றாகவும் உள்ளது.
அடுத்த ஆண்டான 2013ல், கிரிப்டோகரன்சி வெளியீடுகள் ஒரு சலசலப்பைக் கண்டன. இன்றைய மிகப்பெரிய நாணயங்களில் ஒன்றான, அடோப் மற்றும் IBMமிலிருந்து ஜாக்சன் பால்மர் மற்றும் பில்லி மார்கஸ் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களால் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட டாகிகாயின் அதில் உயிர் பிழைத்த கிரிப்டோகரன்சிகளில் ஒன்று ஆகும்.
ஆரம்பகால ராட்சதர்களில் கடைசியாக எதேரியம், புரோகிராமர் விட்டலிக் புட்டரின் என்பவரால் 2013ல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் நாணயம் 2015ல் வெளியிடப்பட்டது. இன்று ஈதர், பிட்காயினுக்குப் பிறகு சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய நாணயமாக உள்ளது.
இத்தகைய நிறைவுற்ற சந்தை உருவாகி வருவதால், ஆரம்பகால நாணயங்கள் முதன்மையானவையாக இருந்து பயனடைந்தன. வலைத்தொடர்பு தாக்கத்தில் இவை உதவியதுடன், அடுத்தடுத்து வந்த அனைத்து நாணயங்களிலிருந்தும் தங்களை வேறுபடுத்திக் கொள்ள உதவின.
முதல் கிரிப்டோகரன்சி எது?
பிட்காயின் பெரும்பாலும் முதல் கிரிப்டோகரன்சியாக கருதப்படுகிறது.
கிரிப்டோகரன்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சடோஷி நகமோட்டோ என்பவரால் பிட்காயின் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஹாஷ்கேஷ் மற்றும் பிட் கோல்டு உட்பட பிட்காயினுக்கு பல முன்னுதாரணங்கள் இருந்தன. இவற்றில்தான் BTCயின் பல அடிப்படைக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. எனவே கிரிப்டோகரன்சியைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கிரிப்டோகரன்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
பிட்காயின் முதல் உண்மையான கிரிப்டோ என்று நீங்கள் நம்பினால், கிரிப்டோகரன்சி 2009ல் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், மேலே குறிப்பிட்டபடி, முந்தைய டெவலபர்கள் ஆரம்பகட்ட கிரிப்டோ பிரதியை உருவாக்கினர். எனவே கிரிப்டோ 1990களில் உருவானது என்றும் வாதிக்க முடியும்.