பெலாரஸின் உயர் தொழில்நுட்பப் பூங்காவினால் அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது

Currency.com பெலாரஸின் உயர் தொழில்நுட்பப் பூங்காவினால் (HTP) நேரடியாக அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் அர்த்தம் பிளாக்செயின் தொழில்நுட்பம் அடிப்படையிலான வணிகங்களின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்குமுறையுடன் கூடிய உலகின் ஒரே அதிகார எல்லையின் கண்டிப்பான கண்காணிப்புக்கு நாங்கள் ஆட்படுகிறோம். மேலும் உங்கள் உரிமைகள் – ICO பங்கேற்பாளராக – உலகின் உயர்ந்த சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன என்றும் இதற்கு அர்த்தம்.

ஆகச் சிறந்த பயனர் கணக்கு பாதுகாப்பு. முற்றுப்புள்ளி.

நீங்கள், நீங்கள் மட்டுமே உங்கள் கணக்கை அணுகமுடியும். அதனால்தான் நாங்கள் எங்களது செயற்தளத்தில் உள்நுழைகை, நிதியளிப்பு, வர்த்தகம் மற்றும் API குறியீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கும் இருகாரணி உறுதிப்படுத்தலைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கணக்கிற்கான அணுகலை நீங்கள் இழந்துவிடக்கூடிய எதிர்பாராச் சூழல்களுக்காக நீங்கள் ஒரு தனிப்பட்ட 2FA சேனலையும் (ஒரு மாஸ்டர் கீ) செயல்படுத்தலாம். அதுமட்டுமல்ல: நாங்கள் மின்னஞ்சல் குறியாக்கத்துக்கும் உறுதிப்படுத்தலுக்கும் PGP/GPG பயன்படுத்துகிறோம். இது ஆவணத்தைப் பாதுகாப்பாகப் பதிவேற்றுவதற்கும் சரிபார்ப்பதற்கும் உள்ள வெவ்வேறான அமைப்பைக் கொண்ட ஒன்று. அத்துடன் மிக உயர்ந்தளவு முழுமையான குறியாக்கம் இருப்பதால் உங்கள் தகவல்களும் கையிருப்புகளும் எந்த வகையிலும் சிதைக்கப்படுவதைத் தடுக்கிறது.

தரவுகளின் Fort Knox

எழுத்துப்பூர்வமான தொழில்நுட்ப ரீதியான கம்பிகளுக்குப் பின்னால் அடைப்பதைக் காட்டிலும் உங்கள் தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த வழி எது? எங்கள் சேவையகங்கள் உலகின் மிகச்சிறந்த தொழில்முறை தரவு மையங்களில் ஒன்றினால், ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களால், காணொளி கண்காணிப்பும் விழித்திரை ஸ்கேனும் கொண்டு தனிப்பட்ட பூட்டப்பட்ட கூண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட நிலையில் செயல்படுகின்றன. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் உங்கள் தரவுகளை குறியாக்கம் செய்கிறோம் – அன்றாடம் நிகழ்நேரத்தில் பிரதியெடுக்கப்பட்டு அம் மறுபிரதி சேமிக்கப்படுகிறது. எங்கள் அலுவலர்களும் நன்கு பரிசோதிக்கப்படுவதுடன் ஒவ்வொரு தரவும் அது அத்தனை நுட்பமானதாக இல்லாவிடினும் அவற்றின் மீதான முடிவுகள் கடுமையான நெறிமுறை ஒப்புதலின் வழியாகவே செல்கின்றன.

நீங்கள் நம்பக்கூடிய நாணய சேமிப்பகம்

Currency.com-ல் நீங்கள் வைப்பு செய்யும்போது, உங்கள் நாணயங்கள் வெளியுலகிலிருந்து காற்றிடைவெளி தனிமைப்படுத்தப்பட்ட குளிர் (cold) வாலெட்டுக்கு நேரடியாகச் செல்கின்றன. அங்குதான் பெரும்பாலான நாணயங்கள் உள்ளன. நாங்கள் வரம்புக்குட்பட்ட நாணயங்களை பாதி குளிர் வாலெட்டில் குறியாக்கம் செய்து பூட்டப்பட்ட டிரைவுடன் பாதுகாப்பான இயந்திரங்களில் சேமிக்கிறோம். சூடான வாலெட்டுகளில் வைக்கப்பட்டுள்ள நாணயங்களை மட்டுமே நாங்கள் பரிமாற்றச் செயல்பாடுகளுக்கென பராமரிக்கிறோம். அனைத்துக்கும் மேலாக, ஒவ்வொரு வாலெட்டும் மிக உயர்ந்த அளவு குறியாக்கம் செய்யப்படுகின்றன.

உங்கள் பணம்

Currency.com எப்போதுமே முழுமையான காப்புநிதியைப் பராமரிக்கிறது. இதன் அர்த்தம் நிதிப் பற்றாக்குறை ஒருபோதும் நிகழாது. உங்கள் நிதி எங்களது செயல்பாட்டுக் கணக்கிலிருந்து முழுக்கவே தனியாக ஒரு வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டு எங்கள் செயற்தளத்தின் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக அதிலிருந்து கடனாக வாங்கவோ கொடுக்கவோ முடியாதபடி – பயனீட்டு வர்த்தகத்துக்குக்கூட – வைக்கப்படுகின்றன.