நல்ல நிர்வாகம் எங்கள் தொழிலின் மையம்
நல்ல நிர்வாகம் நல்ல தொழிலை மட்டும் உருவாக்குவதில்லை. இது எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களினால் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக பண மோசடியும் குற்றச்செயல்களுக்கும் தீவிரவாதத்துக்கும் முறையற்ற நிதியளிப்பு போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்துடன் இணைந்து, நிதிக் குற்றமும் வரி ஏய்ப்பும் சர்வதேச நிதியமைப்புகளை வலுவிழக்கச் செய்வதுடன் சந்தைகளை உருக்குலைக்கின்றன.
Currency.com-ல் வர்த்தகத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய மோசடி கண்டுணரும் அமைப்புகள் உள்ளிட்ட உள்ளகக் கட்டுப்பாடுகளையும் வலுவான அபாய மேலாண்மைச் செயல்பாடுகளையும் நன்கு கட்டமைத்து திறம்படப் பேணி வருகிறோம். எங்களது தகுதிவாய்ந்த உலகளாவிய இணக்கக் குழுக்கள் தொடர்புடைய அனைத்து சட்டங்களுக்கும் நாங்கள் இணங்கி நடப்பதை உறுதிசெய்து எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் பண மோசடி மற்றும் தீவிரவத நிதியளிப்புக்கு எதிராகப் போராடவும் உதவுகின்றன.
குறிப்பாக, Currency.com-ல் நாங்கள்:
சுய-மதிப்பீடு
சுய மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி எங்கள் உள்ளகக் கட்டுப்பாடுகள், அபாய மேலாண்மைச் செயல்பாடுகள் மற்றும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைகளுடன் எங்கள் இணக்கத்தை மதிப்பீடு செய்தல். முதுநிலை மேலாளர்களாலும் இயக்குநர்கள் குழுவாலும் சுய மதிப்பீடுகளின் முடிவுகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படுகின்றன.
உள்ளக தணிக்கை
உள்ளகக் கட்டுப்பாடுகள், அபாய மேலாண்மை மற்றும் ஆளுகைச் செயல்பாடுகளின் நிறைவுத்தன்மையையும் செயல்படும் விதத்தையும் மற்றும் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கும் அளவுகளையும் மதிப்பிடக்கூடிய திறன் வாய்ந்த உள்ளகத் தணிக்கைச் செயல்பாட்டைப் பேணுதல். இந்த உள்ளகக் கட்டுப்பாடுகள் புதிய மற்றும் நீடிக்கும் விதிகளுக்கு இணங்க பொருந்திப் போவதை உறுதிசெய்வதற்கு வருடாந்திர மதிப்பீடுகளுக்கு உட்பட்டவை.
பயிற்சி & மேம்பாடு
பட்டறிவுசார் தேவைகளுக்கும் சிறந்த நடைமுறைகளுக்கும் இணையாகச் செல்வதற்கு பயிற்சியும் மேம்பாடும் முக்கியம் என்பதை நாங்கள் மதிக்கிறோம். நிர்வாகம் மற்றும் அபாய மேலாண்மை நடைமுறைகள் மற்றும் பண மோசடி எதிர்ப்பு உள்ளிட்ட தங்கள் பணி தொடர்பான பல்வேறு பயிற்சித் திட்டங்களில் எங்கள் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
கட்டாயப் பயிற்சி
அத்துடன், எங்களது காரண-காரிய நடைமுறையின் ஒரு பகுதியாக, நிதிசார் நடவடிக்கைகளை நிறைவேற்றவும் கையாளவும் பொறுப்பான பணியாளர்கள் கட்டாயமாக பண மோசடி எதிர்ப்பு மற்றும் இணக்கப் பயிற்சியை எடுப்பதை உறுதிசெய்கிறோம். மேலும் புதியவர்களுக்கான பாடத்திட்டமான வருடாந்திர பண மோசடி எதிர்ப்பை நிறைவுசெய்வது நம்பகக் கடமைகள் கொண்ட பணியாளர்களின் கட்டாயத் தேவையாகும்.
ஒப்புகை
சான்றளிக்கப்பட்ட பண மோசடி எதிர்ப்பு சிறப்பு நிபுணர்கள் சங்கம் (ACAMS) மற்றும் சர்வதேச இணக்கச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பணியாளர்கள் சான்றிதழ்கள் மற்றும் முறையான உறுப்பினர்நிலையைப் பெற்று தகுதியுடன் இருக்கின்றனர்.
KYC, SOW & SOF
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள், சொத்து ஆதாரம் மற்றும் நிதி ஆதார சிறப்பு நடைமுறை ஆகியவற்றுக்கு இணங்க, எங்களது ஒவ்வொரு வாடிக்கையாளரின் அடையாளத்தையும் வசிப்பிட முகவரியையும் நாங்கள் சரிபார்க்கிறோம். இந்தத் தேவையானது எங்களது விதிமுறைகள் & நிபந்தனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பினர் பரிவர்த்தனைகள் இல்லை
நாங்கள் மூன்றாம் தரப்பினரின் வைப்புகளையோ மூன்றாம் தரப்பினரின் எடுப்புகளையோ அனுமதிப்பதில்லை. அனைத்து வைப்புகளும், முடிந்தவரை, மூலத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டு “பதியனிடும்” மோசடியான செயல்பாடுகளுக்கு வசதிசெய்வதைத் தடுக்கிறோம்.
அடையாளம் காணும் தொழில் நுட்பங்கள்
இதனுடன் கூடவே, நாங்கள் புதுமையான ஆவண உறுதிப்படுத்தல் தொழில்நுட்பத்தையும் மின்னணு தரவுதளங்களையும் பயன்படுத்துகிறோம். இது திருடப்பட்ட அடையாளம் மற்றும் போலியான ஆவணங்களின் பயன்பாடு உள்ளிட்ட அடையாள மோசடி வாய்ப்புகளின் அபாயங்களைக் குறைக்கிறது. தேவைப்படுமிடத்தில், நாங்கள் மின்னணு அடையாளம் காணல் முறைகளைப் பயன்படுத்துகிறோம். இதில் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான உயிரளவியல் (biometric) சோதனைகள் மற்றும்/அல்லது “சுயமி சான்று” கோரல் அல்லது காணொளி அழைப்புகள் ஆகியவற்றை மேற்கொள்வதும் அடங்கும்.
தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மை
நாங்கள் தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய, ஊழல் அரசியல்வாதியாக இருக்க வாய்ப்புள்ள அல்லது எதிர்மறையான ஊடகத்தை நடத்தக்கூடியவர்கள் மீது தொடர்ந்து சோதனைகளையும் மேற்கொள்கிறோம். சந்தேகத்துக்குரிய நடவடிக்கையைக் கண்டறிந்து தடுப்பதற்காக அனைத்துப் பரிவர்த்தனைகளையும் நாங்கள் கண்காணிக்கிறோம். இது தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும்/அல்லது நிதி அமைப்புகளுக்கு எதிராக வாடிக்கையாளர்களை நுண்ணாய்வு செய்யவும் எங்களுக்கு உதவுகிறது.
ஐக்கிய அமெரிக்கச் சட்டங்கள்
ஐக்கிய அமெரிக்காவில் நாங்கள் Financial Crimes Enforcement Network (FinCEN) உடன் 31000177055071 என்ற பதிவெண்ணின் கீழ் பதிவு செய்துள்ளோம். எங்களது பணச் சேவைகளுக்கான தொழில்கள் (MSB பதிவு) நிபந்தனைப்படி US Bank Secrecy Act-க்கு இணங்க நாங்கள் நடப்பது அவசியம். இத்துடன் கூடவே, அமெரிக்காவிலுள்ள எங்களது வங்கிச் சேவைகளும் நேரடியாக Bank Secrecy Act மற்றும் USA Patriot Act ஆகியவற்ரின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்த சட்டமுறைமைப்படியும் வங்கிச் சேவைகளை எங்களுக்கு வழங்குவதற்கான நிபந்தனைப்படியும் எங்கள் வங்கிகள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் மீது காலமுறைப்படியான தணிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
MSB பதிவாக்க நிலைமுறையான தணிக்கை
இறுதியாக, நாங்கள் வருடந்தோறும் முன்னணியிலுள்ள சுயேட்சையான தணிக்கையாளராக உள்ள `பெரிய நான்கு` கணக்குப் பதிவு மற்றும் தணிக்கை நிறுவனங்களுக்குள் உள்ள நிறுவனம் மூலம் எங்கள் நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள், அபாய மேலாண்மை மற்றும் ஆளுகைச் செயல்முறைகள் மற்றும் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் அவற்றின் இணக்க அளவு ஆகியவற்றின் போதிய அளவையும் திறனையும் மதிப்பிடுகிறோம்.